Search This Blog

Tuesday, April 19, 2011

Monday, April 18, 2011

நடைப்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்

நடைப்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்

ஞாபக சக்தியை அதிகரிக்க சுலபமான வழி – ஹெல்த் டிப்ஸ்

ஞாபக சக்தியை அதிகரிக்க சுலபமான வழி – ஹெல்த் டிப்ஸ்

Microsoft Safety Scanner-Portable Antivirus

செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவில்

P. B. Sirinivas & Lata - Chanda Se Hoga Vo Pyaara - Main Bhi Ladki Hoon ...

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். 2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
5. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும்.
6. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
7. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
8. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
9. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
10. இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
11. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
12. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
13. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

மூளை ஸ்கேன் மூலம் அல்சீமர் நோயை முன்கூட்டியே அறியலாம்

அல்சீமர் என்கிற நினைவு தடுமாற்ற நோய் தோன்றுவதற்கு முன்பாகவே, மூளையை ஸ்கேன் செய்து அந்நோயை முன்கூட்டியே அறியலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அது குறித்த புதிய ஆய்வு முடிவு நரம்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அல்சீமர் நோய் தாக்கம் வாழ்வின் நடுத்தர வயதுக் காலத்திலேயே துவங்குகிறது. இதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதை பிரிட்டன் அல்சீமர் ஆராய்ச்சி அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
அல்சீமர் தீவிரமாக பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே துவக்கக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் நோய் பாதிப்பை குறைக்க முடியும். இதில் 65 நோயாளிகளின் மூளை செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது எம்.ஆர்.ஐ ஸ்கேன்களும், மூளையின் அடர்த்திப் பகுதிகளும் அளவிடப்பட்டன. இந்த சோதனையின் போது மூளையின் சராசரி அடர்த்தியில் உள்ள 20 சதவீத நோயாளிகள் அல்சீமர் நோய் தாக்கத்திற்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது. மூளைப் பகுதி மிக அதிக அடர்த்தியுடன் இருந்த நபர்கள் அல்சீமர் நோய்த் தாக்கம் இல்லாததும் தெரியவந்தது.
பிரிட்டனில் 65 வயதை கடந்த 14 பேரில் ஒருவருக்கு அல்சீமர் நோய் உள்ளது. மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் நடுத்தர வயதிலேயே அல்சீமரை கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Natural Water Based Artificial Leaf Solar Cell Produces Electricity Avat...

Artificial Leaf solves Energy Crisis | Will Oil Companies Destroy it?

Could an Artificial Leaf Power Your Home?

உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயகம் "ஆப்பிரிக்கா"

உலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி, இந்தி, ஜப்பானிஷ் உள்ளிட்ட 500 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுவாக 1 1/2 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றினான் என்ற கருத்து உள்ளது.
அந்த மனிதன் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனியான மொழியை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பறிமாற்றிக் கொண்டான். அங்கிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினான்.
இதை வைத்து பார்க்கும் போது தற்போது உலகில் உள்ள மொழிகளின் தாயகமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே மொழியில் இருந்து தான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.

இதயம் காக்கும் பழங்கள்

இன்றைய நவீன உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.
அவை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம். இந்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்கு அளித்த கொடை தான் காய்களும், கனிகளும்.
சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.
ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.
தேங்காய் நீர் இதயத்திற்கு ஊக்கம் அளிக்கும். நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும். இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.
ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம் மற்றும் மார்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவைகளுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.

Artificial Leaves produce hydrogen fuel

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள் தயாரிப்பு

அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆக்கமானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்கதொரு சாதனை ஆகும். இதன் உருவம் ஆனது உண்மையான இலை போன்று இருக்காது. ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை துள்ளியமாக இது செய்யவல்லது.
இந்த செயற்கை இலை தண்ணீரின் மீது மிதக்க விடப்படும் எனவும், இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன், ஓக்சிஜனை இது பிரித்து அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது.
இயற்கை அன்னையின் செயல்பாடுகள் எப்போதுமே மனிதனுக்கு பல ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. அந்த வகையில் மெய் இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர்.
இதன்படி இந்த இலைகளை நீர்நிலைகளில் மிதக்க விடப்படும். அந்த இலைகளானது நீரில் இருக்கும் ஹைட்ரஜனையும், ஓக்சிஜனையும் சூரிய ஒளியினைக் கொண்டுப் பிரித்து அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் Fuel Batteryகளில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பற்றரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் ஊடாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும்.
ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கிவிட்ட போதிலும் அவரது ஆக்கம் வெகுவாக பயன்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த பற்றரியானது நிலையற்ற தன்மை வாய்ந்ததாக இருந்ததாலும், அவற்றை பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.
ஆனால் தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான பற்றரி என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.
தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இலை ஒன்று தொடர்ந்து 45 மணிநேரம் இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதாகவும், இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் தானியேல் நோசேரா.

காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை இந்தியாவில் உள்ள தமிழக கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு, அதிக விலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த காரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவன் மதன்குமார் கூறியதாவது: நானும், என்னுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் என் சக நண்பர்கள் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம்.
இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபாடு தான். மாசுபாட்டை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக காற்றில் இயங்கும் காரை மிகக் குறைந்த விலையில் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தொடங்கினோம். இதற்கு கல்லூரி பேராசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரூ.35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு காரை வடிவமைத்தோம். இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய டேங்க் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று இன்ஜினை இயக்கும்.
வழக்கமான கார்களைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகை வராது. எனவே சுற்றுச்சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது காரை நிறுத்தி காரின் டேங்கில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம். இவ்வாறு மதன்குமார் கூறினார்.

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

 
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
1.வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


2.வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

3.காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் சக்திகள்  நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்


4.ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


5.பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


6.இறால் மீன் மற்றும் நண்டு :
அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


7.தேநீர் :
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


8.பாலாடைக்கட்டி :

சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


9.முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. 

10.கோதுமை ரொட்டி :
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.     
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.   

Sai Baba - Divine Song - SaiTv

Netruvarai Nee Yaaro

Airtel Top Singer 100th episode: PB Srinivas sings 'Mozhigalil..'

Nilave Ennidam Nerungathe Song - Ramu (ராமு); Gemini Ganesan, K.R. Vijaya

Mayakkama kalakkama - Sumaithangi - P.B.Sreenivas.flv

Pon enbane siru poo enbane, Policekaran magal

paal-vannam

Indha Mandrathil Odivarum from Policekaran Magal

HIT SONG FROM FILM CONSTABLE KOOTHURU BY P.B.SRINIVAS

தோல்வி என்றால்

 


தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.

தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

மூளையைக் கொல்லாதீங்க

100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா?
ஆம், பத்தாயிரம் கோடி! இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களைக் கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல்.
இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்குச் செல்வதற்கும் இது தான் காரணம்.

கொல்லாதீர்கள்
ஆம், உங்கள் மூளையில் உள்ள செல்களைக் கொல்லாதீர்கள். என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது.
எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் “பேலன்ஸ்’ ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், “டென்ஷன்…’ என்றே சொல்லிக் கொண்டிருப்பர். சரியாகத் தூங்கமாட்டார்கள்; சாப்பிட மாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை “கொல்’கின்றனர். அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.

தூக்கம் அவசியம்
மூளை செல்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேரத் தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
மன அழுத்தம் “நோ’
தூக்கம் வராமல் இருக்கக் காரணம், பலருக்கும் உள்ள “டென்ஷன்’ தான். மன அழுத்தம் பல வகையில் இவர்களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது.”டென்ஷன்’ பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை செல்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், “டென்ஷன்’ என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்கள்.

மதுவா?போ போ
மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதைத் தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்குப் பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. ஆல்கஹால் செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை செல்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் டாக்டர்கள்.

“எக்சோடாக்சின்’
பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்புச் சத்துள்ள “ஜங்க் புட்’ வகை உணவுகளில் “எக்சோடாக்சின்’ என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு “ஜங்க் புட்’ தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை செல்கள் அதிகமாக குறைவதே.

“சீப்’பான அயிட்டங்கள்
அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சிப்ஸ் போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதைத் தவிர்ப்பது நல்லது; ருசிக்குச் சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.

தண்ணீர் குடியுங்கள்
தண்ணீர் தாராளமாகக் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.
உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்குக் காரணம் மூளை தான்; மூளை செல்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.

தரை சுத்தமாக…
இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை “ஸ்ப்ரே’ செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை செல்கள் குறைய வாய்ப்பு அதிகம்.
இது போலத்தான் பெயின்ட் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

காய்கறி, பழங்கள்
இந்த மூளை செல்கள் பாதிப்பை தவிர்க்க, சிம்பிள் வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.
பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.

DANGEROUS VIRUS REVEALED BY CNN

This  virus will be received from someone who has your  e-mail address in
his/her contact list. This is  the reason why you need to send this e-mail
to all  your contacts. It is better to receive this  message 25 times than
to receive the virus and  open it.


          If  you receive a mail called' POSTCARD,' even though  sent to you
by a friend, do not open it! Shut down  your computer immediately. This is
the worst virus  announced by  CNN.

          It  has been classified by Microsoft as the most  destructive
virus ever. This virus was discovered  by McAfee yesterday, and there is no
repair yet  for this kind of virus. This virus simply destroys  the Zero
Sector of the Hard Disc, where the vital  information is  kept.

ஹைக்கூக் கவிதைகள்

பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி

பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்

வானத்திலும் வறுமை
கிழிசல்கள்
நட்சத்திரங்கள்

புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்

உயரத்தில்
பஞ்சுமிட்டாய்
வான் மேகம்

டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
ஆயத்தம்

பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்...

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்

விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்

கோடை மழை
குதூகலப்பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்

வானம்.
கட்சி தாவியது
அந்திவானம்.

மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி

மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ

என்னவளே உன்
முகத்தைக் காட்டு...
முகம் பார்க்கவேண்டும்

ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்

கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினியில் வைரஸ்

மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்...

நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்

கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு

நல்ல முன்னேற்றம்
நடுப் பக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்

இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்

பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி

உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி

நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனைப் பெட்டி

தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி

தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி

நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?

மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி

கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு

அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்

சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்

ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை

சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு

அழகிய ஓவியமானது
வெள்ளைக் காகிதம்
தூரிகையால்

மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்

ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறைக் கற்கள்

காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

பார்த்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை

கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பைப் போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி

இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்

உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்

மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை

இளமையின் அருமை      
தாமதமாக புரிந்தது
முதுமையில்

தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குத் தான்
சாதனையாளர்களுக்கு இல்லை

வெற்றிக்கான நான்கு தூண்கள்

ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?
நான்கு.
வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?
அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….
ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.
அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை.
என்னென்ன?
முதல் தேவை: பொறுமை
கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.

இரண்டாம் தேவை : சக்தி
பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.
பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?
அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)

மூன்றாம் தேவை : திட்டம்
வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan

நான்காம் தேவை : விடாமுயற்சி
திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி, Preseverance.

இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.
ஆக 4Ps என்று சொல்லப்படும்,
PATIENCE
POWER
PLAN
PERSEVERANCE
என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.

விவேகானந்தரின் பொன் மொழிகள்

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

பொன்மொழிகள்

ஒரு கடிகாரம் வைத்திருப்பவனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் வைத்திருப்பவனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

எங்கே விழுந்தாய் எனப் பார்க்காதே,
எங்கே வழுக்கினாய் என யோசித்துப் பார்.

 
பின்கண்ணாடி வழியாக நடந்ததைப் பார்ப்பதைவிட,
முன்கண்ணாடி வழியாக முன்னே வருவதைப் பார்.


நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள்.
ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
 
முன்நோக்கிச் செல்லும் போது கனிவாயிரு.
ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
 
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

மகிழ்ச்சிக்கென நீ வீணாக்கிய தருணங்களெல்லாம்
வீணானவையல்ல.
 
பயமில்லாமை தைரியமல்ல. பயப்படும் நேரங்களிலும்
சரியாய் செ
யல்புரிவதே நிஜ தைரியம்.

எதிர்காலத்தைச் சரியாகக் கணிப்பதற்கு,
அதை நாமே உருவாக்க வேண்டும்.

பலவீனங்களை பலமாக்குவோம்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்?
பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக்கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்க ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்

"குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா? " என்றான்.

"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !
முதல் போட்டி.
ஜூடோவில் எல்லா வகைகளும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது.
எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி.
அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான்.
அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி.
எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது.
முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான் எதிராளி. பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள்.

"வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்றார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வையாளர்களுக்கு ஆச்சரியம்.
அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான் "குருவே, நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே" என்றான்.

புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.
இரண்டாவது இந்த தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும்.
உனக்குத் தான் இடது கை கிடையாதே! உன்னுடைய பலவீனம்தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!"
குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.
    

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - மகுடபதி

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - மகுடபதி: "magudapathi - kalki"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - மாடத்தேவன் சுனை

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - மாடத்தேவன் சுனை: "Kalki's Madaththevan Sunai"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - பொய் மான் கரடு

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - பொய் மான் கரடு: "Kalki's Poi Maan Karadu"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - கள்வனின் காதலி

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - கள்வனின் காதலி: "KALKI -Kalvanin Kadhali TAMIL NOVEL டி..."

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - சோலைமலை இளவரசி

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - சோலைமலை இளவரசி: "Kalki Novel - Solaimalai Ilavarasi"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - தியாக பூமி

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - தியாக பூமி: "Thiyaga Boomi"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - அலை ஓசை

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - அலை ஓசை: "Kalki Novel - Alai Osai"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - சிவகாமியின் சபதம்

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - சிவகாமியின் சபதம்: "civakamiin Sabadam"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - பார்த்திபன் கனவு

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - பார்த்திபன் கனவு: "Kalki Novel - Parthiban Kanavu"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - மோகினிதீவு

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - மோகினிதீவு: "mohinitheevu"

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - பொன்னியின் செல்வன்

குண்டுவின் மென்நூல்கள்: கல்கி - பொன்னியின் செல்வன்: "Kalki Novel - Ponniyin Selvan"

Thoda Dhyan Laga - Shirdi Sai Bhajan

Sunday, April 17, 2011

குண்டுவின் மென்நூல்கள்: பண்டைய தமிழகம்

குண்டுவின் மென்நூல்கள்: பண்டைய தமிழகம்: "பண்டைய தமிழகம்"

குண்டுவின் மென்நூல்கள்: பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்

குண்டுவின் மென்நூல்கள்: பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்: "பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்"

அழியாச் சுடர்கள்: சு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்.ரா

அழியாச் சுடர்கள்: சு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்.ரா

அழியாச் சுடர்கள்: நவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி

அழியாச் சுடர்கள்: நவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி

அழியாச் சுடர்கள்: சிறுகதை - அதன் அகமும் புறமும்-சுந்தர ராமசாமி

அழியாச் சுடர்கள்: சிறுகதை - அதன் அகமும் புறமும்-சுந்தர ராமசாமி

அழியாச் சுடர்கள்: சுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்

அழியாச் சுடர்கள்: சுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்

அழியாச் சுடர்கள்: பள்ளம் - சுந்தர ராமசாமி

அழியாச் சுடர்கள்: பள்ளம் - சுந்தர ராமசாமி

7 புதிய ஆலைகளை அமைக்க மாருதி நிறுவனம் திட்டம்!

7 புதிய ஆலைகளை அமைக்க மாருதி நிறுவனம் திட்டம்!

குண்டுவின் மென்நூல்கள்: புதுமை பித்தன் சிறுகதைகள்

குண்டுவின் மென்நூல்கள்: புதுமை பித்தன் சிறுகதைகள்: "PuthumaiPithan Stories TAMIL"

குண்டுவின் மென்நூல்கள்: Dr.அப்துல்கலாம்

குண்டுவின் மென்நூல்கள்: Dr.அப்துல்கலாம்: "DrAbdulkalam"

Hastings Cave

The Power of Words

Suwada pirunu

Victor Ratnayaka

HENRI KALDERA - MALNATU WENI

அழியாச் சுடர்கள்: கு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு

அழியாச் சுடர்கள்: கு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு

அழியாச் சுடர்கள்: நேற்றிருந்த வீடு-எஸ்.ராமகிருஷ்ணன்

அழியாச் சுடர்கள்: நேற்றிருந்த வீடு-எஸ்.ராமகிருஷ்ணன்

அழியாச் சுடர்கள்: நூறுகள் -கரிச்சான்குஞ்சு

அழியாச் சுடர்கள்: நூறுகள் -கரிச்சான்குஞ்சு

அழியாச் சுடர்கள்: கரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் சாமினாதன்

அழியாச் சுடர்கள்: கரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் சாமினாதன்

அழியாச் சுடர்கள்: அரசனின் வருகை - உமா வரதராஜன்

அழியாச் சுடர்கள்: அரசனின் வருகை - உமா வரதராஜன்

Kannavugalae Aayiram (Neethikku Thalai Vanangu film)-Song

Vizhiyae Kadhai yezhudu (M.G. Ramachandran & Lata)- Tamil

Ponnazhagu

idhayakkani-MGR-"neenga nalla irukkanum"


Song Details:- Song: Neenga Nalla Irukonum Music: MS Viswanathan Singer: Seerkazhi Govindarajan, TM Soundararajan & S Janaki Lyrics: Pulamaipithan

கீதமஞ்சரி: தாமதித்தத் தருணங்கள்

கீதமஞ்சரி: தாமதித்தத் தருணங்கள்: "நான் சொல்லவிழையும் வார்த்தைகள் யாவும் வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே வேறெவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!..."

