Search This Blog

Monday, June 27, 2011

டைப் 2 ரக நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும்



டைப் 2 ரக நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும் என புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எட்டு வார காலத்திற்கு தொடர்ச்சியாக உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதன் மூலம் இந்த வகை நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என பிரித்தானியாவின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு 600 கலோரி அளவான உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சிகிச்சை அளிக்கப்பட்ட 11 பேரில் ஏழு பேர் நீரிழிவு நோயிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இந்த சிகிச்சை முறைமை நிரந்தரமான தீர்வாக அமையுமா என்பது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் டைப் 2 ரக நீரிழிவு நோயுடைய 2.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடுமையான உணவுக் கட்டுப்பாட்டு முறைமைகளின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவுக் கட்டுப்பாட்டு சிகிச்சையை பெற்றுக் கொண்டோரின் குளுக்கோசின் அளவு மற்றும் கொழுப்பின் அளவு கனிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment