"எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?" என்பதுதான்.......
அவர்களுக்காக …..!!! என் நினைவுகளிலிருந்து!!
நீண்ட பதிவு முழுமையாக வாசியுங்கள்!
Facebook நண்பர் Boopal Chinappaவின் இன்றய கருத்தீடு இதற்கு பொருத்தமாக அமைகிறது!!
„முயல்பவனுக்கு தட்டிக்கொடு, இல்லாதவனுக்கு விட்டுக்கொடு, கேட்பவனுக்கு சொல்லிக்கொடு, வாழ்வில் விழுந்தவனை தூக்கிவிடு !! -இது தர்மம்.“
1700ம் ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறுமனே நாடுகளின் செல்வம் பற்றி படிப்பது என்ற நிலையிலிருந்து, பல படிகளை கடந்து வந்துள்ளது. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம்ஸ்மித் அவ்வாறு கருதினார்.
சுமேரியர்கள் பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர்.
இன்று பொருளாதாரம் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல பொருளாதார வரலாறு அல்லது பொருளாதாரப் புவியியல் ஆகியன அடங்கியுள்ளன.
"பொருளாதாரத்தின் உலகம்"
பொருளாதாரம் என்பது, Micro and Macro Economics என்று வகைப்படுத்தப்படுகிறது. Micro Economics , கூட்டுத்திரள் தொகுப்பு நிலையிலான நடத்தையுடன் தொடர்புடையது.
இந்த நிலையில், பொருளாதார வல்லுநர்கள், ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக, வளர்ச்சி, விரிவாக்கம், இணைப்பு மற்றும் ஈட்டுதல் வாய்ப்பு ஆகியவை குறித்து மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
அதேசமயம், Macro Economics என்பது, பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக ஆய்கிறது. ஒரு நாட்டின் வரவு மற்றும் உற்பத்தி, அதன் வேலைவாய்ப்பு விகிதம், பணவீக்கம், செலவு போன்ற விவகாரங்கள், Macro Economics கீழ் வருபவை.
இவை இரண்டையும் தாண்டி, Development Economics என்ற பிரிவு, சமீப ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் என்பவர்கள், NGOக்கள், ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள்(Government, Finance Ministry, Central Bank) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தரவுகளை சேகரித்தல், அந்த விஷயத்தைப் பற்றிய போக்கை ஆய்வுசெய்து ஒரு தீர்வை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக, பொருளாதார நிபுணர்கள், மேற்கண்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
"பொருளாதார அளவீடுகள்"
தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை:
நுகர்வோர் செலவு, வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம், உள்நாட்டு மொத்த உற்பத்தி, மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், தேசிய கடன், விலையுயர்வு விகிதம், வேலைவாய்ப்பின்மை, வர்த்தகச் சமநிலை.
"ஒரு பொருளாதார நிபுணராக உருவாதல்"
பொருளாதார நிபுணர்கள், பொதுவாக, பொருளாதாரம் அல்லது துணைநிலை பொருளாதாரம் அல்லது சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருப்பார்.
ஜரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஒருவர், Econometrics, Micro Economics அல்லது Macro Economics ஆகிய ஏதேனும் ஒன்றில் விசேட படிப்பாக செய்திருக்கலாம். அதேசமயம், வெளிநாட்டில், Industrial economics, Game theory, Applied economics, Financial economics மற்றும் International Business போன்ற விசேட துறைகள் பிரபலம்.
ஏன் பொருளாதார படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்?
ஒரு பாடமாக, பொருளாதாரம் என்பது சர்வதேச பயன்பாடு கொண்டது. பொருளாதார வல்லுநர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள், உலக விவகாரங்கள் குறித்து up-to-date நிலையில் இருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள், ஒரு நல்ல நிதி திட்டமிடுநர்களாகவும் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில்...
Economics படிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அத்துறையில் சாதிக்க, அதிகமாக படிப்பது அவசியம். அது மாணவராக இருக்கும்போதும் சரி, அந்த காலகட்டத்தை கடந்துவிட்டபிறகும் சரி.
பொருளாதாரப் படிப்பு என்பது, உயர்நிலைக் கல்வி அளவில் அதிகம் கணிதம் தொடர்பானது. எனவே, எண்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள், இப்படிப்பை அனுபவிக்க முடியாது. இத்துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களின் முதல் பணி வாய்ப்பை பெறுவது சற்று கடினமாக காரியம்தான். ஏனெனில், இத்துறையின் பட்டதாரி, தன்னை ஒரு தொழில் நிபுணராக மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பணி நேரங்கள் சில சமயங்களில் மிக அதிகமாக இருக்கும். மேலும், இந்த வகைப் பணியானது, வெறுமனே அலுவலகத்தில் இருப்பது மட்டுமாகாது. மாறாக, பயணம் செய்தல் மற்றும் களப் பணி ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம்.
இத்துறை தொடர்பான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், ஒருவர் தனக்கான நல்ல பணியைப் பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கு பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், குறைவான எணணிக்கையில் மட்டுமே. எப்போது தேவை இருக்கிறதோ, அப்போது மட்டுமே Economist பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். மேலும், தற்போதைய நடப்பு நிகழ்வுகளைக் கொண்டு, எதிர்கால சூழல் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு Economist மதிப்பிடுவார்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் தருணத்தில், சிறந்த பொருளாதார நிபுணரின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.
பணி வாய்ப்பு துறைகள்:
வங்கியியல், Finance, Marketing, Business, Politic Accountancy, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், Governments
தேவையான திறன்கள்:
கூர்மையான பகுப்பாய்வு மற்றும் கணித திறன்கள், சிறப்பான கவனம் மற்றும் ஆர்வம் இருப்பதோடு, நிறைய படிக்கக்கூடிய மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.
பொருளாதார படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள்:
Stanford University, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் – பிரிட்டன், ஹாவர்டு பல்கலைக்கழகம் - அமெரிக்கா., University of Oxford, Yale University, University of Cambridge, National University of Singapore, University of Toronto, ETH Zurich - Swiss Federal Institute of Technology, University of Amsterdam, Ludwig-Maximilians-Universität Germany, Rheinische Friedrich-Wilhelms-Universität Bonn, Germany இப்படிப் பல.
பலருக்கும் நான் பதிவேற்றும் படங்களை பார்த்ததும் ஏளனச் சிரிப்பும், நகைப்பும், மலினப்படுத்தும் கருத்தீடலும்.... ஏதோ உலகம் சுற்றுவதான நினைப்பும் தான் தோன்றும். பலர் நேரடியாகவே கூறுவதுண்டு. அவர்களது அறியாமையால் நான் கோபப்படுவதுமுண்டு!!
இவையனைத்தையும் கடந்துதான் எனது தொழில் சர்வதேச ரீதியாக செய்யமுடிந்திருக்கிறது. எனது திறமையில் இவ்வளவு நாடுகள் நம்பிக்கை வைத்து என்னோடு ஒத்துழைக்கிறார்கள் என்றால் எனது இந்த கல்வி, அறிவு, செயற்திறன், அரசியல், பொருளாதார சமூக ஆளுமை, ராஜதந்திரங்களே.
இன்னும் பலவற்றை சமூகங்களிடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நான் என்றும் மாணவனேயொழிய நிறைவுபெற்ற நிபுணனாக இருக்கமுடியாது.
அதேபோல் உங்களிடம், உங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் கணிதத் திறமையை, உங்களின் சமூக அறிவுடன் ஒருங்கிணைத்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உங்களால் திறம்பட பங்களிப்பு செய்ய முடிந்தால், சமூகம் உங்களைப் போற்றும். என் இனத்தின் வாழ்வு சிறக்கும்.