Search This Blog

Thursday, February 18, 2016

தந்தை


1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
*
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
*
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
*
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
*
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
*
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..
*
*
* தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
* அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்...
* அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்
அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது அவர் உடைய
அருமைஉனக்கு தெரியபோவதுமில்லை
தாய் வயிற்றில் இருக்கும்போது கிடைத்த முத்தம்! 
முதன் முதலாக உனக்கு வாங்கித் தந்த புத்தகம்! 
இதை விட வேற என்ன பெரியதாக கிடைத்து விட போகிறது 
உனக்கு, உன் தந்தையிடமிருந்து!!!
வீசும் காற்றாய் உணர்கிறேன் 
என்றும் உன்னை பார்கிறேன் 

நெஞ்சில் கொண்ட உறவோ - இது 
இமைகள் ஈரம் கொட்டும் இரவோ 

இறைவா உந்தன் நியாயம்தானோ 
என் தந்தை கொண்ட விதியோ 

நின்றுபோன தென்றலாய் – உறக்கம் 
கொள்கிறாய் இந்த மண்ணிலே 

மீண்டும் இங்கு வருவாயோ - எங்கள் 
இழப்பை மீட்டுத்தருவாயோ ... 

விடியலை தொலைத்து விட்டோம் - இனி 
இரவுகள் மட்டுமே பயணமாகுமே 

வர்ணமில்லா ஓவியம் – உன்னை 
யார் கிழித்து போட்டது 

இதயம் இன்று வலிக்குது – என்ன 
பதில் சொல்ல கேட்குது 

கைபிடித்து உன்னோடு நடந்த வழிகளின் 
தூரம் இன்னும் முடியவில்லையே 

வழிநிறுத்தி வலிகளை தந்துவிட்டு 
எழமுடியா உறக்கம் காண்கிறாயே 

பள்ளிசென்ற காலங்கள் - என்னோடு 
பக்கம் நீயருந்த தருணங்களும் 

உருக்கத்தோடு நீ பகிர்ந்த – உன் 
வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை 

எண்ணிக்கொண்டிருக்கிறேன் தனிமையில் 
கலங்கிகொண்டிருக்கிறது எனது விழிகள் 

தவிக்கிறேன் தந்தையின்றி - இறைவா 
நீ இல்லாமல் போனாயோ 

நினைவுகளை மட்டும் கொடுத்துவிடு 
என்னோடு நீங்காமல் இருக்கட்டும் ..... 

என்னைவிட்டு நெடுந்தூரம் சென்ற என் தந்தைக்கு சமர்ப்பணம்

No comments:

Post a Comment