Search This Blog
Saturday, April 16, 2011
குண்டுவின் மென்நூல்கள்: தமிழ் பழமொழிகள் 6000 - ஆங்கில மொழி பெயர்ப்பு
குண்டுவின் மென்நூல்கள்: தமிழ் பழமொழிகள் 6000 - ஆங்கில மொழி பெயர்ப்பு: "6000 Tamil Proverbs"
குண்டுவின் மென்நூல்கள்: பகவத்கீதை
குண்டுவின் மென்நூல்கள்: பகவத்கீதை: "Hindus Punitha Nool - Bhagavad Gita in Tamil ..."
குண்டுவின் மென்நூல்கள்: உள்ளங்கையில் ஒரு கடல் - பிரபஞ்சன்
குண்டுவின் மென்நூல்கள்: உள்ளங்கையில் ஒரு கடல் - பிரபஞ்சன்: "உள்ளங்கையில் ஒரு கடல் - பிரபஞ்சன்"
குண்டுவின் மென்நூல்கள்: மறக்க முடியாத திரை நட்சத்திரங்கள்
குண்டுவின் மென்நூல்கள்: மறக்க முடியாத திரை நட்சத்திரங்கள்: "marakkamudiyatha kalaignarkal"
குண்டுவின் மென்நூல்கள்: இவன் தான் பாலா(டைரக்டர்)
குண்டுவின் மென்நூல்கள்: இவன் தான் பாலா(டைரக்டர்): "Tamil -Evan Thaan Bala"
குண்டுவின் மென்நூல்கள்: பாரதியார் பாடல்கள் - 3
குண்டுவின் மென்நூல்கள்: பாரதியார் பாடல்கள் - 3: "barathiyar padalgal_3"
குண்டுவின் மென்நூல்கள்: பாரதியார் பாடல்கள் - 2
குண்டுவின் மென்நூல்கள்: பாரதியார் பாடல்கள் - 2: "barathiyar padalgal_2"
குண்டுவின் மென்நூல்கள்: திருக்குறள் விளக்கஉரை
குண்டுவின் மென்நூல்கள்: திருக்குறள் விளக்கஉரை: "Tiruvalluvar - Thirukkural With Meanings -"
குண்டுவின் மென்நூல்கள்: மதன் - வந்தார்கள் வென்றார்கள்
குண்டுவின் மென்நூல்கள்: மதன் - வந்தார்கள் வென்றார்கள்: "Tamil Historical Story - Mathan's Vanthaargal Ventaargal (Ananda Vikadan) ..."
குண்டுவின் மென்நூல்கள்: பிரகாஷ் ராஜ் - சொல்லாததும் உண்மை
குண்டுவின் மென்நூல்கள்: பிரகாஷ் ராஜ் - சொல்லாததும் உண்மை: "Prakash Raj - Solvadhellam Unmai -"
சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: ஓர் ஆணின் புலம்பல்!
பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!
பேரனின் குழந்தைக்குப்
பெயர் வைக்கும் விழாவைப்
பார்க்கும்
பேறு
உங்களுக்கு தான் வாய்த்திருக்கிறது!
எங்கே போனாலும்
லேடீஸ் ஃபஸ்ட் என்கிறார்கள்...
ரேஷன் கடையைத்
தவிர
உங்களுக்கான
வரிசைகள் எல்லா இடங்களிலும்
குட்டையாகத் தான்
இருக்கின்றன..
நீங்கள் ஏறும் போது
பேருந்துகள்
அவசரமாக நகர்வதில்லை..
உங்களுக்கான
இருக்கைகள்
முன் பக்கத்திலேயே இருக்கின்றன
பின் சீட்டுப் பயணத்தின்
முதுகு வலிகள் உங்களுக்கு இல்லை..
வெளியூருக்குப்
போகும் போதோ
வேலைக்கு முதன் முதலில் போகும் போதோ
அப்பாவோ
அண்ணனோ
கணவனோ
கூட வருவார்கள்..
கூட்டம் நிறைந்த
மளிகைக் கடைக்குப் போனாலும்
'மேடம் நிக்கறாங்க பாரு
மொதல்ல கொடுத்து அனுப்பு"!
கப்பல்
கவிழ்ந்தாலும்
உங்களைத்தான் முதலில்
படகுகளில் ஏற்றுகிறார்கள்..
டைப் ரைட்டிங்கோ
கார் ட்ரைவிங்கோ
உங்களுக்கு ஒரு
சிநேகம் கலந்த மரியாதையுடன்
சொல்லித் தருவார்கள்..
பாரம்பரியமிக்க
கோவில்களில்
நுழையும் போது
மேல்சட்டை
துறக்க வேண்டிய
அவசியம் இல்லை..
நீங்கள் கைகாட்டும் நபரை
அடித்துப் போட
பொது ஜனமும்
மகளிர் காவல் நிலையங்களும்
தயாராக இருக்கின்றன..
அலுவலகம் கிளம்பும்
அவசரத்தில்
ரேசர்
கன்னத்தைக் கிழிக்கும்
அவஸ்தைகள் உங்களுக்கு இல்லை..
பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!
சமுத்ரா
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!
பேரனின் குழந்தைக்குப்
பெயர் வைக்கும் விழாவைப்
பார்க்கும்
பேறு
உங்களுக்கு தான் வாய்த்திருக்கிறது!
எங்கே போனாலும்
லேடீஸ் ஃபஸ்ட் என்கிறார்கள்...
ரேஷன் கடையைத்
தவிர
உங்களுக்கான
வரிசைகள் எல்லா இடங்களிலும்
குட்டையாகத் தான்
இருக்கின்றன..
நீங்கள் ஏறும் போது
பேருந்துகள்
அவசரமாக நகர்வதில்லை..
உங்களுக்கான
இருக்கைகள்
முன் பக்கத்திலேயே இருக்கின்றன
பின் சீட்டுப் பயணத்தின்
முதுகு வலிகள் உங்களுக்கு இல்லை..
