முதல் தெய்வம் விநாயகர்
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர்
வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும்
ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.
எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற
உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக
அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
ஓம் நமோ நாராயணாய
சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில்
நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.
அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.
ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது
ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில்
இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை
அடைகிறான்.
மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.
குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
சர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா
மன பயம் நீங்கி தைரியம் உண்டாக
ப்ரூக்ஷபதத்த லக்ஷ?மீக: பர்கோ பத்ரோ பயாபஹ:
பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண:
இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.
வியாபாரத்தில் லாபம் உண்டாக
லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:
இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.
சுகப்பிரசவம் சாத்தியமாக
ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:
இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.
வழக்குகளில் வெற்றி பெற
மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந:
இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.
பில்லி, சூன்யம் அணுகாதிருக்க
பராபிசாரஸமந: து:கபஞ்ஜந காரக
லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடிமுஹூர்த்தக:
இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால், பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே
இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை
வழிபட்டு வரவும்.
செல்வம் கிடைக்க
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:
ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி
மஹாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்
லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில்
புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.
நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும்
அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.
பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.
ஆபத்துக்கள் விலக
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.
பிருஹஸ்பதி மந்திரம்
இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும்.
1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம்
குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ:
ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ தி யோ தீர்க்க-
ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா
2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ
க்ரஹ-பீடா-அபஹாரக:
தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
ஸுரார்ச்ய: குட்மல த்யுதி:
3. லோக்-பூஜ்யோ லோக-குரு
நீதி-க்ஞோநீதி-காரக
தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ
வேத-வேத்யோ பிதாமஹ
4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா
நாமானி ஏதாநி ய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான்
புத்ரவான் ஸ பவேந் நர:
5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ
பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயோத் குரு-தினே
பீத-கந்த-அக்ஷத-அம்பரை:
6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச
பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா
பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:
கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க
கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின் உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.
திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் நிச்சயமாக நடைபெறும் என்பது நம்பிக்கை.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:
திருமணம் கைகூட
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.
கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம்ரய:
ஸுந்தரப்ரூ: ஸுநயந:ஸுலலாட: ஸுகந்தர:
எமபயம் தீர, மன வலிமை பெற ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
தினமும் காலையில் குளித்து விட்டு மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்லவும்.
மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்
விபூதி, குங்குமம் தரித்து, தீபத்தை ஏற்றி வைத்து ஒரு தட்டில் விபூதி, குங்குமத்தை சாமிபடத்தின் முன் வைத்து மூன்று முறை பாராயணம் செய்து பிறகு விபூதி, குங்குமத்தை உபயோகப்படுத்தினால் சகல மங்களமும் உண்டாகும்.
ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது ஸ்ரீ துர்கா தேவியின் திருநாமம். இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.
இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும்.
அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸும ப்ரிய
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:
ஆபத்துகள் அகல
இந்த ஸ்லோகத்தை காலை வேளையில் பத்து தடவை ஜெபித்து வர, நம்மைச் சுற்றியுள்ள சகல துன்பங்களும், ஆபத்துகளும் அறவே அகன்று விடும்.
சிந்தாயோக ப்ரயமநோ ஜகதாநந்த காராக:
ரய்மிமாந்த புவநேயய்ச தேவாஸுர ஸுபூஜித:
சிறை பயம் நீங்க
இந்த ஸ்லோகத்தை காலையில் நூற்று எட்டு தரம் உருக்கமாகப் பாராயணம் செய்து வர சிறைவாச பயம் நீங்கும்.
கணாகரோ குணய்ரேஷ்ட்ட: ஸச்சிதாநந்த விக்ரஹ:
ஸுகத: காரணம் கர்த்தா பவபந்த விமோசக்:
ஞானம் விருத்தியடைய
இந்த ஸ்லோகத்தை காலையிலும், மாலையிலும் படிப்பதற்கு முன், பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால் ஞானம் விருத்தியடைவதோடு படிப்படில் சி
றந்து விளங்குவார்கள். சிறந்த அறிவாளியாகவும் திகழ்வர்.
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:
அஜ்ஞாநவந தாவாக்நி: பரஜ்ஞாப்ராஸாத பூதி:
நினைத்த காரியம் நிறைவேற
இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:
ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்கமுகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடிகயாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.
நினைத்ததெல்லாம் நிறைவேற
ஸமாநா ஸாமதேவீ ச ஸமஸ்த ஸுரஸேவிதா
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா
இந்தச் சுலோகத்தை காலையில் 18 முறை கூறி வருபவர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
தேர்வில் வெற்றி பெற
வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீ
விமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா
இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.
செல்வம் விருத்தியடைய
வஸுப்ரதா வாஸுதேவீ வாஸுதேவ மநோஹரீ
வாஸவார்சித பாதஸ்ரீ: வாஸவாரி விநாஸி நீ
இந்த சுலோகத்தை காலை மாலைகளில் 18 முறை ஜபித்து வந்தால் நாளுக்கு நாள் செல்வம் அதிகமாக விருத்தியாகும்.
ஆபரண சேர்க்கை கிடைக்க
ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்நமண்டப மத்யகா
ரத்நாபிஷேக ஸந்துஷ்டா ரத்நாங்கீ ரத்நதாயிநீ
இந்த சுலோகத்தை காலையில் 10 முறை ஜபித்து வந்தால் பெண்களுக்கு நகைகள், ரத்தினங்கள் இவையெல்லாம் கிடைக்கும்.
அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட
ஸர்வரோக ப்ரஸ்மநீ ஸர்வபாப விமோசநீ
ஸமத்ருஷ்டி: ஸமகுணா ஸர்வகோப்த்ரீ ஸஹாயிநீ
இந்தச் சுலோகத்தை 108 முறை நீரைத் தொட்டு ஜபித்து வந்தால் ஜுரம் முதலிய நோய்கள் நீங்கும்.
தனதான்யங்கள் பெருக
தநதாந்யா தேநுரூபா தநாட்யா தநதாயிநீ
ததேஸீதர்மநிரதா தர்மராஜ ப்ரஸாதிநீ
இந்த சுலோகத்தை தினந்தோறும் காலையில் 10 முறை படித்து வந்தால் தனதான்யங்கள் மேன்மேலும் பெருகும்.
கலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும்
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனாத் பவேத்.
இதை தினமும் 12 முறை கூறவும்.
நவக்கிரகங்கள் தோஷம் நீங்க
ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர
ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ
சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா
ஹர்தா ஸமீரஜா:
இதை தினமும் காலையில் 9 முறை கூறவும்
எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க
ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர
ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
இதை தினமும் 12 முறை கூறவும்.
கடன் தொல்லையிலிருந்து விடுபட
ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ?ம
ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந்
அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர்
காதா ஸ்ம்ருதிர் மனு:
இதை காலை, மாலை 12 முறை கூறவும்.
தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற
ஓம் காத்யாயனி மஹாமாயே
மஹா யோஹீன் யதீச்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:
இதை காலை 12 முறை கூறவும்.
வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது
(இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித
பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.
எல்லா விஷங்களும் நீங்க
ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி
வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல
விஷ ஹரணாய ஸ்வாஹா.
கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்பா; நலஸ்யச
ருது பர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம்.
சகல செல்வங்களும் பெற
ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ
ஹனுமதே லம் லம் லம் லம் லம்
ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.
சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.
கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது
குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம
கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே
கருடன் (விஷ்ணு வாஹனன்)
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
ராம மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.
ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.
கல்வியில் சிறந்து விளங்க
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்
ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ÷க்ஷõட சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா
தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி
என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.
வாஸ்து துதி
வாஸ்து பூஜையன்று சொல்ல வேண்டியது. வீட்டில் வாஸ்து கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும் தினசரி இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய அவை நீங்கும்.
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரக்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்ணாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
வீட்டிலிருந்து வெளியே போகும் போது
வனமாலீ கதீ சார்ங்கீ சக்ரீ சநந்தகீ
ஸ்ரீ மான் நாராயணா விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான்தேவ:
ஸோமஸ்ச்சேந்திரோ யருஹஸ்பதி:
ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான்
ரக்ஷந்து ஸர்வத:
இரவு சாப்பிடுவதற்கு முன்
ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திரிம்பரி
ச்ர்த்தாம்ஸூர்யஸ்யநிம்ருசிச்ரததேக்ராத்தாபயேஹ நம
மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.
இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே: ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தரு
பவளே; புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக.
திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டியது
ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே
பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.)
கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)
பெண்களுக்கு நல்ல கணவன் அமைய
திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து, குத்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.
சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை
காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.
கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.
ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள். குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான். அன்பர்கள் பயனடைய வேண்டுகிறோம்.
(நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு)
இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்
விஸ்வாநாதாஷ்டகம்
ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான்சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.
இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.
இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பின்வரும் ஸ்லோகங்களை சிவபெருமான் சன்னதியிலோ அல்லது வீட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூஜை செய்து வழிபாட்டு பாராயணம் செய்தோ இதன் மகிமையால் சுகபோகங்களை அடையலாம்.
இது கந்தபுராணத்தில் சங்கர ஸம்ஹிதை என்னும் ஸ்லோகப் பகுதியில் குண்டோதரன் என்பவன் மீனாட்சி சுந்தரேஸ்வரனைப் வணங்கி பாடிய பாடல். இப்பாடல் மந்திர வலிமை மிக்கது.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக ப்ருதிவ்ஸ்வராய ஸ்தோத்திரம்
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .
பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்
உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் லலிதா பஞ்சரத்ன மந்திரம்
இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.
கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மையைப் போற்றினால் நாம் வேண்டியதை அருள்வாள். அபிராமி தேவி மீது அபிராமிப் பட்டர் பாடிய அந்தாதி
மந்திர சக்தி வாய்ந்தது.
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்து புகுந்து
இருந்தான் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே
பாற்கடலிலே தோன்றிய அமிழ்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிட காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத்தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டோ? பிரிந்தவர் ஒன்றுசேர சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரம்
ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான் கணவனைப் பிரிந்த சீதையை ராமரிடம் கொண்டு சேர்க்க அரும்பாடு பட்டார். அவரைத் துதித்தால் கணவன்-மனைவி கருத்து வேற்றுமை நீங்கி, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரத்தை தினசரி விடியற்காலையில் ஆஞ்சநேய சுவாமியின் முன் அமர்ந்து பாராயணம் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.
ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்
பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.
க்ருதா பீலநாதம் சிதிஷிப்த பாதம்
சநக்ராந்த ப்ருங்கம் கடிஸ்தோரு ஜங்கம்
யத்வ்யாப்வ கேஸம் புஜா ஸ்ரோஷி தாசம்
ஜய ஸமேதம் பஜே ராமதூதம்
சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.
சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்
ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன் . மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.
ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே
போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !
கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்
பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.
ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம
ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?
ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!
குருவே ஸ்ரீஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.
இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.
சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருள்களையும் ஸூக்ஷ?ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து, நம் பூஜாதிகளால் திருப்தியடைந்து நம்மை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்
அனைவரும் வழிபடத் தகுந்த சரஸ்வதி தேவி மூன்றாவது உலகத்திலோ மேரு மலையிலோ வசித்தாலும் எங்களுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதற்காக, சுகத்தைக் கொடுக்கக் கூடிய வேதரூபமான ஸ்தோத்திர வார்த்தைகளையும் அழைப்பையும் விரும்பியவளாக, இளகிய தன்மையுடன் அவசியம் வந்து, பூஜையைப் பெற்று எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.
ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம
இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.
திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.
இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு மணம் கைகூடும்.
பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.
மாங்கல்ய பாக்கியம் நிலைக்க
சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.
அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.
இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.
ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.
மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!
அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !
குழந்தைப் பேறு உண்டாக
தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே
திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.
கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே
திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டா?
கல்யாண சித்தி பெற மந்திரம்
வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும். தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.
இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.
அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா
துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம்.
சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.
No comments:
Post a Comment