Search This Blog

Sunday, June 19, 2011

இன்றைய சிந்தனைக்கு ஒரு துளி:

இன்றைய சிந்தனைக்கு ஒரு துளி:-
கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை ஆற்றுங்கள்; அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும்....தாமஸ் கார்லைல்.
முன்னெச்சரிக்கையும், முன் ஏற்பாடும் மிகவும் அவசியமானதே!! அதற்காக கோடைகாலத்தில், கோடை வெள்ளத்தினை மனதில் கொண்டு, ஆற்றினைக் கடக்க தோணியைத் தோளில் சுமந்து செல்வது எந்த வகையில் நியாயம்!! அந்த செயலை ஆற்றின் கரையை அடைந்தவுடன் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும். ஆகவே நமக்கு முன் உள்ள முதல் காரியத்தை செய்தோமானால், அடுத்து செய்ய வேண்டிய காரியம் தானாகவே புலப்படும், என்பது உண்மைதானே!!!!

No comments:

Post a Comment