வெளியூருக்குப்
போகும் போதோ
வேலைக்கு முதன் முதலில் போகும் போதோ
அப்பாவோ
அண்ணனோ
கணவனோ
கூட வருவார்கள்..
கூட்டம் நிறைந்த
மளிகைக் கடைக்குப் போனாலும்
'மேடம் நிக்கறாங்க பாரு
மொதல்ல கொடுத்து அனுப்பு"!
கப்பல்
கவிழ்ந்தாலும்
உங்களைத்தான் முதலில்
படகுகளில் ஏற்றுகிறார்கள்..
டைப் ரைட்டிங்கோ
கார் ட்ரைவிங்கோ
உங்களுக்கு ஒரு
சிநேகம் கலந்த மரியாதையுடன்
சொல்லித் தருவார்கள்..
பாரம்பரியமிக்க
கோவில்களில்
நுழையும் போது
மேல்சட்டை
துறக்க வேண்டிய
அவசியம் இல்லை..
நீங்கள் கைகாட்டும் நபரை
அடித்துப் போட
பொது ஜனமும்
மகளிர் காவல் நிலையங்களும்
தயாராக இருக்கின்றன..
அலுவலகம் கிளம்பும்
அவசரத்தில்
ரேசர்
கன்னத்தைக் கிழிக்கும்
அவஸ்தைகள் உங்களுக்கு இல்லை..
பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!
சமுத்ரா
நல்லவனாக இருப்பது
அருவியில் இறங்கி
ஆண் பெண் பேதம் தொலைப்பதற்கு
நண்பர்கள் அழைத்தார்கள்
போயிருக்கலாம் தான்
கால வெள்ளத்தில்
மீண்டும் நினைவு கூர்வதர்கேனும்...
வீட்டுக்குத் தெரியாமல்
போகும் திரைப்படம் ஒன்றுக்கு
நண்பன் அழைத்தான்
ஒருவேளை போயிருக்கலாம்
கடவுள் தன் நோட்டுப்புத்தகத்தில்
குறித்துக் கொண்டிருக்க மாட்டார் தான்..
வகுப்பைப் புறக்கணித்து
சினிமாவுக்கு வரும்படி
நண்பர்கள் அழைத்தனர்..
போயிருக்கலாம் தான்..
அந்த அரை நாள் பாடங்கள்
எனக்கு நோபல் பரிசை ஒன்றும் பெற்றுத் தரவில்லை ...
வெளிநாடு ஒன்றில்
நண்பர்கள் 'ஒருமாதிரியான'
'கிளப்' ஒன்றிற்கு அழைத்தனர்..
ஒருவேளை போயிருக்கலாமோ?
சில சமயங்களில் நினைத்துப் பார்த்து
புன்னகைக்கவாவது பயன்பட்டிருக்கும்..
ஒரே ஒரு வாய்
'டேஸ்ட் ' பண்ணு என்று
பார்ட்டி ஒன்றில் அழைத்தார்கள்
ஒரு வேளை பண்ணியிருக்கலாம்
காலங்கள் உருண்டோடி
தனியாக அமர்ந்திருக்கும் ஒரு
மத்தியான நாளில் அதன்
சுவை வாயில் வந்து போவதற்கேனும்..
ஒரு குத்துப் பாட்டுக்கு
நடனம் ஆடும்போது என்னையும்
உள்ளே இழுத்தார்கள்..
தப்பாகவேனும் ஆடியிருக்கலாம் தான்
மாடியில் உலாவும் போது
அந்த வேடிக்கை நடனத்தை
எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இருந்திருக்கும்..
நாணம் தவிர்த்துக்
கேட்டு விட்ட போது ஒரு
முத்தம் தந்திருக்கலாம் தான்...
நாட்கள் நகர்ந்தாலும்
நாக்கில் அதன் அனுபவம்
சிலசமயம் வந்து போயிருக்கும்..
ஆம்
நல்லவனாக இருப்பது
நல்லது தான்..
ஆனால் என்ன
உங்கள் வாழ்வில்
சில பல அனுபவங்கள்
இழக்கப்பட்டிருக்கும் அவ்வளவே...

இன்டர்வியூ
இன்டர்வியூ
கிளம்பிக் கொண்டிருந்தேன்..
"இந்த சட்டை ராசியே இல்லை
வேற போட்டுப் போ"
என்றாள் அக்கா..
"கம்பெனியப் பத்தி
எல்லா டீடெயில்ஸையும்
வெப்- சைட்ல
பாத்துட்டியா" என்றான் அண்ணன்..
"சரியா பஸ் புடிச்சு
டைமுக்குப் போய்ச் சேரு "
என்றார் அப்பா...
"இப்பெல்லாம் ஜாவாலதான்
ஜாஸ்தி கேள்வி
கேட்கறாங்களாம்" என்றான் தம்பி...
ஒரு
நூறு ரூபாயை அதிகமாகக் கொடுத்து
"பசியோட வராதே
வர்றப்ப
ஏதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல
ஃபுல் மீல்ஸ்
சாப்பிட்டுட்டு வந்துரு "
என்றாள் அம்மா..
வரது மாமாவின் கச்சேரி (சிறுகதை)
வரது மாமா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார்.
தெருவில் சந்தானம் அய்யங்கார் வந்து கொண்டிருந்தார்... அவர் வரது மாமா வீட்டுக்கு தான் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து " என்ன மாமா, இந்த பங்குனி வெய்யில்ல நடந்து வர்றேள், போஜனம் ஆச்சா? சொல்லி விட்டிருந்தா நானே வந்திருப்பேனே? கையில் என்ன? வேலை செய்யலையா?" என்றார் வரது மாமா...
அவர் கேட்ட நாலைந்து கேள்விகளில் கடைசிக் கேள்விக்கு மட்டும் அய்யங்கார் பதிலளித்தார்.கையில் ஒரு டேபிள் ஃபேன் இருந்தது.. அவ்வளவு பெரிய சரீரம் ஃபேனைத் தூக்கிக் கொண்டு வந்ததால் அவருக்கு மூச்சு வாங்கியது : "ஆமாம் வரது..சுவிட்சைப் போட்டால் 'கொய்'ன்னு ஒரு சத்தம் வர்றது..ஓட மாட்டேங்கறது..இது இல்லாம இந்த வெய்யக் காலத்துல தூங்கவே முடியலை..கொஞ்சம் சீக்கிரமாப் பாரு " என்றார்
"வைச்சுட்டுப் போங்க மாமா.பாத்து வெக்கறேன்..ரேடியோ வேற ரெண்டு மூணு இருக்கு.ரெண்டு நாளைக்குள்ள பாத்துர்றேன் " என்றார் வரது மாமா.
என்ன? ஓ வரது மாமாவைப் பத்திக் கேட்கறேளா? சொல்றேன்..அவர் கல்யாணமே பண்ணிக்கலை..ஏன் என்றெல்லாம் தெரியாது..அவருக்கு வயசான சித்தி ஒருத்தி இருக்கா..அவ வீட்ல தான் தங்கியிருக்கார் மாமா.அவ பேரு பங்கஜம் பாட்டி..புருஷன் இல்லை...பிள்ளைகளும் விட்டுப் போயிட்டா. வரது மாமா தான் கடைசி காலத்துல அவளைப் பார்த்துக்கறார்..பங்கஜம் பாட்டிக்கு கொஞ்சம் பென்ஷன் வர்றது..அதெல்லாம் இப்ப விக்கற விலைவாசிக்கு எம்மூலை செம்மண்ணு சொல்லுங்கள்? வரது மாமாவுக்கு தெரிஞ்சதெல்லாம் நிறைய சங்கீதமும் அரை-குறை எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் வேலைகளும் தான்..முன்னது சோறு போடவில்லை..மனசுக்கு மட்டுமே சோறு போட்டது..இந்தக் காலத்துல பக்தியா பகவானை உருகிப் பாடுறவா எல்லாம் முன்னுக்கு வர முடியறதில்லை பாருங்கோ..சும்மா பகட்டு காட்டிக்கிட்டு, எல்லாரையும் தாஜா பண்ணிக்கிட்டு, எதையோ அரைகுறையா கத்தறவா எல்லாம் சங்கீத கலாநிதி வாங்கிண்டு ஃபாரின் எல்லாம் போறா..புரந்தர தாசர் "ஸ்ரீ காந்த எனகிஸ்டு" ல சொல்ற மாதிரி "பணத்துக்காக புகழுக்காக செல்வந்தர் வீட்டுக் கடைவாசலில் கைகட்டி நின்னுக்கிட்டு"...
யார் என்ன வேலை கொடுத்தாலும் தயங்காம செய்வார் வரது மாமா..ரொம்ப அப்பாவி..எத்தனை ரூபா கொடுத்தாலும் முகம் கோணாம வாங்கிக்குவார்..பீஸ் போயிருச்சுன்னா அக்ரகாரத்துல முதலில் ஞாபகம் வர்றது வரது மாமா தான்..மிக்சி, ஃபேன், ரேடியோ, சில சமயத்துல டி.வி. கூட ரிப்பேர் பண்ணுவார்..சங்கீதத்துல நல்ல ஞானம்..சின்ன வயசுல தஞ்சாவூர் பாகவதர் வீட்ல இவர் அம்மா சமையல் வேலை செய்தாங்களாம்..இவரும் டெய்லி அம்மா கூடப் போயி கேள்வி ஞானத்துலையே சங்கீதம் கத்துக்கிட்டார்..பாகவதர் கிட்ட சங்கீதம் படிக்க குரு தட்சிணை ரொம்ப ஜாஸ்தின்னு சொல்லுவா..பாவம் சமையல் காரிக்கு எப்படி கட்டும்? வரது மாமாவுக்கு படிப்பு ஒண்ணும் பெருசா ஏறலை..இவர் சிநேகிதன் பட்டாபி டவுனுல ஒரு ரேடியோ கடை வச்சிருந்தான்...அங்க தான் இந்த ரிப்பேர் வேலை எல்லாம் கத்துக்கிட்டார்..அது தான் இப்ப அவருக்கு சோறு போடறது
சரி அவர் புராணம் போதும்..இதுக்கு மேல சொல்றதுக்கும் அவர் வாழ்க்கைல எதுவும் இல்லை..ஒரு விஷயம்..அவர் முழுப்பேரு வரதராஜன்.கொழந்தை பொறந்து புண்யார்ச்சனை பண்றப்ப மூணு தடவை வரதராஜன்னு சொன்னதோட சரி..அதுக்கு அப்பறம் எப்பவுமே அவர் பேரு "வரது" தான்...
வரது மாமா மறுபடியும் ரேடியோவைக் குடைய ஆரம்பித்தார்.. ஒரு கம்பியை எடுத்து ஏதோ இரண்டு இடங்களுக்கு இடையே ஓட்ட வைத்து சால்டரிங் பண்ண ஆரம்பித்தார்..அவருக்கு ஓம்ஸ் லா எல்லாம் தெரியாட்டியும் எங்க எதை ஓட்ட வைத்தால் எது வேலை செய்யும்கற விஷய ஞானம் இருந்தது...அது போறுமே? அப்போது நிமிர்ந்து பார்த்தால் முன்னால் கிருஷ்ணமூர்த்தி மாமா நின்று கொண்டிருந்தார் ..கையில் தூக்கமுடியாமல் இரண்டு பைகள்..மாமா யாருன்னு கேட்கறேளா? அவர் எங்க கிராமத்துல இருக்கற யோக நரசிம்மர் கோவில் கமிட்டி மெம்பெர்...
மறுபடியும் வரது மாமா "வாங்க மாமா...பையை அப்படி வையுங்கோ.. இந்த பங்குனி வெய்யில்ல...."
