Search This Blog

Monday, October 10, 2011

பாம்பு தலையுடன் கூடிய பிரமீடு கண்டுபிடிப்பு




மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அரச சிதைவுகளில் பாம்புகளை எரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு மேடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நகரின் Templo Mayo சிதைவுகளிலேயே அகழ்வாராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இரு பிரமீடுகளுக்கிடையிலும் பல ஆன்மீகம் தொடர்பான Hispanic Aztec இராச்சியத்தின் முக்கிய இடமாகவும் இருந்த இடத்தில் இந்த பாம்புத் தலைகளிலான சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
பாம்பின் தலை வடிவத்தில் அமைந்த அமைப்பு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏதாவது அரச பரம்பரையினரின் புதைகுழி இருக்கலாமென 5 ஆண்டுகளாகத் தேடிவந்திருந்தனர். ஆனால் அப்படியான எந்தவிதப் புதைகுழியும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்பகுதி 15 யார் விட்டத்தில் காணப்பட்டதுடன் கி.மு. 1469 இலும் கட்டப்பட்டிருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்பகுதி மெக்சிகோவின் Teochtitlan என்ற நகரின் தலைநகரான Aztec பகுதியில் அமைந்திருந்தது.
இங்குதான் ஆட்சியாளர்கள் எரிக்கப்பட்டார்கள் என வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அப்பகுதிதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இடமாக இருக்கலாமென அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பிரமீடு பகுதியில் தான் அக்காலத்து மதகுருமார்கள் பாம்புடன் இறங்கி, அந்தப் பாம்பு மேடையில் வைத்து எரித்திருக்கலாம் என இவர்கள் நம்புகின்றார்கள்.
இங்கு 19 பாம்பின் தலைகள் மேடைகளாக வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதி 2006 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போதுதான் முழுதாக இந்த பாம்பு மேடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment