Search This Blog

Monday, January 11, 2016

சம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்:


- "என்ன செய்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் உங்களது பதில் வேலை பற்றியதாக இருக்கிறது.
- ஓய்வு நாட்களிலும் வேலைக்கு செல்லும் அதே நேரத்திற்கு எழுந்திருக்கிறீர்கள்.
- சுகயீனம் இல்லாத நேரத்திலும் விடுப்பு எடுப்பதில் குற்றவுணர்ச்சியை உணர்கிறீர்கள்.
- வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் வாழ்வில் முக்கியமான கொண்டாட்டங்களை இழக்கிறீர்கள்.
- வேலை செய்யுமிடத்தில் நீங்கள் ஓர் அவசியமான ஆள் என்று நம்புகிறீர்கள்.
- வேலை இல்லாத நேரங்களிலும் உங்களது உரையாடல் வேலை பற்றியே இருக்கின்றது.
- சக வேலையாட்கள் மட்டுமே உங்களது நண்பர்கள்.
- வேலையற்ற மக்களை தரக் குறைவாக பார்க்கிறீர்கள். சோம்பேறிகள் மட்டுமே வேலையில்லாமல் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
- நீங்கள் அதிக நேரம் வேலை செய்வதால் குறைந்த நேரம் செய்பவரை விட சிறந்தவராக தற்பெருமை கொள்கிறீர்கள்.
- சம்பள உயர்வு கிடைக்கும் முன்னரே எந்த நுகர்வுப் பொருளை வாங்கலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
- வேலையில்லாத நாட்களில் சலிப்படைகிறீர்கள். பொழுதுபோக்கு எதுவுமின்றி டிவி பார்க்கிறீர்கள்.

No comments:

Post a Comment