Search This Blog

Saturday, July 7, 2018

ரெட்டமலை சீனிவாசன் பற்றி..?

Chandran Veerasamy
கடந்த நூற்றாண்டிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர் ரெட்டமலை சீனிவாசன். 1891-ல் பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தவர் இவர். இவரது தங்கையைத்தான் பேரறிஞர் அயோத்திதாச பண்டிதர் திருமணம் செய்தார். காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ரெட்டமலை சீனிவாசனும் அங்கு இருந்தார். இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. காந்திக்கு திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தவரும் தமிழ் சொல்லிக் கொடுத்தவரும் இவர்தான். 20 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த இவர், பின்னர் தமிழகம் வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். சென்னை சட்டசபையில் தொடர்ந்து இடம்பெற்றார். சாதியைக் காட்டி எவரையும் எந்த இடத்திலும் வரக் கூடாது என்று சொல்லக் கூடாது என்ற தீர்மானத்தை இவர் கொண்டு வந்தபிறகுதான் அது சட்டம் ஆனது. மதுவிலக்குக்கு ஆதரவாக நின்றவர். டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக சில தலித் தலைவர்களே செயல்பட்டபோது, அவருக்கு பக்கபலமாக இருந்தவர் ரெட்டமலை. அமைதியாக அதேநேரத்தில் ஆழமாக எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணம் ரெட்டமலை சீனிவாசன்.

No comments:

Post a Comment