எல்லா மதங்களின் அனுபவங்களும் நடைமுறைகளும் உண்மையையும் அர்த்தத்தையும் உள்ளிணைத்தவையாக உள்ளனவா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் இறையியலாளர்களால் கடவுளோடு ஏன் சாத்தானும் அதே அளவு ஆற்றல் வாய்ந்த தன்மையுடன் இருக்கிறது என்பதற்கான கேள்விக்கு விடை காண முடியவில்லை. எங்கும் இருக்கும் கடவுளுடன் எந்தத் தீங்கும் இழைக்காத பல்லாயிரம் கோடி பேர் இன்னும் ஏன் இத்தனை துயருடன் இருக்கிறார்கள் என்பதற்கான பதிலை எந்த மதமும் தரவில்லை. அந்தக் கேள்விக்கு மூன்று வகையான விடைகள் தரப்படுகின்றன. 1.பாவத்தின் சம்பளம் மரணம் 2.அறவியல் சார்ந்த நடத்தை நெறிமுறை 3.இறுதி நீதி எனும் தெய்வீக மாயம்.
அதே போல் மற்ற இறையியலாளர்கள் மேலும் மூன்று பதில்களையும் தருகிறார்கள். 1.எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்றாலும் அதற்கும் எல்லை உண்டு 2.கடவுள் தனது ஆற்றலை வீணாகச் செலவழிப்பதை விரும்புவதில்லை 3.சாத்தானின் ஆற்றலுடன் கடவுள் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சிக்கலான கேள்விக்கு பின்நவீனத்துவம் எளிமையான ஒரு பதிலை வைத்திருக்கிறது. ஆதிகாலத்து பாவத்தைக் கைவிடுதல் என்பதைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பதில் மனித அந்நியமாதலை உள்ளிணைத்ததாக உள்ளது. அறிவொளி சார்ந்தவர்கள் நல்லதையும் தீயதையும் பிரிக்கிறார்கள். ஒரே கடவுள் கொள்கையினர் தீயதை மனித விடுதலையுடன் இணைக்கிறார்கள். அறிவொளியின் கருத்தைக் கடவுளைக் குறித்த மனிதனுடைய அணுகுமுறையாகக் கொள்ளலாம். ஒற்றைக் கடவுள் கோட்பாட்டில் நல்லதும் தீயதும் இணைந்துவிடுகிறது.
மூன்றாவது வழியாக, துயருற்றிருக்கும் கடவுள் என்ற கோட்பாடு இதற்குப் பதிலாக இருக்கும். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் துயர் போன்ற துன்பத்தை அனுபவிக்கும் கடவுள் மனிதனுடைய துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறார் எனலாம். ஷெல்லிங் எழுதிய ஒரு கவிதை இதற்கு சான்றாகக் கொள்ளாலம்: ‘கடவுள்தான் வாழ்வு, அவர் வெறும் ஓர் உயிர் அல்ல. ஆனால் எல்லா வாழ்வும் விதியைக்கொண்டது. அத்துடன் துயருவதையும் உருவாவதையும் அனுபவிப்பது.’
எனவே துயருரும் கடவுள் இல்லாமல் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் கடவுள் வரலாற்றுடன் இணைந்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் துயருரும் கடவுள்தான் இப்போது மனித குலத்தைக் காப்பாற்ற முடியும். பல்லாயிரம் கோடி பேரின் துன்பம் கடவுளின் துன்பம் என ஏற்றுக்கொள்ளலாம். அதனால் அது தெய்வீகமானது.
ஸ்லோவாய் ஜிஜெக்
No comments:
Post a Comment