Search This Blog

Wednesday, July 6, 2011

தவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவதற்கு



வன்தட்டில் அல்லது பென்டிரைவில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு கோப்பை தவறுதலாக அழித்து விட்டீர்கள் என்றால் இழந்த கோப்புக்களை மிக சுலபமாக மீட்கலாம்.
இதற்கான மென்பொருள்கள் பல இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் மிக சிறப்பு மிக்கது டிஸ்க் டிக்கர்(Disk Digger) மற்றும் ரெகுவா(Recuva).
1. டிஸ்க் டிக்கர் (Disk Digger): கணணியின் வன்தட்டு மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், கைத்தொலைபேசி நினைவகம், டிஜிட்டல் கமெரா நினைவகம் மற்றும் பிற நினைவக மீடியாக்களில் அழித்த கோப்புக்களை மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
மீண்டும் போர்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக போர்மட் செய்யப்படாத வன்தட்டுகளில் இருந்தும் கோப்புக்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு.
2. ரெகுவா(Recuva): இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்து போன கோப்பு குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.
எடுத்துக்காட்டாக மறுபயன்பாட்டு பெட்டியிலிருந்தும் அழிந்த கோப்புக்களையும் மீண்டும் பெறலாம். இழந்த கோப்புக்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment