Search This Blog

Wednesday, June 15, 2011

அணு அண்டம் அறிவியல் -30


அணு அண்டம் அறிவியல் -30 உங்களை வரவேற்கிறது.
ஐன்ஸ்டீன்
நிருபர்: நீங்கள் சார்பியல் தத்துவத்தை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

ஐன்ஸ்டீன்: பெரிதாக ஒன்றும் இல்லைஇன்னும் ஓரிரண்டு வாரங்களில் யாராவது ஒருவர் இதைக்கண்டுபிடித்திருக்கக் கூடும்.

சந்தேகமே இல்லாமல் ஐன்ஸ்டீன் ஒரு ஜீனியஸ் தான்..ஆனால் சார்பியலின் அத்தனை பெருமையும்அவருக்கு தான் சேர வேண்டும் என்று நாம் கருதினால் அது தவறுஐன்ஸ்டீனே ஒரு பேட்டியில்சொன்னது போன்று அவருக்கு சம காலத்தில் ஏழெட்டு பேர் அவர் சிந்தித்தது மாதிரியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்Einstein was the First to report அவ்வளவு தான்இதே போல தொலைபேசியின்அனைத்து Credit களும் க்ரஹாம்பெல்-லுக்கு சேரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.அவரது நண்பர் ஒருவர் அவருக்கே தெரியாமல் பெல்லின் டெலிபோன் மாடலை பேட்டன்ட் ஆபீஸ்ஒன்றில் பதிவு செய்து வைத்திருந்ததால் 
க்ரஹாம்பெல் முந்திக் கொண்டார்.ஒரு ஐந்தாறு பேர்கிட்டத்தட்ட டெலிபோனை செய்தே விட்டிருந்தார்களாம்! ]

'ஒளி' என்பது மனித வரலாற்றில் கிட்டத்தட்ட கடவுளாகவே வழிபட்டுவரப்பட்டிருக்கிறதுகாரணம்சிம்பிள்..இருளில் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த ஆதி மனிதனுக்கு சூரியனின் முதல் ஒளிக்கீற்றுஅவன் பயத்தை விரட்டி புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் கொடுத்ததுஅவனும் தனக்கு வழிதந்த ஒளியை தெய்வமாக வழிபடலானான்..கிரேக்கத்தின் ஒளிக்கடவுள் 'அப்போலோபற்றி நீங்கள்கேட்டிருக்கலாம்.
ஒளிக்கடவுள் 'அப்போலோ'

சூரியனை(ஒளியைகடவுளாக வழிபடாத மதங்களே இந்தியாவில் இல்லை எனலாம்கத உபநிஷத் "அது பேரொளியாய் இருக்கிறதுசூரியனுக்கும்சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் அதுவே தன்ஒளியைப் பகிர்ந்து அளிக்கிறது" என்கிறது. [ எதுஎன்று நீங்கள் கேட்டால் மாக்ஸ் முல்லரின் 'உபநிஷத்என்ற குண்டு புக்கை படிக்கவும்]

ஒளியின் ஆனந்த நடனம்

குரானின் 24 ஆவது சுராஹ்-வில் (Q 24:35 வரும் "அல்லாவே வானத்தின் பூமியின் ஒளி' (Ayat an-Nur)என்பது புகழ்பெற்ற ஒரு வாசகம் 
திருக் குர்-ஆன் வாசகம்
கடவுளுக்கும் ஒளிக்கும் உள்ள ஒற்றுமையாக நான் கருதுவது இரண்டும் காலத்தின் நகர்வைஉணர்வதில்லைசார்பியலின் படி ஒளி வேகத்தை எட்டிப் பிடிக்கும் ஒரு பொருளுக்கு காலத்தின் நகர்தல்நிரந்தரமாக நின்று விடுகிறது. (அதை எட்டிப் பிடிக்க முடியாது என்பது வேறு விஷயம்கடவுளுக்கும்காலம் என்பது இல்லை..காலத்திற்கு அப்பாற்பட்டவர் கடவுள். [மாற்றம் தான் காலமாகஉணரப்படுகிறது என்று சொன்னோம்கடவுளுக்கு மாற்றம் இல்லை என்பதால் அவருக்கு காலமும்இல்லைத்யாகராஜரின் 'சாமஜ வர கமனா' (ஹிந்தோளம்என்ற புகழ்பெற்ற கிருதியில் வரும் 'காலாதீத ' (காலத்தால் கட்டுப்படாதவன்என்ற வார்த்தையையும் கவனிக்கவும்.

சரி ரொம்ப போர் அடிக்கவேண்டாம்.. ஒளியைப் பற்றிய 'அறிவியலுக்குப்போகலாம்.

ஒளி என்பது ஒரு மின்காந்த அலை என்கிறது இயற்பியல்கடவுளிடம் இருந்து ஒளி பிறக்கிறதுஎன்பதை இயற்பியல் ஒத்துக் கொள்வதில்லை.இயற்பியலின் படி ஒளியின் மூலங்கள் அணுக்கள் தான்.அணுக்களின் (எலெக்ட்ரான்கள்) அதிர்வுகளால் தான் பெரும்பாலான மி.கா.அலைகள் பிறக்கின்றன.ஒரு எலக்ட்ரான் ஆற்றல் அதிகம் உள்ள மட்டத்தில் (LEVEL இருந்து ஆற்றல் குறைந்த மட்டத்திற்குகுதிக்கும் போது ஒளியை உமிழ்கிறது.

ஒளி ஓர் அலையா துகளா என்பது குவாண்டம் இயற்பியலின் ஒரு தலைவலி பிரச்சனைஅதை இங்கேநாம் எடுத்துக் கொள்ள வேண்டாம்ஒளி ஓர் அலை தான் என்பதை துணி துவைக்கும் போது ஏற்படும்சோப்புக் குமிழ்களின் வண்ணங்கள் நமக்கு சொல்கின்றனமேலும் உங்கள் இரண்டுஉள்ளங்கைகளையும் வணக்கம் செய்வது போல வைத்துக் கொண்டு மிக அருகே கொண்டுவாருங்கள்..ஆனால் உள்ளங்கைகள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.ஒரு கண்ணை மூடிக் கொண்டுஇன்னொரு கண்ணால் கைகளுக்கு(விரல்கள்இடையே உள்ள இடைவெளியில் என்ன நடக்கிறது என்றுகவனியுங்கள்உள்ளங்கைகள் ,விரல்கள் ஒன்றை ஒன்று தொடும் முன்னரே சில கரிய கோடுகள்இரண்டுக்கும் இடையே எழுந்து அந்த இடைவெளியை நிரப்புவதை கவனியுங்கள்..இந்த கோடுகள் ஒளிஅலையாக இருப்பதால் மட்டுமே ஏற்பட முடியும்ஒளியின் INTERFERENCE (ஒரு விரலின் வழியேவரும் அலையும் இன்னொரு விரலின் வழியே வரும் அலையும் கான்சல் ஆவதுஎன்ற பண்பை நாம்ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்

ஒளி
 என்பது ஓர் அலை என்றும் அது அளக்கவே முடியாத பயங்கர வேகத்தில் பயணிக்கிறது என்றும்மக்கள் காலம் காலமாக நம்பி வந்தனர்சுவிட்ச் போட்ட அடுத்த கணம் தாமதமின்றி குண்டு பல்புஎரிகிறது அல்லவா? (ஒரு உதாரணத்திருக்கு சுவிட்ச் சூரியனிலும் குண்டு பல்பு பூமியிலும் இருந்தால்சுவிட்ச் போட்டு எட்டு நிமிடம் கழித்து பல்பு எரியும்..)ஒளியை செலுத்தியதும் அது எத்தனைதொலைவை வேண்டுமானாலும் அனாயாசமாக கடந்துசென்று விடும் என்று காலம் காலமாக மக்கள்நம்பினார்கள்ஆனால் இதில் ஒரு தர்கரீதியான தவறு இருந்ததுஒளிக்கு தொலைவுகள் பற்றியகட்டுப்பாடுகள் இல்லை என்றால் நம் இரவு வானம் இருட்டாக இருக்கவே இருக்காதுபகலை விடபயங்கர பிரகாசமாக இருக்க வேண்டும் இரவுஇரவு இருட்டாக இருப்பதற்கு காரணம் நம் பிரபஞ்சத்தின்நட்சத்திரங்களில் 90 % நட்சத்திரங்களின் ஒளி இன்னும் நம் பூமியை வந்தடையவே இல்லை என்பதால்தான்சில நட்சத்திரங்களின் ஒளி மனித இனமெல்லாம் அழிந்து போய் பூமியும் அழிந்த பின்னர் தான்சூரிய மண்டலத்தையே வந்து அடையுமாம்ஒளியானது ஒரு வினாடியில் எத்தனை தூரம்வேண்டுமானாலும் பயணிக்கும் என்றால் பிரபஞ்சத்தின் அத்தனை ஒளியும் ஒரே நொடியில் 
பூமியைவந்து அடைந்து அதை குளிப்பாட்டும்கண் கூசியே நாமெல்லாம் செத்துப்போய் விடுவோம்
இரவு வானம்

இயற்பியலில் 'லாஜிக்' எல்லாம் ஒத்துவராது. ஆய்வுப் பூர்வமான ஒரு சோதனை தேவை..ஒளி கணக்கிட முடியாத் வேகத்தில் செல்வதில்லை. அது ஒரு நொடிக்கு ஒரு குறிப்பிட்டa தொலைவை மட்டுமே கடக்கும் என்று நிரூபித்த ஒரு சுவையான கதையை இப்போது பார்க்கலாம். (நன்றி E =mC2 David Bodanis )

