Search This Blog

Thursday, July 28, 2011

உங்கள் எதிர்காலம் அறிய , நீங்களே உங்கள் மூன்றாம் கண்ணை திறக்கும் ரகசியம்உங்களைப் பார்த்ததுமே சில ரிஷிகள் , உங்கள் எதிர்காலத்தை சொல்லிவிட 
முடியும். நீங்களே உங்கள் எதிர்காலம் அறிய , உங்கள் ஆத்மாவை விழிப்படைய செய்ய , ஒரு எளிய பயிற்சிமுறை இது. 

சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பது போல, நாம் ஒவ்வொருவருக்கும் நெற்றிக்கண் உண்டு.ஆதிகாலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்ததால் அவரவர் தமது எதிர்காலத்தை அறிந்தனர்.இப்படி அறியும் அறிவே ஆறாம் அறிவாகும்.காலப்போக்கில் கடவுளின் சாபத்தினால் இந்த ஆன்மீகச்செல்வத்தை இழந்துவிட்டோம்.
இதில் இந்துக்களாகிய நாம்தான் முன்னோடிகளாகவும்,முழுமை பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறோம். தற்போது இந்த முறை அரிதான ஒன்றாகிவிட்டது.


திபத் நாட்டில் புருவமத்தியில் சுத்தியாலால் ஓட்டைபோட்டு மூன்றாம் கண்ணைத் திறக்கிறார்கள்.இது மிகவும் கொடூரமானது.ஒவ்வொரு மனிதருக்கும் புருவமத்தியில் நெற்றிப்பகுதியிலிருந்து சில சென்டிமீட்டர்கள் ஆழத்தில் பட்டாணி சைசுக்கு ஒரு சுரப்பி இருக்கிறது. இதன் மையத்தில் தான் நமது மூன்றாவது கண் இருக்கிறது. பழங்குடி மக்கள் புருவமத்தியில் சூடு போட்டுக் கொள்கின்றனர். பச்சைக்குத்திக் கொள்கின்றனர். வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள் குங்குமம் இட்டுக்கொள்கின்றனர்.பெண்கள் நெற்றிச்சுட்டி இட்டுக்கொள்கின்றனர்.பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்விக்கின்றனர்.இஸ்லாமியர்கள் முட்டி முட்டி தொழுகின்றனர். யோகிகள்  சுழுமுனை மந்திரத்தாலும், பிராணயாமத்தாலும் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர்.  ராஜகுருக்கள் வைரக்கற்களால் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர். ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர். மருத்துவர்கள் கண்ணுப்புழை என்னும் மூலிகையாலும், மந்திரவாதிகள் ருத்திரபஸ்பத்தாலும், சைவ மடாதிபதிகள் ஒரு முகருத்தராட்சத்தாலும். மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக்கல்லாலும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளிமூலமும் நெற்றிக்கண்ணைத்திறக்கிறார்கள்.

சிலருக்கு விபத்துமூலமாகவும் எதிர்பாராமல் நெற்றிக்கண் திறப்பதுண்டு.

இப்போதும் இந்த மூன்றாவது கண் ஞானிகள்,ரிஷிகள்,சித்தர்களுக்கு விதிவிலக்காக இயங்கி வருகிறது.நெற்றிக்கண் திறப்பு என்பது பருவமடைந்த பெண்கள் பூப்படைவது போல எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் ஆன்மீகத் திறப்பு (Mystic Maturity) என எடுத்துக்கொள்ளலாம். நெற்றிக்கண்ணுக்கு சுமார்30 பெயர்கள் சாஸ்திரங்களில் உண்டு.
 
தற்காலத்தில் சுவாமி வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையின் மூலம் நமது நெற்றிக்கண்ணைத்திறக்கமுடியும். மதுரை தெப்பக்குளம் உலகசமாதான ஆலயத்தில்குரு பதவியாளர் ரெங்காச்சாரியும் பரஞ்சோதி மகானின் வழிகாட்டுதல் படி “நெற்றிக்கண்” பயிற்சியளித்து வருகிறார்.

இதை வேறு ஒரு விதமாகவும் திறக்கலாம். அதைஇப்போது பார்ப்போம்:

நாட்டுமருந்துக்கடையில் கருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் என கேளுங்கள். ஒரு கிராம் ரூ.5/-இருக்கும். 5 முதல் 10 கிராமுக்குக் குறையாமல் கேட்டு வாங்குங்கள். வாங்கிய கல்லை உப்புத்தாளில் (எமரிப்பேப்பரில்) தேய்த்து எடுக்கவும். வாங்கும் கல் கோணலும் மாணலுமாக இருக்கும். அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும்.தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதர திசைகளில் ஏதாவது ஒரு திசைநோக்கி தலைவைத்து மல்லாந்து படுக்கவும்.

இரவில் சுமார் 7 மணிக்குப் பால்சாதம் சிறிது சாப்பிட்டு
10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக்கல்லை கண்களை மூடியோ மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். கருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீகஒளிக்கற்றைகள் நெற்றிக்கண் ஜவ்வை சிறிதுசிறிதாகக் கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும். அதேகல்லை உபயோகித்து மறுநாளும் பயிற்சி செய்யலாம்.

பயிற்சி ஆரம்பிக்கும் முன் சரியை கிரியையில் உள்ளவர்கள் தங்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். மந்திர யோகம் அல்லது வாசியோகம் பயிற்சி பெற்றவர்கள் அதனையும் சேர்த்துச் செய்யலாம். ஒளிநிலை கூடுதலாகி நெற்றிக்குள் பூரணச்சந்திரன் போல காட்சி கொடுக்கும். அருள் நிலைபெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெருவீர்கள் என்பது உறுதி.

பொதுவாக ஏதாவது ஒரு பொருளை படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல் ஏற்படும்.பின் அங்குள்ள இருள் விலகும்.
சிலருக்கு 90 நாட்களுக்கு மேல் தான் இந்த அனுபவம் கிடைக்கும்.அது அவரவரின் பிறந்த ராசி, உடல்தன்மை, மன வலிமை  இவற்றைப் பொறுத்தது.

நன்றி : கை. வீரமுனி (ஆன்மீக கடல் ) 

No comments:

Post a Comment