பிரேசில் நாட்டின் அமேசான் ஆற்றின் கீழே 4 கிலோ மீற்றர் ஆழத்தில் மற்றொரு ஆறு ஒடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடு மிக பிரபலமானது. இங்கு பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காட்டில் வளைந்து நெளிந்து செல்லும் நீண்ட நதி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இந்த காட்டில் பல இடங்களில் துளையிட்டு பெட்ரோல் எடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்போது பல தரப்பட்ட தட்பவெப்பநிலைகள் தோன்றியதை அடுத்து ஆராய்ச்சியின் திசை திரும்பியது. அதன் காரணம் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது அமேசான் காட்டின் ஆறு போல 4 கிலோமீற்றர் ஆழத்தில் மற்றோரு ஆறு ஒடுவதை கண்டறிந்தனர். ரியோ ஹம்சா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிலத்தடி ஆறு அமேசான் ஆற்றை ஒத்து அதே அளவில் அதே திசையில் செல்கிறது. ஆனால் அமேசான் நதியை விட அளவில் குறுகி காணப்படுகிறது. நிலத்தடி ஆறு ஆண்டிஸ் என்ற இடத்தில் ஆரம்பித்து சோலிமேயிஸ் கடந்து நேரடியாக அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. அமேசான் ஆற்றை விட குறைந்த வேகத்தில் பயணிக்கும் ரியோ ஹம்சா 2000 மீட்டர்களுக்கு அமேசான் ஆற்றை போலவே பாறைகளின் இடுக்குகள் வழியாக செல்கிறது. அதன்பின் தன் திசையை மாற்றிக் கொண்டு குறுகிய அளவில் செல்கிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,"நிலத்தடி ஆறு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம்" என்றனர். |
Search This Blog
Monday, August 29, 2011
அமேசான் ஆற்றுக்கு அடியில் மற்றொரு ஆறு கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment