Search This Blog

Friday, May 17, 2013

மூலிகை மருத்துவ குறிப்புகள்--இய‌ற்கை வைத்தியம்:

-

• பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்க முடியும். நன்றாக பசி எடுக்கும். செரிமானம் ஆகும். இதில் உள்ள இயற்கை கால்சியம் எலும்புக்கு உறுதியைத் தரும்.

• முசுமுசுக்கை இலையை அடையாகவோ, தோசையாகவோ தயாரித்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா தொந்தரவே ஏற்படாது.

• கரிசலாங்கண்ணியில் உள்ள தாமிரச்சத்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மைகொண்டது. அதனால் கரிசலாங்கண்ணியை உணவில் பயன்படுத்தலாம்.

• சரக்கொன்றை பூவை இடித்து தோசை, சப்பாத்தியில் சேர்க்கலாம். இதுவும் சர்க்கரை நோய், உடல் பருமனை குறைக்கும்.

• வேப்பம் பூவில் ரசம், துவையல் செய்யலாம். இதனால் குடல் பூச்சிகள் அழியும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.

• கொள்ளுவில் துவையல், ரசம் தயாரிக்கலாம். இதனை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகி, உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

மூலிகைகள்... பலன்கள்... மருத்துவ பலன் கொண்ட மூலிகைகளை அப்படியே சாறு எடுத்து பருகுவது நல்லதுதான். ஆனால் அவைகளில் சிலவற்றில் புழுக்களின் முட்டைகளும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் இருக்கும். சாறோடு சேர்ந்து அவைகளும் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் அவைகளை பக்குவப்படுத்தி, கஷாயமாக்கி குடிக்க வேண்டும்.

நமக்கு தேவையான மூலிகைகளை மண்சட்டியில் போட்டு நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு மடங்காக வற்ற வைத்து, மூலிகை கஷாயம் தயாரிக்க வேண்டும். இவைகளை பருகினால் பக்க விளைவுகள் இல்லாமல் முழு பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment