Search This Blog

Friday, June 16, 2017

இராமேசுவரம் கோவில் வள்ளல் சீதக்காதி எனும் ஷேக் அப்துல் காதர் கட்டியதுதான்

தகவலுக்கு நன்றி Siddique Ahamed Anwar Raja
இந்து மக்களின் புனித தலமாக கருதபடும்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலை மன்னர் கிழவன் சேதிபதியுடன் இணைந்து பணியை மேற்கொண்டார் சீதக்காதி அவர்கள்

மற்றொரு தகவல் என்னவெனில் இராமநாபுர சமஸ்த்தானம் அரண்மணை கட்ட இவர் பொருளுதவி வழங்கியதாக மத்திய தொல்லியல் துறை சார்பாக கல்வெட்டு ஒன்று இராமநாபுர அரண்மனையிலே வைத்துள்ளது

வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள்


நான் படித்து புரிந்து கொண்ட வரையில் ரகுநாத சேதுபதி எனும் கிழவன் சேதுபதி காலத்தில் தான் ராமேசுவர கோவிலின் புகழ் பெற்ற சுற்று பிரகாரங்கள புதிய வடிவில் கட்ட பட்டன ...இதற்கு . நிதி கொடுத்து உதவியவர் சீதக்காதி வள்ளல் எனும் ஷேக் அப்துல் காதர் அது மட்டுமல்ல இவரது மேற்பார்வையில்தான் கட்டப்பட்டது .இந்த காலகட்டத்தில்தான் வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது . மிகவும் உறுதியான அரண்மனை சிவகங்கையில் கட்டப்பட்டது .முதன் முதலாக் முல்லை பெரியாறு அணை கட்டும் திட்டமும் இவர் அரசில் தான் முடிவெடுக்க பட்டது .சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் பொற்காலம் என்று கிழவன் சேதுபதி ஆட்சியைத்தான் சொல்கிறார்கள .இதில் மேலும் நான் ஆய்வு செய்ய இருக்கிறேன் . அதற்க்கான சில புத்தகங்கள் கேட்டேன் தோழர் யெஸ். பாலபாரதி எனக்கு அனுப்பி இருக்கிறார் .இணையத்தளத்தில் போதுமான தகவல்கள் இல்லை . இந்த விசயத்தில் நான் மிகவும் ஆர்வமாக இருப்பதற்கு காரணம் , இந்த மன்னனின் மூளையாக விளங்கி ஆட்சியில் சிறப்பு மிக்க வளர்ச்சிக்கு தான் சம்பாதித்த பணத்தையும் தாரளமாக நிதியாக கொடுத்து உதவியவர் சீதக்காதி வள்ளல் எனும் ஷேக் அப்துல் காதர். என்று நிரூபிக்க வேண்டும்எனது முல்லைபெரியாறு புத்தகம் எழுத ஆய்வு செய்தபோது இந்த சேதுபதி மன்னர் பற்றி தகவல்கள் சேகரித்தேன் . அதில் சேதுபதி மன்னரின் அமைச்சர் தான் முல்லை பெரியாறு அணை கட்டுவது பற்றி ஆய்வு செய்தார் என்று தெரிந்து கொண்டேன் .வள்ளல் சீதக்காதி பற்றி படிக்கும் போது இந்த மன்னரின் ஆட்சியில் அவரது பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி பார்க்கும் பொது ராமேசுவரத்தின் அந்த அருமையான உள் பிரகாரம் கட்ட காரணமானவர் இஸ்லாமியரான சீதக்காதி என்று புரிந்து கொள்ள முடிகிறது . மிகப்பெரிய ஆச்சர்யம் இந்த மன்னரின் காலத்தில் கிருஸ்துவவளர்ச்சிக்கும் இடமளித்து இருக்கிறார் . இவர் மத நல்லிணக்கதை போற்றுபவராக இருந்து இருக்கிறார். தமிழும் தெலுங்கும் ஆட்சி மொழியாக வைத்து இருந்தவர் .இவறது வாரிசான விஜயரகுநாத சேதுபதி தனது மகன் பாஸ்கர சேதுபதியை ஆங்கில புலமையுடன் வளர்த்து இருக்கிறார். அவர் சுவாமி விவேகானந்தருக்கு அமெரிக்காவின் சர்வ மத சபையில் கலந்து கொள்ள நிதியுதவி செய்து , அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் போது மிகப்பெரிய வரவேற்பை அளித்தவர் .சேதுபதி மன்னர்களின் சர்வ மத கொள்கையால் கவரபட்டே சுவாமி விவேகானந்தர் இவர்களுடன் மிகுந்த நெருக்கமான நட்புறவை கொண்டு இருந்தார் .வரலாறு மிக அருமையானதாக் நமக்கு நல்ல விசயங்களை தெளிவு படுத்துவதாக இருக்கிறது .ஆனால் அதன் முக்கிய சாராம்சங்களை அவ்வப்போது வந்த ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்து வரலாற்றை திரித்து இருக்கிறார்கள் . இந்த வரலாறு சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தால் எனக்கு நண்பர்கள் கொடுத்து உதவ வேண்டுகிறேன்
Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment