40 வயது மாத்யூ கிறீன் இருதயப் பிரச்சனையால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு கேம்ப்ரிட்ஜ் ஷயரில் உள்ள பாப் வொர்த் மருத்துவமனையில் ஓபரேஷன் செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்டது. பிரிட்டனில் முதன் முறையாக முழு செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நபராக மாத்யூ கிறீன் உள்ளார். உலகம் முழுவதும் இது போன்று 900 செயற்கை இருதய ஓபரேஷன் நடந்துள்ளன. பிளாஸ்டிக் இருதயம் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மாத்யூ கிறீன் பெருமிதத்துடன் கூறுகிறார். பிரச்சனை இருந்த போது எங்கேயும் நடந்து செல்ல முடியாமல் அவர் அவதிப்பட்டார். பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்ட பின்னர் அவரால் நடக்கமட்டுமல்ல, ஏறி இறங்கவும் முடிகிறது. இந்த பிளாஸ்டிக் இருதயம் உரிய நேரத்தில் பொருத்தப்படாவிட்டால் நீண்ட காலம் வாழமுடியாத நிலை இருந்தது என மருத்துவ ஆலோசகர் ஸ்டீவன் கய் கூறினார். மாத்யூ உடல் நிலை மிக மோசமாக சென்ற நிலையில் இந்த செயற்கை இருதயத்தை பொருத்துவது குறித்து மருத்துவர்கள் ஆவசர ஆலோசனை செய்தனர். இந்த ஓபரேஷன் மாத்யூ கிறீனுக்கு புதிய வாழ்க்கை தந்துள்ளது. |
Search This Blog
Thursday, August 4, 2011
முதன் முறையாக பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment