Search This Blog

Tuesday, December 23, 2014

முகலாய மன்னர்கள் செய்த சேவைகள்

முகலாய மன்னர்கள் இந்தியாவை 800 வருடங்கள் ஆட்சி செய்தாலும் அவர்களின் சில தீமையான விஷயங்களை பெரிது படுத்தி
ஒட்டுமொத பாரசீக மன்னர்களையும் புறக்கணிப்பது சரியாகாது
அதே போன்று இந்தியாவிற்கு இந்த மன்னர்கள் செய்த சேவைகள்
இன்றும்கூட எந்த ஆட்சியையும் தர முடியவில்லை எனபது தான் நிதர்சன உண்மை
உதாரணமாக துண்டு துண்டாக இருந்த சமஸ்தானங்களை ஒன்றுபடுத்தியது
அதேபோன்று எங்கோ டெல்லியில் உக்கர்ந்துகொண்டு தமிழகத்தில் உள்ள குக்கிராமத்தையும் எப்படி ஆட்சி செய்ய முடியும் என்று யோசித்த அந்த மன்னர்கள்
உருவாக்கியதுதான் பஞ்சாயத்து .
அதே போன்று இந்தியா முழுவதும் முதன்முதலில் சாலைகள் அமைத்ததுமுகலாய மன்னன் செர்ஷா
இவருக்கு மற்றொரு புனைபேர் மாவீரன் செர்ஷா இவர்தான் இந்தியா முழுவதும் தாரினால் ஆனா சாலைகளை போட்டு தந்தார் .
இன்னும் ஏராளம் இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் பின்வரும் பதிவில் பார்க்கலாம்
இப்படி இந்த மன்னர்களை ஒட்டுமொத்தமாக இந்தியா புறக்கணிக்க முடியாது
வேதனை இப்பொழுது இவர்களின் சாதனைகள் வரலாற்றில் அளிக்க பட்டுக்கொண்டு இருகின்றன
மற்றும் இவர்களை ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்ற ஒரு மாயையை உருவாக்குகின்றனற் உண்மை அதுவல்ல
பாரசீகத்தில் இருந்து படையெடுத்து வந்த முதல் மன்னரையே அடித்து ஓட விட்டு இருக்க வேண்டுமே நம் இந்திய முன்னோர்கள்
800 வருடங்கள் ஆட்சியை ஒப்படைத்தார்கள் என்றால் அவர்க;லின் மக்கள் நலன் ஆட்சிதானே காரணம்
சரி இந்த பதிவின் நாயகன் தாரா சிக்கோ இவரை பற்றி பாப்போம்
மார்ச் 20, 1615 – 30, 1659 முகலாயப் பேரரசன்
உலகில் 7 அதிசயங்கள் இருப்பது என்றால் அதில் ஓன்று தாஜ்மஹால்
இந்தியாவை இந்த விஷயத்தில் உலகின் வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கும் வகையில் இந்தியாவிற்கு பெருமையை ஏற்படுத்திய ஷாஜகானுக்கும்
மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும்,
முடிக்குரிய இளவரசரும் இவரே .
இவர் செய்த காரியம் என்ன தெரியுமா ?
, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே
உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார்.
இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார்.
பாரசீக மொழியில் ஹிந்துக்களின் புனித வேதங்களில் ஒன்றான உபநிஷங்களை மொளிபெயர்தவர் வரலாற்றில் இவர் மட்டுமே
மற்ற பாகங்களில் ஏற்கனவே சனாதன தர்மம்[ஸ்வாமி விவேகானந்தர்கூற்றுப்படி] ஹிந்துமதம் பரவி இருந்தாலும்கூட
பாரசீகத்திற்கு ஹிந்து மதத்தை பற்றிய அறிவை இந்த மொழிபெயர்க்கப்பட்ட நூட்கள வாயிலாக அறிந்து கொண்டனர் பாரசீக மக்கள்
அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.
இதுபோன்று இவர் அரசவையில் அனைவருக்கும் சமஉரிமை தந்தது
மற்றும் ஒன்றாக உணவு அருந்தியது
என்று இவரின் வரலாற்றை ஆராய்ந்தாள் அறிந்து கொள்ளலாம்
தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,
எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment