Search This Blog

Thursday, August 16, 2012

கார்ப்பரேட் மனப்பான்மை உதவியது!'




-- "பூர்விகா மொபைல்ஸ்' நிறுவனர் யுவராஜ்:

ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை விட்ட போது, அடுத்து என்ன என்று தெரியாமல் ஒன்றரை ஆண்டு காலம் போனது. திருமணம் முடித்திருந்த நேரம்; ஏதாவது சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். செய்தால், சொந்தத் தொழில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த நேரத்தில், என் உறவினர் ஒருவர், பழைய மொபைல் போன்களை, வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். "மொபைல்போன் விற்பனையில் இறங்கினால், நல்ல எதிர்காலம் இருக்கும்' என, அவர் தான் எனக்கு, "ஐடியா' தந்தார்.

மொபைல்போனுக்கு, உண்மையிலேயே எதிர்காலம் இருக்கிறதா என்பதை, நானே நேரடியாகத் தெரிந்து கொள்ள, பல ஊர்களுக்கும் சென்றேன்; மொபைல்போனுக்கு இருக்கும், "டிமாண்டை' புரிந்து கொண் டேன்; உடனே, மொபைல்போன் விற் பனை பிசினசில் இறங்கி விட்டேன். கடன் வாங்கித் தான், முதல் ஷோரூம் ஆரம்பித்தேன். ஒரே ஒரு அலமாரி, ஆறு மொபைல்போன்கள் மட்டுமே, விற்பனைக்கு வைத்தேன். முதல், மொபைல் போனை விற்க, ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. சோர்வில்லாமல் உழைக்க வேண்டி இருந்தது. பின், சிறிது சிறிதாக, தொழில், "டெவலப்' ஆனது. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அவர்களின் முதலாளி யைப் பார்ப்பதேயில்லை. ஆனாலும், அவர்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த, "கார்ப்பரேட்' மனப்பான்மை தான், எனக்கான திருப்புமுனையைத் தந்தது. முதலில் நம்பகமான ஊழியர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் நலன் மீது, நமக்கு அக்கறை இருந்தால், அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பர். என்னோடு, ஆரம்பத்தில் வேலை பார்த்த ஐந்து பேரை, என் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தினேன். அந்த ஐந்து பேர், 50 பேராக மாறினர். இன்று என் நிறுவனத்தில், வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை, பல நூறாக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் நான், திருப்பு முனைகளை நோக்கி, ஓடிக் கொண்டு தான் இருக்கிறேன்.


No comments:

Post a Comment