Search This Blog

Sunday, November 6, 2016

இதிகாசப் பெண்கள் - ராதை (கதையிலிருந்து ஒரு பகுதி )


"ராதை எனக்கு உங்கள் சம்மதம் மட்டும்தான் முக்கியம் . இந்த ஊரைப் பற்றி எனக்கு கவலையில்லை .வயதில் மூத்தவர்ளை ஒரு ஆண் திருமணம் செய்யக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான திருமண வயதுப் பற்றி, இந்த சமூகம் சொல்லும் விஷயம் எனக்கு ஒரு பொருட்டு இல்லை . இரண்டு மனங்கள் இணைந்தால் , இடையே வேறு ஒன்றும் தடையில்லை . வயதென்பது எண்ணிக்கை தானே தவிர , வேறில்லை ஆரோக்கியமான மனமும் , உடலும் மட்டுமே காதலுக்கு வேண்டும் .உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ராதை உங்களுக்கு என் மேல் காதல் இல்லையென்று ." பதில் சொல்லாது ராதை மவுனித்தாள் . அவள் பார்வை எந்த பொருளும் இல்லாமல் கண்ணன் மேல் பதிந்து இருந்தது ராதையின் மவுனம் கண்ணனுக்கு அவளின் சம்மதமாக தோன்ற மிகுந்த உற்சாகத்துடன் பேச முற்பட்டான். ஆனால் ராதையோ மிகவும் உறுதியான குரலில் கண்ணனை கேட்டாள்
" கண்ணா நீ எல்லா விசயத்தையும் எல்லா பெண்களிடமும் சிரித்து பேசுகிறாய் அப்புறம் ஏன் என்னிடம் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம் உன்னால் பேச இயலவில்லை? " ராதையின் குற்றச்சாட்டு கண்ணனுக்கு சிரிப்பாக இருந்தது .தான் பேசியதை குறித்து அவள் பெரிதாக விமர்சிக்கவில்லை என்ற ஒரு விசயமே கண்ணனுக்கு உற்சாகத்தை கொடுத்தது
." ராதை ... நீ புத்திசாலி என்று நினைத்தேன் . அது மற்ற விசயங்களில்தான் போலிருக்கிறது . ஒரு ஆண் தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்லும்வரை அவனால் அவளை இலகுவாக எதிர்கொள்ள முடியாது . அதற்கு நானும் விலக்கல்ல உன் மேல் எனக்கு தீவிரமான காதல் இருப்பதால் , என்னால் உன்னுடன் சகஜமாக உரையாட முடியாமல் ஒரு தயக்கம் என்னை சூழ்ந்து இருந்தது இப்பொழுது நான் என் காதலை சொல்லிவிட்டேன் இனி நமக்குள் எந்த பேதங்களும் இருக்காது .இனி நான் இன்னொரு பெண்ணை பார்த்தால் கூட உனக்கு தாங்காது ." என்று சொல்லி சிரித்த கண்ணனைப் பார்த்து ராதை ," என்ன கண்ணா நீயே பேசினாய் .. நீயே முடிவு எடுத்து கொண்டாய் , இதில் என் சம்மதம் எதுவும் வேண்டாமா ?" என்று கோபமாக கேட்க ,' எனக்கு உன் உதடு கொடுக்கும் சம்மதம் தேவையில்லை ராதை . உன் கண்கள் எனக்கு சம்மதம் கொடுத்து விட்டது அது உன் ஆத்மா கொடுத்த சம்மதம் . அது போதும் எனக்கு . மனதை மறைத்து நீ பேசலாம் . ஆனால் என் கண்களை சந்திக்கும் உன் கண்கள் எனக்கு உன் மனதை சொல்லி விட்டது ." என்று சொல்லிக் கொண்டே ராதையை இழுத்து அந்த மகிழம் மரத்தடியில் முதன் முறையாக முத்தமிட்டான் கண்ணன் . இதுவரை அவன் எத்தனையோ பெண்களை முத்தமிட்டு இருந்தாலும் , ராதையின் முத்தம் போல் வேறு எந்த முத்தமும் இருக்கவில்லை என்று அவன் சிந்தனை சொல்லியது . இருவருக்குள்ளும் ஆத்ம பரிவர்த்தனை சங்கமத்துடன் இந்த முத்தம் அரங்கேறியதால் , அந்த சுகம் விண்ணையும் தாண்டி பெருவெளியில் மிதந்தது.

Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment