Search This Blog

Monday, August 22, 2011

பிஸியோதெரபி



===============
மன இறுக்கம், மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு (tension, stress and depression) போன்றவை பூசணி, பரங்கி, கிர்ணீப் பழம் போல் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவைதான். ஆனால் சில வேறுபாடுகள் உண்டு.
மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை நிரந்தரமாகப் பிரிந்தால் உருவாகும் வெற்றிடம் மன இறுக்கம்.
நம் சக்தியை மீறிய குறிக்கோள் மன அழுத்தத்தைத் தரும்.
ஒரே மாதிரியான வேலை, சூழலில் உள்ள மங்கல்தன்மை (dullness) போன்றவை மனச்சோர்வை அளிக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்க மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவை பயன்படும்.
ஆனால், நிபுணர்கள் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறார்கள். இது போன்ற சமயங்களில் நாம் மூன்று வகையாக இயங்குகிறோம்.
1) Over Excited Stress Response : அதீத எதிர்வினை - பதட்டம், கை கால் நடுக்கம், "சுள்" என்று கோபப்படுவது போன்றவை
2) Under Excited Stress Response : சுணக்கம் கொள்வது. தனித்திருப்பது, சோர்வு, ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்றவை
3) Mixes Response : சில விஷயங்களில் பதைபதைப்பும், வேறு சில விஷயங்களில் கூட்டுக்குள் முடங்கி விடுவதும் இந்த வகையின் கீழ் வரும்.
முதல் வகைக்கு யோகா போன்று மனதை அமைதிப்படுத்தும் வழி முறைகள் சரியே.
ஆனால் இரண்டாம் வகைக்கு அது தேவையான பலனைத் தராது. உடல் இயக்கம் துரிதமாக இருக்கும்படியான செயல்களில் நாம் ஈடுபட வேண்டும். நடைப் பயிற்சி, மெதுவான கதியில் ஓட்டம், பழைய அல்லது நமக்கு முற்றிலும் புதிதான ஒரு பொழுதுபோக்கில் ( hobby ) ஈடுபடுவது போன்றவை அபரிமிதமான பலனைத் தரும்.
மூன்றாவதைக் கையாள, மேலே கூறப்பட்ட இரண்டையும் கலந்து செய்யவேண்டும்.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மூன்றாம் வகையே பயன்தரும். நாள் முழுவதும் ஒரே இருக்கையில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கு இது ஒரு வரம்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நம்மை, சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது busy யாக இருக்க வேண்டும் அதுதான் BUSY-O-THERAPY !!! .......ஹா ஹா ஹா !!

No comments:

Post a Comment