Search This Blog

Friday, October 7, 2011

அணு அண்டம் அறிவியல் -49



அணு அண்டம் அறிவியல் -49 உங்களை வரவேற்கிறது.
Equivalence principle


பெர்ன்-இல் நான் என் பேடன்ட் ஆபீசில் அமர்ந்திருக்கும் போது திடீரென்று எனக்கு இந்த எண்ணம்பளிச்சிட்டது.ஒருவர் ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தில் மேலிருந்து கீழே விழும் போது அவர் தன்எடையை உணர்வதில்லைஇந்த எளிய கருத்தாய்வு எனக்குள் ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு கொள்கைக்கானவிதையை இட்டது -ஐன்ஸ்டீன்

ஒரு கேள்விஉயரத்தில் மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றின் மீதான புவியின் ஈர்ப்பு பூமியில்இருக்கும் ஒருவரின் மீதான புவியின் ஈர்ப்பை விட பதினைந்து சதவிகிதம் மட்டுமே குறைந்துஇருக்கிறது (F = GMm /R2 என்ற நியூட்டன் விதிப்படி) . அப்படி இருந்தாலும் அதில் இருக்கும்விஞ்ஞானிகள் தங்கள் எடையை உணர்வதில்லைஏன்?
Free fall and relativity


() ஈர்ப்புப்புலம் ஒன்றின் ஆதிக்கத்தில் இல்லாமல் இருக்கும் ஒரு விண்கலத்தில் A என்ற ஒருவர்இருக்கிறார்அவர் தன் மீது எந்த ஒரு விசையையும் உணர மாட்டார்விண்கலத்துக்கு வெளியேஇருக்கும் B என்பவரின் மீதும் எந்த விசையும் செயல்படாமல் இருவரும் மிதந்து கொண்டுஇருப்பார்கள்இப்போது விண்கலம் முடுக்கப்படுகிறது. A என்பவர் தன்
கால்களுக்கு எதிராக ஒரு மேல்நோக்கிய விசையை உணர்வார். (அது அவருக்கு விண்கலத்தின் ஈர்ப்புபோல தென்படலாம்இப்போது A என்பவருக்கு B என்பவர் எடை இல்லாமல் மிதந்து (அல்லது விழுந்து)கொண்டு இருப்பது போலத் தோன்றும் .

மிக அதிக உயரத்தில் இருந்து குதிக்கும் சில டைவிங் வீரர்கள்மேலிருந்து விழும் போது அவர்களின்எடையை உணர முடிவதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.(பாராசூட்டை விரிப்பதற்கு முன்பு) (இதனாலேயே மிக அதிக உயரத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்வது சிலருக்குப்பிடிக்கிறது,எடை அற்ற தன்மையை சில வினாடிகளாவது உணர முடியும் என்பதால் )எடை என்பதுபூமியின் ஈர்ப்பினால் விளைவது என்றால் ஒருவர் கீழே விழும்போது எந்த எடை என்ன ஆகிறதுஇந்தமாதிரி எடை இல்லாமல் விழுவதை (?!) இயற்பியல் FREE FALL என்கிறதுஅதாவது முழுவதும்தன்னை பூமி மாதாவுக்கு சரணாகதி என்று எண்ணிக் கொண்டு மேலிருந்து 'தொப்என்றுவிழுவது.கீதையில் கிருஷ்ணன் சொல்கிறானே

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என் சரணங்களில் விழு!
ஐன்ஸ்டீனின் முடுக்க ஈர்ப்பு சமன்மை ( THEORY OF EQUIVALENCE) படி படத்தில்(மற்றும் ()ஆகிய இரண்டும் சமம் ஆகும்.

(இப்போது பூமியில் இருக்கும் ஒருவர் (A ) சர்வதேச விண்வெளி நிலையத்தில் (Space station )உள்ள ஒருவரைப் (B ) பார்த்தால் அவர் கேஸ் (வில் உள்ளது போலவே உணர்வார்.அதாவது தான்தொடர்ந்து மேலே முடுக்கப்படுவது போலவும் B என்பவர் தொடர்ந்து கீழே விழுந்து கொண்டிருப்பதுபோலவும்!

