Search This Blog

Tuesday, November 22, 2022

இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து

 பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி உள்நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர்.

ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மாத்திம் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரை ஊடறுத்துச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாற்படைகளுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் வாயிற்காவலுனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாயிற்கதவினூடாக அவர்கள் நுழைந்தனர்.
சுவரை கட்டியெழுப்புவதில் சோலியாக இருந்த சீனர்கள், வாயிற்காவலாளியை கட்டியெழுப்ப மறந்து விட்டனர்.
மனிதனை கட்டியெழுப்புவது வேறு அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விடயமாகும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இது.
கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன.
1- குடும்பங்களை சீர்குழைத்தல்
2- கல்வியை இல்லாமல் செய்தல்
3- முன்மாதிரிகளையும், மூலாதாரங்களையும் வீழ்த்துதல்
குடும்பத்தை சீர்குழைக்க வேண்டுமா? தாயின் வகிபாகத்தை இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள்.
கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணர்களும் அவர்களை பரிகஷிக்கும் அளவுக்கு செய்து விடுங்கள்.
முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள்.
உணர்வுபூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூலாதாரமும் வீழ்ச்சியுறும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?!

Thirunavukkarasu Senthan

No comments:

Post a Comment