"ஒண்ணும் இல்லை வரது..டவுனுக்குப் போயிட்டு சாமானெல்லாம் வாங்கிட்டு வரேன்...அதான் அப்படியே வர்றேன்..இந்த வருஷம் நம்ம நரசிம்ம ஜெயந்தி பொறுப்பெல்லாம் என்கிட்ட தான் ஒப்படச்சிருக்கா..நீ தான் நல்ல பாடுவியே, இந்த வருஷம் உன் கச்சேரி ஒண்ணு அப்படியே ஏற்பாடு பண்ணலாம்னு ஒரு யோசனை " என்றார்
வரது மாமாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..வருஷா வருஷம் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி நடக்கிறது..ஒரு தடவை கூட யாரும் இவரை கச்சேரி செய் என்று ஹாஸ்யமாகக் கூடச் சொன்னதில்லை..பந்தியில் இலை போடுவது, உப்பு, தண்ணீர் பரிமாறுவது, வெளியூர்க் காரர்களை தங்க வைத்துக் கவனித்துக் கொள்வது போன்ற வேலைகளைத்தான் வருஷா வருஷம் இவர் செய்வார்..ராத்திரி நடக்கும் பஜனைகளில் ஏதோ ஓரிரு பாடல்களைப் பாடுவார் அவ்வளவு தான்..இந்த வருஷம் கிருஷ்ண மூர்த்தி மாமா பொறுப்பு எடுத்திருக்கிறார்..அவர் கொஞ்சம் சங்கீத ரசனை உள்ள மனிதர்..அதிர்ந்து பேசத் தெரியாத நல்ல மனிதர்..அதனால் தான் வரது மாமாவுக்கு கச்சேரி சான்ஸ் கொடுக்கிறார்..
"கச்சேரியா? அதெல்லாம் எதுக்கு மாமா" என்றார் உள்ளே ஆசை இருந்தாலும்
இருக்கட்டும்..நம்ம ஊர்க்காராளை நாமே மதிக்கலைன்னா எப்படி ?"
"அதில்லை மாமா..கச்சேரின்னா பக்க வாத்தியம் எல்லாம் வேணுமே?"
"அதெல்லாம் நீயே எப்படியோ ஏற்பாடு பண்ணிண்டுடு வரது..எனக்கு இருக்கற வேலைகள்ல அதையும் பார்க்க முடியாது"
கிருஷ்ண மூர்த்தி மாமா விடைப் பெற்றுப் புறப்பட்டதும் உடனே வரது மாமாவுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது. உடனே போட்டது போட்ட படி உள்ளே போய் தூங்கிக் கொண்டிருந்த சித்தியை எழுப்பி விஷயத்தை சொன்னார்..நரசிம்ம ஜெயந்திக்கு இன்னும் பத்து நாள் தான் இருந்தது..அதற்குள் பக்க வாத்தியத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமே என்ற கவலை அவருக்கு
ரெண்டு தெரு தள்ளி அவருடன் கூடப்படித்த சிநேகிதன் பாலாஜி இருக்கிறான்..ஓரளவு வயலின் வாசிப்பான்..அவனை எப்படியாவது கேட்டுக் கொண்டால் வாசிப்பான் ..மிருதங்கம் தான் நம் அம்புஜம் மாமி பேரன் கத்துக்கரானே? அட தாளம்லாம் வாசிக்கறானாமே? அவனை எப்படியாது கூட்டி வந்து விடுவது என்று ஒரு மனதாக ஒரு முடிவுக்கு வந்தார்...
ரெண்டு நாளாக ரேடியோ ரிப்பேர் எல்லாம் மறந்து விட்டார்..சில பாடல்களை எப்போதும் முணுமுணுக்க ஆரம்பித்தார்..சந்தானம் அய்யங்கார் கூட வந்து ஃபேன் இன்னும் ரிப்பேர் ஆகவில்லை என்று கடிந்து கொண்டார்..
வரது மாமாவுக்கு நினைவில் இருந்ததெல்லாம் "கச்சேரி, கச்சேரி, கச்சேரி"
அவர் இது வரை மேடை ஏறிப் பாடியதெல்லாம் இல்லை...இது தான் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது
வரது மாமா டவுனுக்குப் போய் 'ஓடு ஒழுகுகிறது ,ரிப்பேருக்காக' என்று எடுத்து வைத்திருந்த ரூபாயில் ஒரு நல்ல வேட்டி, வெள்ளை சட்டை , அங்க வஸ்திரம் இவற்றை எல்லாம் வாங்கி வந்து விட்டார்...சித்தியிடம் இன்னும் சொல்லவில்லை..
வரது மாமாவுக்கு சங்கீதத்தில் தோழி என்றால் கோடி வீட்டில் இருக்கும் துளசிப் பாட்டி தான்..சங்கீதத்தில் என்ன சந்தேகம் என்றாலும் அவளிடம் தான் போவார்..சில சமயங்களில் இரண்டு பேரும் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டு இருப்பார்கள்..'மாமி முகாரி கரகரப்ரியா ஜன்யம், பைரவி நடபைரவி ஜன்யம் ,அப்புறம் எப்படி ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு?' 'யதுகுல காம்போதீல த்யாகராஜர் க்ருதி என்ன இருக்கு? நேத்து பூரா யோசிச்சும் ஞாபகம் வரலையே?' என்றெல்லாம்...
சரி வரது ..கச்சேரில என்ன பாடப்போற?
"இன்னும் யோசிக்கலை மாமி"
"ஒரு வர்ணம், அப்பறம் விநாயகர் மேலே ஏதாவது பாடிட்டு, அப்பறம் ரெண்டு கிருதி பாடிடு
அப்பறம் ஒரு பிரதான ராகம் பாடிட்டு கடசில மத்யமாவதியோ, சுருட்டியோ பாடி முடிச்சுடு போதும்"
"வர்ணம் எது பாடறது மாமி?" விரிபோனி முயற்சி பண்ணட்டா?
"அதுக்கெல்லாம் பக்க வாத்தியம் பக்காவா இருக்கணும்..அட தாளம் வேற...பேசாம "சாமி நின்னே" பாடிரு
"என்ன மாமி மொதல்ல எடுத்ததுமே ஸ்ரீ ராகம் எப்படி பாடறது?"
"ஒ அதை மறந்தே போயிட்டேன் பாரு..அப்படின்னா ஆபோகில எவரி போதன பாடிடு"
"சரி மாமி, மெயின் ராகம் என்ன பாடறது"
'கல்யாணி'?
'ஐயோ,,அது ஜொய்யுன்னு வாழை இலை மேல மழை பெய்யற மாதிரி இருக்கும்'
"அப்படின்னா கம்பீரமா கேதார கௌளை பாடிடு"
"என்ன மாமி என் குரல் நல்லா இருக்கறது உங்களுக்குப் புடிக்கலையா, அதையெல்லாம் மூச்சை அடக்கிப் பாடணும்"
இப்படியாக விவாதம் நீண்டுகொண்டே போய் கடைசியில் மெயின் ராகமாக பந்துவராளி பாடிவிட்டு 'அப்ப ராம பக்தி' பாடுவதாக முடிவானது
"அப்புறம் வரது,, மறக்காம பிலஹரி ராகம் பாடு,,,அது நரசிம்மருக்கு உகந்த ராகம்"
"சரி மாமி"
வரது மாமா எல்லார் வீட்டுக்கும் போய் நரசிம்ம ஜெயந்தி ரெண்டாம் நாள் தன் கச்சேரி இருப்பதாக பத்திரிக்கை வைக்காத குறையாக சொல்லி விட்டு வந்தார்..
அவர் சித்தி சொன்னாள்: வரது ரெண்டாம் நாள் தஞ்சாவூர்ல இருந்து அந்த வாழத் தோட்டம் சுப்புராவ் வந்தாலும் வருவாராம்..அவர் தான் சபாவுல கார்யதரிசியா இருக்காராமே? உன் பாட்டக் கேட்டுட்டு உனக்கு சான்ஸ் கொடுத்தாலும் கொடுப்பார்...வரது நமக்கு நல்ல காலம் ஆரம்பமாயிட்டது டா.." என்றாள்
நரசிம்ம ஜெயந்தி வந்தது...அந்த விழா இங்கே மிகவும் பிரசித்தி என்பதால் கூட்டம் முதல் நாளே அலை மோதியது..கிருஷ்ண மூர்த்தி மாமாவைக் கண்ணிலேயே காண முடியவில்லை..மூணு நாள் விழா நடத்துவது என்றால் சும்மாவா? வசூல் பண்ண வேண்டும்..வரவு செலவுக் கணக்கு, சமையல் காரர்களை ஏற்பாடு செய்வது, சாமான் வாங்கிப் போடுவது, கோயில் சத்திரத்தில் வெளியூர் காரார்கள் தங்க ஏற்பாடு செய்வது, மைக் செட் என்றெல்லாம்..ஒரு கல்யாணம் போல..
முதல் நாள் விழா முடிவடைந்தது...கோவிலில் ரெண்டு வேளை சாப்பாடு..ராத்திரி பத்து மணிக்கு மேல் கிருஷ்ணமூர்த்தி மாமா வரதுமாமா வீட்டுக்கு வந்தார்..
"ச்சே, என்ன மனசங்கப்பா , சுவாமி கும்பிட வர்றாளா இல்லை சாப்பாட்டுக்கு வர்றாளான்னே தெரியலை..சாதம் கொளஞ்சு போச்சுன்னு புகார்..மொதல் பந்தியே ரெண்டரை மணி ஆச்சுன்னு ஒரு புகார்..சத்திரத்துல தண்ணி வரலைன்னு ஒரு புகார்..ஐநூறு ரூபாய் கொடுத்தேன்..அர்ச்சனை பண்ணலைன்னு ஒரு புகார்..போதும்டா சாமி..இந்த மனுசங்களுக்கு மத்தியில் எப்படி அந்த நரசிம்மர் யோகம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கார்னு தெரியலை" என்றார்
அப்புறம் வரது, உன் கச்சேரிய கடைசி நாள் வச்சுக்கலாமா ?, ஆட்சேபனை இல்லையே? நாளைக்கு காலைல லட்சார்ச்சனை..அதுக்கே ஒரு மணி ஆயிரும்..சாயங்காலம் அஹோபில சுவாமிகளை நம்ம அனந்து அழைச்சிட்டு வரப்போறாராம்..அவர் ஏதோ உபன்யாசம் கொடுக்கப் போறாராம்..நடு நாள்னா என்ன? கடைசி நாள்னா என்ன? சரி தானே? வருத்தம் இல்லையே ? என்றார்
வரது மாமா சரி என்றார்..ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆறுதலாக இருந்தது..நடு நாளுக்கு பயங்கர கூட்டம் வரும்..கடைசி நாள் என்றால் தேவலாம்..கொஞ்சம் ஆசுவாசமாய்ப் பாடலாம்
நடு நாள் நரசிம்ம ஜெயந்திக்கு கிராமமே அல்லோலகல்லோலப் பட்டது..எங்கு பார்த்தாலும் ஜனங்கள்..காவேரிக்காகவே வரும் ஜனங்கள் சிலர் ..ராத்திரி போடும் கத்திரிக்காய் தொக்குக்காகவே வருவார்கள் சிலர் .. வருஷா வருஷம் வருகிறோமே, இந்த வருஷம் தவறிப் போய் விடக்கூடாதே என்று வருவார்கள் சிலர் ..வெகு சிலர் நரசிம்மருக்காக வருவார்கள்..ஒரு ரயில்வே பிளாட்பாரத்தைப் போல விதம் விதமான மனிதர்களை அப்போது பார்க்கலாம் ..கோயிலைச் சுற்றி அமைதியாக எதையோ மந்திரம் போல முணுமுணுத்துக் கொண்டு வலம் வருபவர்கள்..அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை அடக்கி அமர வைக்கும் அம்மாக்கள், அப்பாக்கள்...தலைக்கு முக்காடு போட்ட மடிப் பெண்மணிகள்..ராக்கெட் விடும் லெவலுக்கு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள்...ஒரு மூலையில் அமர்ந்து சகஸ்ர நாமம் படிப்பவர்கள்..'இந்த சேலை எப்ப வாங்குனே? பார்டர் நல்லா இருக்கே ''கோமதி மகளுக்கு வரன் அமைஞ்சுதா?' என்று பகவத் விஷயத்தை விட்டு விட்டு வேறு எல்லாவற்றையும் பேசும் பெண்கள், யாரைப் பற்றியும் கவலைப் படாமல் ஒரு கோஷ்டியாக பஜனை செய்பவர்கள், இலை போட்டாகி விட்டதா என்று அவ்வப்போது எட்டிப் பார்க்கும் உள்ளூர்க் காரர்கள்...
அன்றும் சில சின்னச் சின்ன டென்ஷன்கள்,சண்டைகள்..சமையல் அறையில் யாரோ சட்டை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டார் என்ற கலவரம்..வாழை இலை போரவில்லை என்று ஒரு கலவரம்..எல்லாம் முடிந்து முதல் பந்தி முடியவே மூனரை மணி ஆகி விட்டது..
சுவாமிகளின் பக்தி உரையுடன் இரண்டாம் நாளும் முடிந்தது...
கடைசி நாள் காலை நான்கு மணிக்கெலாம் வரது மாமா எழுந்து கொண்டு விட்டார்..கொஞ்சம் பதற்றமாகக் காணப்பட்டார்...காலை பதினொரு மணி சுமாருக்கு கச்சேரி இருந்தது..
முந்தா நாளே பாலாஜியிடம் போய் ஒத்திகை பார்த்து வந்திருந்தார்...நேற்று வரை வருவதாகத் தான் ஒப்புக் கொண்டிருந்தான்...பத்து மணிக்கு கோவிலுக்கு வந்து விடுவான்...
வரது மாமா ஐந்து மணிக்கே காவேரிக் கரைக்குப் போய்க் குளித்து வந்தார்..கோடைக்காலம் ஆனாலும் காலைக் குளிரில் உடம்பு உதறியது..வயசாச்சுல்ல என்று எண்ணிக் கொண்டார்..."கபி வாரிதி தாட்டுனா" என்ற வரியை மனதில் ஆயிரம் தடவை நிரவல் செய்தார்..
பதினொரு மணிக்கு வரது மாமாவுக்கு இன்னொரு ஏமாற்றம் காத்திருந்தது..தஞ்சாவூரில் இருந்து பிரபல உபன்யாசகர் மைதிலி ராஜகோபாலன் திடீரென்று வந்திருக்கிறாராம்..எல்லாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இரண்டு மணி நேரம் "பிரகலாத பக்தி விஜயம்" என்ற தலைப்பில் பேசுகிறாராம்..கிருஷ்ண மூர்த்தி மாமாவைக் காணவே இல்லை..வரது மாமா அப்படியே உபன்யாசம் கேட்க உட்கார்ந்து விட்டார்..நடுவே கி.மு. மாமா ஒரே ஒரு தரம் தலையைக் காட்டி "வரது, சாயங்காலம் ஆறு மணிக்கு கண்டிப்பா உன் கச்சேரி, ரெடியா வந்துரு " என்று கூறி மறைந்தார்
தீர்த்தப் பிரசாதம் சாப்பிட்டு விட்டு வரது மாமா கோவிலிலேயே இருந்தார்..."இந்த வரதுவுக்கு இந்த வருஷம் என்ன வந்துது? ஒரு வேலை செய்யலை...நேத்தைக்கு பந்தில ஜலம் கூடப் பரிமாறலையே,என்ன ஒரு மாதிரி மிதப்புலையே திரியறான்" என்ற கம்ப்லையன்ட் வேறு..
ஐந்து மணி வரை பாலாஜி வரவில்லை..ஏனென்று தெரியவில்லை..மகேஷை அனுப்பி பார்த்து வரச் சொன்னதில் அவர் பெரியப்பா தவறி விட்டார் என்று உடனே கிளம்பி தஞ்சாவூர் போய் விட்டதாகத் தகவல் வந்தது..
மிருதங்கம் வாசிக்கும் பையன் மட்டும் வந்தான்
கடைசி நாள் என்பதால் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தது...நிறைய பேர் பந்தி முடிந்ததும் பஸ் ஏறி விட்டார்கள்..ஆயிரமாக இருந்த கூட்ட வெள்ளம் நூறாக வடிந்து விட்டிருந்தது...
ஆறரை மணிக்கு வரது மாமா மேடை ஏறினார்..ஒரே ஒரு மைக் இருந்தது...ம்ம்ம்ம் என்று பாடி சுருதி சேர்த்துக் கொண்டார்..மைக் சில நொடிகளுக்கு ஓய்ய்ய் என்று கூவி விட்டு அடங்கியது...மைக் செட்டு பாலு வேறு முன்னால் நின்று கொண்டு சீக்கிரம் செட்டை எல்லாம் எடுத்துட்டு நான் திருச்சி போணும் என்று அவசரப் படுத்தினான்...
வரது மாமா ப்ளானின் படி ஆபோகி வர்ணத்தைத் தொடங்கினார்...இருந்த நூறு பேரில் பாதிப் பேர் கிளம்பத் தொடங்கியிருந்தனர்...இப்போதும் கி.மு மாமாவைக் காணோம்..
தனி வாசிக்கும் பையன் அவன் பாட்டுக்கு தனியாக வாசித்துக் கொண்டிருந்தான்...எங்கெல்லாம் நிறுத்த வேண்டுமோ அந்த இடங்களில் விடாது வாசித்தான்.. எங்கெல்லாம் வாசிக்க வேண்டுமா அங்கெல்லாம் நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தான்...பாவம் அவனுக்கும் முதல் கச்சேரி போல இருந்தது..
வரது மாமாவின் சங்கீத வாழ்வுக்கு வந்த சோதனையாக அந்த நேரம் பார்த்து கரண்ட் போய் விட்டது..
இது தான் சாக்கு என்று அது வரை உட்கார்ந்திருந்த சிலரும் கிளம்பத் தயாரானார்கள்..."இருங்கோ அஞ்சு நிமிஷத்துல கரண்ட் வந்துரும் இருங்கோ..இவர் நல்லாப் பாடுவார்" என்று யாரோ அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தனர்..
அஞ்சு நிமிஷத்தில் கரண்ட் வரவில்லை...
இது தான் சாக்கு என்று பாலுவும் தன் மைக் செட்டை பேக் செய்து விட்டான்....அவனுக்கு வீட்டில் என்ன அவசரமோ பாவம்..
வரது மாமா ஏதோ முடிவுக்கு வந்தவராக மைக் இல்லாமலேயே சுருதியை ஏற்றி சத்தமாகப் பாட ஆரம்பித்தார்...அவர் பாடிய 'அப்ப ராம பக்தி' மிருதங்கம் வாசிக்கும் பையனுக்கும் அப்பன் ராமனுக்கும் மட்டும் கேட்டது
இப்போது மேடையைச் சுற்றி வரது மாமா , அவர் சித்தி, துளசி மாமி, மேலும் சில பொடிப் பையன்கள் மட்டும் இருந்தனர்..
அப்போது நாகராஜா மாமா எங்கிருந்தோ வந்து கட்டைக் குரலில் மிரட்டினார்..சரி சரி நேரம் ஆறது ..ஸ்வஸ்தி சொல்லி உற்சவத்தை முடிக்கணும்..சீக்கிரம் என்றார்..
"வரது போதும்..மங்களம் பாடிடு" என்றார்
வரது மாமா அவர் கம்பீரமான குரலை மீற முடியாமல் ' மங்களம் பாடம் பண்ணலை மாமா" என்றார்
எங்கிருந்தோ ஒரு பொடுசு மேடையில் ஏற்றி விடப்பட்டு அது உச்ச ஸ்தாயியில் "பவமான சுதடு பட்டு" என்று பாடியது
இப்படியாக வரது மாமாவின் (முதல்) கச்சேரி இனிதே முடிவடைந்தது...
வரது மாமா கோயிலில் இருந்து திரும்பி வருகையில் "இன்னிக்கு ராத்திரியே சந்தானம் மாமாவின் ஃபேனை ரிப்பேர் பண்ணிறனும்..காயில் தான் போயிருக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.

Wednesday, April 13, 2011
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் சிறுகதைகள்1
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் சிறுகதைகள்1: "Tamil Short Stories - Sujathavin Sirukathaigal"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் எப்படியும் வாழலாம்
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் எப்படியும் வாழலாம்: "Sujatha - Eppadiyum Vaazalaam -"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா?
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா?: "Sujatha - Kadavul Irrukkirara -"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து: "Sujatha - Oru Vingyana Paarvail Irundhu -"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்: "Sujatha - Katrathum Petrathum -"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?: "Yean Yathrkku YeppadiSUJATHA TAMIL _janaasoft"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்: "Sujatha - Kanayaliyin Kadaisi Pakangal -"
குண்டுவின் மென்நூல்கள்: சுகிசிவம் - வெற்றி நிச்சயம்
குண்டுவின் மென்நூல்கள்: சுகிசிவம் - வெற்றி நிச்சயம்: "Sukhi Shivam - Vetri Nitchayam -"
குண்டுவின் மென்நூல்கள்: ஜக்கி வாசுதேவ் - அத்தனைக்கும் ஆசைப்படு
குண்டுவின் மென்நூல்கள்: ஜக்கி வாசுதேவ் - அத்தனைக்கும் ஆசைப்படு: "Jakki Vaasudev - Aththanaikkum Aasaipadu -"
குண்டுவின் மென்நூல்கள்: லேனா தமிழ்வாணன்
குண்டுவின் மென்நூல்கள்: லேனா தமிழ்வாணன்: "Lena Tamilvaanan - Punnagai Enna Vilai -"
குண்டுவின் மென்நூல்கள்: ராமாயணம் - கிருபானந்த வாரியார்
குண்டுவின் மென்நூல்கள்: ராமாயணம் - கிருபானந்த வாரியார்: "Ramayanam-kirubanandha variyar TAMIL"
குண்டுவின் மென்நூல்கள்: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
குண்டுவின் மென்நூல்கள்: ஆழ்மனதின் அற்புத சக்திகள்: "ஆழ்மனதின் அற்புத சக்திகள்"
குண்டுவின் மென்நூல்கள்: தரிசனம் - ஜக்கி வசுதேவ்
குண்டுவின் மென்நூல்கள்: தரிசனம் - ஜக்கி வசுதேவ்: "ISHA Dharisanam - Sadhguru Jaggi Vasudev - ISHA Foundation ..."
Tuesday, April 12, 2011
குண்டுவின் மென்நூல்கள்: மர்மவீடு - இந்திரா சௌந்தர்ராஜன்
குண்டுவின் மென்நூல்கள்: மர்மவீடு - இந்திரா சௌந்தர்ராஜன்: "Marma Veedu- Indira Soundar Rajan டிஸ்க..."
பிகேபி: நிம்மதியாக வாழ்ந்திருந்தார்கள்
பிகேபி: நிம்மதியாக வாழ்ந்திருந்தார்கள்: "Netflix-ல் பழைய Outsourced திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல காமெடியாகவும் சிலநேரங்களில் வருத்தமாகவும் இருந்தது. சி.என்.என் தலைப்ப..."
பிகேபி: பாவம் கடவுள்
பிகேபி: பாவம் கடவுள்: "நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம..."
பிகேபி: யூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்
பிகேபி: யூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்: "புத்திசாலித்தனமான கிளவர் ஐடியா எதாவது உங்களிடம் இருக்கின்றதா? எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை..."
குண்டுவின் மென்நூல்கள்: நீலக்கல் மோதிரம் - இந்திரா சௌந்தர்ராஜன்
குண்டுவின் மென்நூல்கள்: நீலக்கல் மோதிரம் - இந்திரா சௌந்தர்ராஜன்: "Neelakkal Modiram - Indra Soundar Rajan ..."
குண்டுவின் மென்நூல்கள்: ஏழாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்
குண்டுவின் மென்நூல்கள்: ஏழாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்: "Yaezhaam Sakthi-Indira Soundar Rajan டி..."
குண்டுவின் மென்நூல்கள்: கிருஷ்ண தந்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன்
குண்டுவின் மென்நூல்கள்: கிருஷ்ண தந்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன்: "கிருஷ்ண தந்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன் ..."
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் - ஆ
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் - ஆ: "ஆ..! - சுஜாதா Aah - sujatha"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் எங்கே என் விஜய்
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் எங்கே என் விஜய்: "SUJATHA - Enge_ En_vijai"
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் அம்மா மண்டபம்
குண்டுவின் மென்நூல்கள்: சுஜாதாவின் அம்மா மண்டபம்: "SUJATHA - amma_mandapam"
அழியாச் சுடர்கள்: நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை
வலையேற்றியது: அழியாச்சுடர்கள் ராம் | நேரம்: 7:58 AM | வகை: கதைகள், பவா செல்லதுரை 
நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.
எங்கிருந்து ஆரம்பிக்க?
யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.
ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.
திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.
ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.
வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...
ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.
’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’
பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.
இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.
தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.
பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே - நீ பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே ...
என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.
அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.
கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,
’தேவநாம சங்கீர்த்தன பஜனை
தேவா ... தேவா ... நித்யபிதா ஒருவருக்கே நமோஸ்தே ... நமோஸ்தே ...’
என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.
குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.
நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல
’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.
”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...
எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.
யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.
நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.
சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.
இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.
தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.
வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.
ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.
தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.
ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.
”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”
என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.
கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.
இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.
மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.
பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.
ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.
”சர்வத்தையும் படைத்தாண்ட சர்வ வல்லவர் - இங்கே பங்கமுற்ற பசுந்தொட்டியில் படுத்திருக்கின்றார்.”
ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.
அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.
வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.
”எதுக்கு இவ்ளோ?”
”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”
”எந்தச் சேதாரமுமின்றியா?”
எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,
”தாயும் சேயும் பூரண நலம்”
மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.
*****
பிகேபி: யாருக்குச் சொந்தம்
பிகேபி: யாருக்குச் சொந்தம்: "மூன்றரை சதவீதம் டவுண் பேமண்ட் செலுத்தி FHA கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றாள் நிஷா அவசரம் அவசரமாக. தரமான பாடசாலைகள் உள்ள அமைதியான ஒ..."
பிகேபி: ஒரு துகளை தேடி
பிகேபி: ஒரு துகளை தேடி: "நூறு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரான் எனும் துகளை கண்டுபிடித்தார்கள். அதை ஓட விட்டு பின்பு அதனை மின்சாரம் என்றார்கள். இன்றைய நவ நாகரீக மின்ன..."
பிகேபி: ஒரே ஒரு டிகிரி
பிகேபி: ஒரே ஒரு டிகிரி: "இப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை. டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன். வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மா..."
தூறல் கவிதை: ஹைக்கூ
தூறல் கவிதை: ஹைக்கூ: "ஹைக்கூ கவிதைகள் நானும் எடுக்கவில்லை சாலையில் நாலணா நாலணா என்பதால் கதவு திறந்ததும் தப்பியோடிய கரப்பான் தண்ணீரில் விழுகிறது காணாமல் போனவ..."
தூறல் கவிதை: பொய்யாய் கனவாய்-பாலமுரளிவர்மன்
தூறல் கவிதை: பொய்யாய் கனவாய்-பாலமுரளிவர்மன்: "ஒரு திரைப்படம் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு (ஆட்டோ சங்கர்,சந்தனக்காடு மற்றும் சில)வசனம் எழுதியிருப்பவர்தான் பாலமுரளிவர்மன்.ஏற்கனவ..."
தூறல் கவிதை: புரிந்த,பிடித்த,நவீன கவிதைகளில் சில...
தூறல் கவிதை: புரிந்த,பிடித்த,நவீன கவிதைகளில் சில...: "தேவதச்சனின் கவிதைகளில் பெரும்பாலும் முதல் வரியைப் படிக்கவே தேவையில்லை.ஏனெனில்,தலைப்புதான் முதல் வரி.கடைசி டினோசார் என்ற தொகுப்பிலிருந்து என்..."
தூறல் கவிதை: முகம் காட்டாத கண்ணாடிகள்
தூறல் கவிதை: முகம் காட்டாத கண்ணாடிகள்: "என்னால் பார்க்கமுடியாத என் முகத்தை எனக்குக்காட்ட சில கண்ணாடிகளின் முன் நின்றேன். அவை எனக்கு எதையுமே காட்டவில்லை. சோர்வுற்றேன்...."
தூறல் கவிதை: காய சண்டிகை-இளங்கோ கிருஷ்ணன்
தூறல் கவிதை: காய சண்டிகை-இளங்கோ கிருஷ்ணன்: "எதிர்க் கவிதைகள் உயிர்மை,காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களின் பின் அட்டையில் அந்நூல் பற்றிய அறிமுக,மதிப்புரை காணப்படுகிறது.சில..."
Subscribe to:
Comments (Atom)