முடுக்க ஈர்ப்பு சமன்மை படி ஒரு மரத்தில் இருந்து அறுபடும் எடை இல்லாத ஆப்பிள் ஒன்றை பூமிமேல் நோக்கி வந்து பிடித்துக் கொள்கிறது என்று (கூடசொல்லலாம்அதாவது மலையின் உச்சியில்இருந்து குதிக்கும் ஒருவர் அங்கேயே எடை இல்லாமல் மிதக்கிறார்பூமியின் தளம் மேல் நோக்கிவிரைந்து வந்து அவரை முட்டுவதால் அவருக்கு அடிபடுகிறதுசரி இங்கே உங்களுக்கு தர்க்க ரீதியாகஒரு கேள்வி எழலாம்படத்தில் A என்பவருக்கு நேர் எதிராக பூமியின் எதிர் திசையில் இருக்கும் Cஎன்பவருக்கு என்ன நிகழும்? C கவனிக்கும் ஆப்பிள் அங்கேயே நின்று கொண்டிருக்கபூமி மேலே(கீழே!)சென்று அதைப் பிடித்துக் கொள்ளும்சரிஅதே போல D என்பவருக்கும்இப்படி பூமி தொடர்ந்துஎல்லா திசைகளிலும் முடுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அது விரிவடைந்து கொண்டே இருக்கவேண்டும் அல்லவாபூமியின் ஆரம் மாறாமல் உள்ளதே?
வளைந்த வெளி-2D


இதற்கு நாம் கடினமான ஒரு முப்பரிமாண (அல்லது நாற்பரிமாணவளைந்த வெளியை கற்பனைசெய்ய வேண்டும்.(அந்த வெளியில் பூமி எல்லா திசைகளிலும் முடுக்கபப்டும்) மேலே உள்ள படத்தில்காட்டி இருப்பது இருபரிமாண வளைந்த வெளிஆனால் நம் பூமி சூரியனால் நான்கு பரிமாணங்களிலும்வளைக்கப்பட்ட ஒரு வெளியில் பயணம் செய்கிறது.

இன்னும் உங்களைக் குழப்ப வேண்டும் என்றால் பூமியில் நாம் எல்லாரும்(பிரபஞ்சத்தில் உள்ளஎல்லாமும்) FREE FALL இல் தான் உள்ளோம். (பூமியின் மையத்தை நோக்கிநியூட்டன் இரண்டுபொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அவற்றுக்கு இடையே உள்ள தூரத்திற்கு (இருமடிக்கு)எதிர் விகிதத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்தார்.அதாவது தூரம் குறையக் குறைய ஈர்ப்புஅதிகரிக்கும்.இப்போது இரண்டு பொருட்களை பக்கத்தில் கொண்டு வந்து ஒன்றை ஒன்று ஒட்டி வைத்துவிட்டால் (தூரம் ஜீரோ) ,அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை முடிவிலியாக (1 / 0 ) இருக்குமா? (இரண்டையும் பிரிக்கவே முடியாதுஇல்லை ! தூரம் என்பது ஒரு பொருளின் மையத்துக்கும்இன்னொரு பொருளின் மையத்துக்கும் இடையே கணக்கிடப் படுகிறது.இரண்டு பொருட்களை ஒட்டிவைத்தாலும் அவற்றின் மையங்களுக்கு இடையே உள்ள தொலைவு பூஜ்ஜியமாக இருப்பது இல்லை.

[இரண்டு பொருட்களுக்கு ஒரே மையம் இருக்கும் என்ற பட்சத்தில் அவைகளுக்கு இடையே ஈர்ப்புவிசை முடிவிலியாக இருக்கும்ஆனால் இரண்டு பொருட்களுக்கு ஒரே மையம் என்றால் இரண்டுபொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.இயற்பியலில் இரண்டு பொருட்கள் ஒரே காலத்தில்இருக்க அனுமதி உண்டுஒரே இடத்தில் இருக்க முடியாதுஇன்னும் சரியாக சொல்வதென்றால்இரண்டு பொருட்கள் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஒரு பொருள் ஒரே காலத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது! ]

நியூட்டன் இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று மற்றதன் மையத்தை நோக்கி இழுக்கப்படுகின்றனஎன்றார்ஆனால் ஐன்ஸ்டீன் இதையே இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று மற்றதன் மையத்தைநோக்கி சுயமாக விழுகின்றன என்றார்.(பொருளை சுற்றி உள்ள காலவெளி வளைவதால்) நாமெல்லாம்தொடர்ந்து பூமியின் மையத்தை நோக்கி விழுவதை ஈர்ப்பு என்கிறோம். (பூமியின் மேற்பரப்பு தடுப்பதால்நாம் பூமியின் மையத்தை அடைய முடிவதில்லைஒரு கல்லை நேராக மேலே எறிந்தால் அது நேராகஅதே பாதையில் கீழே வருகிறதுஅது ஏன் கொஞ்சம் தள்ளிப் போய் விழுவதில்லைஏன் என்றால் கல்பூமியின் மையத்தை நோக்கிய மிகக் குறைந்த தூரத்தையே தேர்ந்தெடுக்கிறது.
தன்னைத்தானே முழுங்கும் பாம்பு /பிரபஞ்சம்



பூமியில் மிக ஆழத்துக்கு ஒரு குழியைத் தோண்டுவதாகக் கொள்வோம்.(பூமியின் மறுபக்கம் வரை)இப்போது அந்தக் குழியில் ஒரு கல்லைப் போட்டால் அதற்கு என்ன ஆகும்அது குழியின் அடுத்தமுனை வழியே வெளிவராதுபூமியின் மையத்தை சார்ந்தே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும்இந்தமையத்தை நோக்கிய ஈர்ப்பு இயற்பியலில் மட்டும் அல்லஆன்மீகத்திலும் இருக்கிறது.புத்தரின் வழிமையத்தின் வழி என்றுஅழைக்கப்படுகிறது.ஏதோ ஒரு மையம் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. சமயங்கள் மையத்தை அடைவது எப்படி என்று போதிக்கின்றன.பிரபஞ்சம் விரிவடைகிறது என்றஉண்மையை சில விஞ்ஞானிகள் 'உண்மையின் ஒரு பகுதிதான் என்கிறார்கள்ஒரு காலத்தில்பிரபஞ்சம் விரிவடைவதை மெல்ல மெல்ல நிறுத்தி U -டர்ன் எடுத்து தன் மையத்தை நோக்கி வந்தே ஆகவேண்டும் என்கிறார்கள்தனக்குள் தானே விழுவது!!!
பாம்பு தன் வாலைப் பிடித்து தானே தன்னை முழுங்குவது போலமுழுவதும் சுருங்கி தனக்குள் தானேஅடங்கி விடும் என்கிறார்கள். ஆனால் தர்க்க ரீதியாக பாம்பு தன் வாலைக்கடித்தால் அந்த வால் அதன் உடம்புக்குள் தானே போய் ஆக வேண்டும்? !!!!

சரி ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு கொள்கையை சுருக்கமாக சொல்வது என்றால் :கனமான பொருட்கள் தன்னைசுற்றி உள்ள காலவெளியை வளைத்து பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. லேசான பொருட்கள்தங்களுடைய நிலைமம் (INERTIA ) காரணமாக எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் என்பது தெரியும். (ஈர்ப்பு இல்லாத போது நேர்கோடு என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக்குறைந்த தூரம்)எனவே வளைந்த வெளியில் பொருட்கள் பயணிப்பதற்கு மிகக்குறைந்த தூரமான (GEODESIC ) வளைந்தபாதையைத் தேர்ந்தெடுத்து தங்கள் நிலைமம் காரணமாக சென்று கொண்டே இருக்கின்றன.
அவைகளின் பாதை தொடர்ந்து வளைக்கப்படுவதால் அவை அந்த பெரிய நிறையுள்ள பொருளை ஒருமுப்பரிமாண வெளியில் சுற்றி வருவது போலத்தோன்றும்அதாவது நிலவு அல்லது உயரத்தில்இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன் இவை பூமியை நோக்கி தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன.பூமியை நோக்கி விழும் பொருளுக்கு எடை இல்லை என்பதால் ஸ்பேஸ் ஸ்டேஷனில்இருப்பவர்களுக்கு எடை இருப்பதில்லை.(கேபிள் அறுந்த லிப்டில் இருப்பவர்களைப் போல.லிப்ட்சீக்கிரமே தரையை அடைகிறதுஆனால் ஸ்பேஸ் ஸ்டேஷன் தொடர்ந்து வட்டப்பாதையில் சதாவிழுந்து கொண்டே இருக்கிறது.) நிலவும் பூமியை நோக்கி தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது(continuous free fall ) எனவே நிலவில் இருப்பவர்களுக்கும் எடை இருக்காது.ஆனால் நிலவின் சொந்தநிறை காரணமாக அதற்கு சொந்த ஈர்ப்பும் இருக்கிறதுஎனவே நிலவில் நாம் எடையை உணரமுடிகிறது.பொருட்கள் தங்கள் GEODESIC பாதையில் இருந்து தவறும் போது மட்டுமே ஈர்ப்புஉணரப்படுகிறது.(பூமி சூரியனைப் பொறுத்து GEODESIC இல் உள்ளதுஎனவே நாம் சூரியனின் ஈர்ப்பைஉணர முடிவதில்லைநாம் ஏன் பூமியின் ஈர்ப்பை உணர்கிறோம் என்றால் பூமியின் மையத்தைநோக்கிய நம் GEODESIC பயணத்தில் இருந்து நாம் பூமியின் பரப்பால் தடுக்கப்படுகிறோம்.

சரிபடம் இரண்டை (மறுபடியும் பாருங்கள் .FREE FALL இல் இருக்கும் B என்பவர் தொடர்ந்துமுடுக்கப்படும் A என்பவரைக் கவனிப்பதாகக் கொள்வோம். FREE FALL என்றால் எந்த விசையும்இல்லாமல் எந்த முடுக்கமும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைஎனவே அவர் ஒரு INERTIAL FRAMEஇல் இருப்பதாக (நிலையான FRAME ) நாம் கருத முடியும்எனவே இந்த கேசில் நாம் சிறப்பு சார்பியல்கொள்கையை (Special relativity ) பயன்படுத்தலாம்ஒருவர் நிலையாக இருக்க இன்னொருவர் சீரானவேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பது சிறப்பு சார்பியல் .அனால் வெயிட்இங்கே இன்னொருவர் சீரானவேகத்தில் நகருவதில்லை.தொடர்ந்து முடுக்கப்படுகிறார் . ஆனால் முடுக்கம் என்பதை ( INCREMENT OF SPEED IN STEPS 
)என்று சொல்லலாம்.அதாவது நொடிக்கு நொடி வேகம் மாறுகிறதுஎனவே ஒரு நொடிகாலத்தை மட்டும் கணக்கில் கொண்டால் முடுக்கம் என்பதை சீரான வேகம் என்று ஒரு பேச்சுக்குதோராயமாக சொல்ல முடியும்சிறப்பு சார்பியலின் படி நகரும் ஒருவரின் காலம் நிலையாக உள்ளஒருவரின் காலத்தை விட மெதுவாக நகரும்எனவே a என்பவரின் காலம் B என்பவரின் காலத்தை விடமெதுவாக நகரும்.இப்போது படத்தில் (வுக்கு வரவும்.ஐன்ஸ்டீனின் கொள்கைப்படி () ()இரண்டும் ஒன்று தான்எனவே பூமியில் இருக்கும் a என்பவருக்கு தொடர்ந்து FREE-FALL அல்லதுinertial frame (விண்வெளி நிலையம்இல் இருக்கும் B என்பவரை விட காலம் மெதுவாக நகரவேண்டும் .எனவே ஈர்ப்பு காலத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சார்பியல் கணித்தது.ஆனால் இதை எவ்வாறு ஆய்வுகள் மூலம் நிரூபிப்பது?

சரி அடுத்த அத்தியாயத்தில் பொது சார்பியலின் கணிப்புகளை எப்படி நிரூபித்தார்கள் என்று பார்க்கலாம்.1919 கிரகணம்!

சமுத்ரா
 

No comments:

Post a Comment