மலர்கள் அனைத்துமே கடவுள் படைப்பில்
புனிதமானவைகள் தான் அதில் இந்த மலர்
இறைவனுக்கு ஏற்றது இது ஏற்காதது என்று
பாகுப் படுத்தி கூறுவது ஏன்? கேள்வி: தேன்மொழி, குடியாத்தம்
மலர்கள் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால் பாரிஜாத மலரும் பரங்கி பூவும் ஒன்று தான். ஆனாலும் ஒவ்வொன்றின் உள்ளும் தனி தன்மை மறைந்து கிடக்கிறது இதுகண்ணுக்கு தெரியா விட்டாலும் நமது அறிவிற்கும் உணர்விற்கும் நிச்சயம் தெரியும்.
ரோஜா மலரை பார்த்த உடன் வருகின்ற உணர்வு தாழம் பூவை பார்த்த உடன் வருவது இல்லை. மலர்களை மலர்களாக பார்த்து பூஜை செய்வது ஒரு முறை மலர்களை மூலிகை பொருளாக உணர்ந்து புகை செய்வது வேறொரு வகை.பக்திக்காக மலரை இறைவனுக்கு சாத்துவதில் உண்மையான அர்த்தம் ஒன்று மறை பொருளாக இருக்கிறது. மலர்கள் மனித எண்ணங்களை உள்வாங்கி பிரபஞ்ச வெளியில் கொண்டு செல்வதில் வல்லவைகள்.
கடவுளின் விக்கிரகங்களின் அடியில் ஸ்தாபிக்கப் பட்ட மந்திர சக்கரங்கள் குறிப்பிட்ட மலரில் உள்ள அதிர்வுகளை ஏற்று சாதகமாக்கி கொடுக்கும். அதாவது நீங்கள் எதற்க்காக பிராத்தனை செய்து மலரால் இறைவனை வ்ழிப்படுகிறீர்களோஅந்த எண்ணத்தை குறிப்பிட்ட மலர் நிறைவேற்றி தரும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்திற்கு இன்ன மலர் என வகுத்து கொடுத்தார்கள்.
இறந்தவர்களை புதைப்பது நல்லதா? எரிப்பது நல்லதா?
...கேள்வி : கார்த்திகேயன் , கடலூர் .சனாதன தர்மத்தின் ஆதார தூண்களான சதுர் மறைகள் பஞ்ச பூதங்களின் இதய பகுதியாக விளங்கும் அக்னியே சகலத்தையும் தூய்மையாக்கும் என்று சொல்கின்றன.மானிட சரீரம் என்பது அழுக்கானது தான் அதாவது இந்த உலகில் அக்கினி ஒன்றை தவிர மீதம் எல்லாமே அழுக்கானவைகள் தான்.
காற்றை ஊயிர்களின் மூச்சு எச்சில் படுத்துகிறது.தண்ணீரை ஜல ஜீவராசிகள் அசுத்தமாக்குகின்றன.மண்ணை எல்லோருமே அழுக்காக்குகிறோம்.ஆகாசத்தை நமது எண்ணங்களாலும் செயல்களாலும் கரைப் படுத்துகிறோம்
அக்கினி ஒன்று தான் தன்னிடம் வரும் எத்தகைய அசுத்தத்தையும் எரித்து சாம்பலாக்கி தனது தூய்மை கெடாமல் பார்த்து கொள்கிறது. அதனால் தான் வேதங்கள் மனித உடல் உட்பட அனைத்தையும் நெருப்பில் ஆகுதியாக்குங்கள் என்று சொல்கிறது. சடலங்களை புதைப்பது என்பது கூட பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடு கலக்க செய்வது தான். எரிக்கும் பழக்கத்தை விட புதைக்கும் பழக்கம் காலத்தால் முற்பட்டது தான். நமது இந்து தர்மத்திலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது தான். ஆனாலும் வேத நெறி என்பது உடல்களை சிதைவைப்பதையே சரி என்று சொல்கிறது. உலக நடை முறையில் புதைப்பதை விட எரிப்பது தான் சகல கோணங்களிலும் சிறந்தது.
No comments:
Post a Comment