Search This Blog

Thursday, October 13, 2011

Eating Your Greens Can Change the Effect of Your Genes On Heart Disease

Science Daily — A long-held mantra suggests that you can't change your family, the genes they pass on, or the effect of these genes. Now, an international team of scientists, led by researchers at McMaster and McGill universities, is attacking that belief.



"We know that 9p21 genetic variants increase the risk of heart disease for those that carry it," said Dr. Jamie Engert, joint principal investigator of the study, who is a researcher in cardiovascular diseases at the Research Institute of the McGill University Health Centre (RI-MUHC) and associate member in the Department of Human Genetics at McGill University. "But it was a surprise to find that a healthy diet could significantly weaken its effect."
The researchers discovered the gene that is the strongest marker for heart disease can actually be modified by generous amounts of fruit and raw vegetables. The results of their study are published in the current issue of the journal PLoS Medicine.
The research, which represents one of the largest gene-diet interaction studies ever conducted on cardiovascular disease, involved the analysis of more than 27,000 individuals from five ethnicities -- European, South Asian, Chinese, Latin American and Arab -- and the effect that their diets had on the effect of the 9p21 gene. The results suggest that individuals with the high risk genotype who consumed a prudent diet, composed mainly of raw vegetables, fruits and berries, had a similar risk of heart attack to those with the low risk genotype.
"We observed that the effect of a high-risk genotype can be mitigated by consuming a diet high in fruits and vegetables," said Sonia Anand, joint principal investigator of the study, and a researcher at the Population Health Research Institute and a professor of medicine and epidemiology at the Michael G. DeGroote School of Medicine at McMaster University. "Our results support the public health recommendation to consume more than five servings of fruits or vegetables as a way to promote good health."
"Our research suggests there may be an important interplay between genes and diet in cardiovascular disease," says the study's lead author Dr. Ron Do, who conducted this research as part of his PhD at McGill and is now based at the Center for Human Genetics Research at the Massachusetts General Hospital, Boston, Massachusetts. "Future research is necessary to understand the mechanism of this interaction, which will shed light on the underlying metabolic processes that the 9p21 gene is involved in."

சக்தி தத்துவம் - சாக்தமதப்பிரிவு (2) இந்துமத வரலாற்று தொடர்



 
உடம்பும் நீயே!! உயிரும் நீயே!! அம்மா!!!!

தாய் தெய்வ வழிபாட்டில் என்ன மகத்துவம் இருக்கப்போகிறது.ஊர்தோரும் இருக்கும் அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் நெருப்பு மிதித்து சாக்கை ஊற்றுவது தான் அதன் மகத்துவமாக இருக்கலாம் என்று சிலர் கேலி பேசுவதும் உண்டு. அலகு குத்திஆடுகோழிகளை வெட்டி கொண்டாடும் வழிபாட்டில், தத்துவம் இருப்பது அதிசயம் அல்ல, விநோதம் என்றும் சிலர் பேசலாம். இவைகள் வெறும் கேலி மொழியாகவோ விதண்டாவாதமாகவோநாம் எடுத்து கொள்ளலாம். அப்படி எடுத்து கொண்டால் அது சரியானதாக கூடதோன்றும். ஆனால் உண்மை நிலையை அது பிரதி பலிப்பதாக இருக்காது.
நமது இந்தியாவில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றுவரும் உயிர்பலி சடங்குகளில் பல அன்னை வழிபாட்டின் பெயரிலேயே நடக்கிறது எனலாம். அழகான பாண்டங்களை செய்து வைத்த குயவனின் முன்னாலேயே, அந்த பாண்டங்களைஅடித்து உடைப்பது எப்படி மனிதாபிமானம் இல்லாத செயலோ, அப்படியே எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கின்ற அகிலாண்டேஷ்வரி அன்னை  முன்னால் உயிர்பலி  செய்வதும் ஆகும்.
எனவே தாய் தெய்வ வழிபாட்டில்உயிர்பலிகளும்கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களும் நிறைந்திருப்பதாகவேமேலோட்டமாக பார்க்கும்போது நமக்குதோன்றும். இது மட்டுமல்ல தனதுகுழந்தையின் இரத்தத்தை விரும்பி சுவைப்பவள் தாயாக இருக்க முடியுமா?அப்படி பட்டவளை உலக அன்னையாக வழிபடுவது சரிதானா?  என்ற எண்ணம் எழும்பினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

ஆதிகால மனிதன் வேட்டையாடி உயிர் கொலை செய்து தான் வாழ்கையை நடத்தினான். அப்படி வாழ்ந்த போது தனக்கு எது பிரியமானதோதனக்கு எது சுவையுடையதாக தெரிகிறதோ, அதையே தான் வணங்கும் தெய்வத்திற்கு சமர்பித்தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல தான் ஆரம்பகால பழக்கத்தை கைவிட்டுவிடதுணிச்சல் இல்லாமல் இன்று வரை பலியிட்டு வழிபடுவதை கடைபிடித்து வருகிறான்.  இதை நிறுத்திவிட்டால் தீங்கு ஏதாவது நடைபெற்று விடுமோ என்று அச்சப்படவும் செய்கிறான்
மேலும் பலிகொடுத்து வழிபடுவது என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நடைமுறைஅல்லயூத மதத்திலும்இஸ்லாம் மதத்திலும் கூட இத்தகைய வழிபாட்டு முறை இருந்து வருகிறது. ஆனால் நமக்கு அம்மன் கோயில் திருவிழாவில் ஆடுகோழி பலியிடுவதுதான் காட்டுமிராண்டித்  தனமாக தெரிகிறதே தவிர,மொஹரம் பண்டிகையில் உயிர்பலி கொடுப்பது தவறுதலாக படவில்லை. காரணம் உலகிலேயே இந்து மதத்தார் மட்டும்தான் தன்னைதானே இழிவுபடுத்தி கொள்ளும் ஜாதிகளாகஇருக்கிறார்கள். அடுத்தவர்களின் குறை நிறையாக மட்டுமல்ல மேன்மை தங்கியதாகவும் நமக்கு படுகிறது.

முதலில் இந்த நிலையை நாம் மாற்றவேண்டும். வளர்ந்து விட்ட நாகரிக சமூகத்தில் கூட மிக தொன்மை வாய்ந்த பழக்கவழக்கங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது இதனால் பல நன்மைகளுக்கும்சாதத்தில் கல் இருப்பது போல சில தீமைகளும்இருக்கலாம். அதனால் அந்த தீமைகளைபடிப்படியாக தான் குறைக்க வேண்டுமே தவிர,ஒட்டுமொத்தமாக ஒழித்துகட்டிவிட முடியாது. உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களுமே அன்னை பராசக்தியின் குழந்தைகள் தான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும்போது உயிர்பலி சடங்கு தானாக முடிந்துவிடும்.

 அடுத்தாக தீ மிதித்தல், அலகுகுத்துதல் போன்ற முரட்டுதனமான வழிபாட்டு முறையை விமர்சனம் செய்பவர்கள் இதுதான் அம்மன் வழிபாடு தந்த கொடை என்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்தை மிக நன்றாக உணர வேண்டும். நெருப்பை வளர்த்து அதை தனியவிட்டு, அதனுள் இறங்கி மற்றவர்களை நடக்க வைத்து நான் மட்டும் அழகுபார்த்தேன் என்றால் அது தவறு மட்டுமல்ல மனிதாபிமானமற்ற செயலாகும். 


ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை நான்தான் வெறும் காலுடன் நெருப்பு குண்டத்தில் இறங்குகிறேன். அதன் சூடும்வெப்பமும் என்னை மட்டும் தான் தாக்குகிறது. அலகு குத்துவதும்அருவாள் மேல் நடப்பதும் ஏறகுறைய அப்படிதான் எந்த வகையிலாவது மனதை ஒருநிலைப் படுத்தி கடவுளின் மீது லயிக்கவேண்டுமென்று இந்து மதம் சொல்கிறது.நான் முரடன்மிக கடினமான உடல்வேலைகளை செய்து பழக்கப்பட்டவன் எனக்கு எதுவும் சுலபமாகசுகமாக இருந்தால் மனம் ஒட்டாது வியர்வை வழிய கண்கள் எரிய பாடுபட்டால் தான் மனம் ஒட்டும் அதனால் தான் இந்த இராட்சஷ வழிபாடு இதனால் யாருக்கும் தீங்குயில்லையே. அதனால் இதில் தவறு இல்லை.

இந்து மதத்தில் மட்டும்தான் இத்தகைய முரட்டு வழிப்பாட்டு முறை இருப்பதாக யாரும் கூற இயலாது.கல்வாரி மலைக்கு சிலுவையில் அறைவதற்காக இயேசுநாதர் அழைத்து செல்லப்பட்டபாதையில் இன்றும் ஏராளமான பக்தர்கள் தோளில் சிலுவையும், தலையில் முட்கீரிடமும் தாங்கி நடக்கிறார்கள். சாட்டையால் கூடஅடிவாங்கி கொள்கிறார்கள், ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாட்டு முஸ்லிம்கள் தங்கள் உடம்பில் காயம் ஏற்படும் அளவிற்கு கத்தியாலும் சங்கிலியாலும் அடித்து கொள்கிறார்கள். எனவே முரட்டு வழிபாடு என்பது உலகில் சகஜம் தான்என்பதை உணர்ந்து சக்தி வழிபாட்டின் மகத்துவத்தை உணர குருஜியின் அருளாசியுடன் பயணத்தை தொடர்வோம்.

