Search This Blog

Saturday, March 12, 2016

தமிழ் படித்ததில் பிடித்தது


இயற்றமிழ் என்பது யாவர் மட்டும் பொதுமையின் இருவகை வழக்கினும் இயங்குகின்ற வசனமும் செய்யுளுமாகும் நூல்களின் தொகுதியாம்.
இசைத்தமிழ் என்பது பண்ணொடு கலந்தும், தாளத்தோடு கூடியும் இயங்கும் செந்தமிழ்ப் பாட்டுக்களானும், கொடுந்தமிழ்ப் பாட்டுக்களானும் இயன்ற இலக்கியங்களும் அவற்றின் இலக்கணங்களும் ஆகும் நூல் தொகுதியாகும்.

நாடகத்தமிழ் என்பது கையில் நூலெடுத்து படித்தற்குரிய வாய்ப்பு இல்லாத வேலைக்காரர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் நல்லறிவு புகட்டும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டதாகும்.
- பரிதிமாற் கலைஞர்

No comments:

Post a Comment