படக் காட்சி படி இது தாலாட்டு பாடல் அல்ல. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறார். ஆனால் பாடல் தாலாட்டுக்கு உதவும். மென்மையான அன்னையின் குரலில் திருமதி சுசீலா அவர்களின் குரல் இனிமை.
திரைப் படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)
குரல்: P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா
பாடல்: பஞ்சு அருணாசலம்
இயக்கம்: பட்டு
ல ல ல ல லா லா லா
தேனில் ஆடும் ரோஜா
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு லா லா
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு
கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
உன் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த மாலை லா ல ல லா
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த மாலை
கனித் தோட்டம்
கனித் தோட்டம் விளையாடும்
கன்னங்கள் பூஞ்சோலை
கண்ணே என்னுயிர் பாமாலை
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
உன் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
Read more: http://asokarajanandaraj.blogspot.com/2011/12/blog-post_15.html#ixzz1h455cDWI
No comments:
Post a Comment