இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள
வேண்டும். கேரளத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடுவது அவ்வளவு எளிதான
விஷயம் கிடையாது. இரவுகளை வேதனையில் கழிக்கும் ஏராளமான பெண்களைக் கொண்ட ஒரு
நாடு இது. நான் புரிந்து கொண்டிருக்கிற வரையில் உடல் தேவையை நிறைவு
செய்தபின் இயல்பாகவே எதையோ இழந்துவிட்டதான ஒரு உணர்வு தோன்றுகிறது. இதன்
பிரதிபலிப்பு பல்வேறு விதமாக வெளிப்படுகிறது.சில மனங்கள் தன் இணையை
மனோரீதியாக துன்புறுத்த நினைக்கின்றன. சிலர் கெட்ட வார்த்தைகளை
பயன்படுத்துகிறார்கள். பாலியல்
தாக்குதலுக்குப் பிந்தைய வன்முறை தான் இம்மனோபாவத்தின் உச்சநிலை.
முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும் உறவு மிகவும் அபூர்வமாகவே
வாய்க்கிறது.
-திருடன் மணியன்பிள்ளை
அண்ணன் விஜயகுமார் இந்த புத்தகத்தை கொடுத்தபோது சொன்னார் , ஐந்து திரைப்படத்தை உருவாக்குவதற்கான கதைக்கரு இந்த புத்தகத்தில் இருக்கிறது என்று...
மொத்தம் 88 பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில், என்வரையில் ஒவ்வொரு பாகத்தையும் திரைக்கதையாக்கலாம். சொல்கிற விஷயத்தில் அத்தனை தெளிவு அத்தனை நேர்த்தி.
இந்த புத்தகத்தில் சில சுவாரஸ்யமான திருடர்களை மணியன் பிள்ளை நமக்கு அறிமுக படுத்திவைக்கிறார். முதலிரவு அறையில் ஒளிந்திருந்து, காட்சியை பார்த்துவிட்டு திருடும் மணவறை திருடன், பால்மாவை மட்டும் திருடும் பால் பொடித் திருடன், கோட்டயம் கான், தற்கொலை செய்துகொண்ட சூரியன் எனும் திருடன், அழகனான மயக்கு சுகு, திருடுவதற்கு முன்பு திருடும் வீட்டில் இயற்கை உபாதையை கழிக்கும் திருடன், தேங்காய் பாபு என திருடர்களின் விசித்திர உலகத்தையும், சில போலீஸ்க்காரர்கள், நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்கள் என சாதாரணவர்கள் பார்க்காத உலகத்தை பார்வைக்கு வைக்கிறார் மணியன்பிள்ளை . 17 வயதில் ஏற்பட்ட முதல் திருட்டு அனுபவம் ஒரு பெண்ணின் மூலமாக நிகழ்வது ஒரு பெண்ணின் நிலையிலிருந்து வருத்தமாகவே நான் உணர்ந்தேன்.
தற்போது தன் மகனின் ஆதரவில் வசித்து வரும் மணியன்பிள்ளை தொடந்து நிழல்போல தன்னை தொடர்ந்து வரும் பழைய வாழ்க்கையோடு இன்றும் போராடி வருகிறார். சமூகத்தின் எல்லாருமே இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என நினைக்கிறேன்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை குளச்சல் மு.யூசுப் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மிக அழகாக பொறுப்போடு மொழிபெயர்த்திருக்கிறார்.
ஒருவரிடம் எத்தனை சாகசங்கள் இருக்கும்? தெரிந்துகொள்ள ஒருமுறை வசித்துவிடுங்கள் திருடன் மணியன்பிள்ளையை
Yogi Sandru

No comments:
Post a Comment