Search This Blog

Thursday, March 24, 2011

நீல கடலின் ஓரத்தில் Annai Velankanni Neela kadalin


படம் : அன்னை வேளாங்கண்ணி
இசை : தேவராஜன்
குரல் : T. M. சௌந்தரராஜன்

நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்


தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து கதிர் பெறுக
மின்னும் தாழை மடல் விரியும்
வேளாங்கண்ணி எனும் ஊராம்

நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்



பூவின் மணமும் புது வெயிலின்
பொலிவும் சுமந்த இளந்தென்றல்
ஆவும் கன்றும் அழைக்கின்ற
அன்பு குரலில் விளையாடும்

நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்


பொன்னேர் பிடித்த நல் உழவர்
பூமி தாயின் அருள் கொண்டார்
தன்னேர் இன்றி மீனவரும்
தாவும் கடலின் நிதி கண்டார்

நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்


தேனும் கலந்த தினை மாவும்
தீரா இன்ப சுவை சேர
மானின் விழியாள் மனை பேணி
மாறா காதல் நெறி நின்றார்

நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

No comments:

Post a Comment