அழியாச் சுடர்கள்: காட்டில் ஒரு மான்

அழியாச் சுடர்கள்: காட்டில் ஒரு மான்

அழியாச் சுடர்கள்: வயது - அம்பை

அழியாச் சுடர்கள்: வயது - அம்பை

அழியாச் சுடர்கள்: அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

அழியாச் சுடர்கள்: அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

Ethanai Manithargal (Neethikku Thalai Vanangu film)-Song

Blog.PKP.in: How do you sleep? and What does it say about you?

Blog.PKP.in: How do you sleep? and What does it say about you?

Blog.PKP.in: Interesting ABCD facts

Blog.PKP.in: Interesting ABCD facts: "Letters 'a', 'b', 'c' & 'd' do not appear anywhere in the spellings of 1 to 99 (Letter 'd' comes for the first time in Hundred) Letters 'a..."

Blog.PKP.in: Busiest Airports in the world

Blog.PKP.in: Busiest Airports in the world

குண்டுவின் மென்நூல்கள்: வைரமுத்து கவிதைகள்

குண்டுவின் மென்நூல்கள்: வைரமுத்து கவிதைகள்: "Vairamuthu-Kavithaigal"

How to Cure Eczema Naturally

How To Treat Exzema Face - Exzema Face Remedies

Saturday, April 16, 2011

Apple Cider Vinegar - A Natural Treatment For Eczema

Eczema Cure for everyone!!!

How to Treat Eczema [DermTV.com Epi #178]

Eczema (Dermatitis)

Pictures of Eczema - Infant Children Adult

Eczema & Allergies : What Is Eczema?

உலகக் கடிகாரத்தின் ஓட்டம்

உலகக் கடிகாரத்தின் ஓட்டம்

மாற்று வழியில் மின்னஞ்சல் அனுப்புவோமா?

மாற்று வழியில் மின்னஞ்சல் அனுப்புவோமா?

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

சதுரங்கம் விளையாடுவது எப்படி? (Chess)

சதுரங்கம் விளையாடுவது எப்படி? (Chess)

பிரயோசனமானத் தளங்கள்

பிரயோசனமானத் தளங்கள்

எந்தவொரு வலைப்பதிவையும் பிடிஎப் கோப்பாக பதிவிறக்கி பயன்படுத்தும் வசதி

எந்தவொரு வலைப்பதிவையும் பிடிஎப் கோப்பாக பதிவிறக்கி பயன்படுத்தும் வசதி

குண்டுவின் மென்நூல்கள்: ஜெயகாந்தன் சிறுகதைகள் - 3

குண்டுவின் மென்நூல்கள்: ஜெயகாந்தன் சிறுகதைகள் - 3: "jeyakant3"

குண்டுவின் மென்நூல்கள்: ஜெயகாந்தனின் சிறுகதைகள் - 2

குண்டுவின் மென்நூல்கள்: ஜெயகாந்தனின் சிறுகதைகள் - 2: "ஜெயகாந்தனின் சிறுகதைகள் 2"

குண்டுவின் மென்நூல்கள்: ஜெயகாந்தன் சிறுகதைகள் - 1

குண்டுவின் மென்நூல்கள்: ஜெயகாந்தன் சிறுகதைகள் - 1: "Jayakanthan - Short Stories Collection -"

குண்டுவின் மென்நூல்கள்: வைரமுத்து - தண்ணீர் தேசம்

குண்டுவின் மென்நூல்கள்: வைரமுத்து - தண்ணீர் தேசம்: "Vairamuthu - Thaneer Desam -"

குண்டுவின் மென்நூல்கள்: வைரமுத்து - கருவாச்சி காவியம்

குண்டுவின் மென்நூல்கள்: வைரமுத்து - கருவாச்சி காவியம்: "Vairamuthu - Karuvachi Kaaviyam -"

குண்டுவின் மென்நூல்கள்: தமிழ் பழமொழிகள் 6000 - ஆங்கில மொழி பெயர்ப்பு

குண்டுவின் மென்நூல்கள்: தமிழ் பழமொழிகள் 6000 - ஆங்கில மொழி பெயர்ப்பு: "6000 Tamil Proverbs"