சக்தி தத்துவம் என்ற சாக்த மத பிரிவு .

பழமை வாய்ந்த இந்து மத நம்பிக்கைகளில் முக்கியமான ஒரு பகுதி “சாக்தம்”. “சக்தி” யை முழுமுதற் கடவுளாக கொண்ட நம்பிக்கையே சாக்தம். இந்த பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளே சக்தியின் உருவான “திரிபுர சுந்தரி”. பூமி ஆகாயம் தேவலோகம் எனும் மூன்று லோகத்தையும் அவளே ஆள்கிறாள். மனம் புத்தி சித்தம் மூன்றிலும் அவளே நிறைந்து இருக்கிறாள். எல்லையில்லா சக்தி உடையவளே சக்தி. எல்லாவற்றிலும் நிறைத்தவளே சக்தி.

பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கும் பரம்பொருளாக திரிபுர சுந்தரி வீற்றிருக்கும் நகரமே “ஸ்ரீநகரா”. ஸ்ரீநகரா வின் மத்தியில் இருக்கும் இடம் “மஹா பத்ம வனம்”. அந்த தாமரை வனத்தின் நடுவே இருக்கும் தேவியின் இல்லம் “சிந்தாமணி க்ருஹம்” என்று அழைக்கபடுகிறது. அதன் நாலுபக்க வாசல்களும் தேவியின் காவலர்களால் காவல் காக்க படுகிறது, சிந்தாமணி கிருகத்தின் மத்தியில் இருக்கும் மஹா பத்ம வனத்தின் மத்தியில் “ஸ்ரீ சக்ரம்” அமைந்து இருக்கிறது. அதன் மத்தியில் இருக்கும் பிந்து பீடத்தில் ஈஸ்வரனை பலகையாக கொண்டு அமர்ந்து மஹா திரிபுர சுந்தரி சர்வ லோகங்களையும் ஆள்கிறாள்.




ம்மா

 
இந்த மூன்று எழுத்தில் எத்தனை சுகம்எத்தனை இதம்எவ்வளவு பாதுகாப்புநடந்து போகும் காலில் சின்ன சிறு கல் பட்டாலும் நம்மையும் அறியாமல் அம்மா என்று தானே கத்துகிறோம். எனக்கொரு வலி என்றால் என்னால் தாங்க முடியாத துயரம் வருகிறது என்றால் அதை உண்மையாகவே என்னிடம் இருந்து விரட்டுவதற்கு பாடுபடும் ஒரே ஜீவன் அம்மா தானே,

 
இந்த உலகில் ஒரு ஜீவனாக பிறந்து கண் விழித்ததும் பார்த்தது அவள் முகம்தானேஅவள் இல்லையென்றால் நான் ஏதுதிறமைகள் ஏதுஎனக்கு வளர்ச்சி தான் ஏதுஅம்மாவிடம் எனக்கு பயமில்லைஅம்மாவிடம் எனக்கு வெட்கமில்லைநான் வயது முதிர்ந்து கிழவனாகி விட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஓடி ஒய்ந்து தளர்ந்து போய்விட்டாலும் அவளை காணும் போது நான் குழந்தையாகி விடுகிறேன். 

கடவுளின் அருளில் கூட கலப்படம் இருக்கலாம்அழகான ரோஜா மலர் கூடநறுமணத்தை தராமால் இருக்கலாம். ஆனால் அம்மாவின் அன்பில் கலப்படம்இருக்காது. எப்போதுமே மாறுதல் இருக்காது. நான் என் தாயின் மீது அன்புவைக்கலாம்வைக்காமல் கூட இருக்கலாம்வைப்பது போல் பாசாங்கு கூடசெய்யலாம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நான் நிஜமாபொய்யாஎன்று ஆய்வு செய்யாமல் என் மீது பரிபூரணமான அன்பை செலுத்துவது அம்மா தான். அம்மா மட்டும் தான்.
அதனால் தான் உலகத்தை ஆண்ட தமிழ் குடிமக்கள் பெற்ற மனம் பித்துபிள்ளை மனம் கல்லு என்றார்கள். கெட்ட பிள்ளைகள் இருக்கலாம்கெட்ட தாய் என்று உலகத்தில் ஒருத்தி கூட இல்லையென்று தேவி பாகவதம் சொல்கிறது. பிறக்கின்ற போதே அம்மாவின் உடம்பில்அம்மாவின் உயிரில்அம்மாவின் குருதியில் ஒட்டிக்கொள்கிறோம். அதனால் தான் அறுசுவை பதார்த்தம் கூட அவள் ஊட்டும் ஒரு பிடி சாதத்தின் முன் சுவையை தர முடியாமல் மண்டியிடுகிறது. வளர்ந்து விட்டோம்ஆயிரம் பொறுப்புகளை சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடுகிறோம். 

செல்வமும்செல்வாக்கும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. ஆனாலும் மனம் எங்கும் துயர அரக்கனே சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறான்ஆட்சி செய்கிறான். இவனின் கோரபிடியிலிருந்து ஒரு விநாடியேனும் விடுபடமாட்டோமா என நெஞ்சம் பறக்கிறதுபடபடக்கிறது. பிள்ளைபிராயத்தில் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடியதையும்மணல் வீடு கட்டிவிளையாடியதையும் நினைத்து நினைத்து உருகுகிறோம். 

அப்போது மட்டும் நம்மிடம் இன்பம் மட்டுமே குடி கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்யார் பொறுப்புஎன் உடம்பு அழுக்கானால் அம்மா குளிப்பாட்டுவாள்எனக்கு நோய் வந்தால் அம்மா மருந்து தருவாள்எனக்கு பசிபிறக்கும் முன்பே சாதத்தை ஊட்டி என்னை போஸிப்பாள்என்று எல்லா பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு நாம் சும்மா இருந்தோம். அதனால் சுகமாக இருந்தோம். எப்போது என்னை நான் பார்த்து கொள்வேன் என செயல்பட துவங்கினோமோ அப்போதே துயரம் என்ற காரிருள் நம்மை சூழ ஆரம்பித்துவிட்டது.
அம்மா தான் எல்லாம் என்ற ஞானம் மனிதனுக்கு புதியதாக வந்ததல்லபச்சை மாமிசத்தை தின்று இலை தழைகளால் உடல் மறைத்து மரக் கொம்பிலும்,குகைக்குள்ளும் மனிதன் வாழ்ந்த போதே இதை உணர்ந்துவிட்டான். இதனால் தான் தாயாரை தெய்வமாக கருத வேண்டும் என்ற நிலையில் இருந்து தெய்வத்தையே தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டான். அன்று முதல் தோன்றியது தான் தாய் தெய்வ வழிபாடாகும்.

நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நினைந்திருக்கும் பராமாத்மாவை பரமதாயாளனான  இறைவனை தாயாக ஒரு பெண்ணாக பார்ப்பது மனிதனின் கற்பனையல்ல. எல்லாமானஎம்பெருமானுக்குள் எல்லாமும் இருக்கிறது. ஒரு தாயினுடைய அன்பில் மூலம் எங்கே இருந்து வருகிறது. எந்த விரலை தொட்டாலும் அறிய முடியாத பாசத்தை உணர்கிறோமே அந்த கருணைஅந்த பாசம் எங்கே இருந்து வருகிறது எதுஅதனின் மூலம் என்று நெருங்கி பார்த்தால் கருணாமூர்த்தியான கடவுளிடம்இருந்து வருவதை உணர முடிகிறது.

அதனால் தான் இறைவனுக்குள்ளும் இறைவி இருக்கிறாள் என நமது முன்னோர்கள் சொன்னார்கள். தாயிற் சிறந்த தயாவான தத்தவனே என மாணிக்கவாசகர் சொல்வதும்அப்பன் நீஅம்மை நீ என்று அப்பர் சாமிகள் சொல்வதும் இதனால் தான். ஓங்கி உலகளந்து நிற்கின்ற பராமாத்மா நமதுஉடலையும் உயிரையும் வளர்கின்ற அம்மாவாகின்றான். அறிவை வளர்த்து ஆத்ம அனுபவத்தை தருகின்ற அம்மாவும் அவன் தான். மனித தாய் வயிற்று பசிக்கு பால் தருவது போல தெய்வ தாயான கடவுள் நம் ஞான பசிக்கு மோன வழியில் ஞான பால் தருகிறான். இப்படி இன்னும் ஏராளமான காரணங்களை தனக்குள் கொண்டு வளர்ந்து தான் சக்தி தத்துவம் என்ற சாக்த்த மதபிரிவாகும்.



இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக கண்டு வரும் நாம், முதலில் வழிபாடு என்பதே சிவலிங்கத்தில் இருந்து தான் துவங்கியது என கண்டோம். சிவவழிபாடு என்பது எப்படி காலத்தால் கணித்து கூறமுடியாத அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறதோ அதே போலவே சக்தி வழிபாடு என்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள வைஷ்ணவம்சௌரம்கௌமாரம்,காணாபத்தியம் போன்ற பிரிவுகள் எல்லாம் சிவ சக்தி வழிபாட்டுக்கு பிறகேவந்தது என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.எனவே அடுத்து வரும் சில பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்ற சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் மகத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.  குருஜியின் அருளாசியுடன்....அன்புடன் கே எம் தர்மா....