Search This Blog

Monday, August 1, 2011

மிகப்பெரிய விண்வெளி கல் சீனாவில் கண்டுபிடிப்பு



பூமியில் சில தருணங்களில் விண்வெளி கற்கள் விழுவது உண்டு. அவ்வாறு விழுந்த அதிசய விண்வெளி கல் ஒன்றை சீன நிபுணர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.
சீனா மற்றும மங்கோலியாவை பிரிக்கும் அல்டாய் மலைப்பகுதியில் இந்த விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விண்வெளி கல் 2.2 மீற்றர் நீளமும், 1.25 மீற்றர் உயரமும் கொண்டதாக உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய 3வது விண்கல்லாக இந்த கல் உள்ளது. இந்த விண்வெளி கல் நமது பூமியில் உள்ள கல்லை விட கடினமாக இருந்தது. அட்லாய் மலைப்பிராந்தியத்தின் 10 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளிக் கல் இருந்தது. இந்த விண்வெளிக் கல் மேற்பரப்பு, கறுப்பு, சிவப்பு என பல வண்ணங்களை பிரதிபலித்தது.
இந்த விண்வெளிக் கல்லை எதிர்பாராத விதமாக தான் கண்டுபிடித்தோம் என ஷாங்போலின் தெரிவித்தார். இவர் பெய்ஜிங் கண்காணிப்பக விண்வெளி கல் ஆய்வு நிபுணர் ஆவார்.
விண்வெளிக் கல் இரும்பு சார்ந்ததாக இருக்கும் என ஷாங்போலின் தெரிவித்தார். சூரியக் குடும்பம் உருவாகும் தருணத்தில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி கிரகங்கள் சேதம் அடைந்து இந்த கற்கள் உருவாகி இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
1808 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும், 1923 ஆம் ஆண்டு நமீபியாவிலும் மிகப் பெரிய விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment