'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்'-திருக்குறள் 605
கெடுநீரார் காமக் கலன்'-திருக்குறள் 605
விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும்,
அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை
நான்கும் கெடுந்தன்மையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
நாளைக்கு செய்வோம்,பிறகு பார்க்கலாம் என்பதுதான் நெடுநீர்.
இதைத் தவிர்த்தாலே மறத்தல், சோம்பல், அளவுக்கு மிஞ்சிய தூக்கம் ஆகியன இயல்பாகவே ஒழிந்துவிடும்.
அதனால்தான் காலம் தாழ்த்துவது,செய்யவேண்டியதை இழுத்தடிப்பதைக் குறிக்கும்
நெடுநீரை முதலில் எழுதி ஏனையவற்றை அதை தொடர்ந்து பேரறிஞர் திருவள்ளுவர்
எழுதியிருக்கிறார் போலும்.
நான் பார்த்த வெற்றிகரமான தொழில்
முனைவோர் அனைவரினதும் முக்கியமான பொது இயல்புகளில் ஒன்று சிறு விசயமானாலும்
காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் செய்யும் சுறுசுறுப்பு.
அதுதான் அவர்களை வெற்றிகரமானவர்களாக்கி இருக்கிறது.
அவர்களை அறிந்துகொண்டபோதுதான் திருவள்ளுவரின் இந்தக் குறளின் ஆழமே புரிந்தது.
வெற்றிபெறவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் இந்தக் குறள் மந்திரம் போன்று இருக்கட்டும்.
No comments:
Post a Comment