Search This Blog

Saturday, July 9, 2011

தடைகளை உடைத்து பலன்கள் அள்ளித் தரும் சில எளிய பரிகாரங்கள்



கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்
  ராகு கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் :
 
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும்.
 
கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
 
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். சும்மா பெயருக்காக  சென்று வழிபடுவதைவிட வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று வழிபடுவது  மிகவும் முக்கியம்.  
 http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQmQu7FNiggKUUG5GjzrjklKKO4yP-LPuJgvkXj-m8_dkTI752l9w
தோஷம் நீங்க பரிகாரம்
 
* சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால், களத்திரதோஷம், புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.
 
* திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும். இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
 
* ஒருவருக்கு பேய், பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,அவரை திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.
 
• சதயம் நட்சத்திரம்  நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப் பாதிப்பும் நீங்கும் 
 
 சந்திரதோஷ பரிகாரம்
 
உடல் துர்நாற்றம், வயிறு உப்பசம், சிறுநீர்க் குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணீரல் வீக்கம், சளி, இருமல், ஆஸ்துமா, கரப்பான், தோல் நோய், போன்றவையாகும்.
 
சந்திரன் வழிபாடு:
 
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் சந்திரனை வழிபட்டால் சகல யோகங்கள் பெறலாம்.சந்திரன் தட்சனின் மகள்களான கிருத்திகை, ரோகிணி, முதலான, 27 பெண்களை மணந்து கொண்டான். அவர்களில் ரோகிணியின் மீது மட்டும் கூடுதலாக அன்பு செலுத்தினான்.
 
இதனால் வருந்திய மற்ற மனைவியர், தந்தை தட்சனிடம் சந்திரன், தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினார். இதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் கலைகள், தேயும் படியாக சபித்து விட்டான். இந்த சாபத்திற்கு விமோசனம் வேண்டி சந்திரன் பூலோகத்தில் பல தலங்களில் சிவனை பூஜித்து வழிபட்டான்.
 
சந்திரதோஷம் உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் தோஷம் நீக்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று
 
அலைக்கடல அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்மேரு மலைவலமாகவந்த மதியமே போற்றி போற்றி!
 
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்களென்று சொல்லப்படுகிறது.
 
நன்றி : தினமலர் - ஆன்மிகம் 


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_09.html#ixzz1Rc87is4Y

No comments:

Post a Comment