Search This Blog

Thursday, July 21, 2011

இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (பாகம் - 04 )



 சம்பாதிக்கணுமா?  முதல்லே உங்களுக்கு தேவை - பணம் சம்பாதிக்கணும்னு ஒரு ஆசை , வெறி இருக்கணும். ஒரு வேட்டை நாயோட - வேகம், விறைப்பு எப்பவும் இருக்கணும். சோம்பேறித்தனம் துளிகூட ஆகாது பாஸ்.. ! நல்ல சம்பாதிங்க.. உங்க தன் நம்பிக்கையை அது முதல்லே வளர்க்கும்....

நமது முதல் மூன்று கட்டுரைகளைப் படித்துவிட்டு , மிகுந்த ஆவலுடன் உள்ள வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரைலே  நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்க வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்..

நான், உங்களுக்கு ஏற்கனவே சொன்ன மாதிரி - இணையம் மூலம் நாம் சம்பாதிக்கிற வழிகள் பல இருந்தாலும், மிக முக்கியமான , நம்பகமான ADSENSE பற்றி , இன்னும் விரிவா தெரிஞ்சுக்கிட்டு மத்த விஷயங்களைப் பார்ப்போம்..

நாங்களும் கலக்குறோம் பேர்வழினு --- தமிழ் ப்ளாக் ஆரம்பிச்சுடாதீங்க.. ! பைசா பிரயோஜனம் இல்லை. ! ஒரு ரெண்டு , மூன்று வருஷம் விடாம தமிழ் ப்ளாக் develop பண்ணினா , பின்னாலே - ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம். நீங்க சம்பாதிக்கணும்னு நினைச்சா , சிம்பிள் - சினிமா சம்பந்தப்பட்ட - நியூஸ் , படங்கள் - இப்படி ஏதாவது ஒன்னு எடுத்துக்கோங்க. இங்கிலீஷ் லேயே ஆரம்பியுங்க.. எதுக்காக சொல்றேன்னா.. ஆரம்ப காலத்துலே , உங்கள் ப்ளாக் குக்கு எத்தனை visitors வர்றாங்களோ , அத்தனைக் கத்தனை - உங்களுக்கு ஆர்வம் வரும்... சினிமா சம்பந்தமா நீங்க எதைப் போட்டாலும் , அதுக்கு ஒரு நூறு பேராவது தினமும் வருவாங்க...   ! கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகும். முடிஞ்ச அளவுக்கு சொந்தமா நீங்களே எழுதுங்க. புதுசா எதை எழுதினாலும், கூகுளுக்கு கொண்டாட்டம். உடனே இன்டெக்ஸ் ஆகும். நல்லா உங்களுக்கு பழக்கம் ஆனதுக்கு அப்புறம் , உங்களோட favourite subject லே  புகுந்து விளையாடலாம்.

உங்க ப்ளாக் க்கு எத்தனை visitors லைவ் லே இருக்கிறாங்கன்னு பார்க்கிறதுக்கு "FEEDJIT "  னு ஒரு widget இருக்கு. உங்களுக்கு ஒரு ஆர்வத்துக்கு மட்டும் தான். இதனாலே வேற ஒன்னும் use இல்லை. உங்க ப்ளாக் லே இதை இன்செர்ட் பண்ணிக்கோங்க.  நிறைய ஆளுங்க வரும்போது உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கும்.

நான்  ஏற்கனவே சொல்லி இருக்கிற மாதிரி , இந்த தொடர் கட்டுரையோட நோக்கம் ப்ளாக் எப்படி develop பண்றது மட்டும் இல்லை , அது மூலமா எப்படி சம்பாதிக்கிறதுன்னு பார்க்கிறது தான்.. 

உங்களுக்கு ப்ளாக் லே இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு , தமிழ் லே ஒரு நல்ல சைட் இருக்கு. பிளாக்கர் நண்பன் .... இதைப் பாருங்க.. உங்க பல கேள்விகளுக்கு , இதில்லே நல்ல தெளிவான விளக்கம் கிடைக்கும். 

சரி, Google Adsense - நீங்க ப்ளாக் ஆரம்பிச்ச உடனே கிடைக்காது.. உங்க ப்ளாக் ஒரு நல்ல ப்ளாக் னு சர்ச் எஞ்சின் recognise பண்ணனும்  .   அதுக்கு அப்புறம் தான் கிடைக்கும். ஆறு மாசமாவது ஆகணுமே.. வேறு வழி இருக்கா?
இருக்கு... நிறைய இணைய தளங்கள் இருக்கு.. அதன் மூலமா apply பண்ணினா வாங்கலாம்.


