Search This Blog

Thursday, October 6, 2011

தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.




IMEI  தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள ( 15 இலக்க) எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.  உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும். 
 
 
விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு

 
மேஜை நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் சிகரெட் அல்லது வெற்றிலை பாக்கு புகையிலை உபயோகிப்பதுண்டு அவை புற்றுநோய்க்குப் பாதை போடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. தற்போதைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு என்னவெனில் நாள்முழுவதும் மேஜைகள் நாற்காலிகளில் அமர்ந்து வேலை செய்தாலே நாளடைவில் புற்றுநோய் வந்துவிடுமாம். விஞ்ஞானிகள் தான் இந்த அபாய அறிவிப்பைக் கொடுக்கின்றார்கள்...!எதை விடுவது? சிகரெட்டை விடுவதா? அல்லது டெஸ்க்டாப் வேலைகளை விடுவதா? ஸ்டேட்ச்யூட்டரி வார்னிங் படங்களை எதன்மேல் போடுவது? டொபாக்கோப் பாக்கெட்டுகள் மேல் போடுவதா? டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மேல் போடுவதா? விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நாமும் கவலைப்படுகிற ஒரு காலகட்டத்தில் அனைவரும் இருக்கின்றோம்.
                    
அதிலும் இந்தக் கவலை மகா அபாயமான கவலையாக இருக்கின்றது. அதுவும் வயிற்றிலே கையை வைக்கும் கவலை .. ஆம்; குடல் கேன்ஸர் வருகிறதே இந்த டெஸ்க்டாப் வேலைகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு குடல் கேன்ஸர் வருகிறதாம். விஞ்ஞான ஆய்வாளர்கள் இது குறித்த வழங்கும் ஆலோசனைகளைப் பார்ப்போம்!

பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் கம்ப்யூட்டர் டெர்மினலில் வேலை செய்கின்றவர்களுக்குக் குடல் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். புகை பிடிப்பவர்களை விட! மேலும் கம்ப்யூட்டர்த் திரைகளைப் பார்த்துக் பார்த்துக் கொண்டு பொழுதுபோக்கும் நேரத்திற்கும், இருதய நலத்திற்கும் நேரடித் தொடர்பும் உள்ளது என்பது ஓர் ஆய்வின் முடிவு. எழுந்து நிற்காமல் நெடுநேரத்திற்கு அப்படியே டெஸ்க்கில் உட்கார்ந்திருப்பது இடுப்பு சுற்றளவைக் கூட்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் தேகத்தில் அதிகரிக்கும். ஒரு நிமிடத்திற்கொரு தடவை எழுந்து மாறுதல் வழக்கங்கைளை வேலைகளுக்கு இடையில் மேற்கொள்ளலாம். இப்படி செய்வது மேலே கூறி உடல் நலத்திற்கு ஏற்படும் அபாயத்தைக் தணிக்கும்'' என்பது குயின்லேண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜீனிவீவே ஹீலி என்பவரின் கருத்து. 

No comments:

Post a Comment