Search This Blog

Tuesday, July 19, 2011

ஓன்லைனிலேயே வீடியோக்களின் போர்மட்டுகளை மாற்றம் செய்வதற்கு



எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் ஓன்லைன் மூலம் வீடியோ கோப்பாக இருக்கும் ஒரு போர்மட்டை மற்றொரு போர்மட்டாக மாற்றலாம்.
ஓன்லைன் வீடியோ கன்வெர்டர் என்று பல தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ போர்மட் கோப்புகளை மட்டுமே மாற்றிக் கொடுக்கின்றன. ஆனால் நாம் பார்க்க இருக்கும் இத்தளத்தில் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம்.
இத்தளத்திற்கு சென்று Media URL: இருக்கும் கட்டத்திற்குள் நாம் மாற்ற விரும்பும் வீடியோ முகவரியை கொடுக்கலாம் அல்லது Upload file என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுத்து Continue என்ற பொத்தானை சொடுக்கவும்.
அதன் பின் எந்த போர்மட்டில் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கி தரவிறக்கலாம். நேரடியாக வீடியோவை தரவிறக்க வேண்டுமானால் Download என்ற பொத்தானை சொடுக்கி நேரடியாக வீடியோவை தரவிறக்கலாம்.

No comments:

Post a Comment