www .Indyarocks .com னு ஒரு இணைய தளம் இருக்குது. இதிலே நீங்க உள்ள register பண்ணுங்க. உங்க கிட்டே இருக்கிற படங்கள் , இல்லை நெட் லே இருந்து டவுன்லோட் பண்ணின படங்கள் - ஒரு இருபது , இருபத்தஞ்சு - இந்த தளத்துலே upload பண்ணுங்க.   அதுலேயே உங்களுக்கு apply adsense option இருக்கும். apply பண்ணுங்க. Adsense apply பண்ணும்போது , உங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் , வீட்டு முகவரி எல்லாம் ஒரிஜினல் கொடுங்க. ஏதாவது பழக்க தோஷத்திலே - வேற பெயர் கொடுத்திடப் போறீங்க. உங்கள் அக்கௌன்ட் லே நூறு டாலர் கிராஸ் ஆனா உடனே, உங்கள் பெயரிலே - கூகுள் லே இருந்து செக் வரும். நீங்க கொடுத்த வீட்டு முகவரி க்கு வரும். முடிந்த அளவுக்கு courier சர்வீஸ் இருக்கிற ஊர் முகவரி யா இருந்தா நல்லது. சமீபத்துலே வர்ற செக் எல்லாம் , நம்ம ஊர்லே  அதிகமாக "BLUE DART " கூரியர் லே வருது. அந்த சர்வீஸ் உங்க ஊருக்கு இருக்க பாருங்க. ஏன்னா , அட்ரெஸ் அப்புறமா மாற்ற முடியாது. .... Adsense detail வேறு யார் கிட்டேயும் ஷேர் பண்ண வேண்டாம். HIGHLY CONFIDENTIAL ஆ வைச்சுக்கோங்க. .

ஒரு நாளைக்கு ஒன்னு , அல்லது வாரத்துக்கு ஒன்னு பதிவு கண்டிப்பா போடுங்க. உங்களால் முடிந்த அளவுக்கு பதிவு போட்டுக்கிட்டே இருங்க...

அப்புறம், ஒரு முக்கிய விஷயம்.. நீங்க என்னதான் பதிவு போட்டாலும், உங்க பதிவுக்கு visitors வர வைக்கணும் இல்லையா? பத்து நிமிஷம் போஸ்டிங் போட spend பண்ணினா,  ஒரு மணி நேரமாவது அதைப் பிரபலப் படுத்த முயற்சி பண்ணுங்க.. அதுக்கு நிறைய தளங்கள் இருக்கு. social sites னு சொல்லுவாங்க.   
ZIMBIO , digg , hotklix , னு நிறைய தளங்கள் இருக்கு. இதிலே பார்வையிடும் வாசகர்கள் லட்சக்கணக்கிலே தினமும் வர்றாங்க. உங்க பதிவுகள் நீங்க இங்கே ஷேர் பண்ணும்போது, அதைப் பார்த்திட்டு - உங்க வலைப்பூவுக்கு வருவாங்க. தமிழ்லே - இன்ட்லி , தமிழ்மணம் , மாதிரி நிறைய தளங்கள் இருக்கு.  மேலும், facebook, twitter - னு உங்க பதிவுகளை , நீங்க ஷேர் பண்ணும்போது , உங்களோட வாசகர் எண்ணிக்கை அதிகமாகும்.

உங்கள் ultimate aim -  வாசகர் எண்ணிக்கை அதிமாக்கணும். alexa ரேங்க் டாப் லே வரணும் , நல்ல தரமான ஒரிஜினல் பதிவுகள் மூலம் பேஜ் ரேங்க் வரணும்.. இவ்வளவு தான். அதுக்கு என்ன என்ன பண்ணணுமோ , எல்லாம் பண்ணுங்க.

ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது , புதுசு புதுசா விஷயங்கள் கத்துக்கோங்க. ஆறா இருந்தாக் கூட , தண்ணி தேங்க ஆரம்பிச்சுட்டா  - அதுக்கு பேரு குட்டை தான். தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு.. நான் ஒரு சின்ன கோடு போட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்.. இதுக்கு மேல உங்களுக்கு தேவையான விஷயங்கள் இணையத்துலேயே எவ்வளவோ கிடைக்கும்.. தேடுங்க.. கண்டுபிடிச்சு கத்துக்கோங்க.. எந்த சந்தேகம்னாலும் கூச்சப்படாம என்கிட்டே கேட்கலாம்... !

சரி, பணம் சம்பாதிக்கலாம் வாங்கன்னு , நம்ம தொடர் கட்டுரைகளை படித்து விட்டு எத்தனை பேர், புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கிறீங்க.  ? சில பேர் ப்ளாக் சம்பந்தமா கொஞ்சம் சந்தேகம் னு கேட்டு இருந்தீங்க.. திரும்பவும் சொல்றேன்  .. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும், தயவு செய்து E-மெயில் ,  மூலம் கேளுங்க. ஒரே நாளில் உங்களுக்கு reply கிடைக்கும்.. கோச்சுக்காதீங்க.. தினமும் அவ்வளவு மெயில் வருது,,, போன் நம்பர் ஷேர் பண்ணினா,,, அன்புத்தொல்லை அதிகமாகிடும்னு  ஒரு பயம் தான்...

இப்போ தான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சவங்களுக்கு - First preference ...Immediate  reply . உங்க followers லிஸ்ட் லே முதல் ஆளா நானும் join பண்ணத்தான்.  உங்க ப்ளாக் நேம் தெரியப்படுத்துங்க
.


Read more: http://www.livingextra.com/2011/07/04.html#ixzz1Si6O0Btd

No comments:

Post a Comment