Search This Blog

Friday, March 2, 2012

கடவுச்சொற்களுடன் கூடிய கோப்புகளை திறப்பதற்கு!!


இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்கள், புத்தகங்கள் என அனைத்திலும் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனை அக்கோப்புகள் கடவுச்சொல் இட்டு பூட்டப்பட்டிருப்பருப்பதாகும்.
இந்த கோப்புகள் RAR, ZIP போர்மட்டுகளில் இருக்கும். அக்கடவுச்சொல்லை அறிந்து கொள்வதற்கு, அந்த தளத்திற்குச் சென்று பல விண்ணப்பங்களை நிரப்ப வேண்டி ஏற்படலாம்.
இதற்கு தீர்வாக அமைவதுதான் RAR Password Recovery என்ற மென்பொருள். இவ் மென்பொருளின் மூலம் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை அறிந்து அக் கோப்புக்களை திறக்க முடியும்.
தரவிறக்க சுட்டி

ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக பயன்படுத்து​வதற்கு



இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு  சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக(hard disk) பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25MB வரை அதிகரிக்க முடியும்.
இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும். இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்நிகர் வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:
1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
2. தற்போது உங்களது mycomputer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.
4. இப்போது குறித்த வன்தட்டை பயன்படுத்த முடியும். வன்தட்டை செயலிழக்க செய்வதற்கு அதன்மேல் Right click செய்து தோன்றும் மெனுவில் Log out என்பதை தெரிவு செய்யவும்.

புரோகிராமிங் கற்றுத்தரும் இணையம்




எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.
வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங்(coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது.
இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.
புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.