பூமிக்கு ஒரு 
நிலா தான் இருக்கிறதுவியாழனுக்கு அறுபத்து நான்கு நிலாக்கள்..(வியாழனின்கவிஞர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது !) இதில் பிரதானமான நான்கு நிலாக்களை கலிலியோகண்டுபிடித்தார்மிக உட்புற நிலாக்களில் (innermost moon ) ஒன்றான அய்யோ (IO , நல்ல பெயர்!) என்ற
உபக்ரகத்தைப்
 பற்றித்தான் நம் கதைஇத்தாலியில் பிறந்த டொமினிக் காசினி (Giovanni Domenico CassiniJune 8, 1625 – September 14, 17121670 ஆம் வருடம் பாரிஸ் கோளரங்கத்தின் தலைவராகப்பொறுப்பேற்றார்பாரிஸ் Observatory என்பது அந்த நாட்களில் உலகத்திலேயே பெரிய வானியல்ஆராய்ச்சி மையமாக விளங்கியதுகாசினி வியாழனின் உப கிரககங்களை ஆராய்ச்சி செய்வதில் உலகப்புகழ் பெற்றிருந்தார். (கொஞ்சம் கர்வமும் இருந்ததுஆனால் வியாழனின் உள் துணைக் கோளானஅய்யோ அவருக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்ததுநம் பூமி சூரியனை வலம் வந்து முடிக்க365 1 /4 நாட்கள் ஆகின்றனஇதில் ஒரு இம்மி அளவும் மாற்றம் இருக்காது.லட்சக்கணக்கானஆண்டுகளுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் இது கூடவோ குறையவோ செய்யலாம்அதே மாதிரிஅய்யோ தன் தாய் வியாழனை முழு சுற்று சுற்ற 42 1 /2 மணிநேரங்கள் ஆகின்றனஅய்யோ வியாழனைஒரு கடிகாரத்தின் முள் போல சுற்றி வருவதை உன்னிப்பாக காசினி கவனித்துக் கொண்டிருந்தார்.ஆனால் அந்த 42 .5 மணி நேரங்கள் என்ற கணக்கு எப்போதும் ஒரே மாதிரி இருக்கவில்லை..ஒவ்வொருமாதமும் மாறியதுசில நேரங்களில் சீக்கிரமாகவே அய்யோ வியாழனின் விளிம்பில் இருந்து எட்டிப்பார்த்ததுசில நேரம் அய்யோ வர லேட் ஆனதுஒரு கடிகாரத்தின் முள் சில சமயம் வேகமாகவும் சிலசமயம் மெதுவாகவும் சுற்றினால் எப்படி இருக்கும்? கிரகங்கள் கடிகாரத்தை விட மிகத்துல்லியமானவைஇந்த நெருடலான விஷயம் காசினியை சங்கடப்படுத்தினாலும் தன் ஈகோகாரணமாக அவர் இதை யாரிடமும் சொல்லவில்லைகுறிப்பாக தன் உதவியாளர் பிக்கார்ட் என்பவர்டென்மார்க்கில் இருந்து அழைத்து வந்திருந்த 'ரோமர்என்ற ஆளை அவருக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை

அய்யோ
 ஏன் வியாழனை சுற்றும் போது தள்ளாடுகிறது என்ற விஷயம் அவர் மண்டையை தினமும்குடைந்து கொண்டிருந்ததுபாரிஸ் அரசிடம் இருந்து நிறைய நிதியுதவி பெற்றுக் கொண்டு சக்தி வாய்ந்ததொலைநோக்கிகள்அனுபவம் மிக்க வேலையாட்கள் இவர்களைக் கொண்டு இன்னும் துல்லியமாகஅய்யோவை கவனித்தார் காசினிஅய்யோவை தடுத்து அதை 'slow செய்ய ஏதாவது வாயு மேகங்கள்காரணமா இல்லை வியாழனின் ஈர்ப்பில் ஏதாவது அதிசயமாஎன்றெல்லாம் தலையைப் பிய்த்துக்கொண்டார் காசினி.

21 வயதே நிரம்பிய ரோமர் ஒரு நாள் காசினியிடம் வந்து 'நீங்கள் அனுமதித்தால் இந்த புதிருக்கானவிடையை நான் சொல்லலாமா? எனக்கு ஒன்று தோன்றுகிறது' என்றார்.

"Go ahead " 

ரோமர்
 என்ன சொன்னார்? சொன்னது மட்டும் அல்லாமல் அதை நிரூபித்தும் காட்டினார்..காத்திருங்கள்..

[நண்பர்களேமனிதர்களைப் பொறுத்த வரை ஒளி என்பதை ஒளி + மூளை என்று சொன்னால் சரியாகஇருக்கும்கண் தரும் தகவல்களை மூளை எப்படி அலசி பிம்பத்தை உருவாக்குகிறது என்பது தான்இங்கே முக்கியம்எது இல்லையோ அதைப் பார்ப்பதை OPTICAL ILLUSION என்கிறார்கள்.இந்தபிரபஞ்சமே Optical illusion ஆக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்ஹோலோக்ராம் தத்துவம்பற்றி கேட்டிருக்கிறீர்களாஇந்த படத்தைப் பாருங்கள்.இந்தப் படத்தில் எதுவுமே நகரவில்லை என்பதுதான் உண்மைகண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை.. ]
ஒரு மாயத் தோற்றம்
சமுத்ரா

No comments:

Post a Comment