Search This Blog

Monday, August 26, 2013

தீண்டாமை

யுவான் சுவாங்
சோழர்கள் ஆதிக்கம் துவங்கிய காலம் முதல் இந்த தமிழ்ச்சமூகம் சாதீய சமுகமாக சீரழியத் துவங்கியது.சாதி அடுக்கின் மேலிருந்த பார்ப்பனர்கள் சத்ரியர்களின் துணை கொண்டு பெரும்பாலான நிலங்களை கோயில் நிலம்,அரசு நிலம் என்ற பெயரில் பங்கு போட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தலித்துகளின் நிலங்களையும் பறித்துக் கொண்டு அவர்களை தங்களின் அடிமையாக்கினார்கள்.

தலித் சமூகத்தினரை குத்தகைக்கு பயிரிடக்கூட அனுமதிக்காதது மட்டுமின்றி,அவர்களை தீண்டாமை எனும் கொடிய வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

தலித்துகளின் இழிநிலைக்கண்டு மனம் வருந்திய செங்கல்பட்டு கலெக்டர் ட்ரெம்மன் ஏரே என்பவர் 1891-ல் தலித் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்று ஆங்கில அரசாங்கத்துக்கு மனு அனுப்பினார்.அது கிடப்பில் கிடந்த நிலையில் கிறித்துவ பாதிரியார்கள் (இந்து மடாதிபதிகள் அல்ல)இதே கோரிக்கையை ஆங்கிலேய பாராளுமன்றத்தில் முன் வைத்தனர்,கோரிக்கையை ஏற்று தலித் மக்களுக்கு நிலம் வழங்கிடுமாறு 1892-ல் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது,உத்தரவிடப்பட்ட பின்னரும் நீண்ட காலத்துக்கு நிலம் வழங்கப்ப்டவில்லை.

இந்நிலையில் அயோத்திதாசப் பண்டிதரின் இடையறாத முயற்சியால் ஆங்கிலேய அரசு 1927-31 காலகட்டத்தில் 3,34,000 ஏக்கர் நிலத்தினை தலித்துகளுக்கு வழங்கியது.இப்படி வழங்கப்பட்ட நிலங்களே பஞ்சமி நிலங்கள் ஆகும்.

இந்நிலங்களை தலித்துகள் பிறருக்கு விற்கவோ,தானமாகவோ,கிரையமாகவோ,குத்தகைக்கோ கொடுக்க முடியாது அப்படி முறைகேடாக பறித்தாலும் அரசாங்கம் அதை மீட்டு மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விதிகள் தெளிவாக கூறுகின்றன.

ஆனாலும் இந்த நிலம் விஷயத்தில் மட்டும் தீண்டாமையை ஒதுக்கி வைத்து விட்டு பாதிக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்களை பிற சாதியினர் அனுபவித்து வருகின்றனர் என்பது வேதனையான விஷயம்.
Photo: யுவான் சுவாங்

No comments:

Post a Comment