Search This Blog

Wednesday, April 1, 2020

கொரோனாவுக்கு கபசுரக்குடிநீர் Kabasura Kudineer

டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு குடிநீரும், ஹெச் 1 என் 1 வைரஸ் தொற்றால் பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவிவந்தது. அப்போது இதை கட்டுப்படுத்த கைகொடுத்தது சித்தமருத்துவம் தான்.

நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர் அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அலோபதி மருத்துவ துறை மருந்துகளை கண்டறிவதில் வேகம் காட்டிவருகிறது.

இந்நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தார்கள்.அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.



தற்போது அரசு சித்தமருத்துவமனைகளில் மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம். யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார்.


மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.


ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.


சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.


கொரோனா அச்சத்தால் இயன்றவரை கூட்டம் கூடாமல் தனித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இப்போது கூட்டத்தில் போக வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் தயாரித்து குடிக்கலாம். 
சுக்கு, ஆடாதோடை, கற்பூரவல்லி, நிலவேம்பு, இலவங்கம், திப்பிலி இவையுடன் வேறு கபசுரகுடிநீர் செய்ய பயன்படும் மூலிகை பொருள்களில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்கிறதோ அதை சிறிதளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

கபசுரக்குடிநீர் குடிப்பதால்கொரோனா வைரஸ் பரவாது. வந்தாலும் குண்மாகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் சித்தமருத்துவர்கள் பரவிவரும் கொரோனா வைரஸ்க்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை. ஆனால் வைரஸ் போன்ற தொற்றுகளை பரவாமல் தடுக்க உதவும் கபசுர குடிநீர் கோரொனாவுக்கான மருந்தாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. எனினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள். இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம்.
சித்த மருத்துவமும் கொரொனாவும் பித்தசுரக் குடிநீர்
Balamurali Balasingam 
தற்சமயம் முழுஉலகையுமே ஆட்கொண்டுள்ள உயிர்கொள்ளி நோயாகிய கொவொயிட் 19 என்ற நோயினால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது, பல வல்லரசுகளும் இப்பேரிடரிலிருந்து மீழ்வதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன, எனினும் அவை பெரியஅளவில் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மாற்று மருத்துவத்தின் மூலம் இதற்கான தீர்வைத் தேடத் தொடங்கியுள்ளனர் அந்த வகையில் சித்த மருத்துவத்தில் கொரொனாவிற்கான சிகீட்சை முறைகள் சொல்லப்பட்டுள்ளனவா என்பதை அறிவதற்காக பலரும் சித்த மருத்துவத்தின் பக்கம் நாடுகின்றனர். இன்நிலையை சிலர் சாதகமாகப் பயன்படுத்தி எமது சித்த மருத்துவ ஏடுகளின் புகைப்படங்களில் கணனித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில மாற்றங்களைச் செய்து எம்மிடம் இதற்கான மருந்துகள் உண்டு நாம் இப்பிணியை முற்றிலும் குணமடையச்செய்வோம் என மக்களை நம்பவைத்து தாம் பிரபல்யம் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் முயற்சிக்கின்றார்கள், இவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
அப்படியானால் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தால் எதுவும் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம் அதற்குரிய பதிவாகவே இப்பதிவிடப்படுகின்றது.
சித்த மருத்துவத்தில் பலவகையான ரோகங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் மிகவும் திருத்தமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளன ஆனாலும் எனது அறிவிற்கெட்டிய வரை கொரொனா பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை, மாறாக பல வகையான சுரங்கள் தொடர்பாகவும் அவற்றிற்கான குணங்குறிகள் பரிகாரங்கள் தொடர்பாகவும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் பித்தசுரம் எனப்படும் ஒரு பிணிநிலையின் ரோகலட்சணங்கள் தற்போதய கொவொயிட் 19 என்ற நோயின் குணங்குறிகளுடன் ஓரளவிற்கு ஒத்துப்போவதாகவுள்ளது அதற்காக பித்தசுரம் தான் கொவொயிட் 19 என்ற முடிவிற்கும் உடனடியாக வரமுடியாது.
அந்தவகையில் பித்தசுரத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சித்த மருந்துகளில் முக்கியமானது பித்தசுரக் குடிநீராகும் இக்குடிநீரானது 15 மூலிகைகளைக் (இவற்றுள் பல கிடைத்தற்கரிய அரிய வகை மூலிகைகள்) கொண்டு முறைப்படி தயாரிக்கப்பட வேண்டிய ஒரு மருந்தாகும், இதனுடன் வேறும் சில மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் பித்தசுரத்தினையும் இதனால் ஏற்படக்கூடிய உபத்திரவங்களையும் தணிக்க முடியும். எனினும் இந் நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந் நோய்நிலை ஏற்படுவதற்கு முன்னர் இம்மருந்துகளை தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
இருப்பினும் இவ்வகையான மருந்துகளைப் பயன்படுத்துவதனால் எந்தவிதமான பாதகமான விழைவுகளும் ஏற்படாது தானே எதற்கும் நாமும் ஒருமுறை பாவித்துப் பார்ப்போம் என நீங்கள் எண்ணலாம் அது மிகவும் தவறான எண்ணமாகும். முதலாவதாக மூலிகை மருந்துகளிற்கு பக்கவிழைவுகள் இல்லை என்பது மிகவும் தவறான கருத்தாகும், இம் மருந்துகளும் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனையின்றிப் பாவித்தால் பாரிய விழைவுகளை ஏற்படுத்தும். அடுத்ததாக இந்த கபசுரக் குடிநீரில் சேரும் 15 வகையான மருத்துவ மூலிகைப் பொருட்களில் பல கிடைத்தற்கரிய அரிய மூலிகை வகைகள் இவற்றுள் சில முழு இலங்கையிலுமே ஒரு சில கிலோ அளவிலேயே கையிருப்பில் இருக்கும் அவற்றையும் நாம் நோய் ஏற்படுவதற்கு முன்னர் முடித்துவிட்டோமானால் உண்மையில் தேவைப்படும் நோயாளரிற்கு என்ன செய்வது? ஒரு சில செக்கன்களில் உற்பத்தி செய்யக்கூடிய சத்திர சிகீட்கை முகக்கவசங்களிற்கே இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படும் போது உற்பத்தி செய்வதற்கு பல மாதங்கள் எடுக்கும் மூலிகைப் பொருட்கள் பற்றி சொல்லத் தேவையில்லை இந்நிலையில் மூலிகைப் பொருட்களிற்கான கேள்வி பல மடங்கு அதிகரிக்கும் போது போலியான மூலிகைகள் சந்தைக்கு விடப்படும் இந் நிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
அடுத்ததாக நோய்த்தொற்று ஏற்பட்டு நோய்க்கான குணங்குறிகள் தென்படுவதற்கு முன்னதாக இம்மருந்துகளைப் பயன்படுத்துவதால் நோய்க்கான குணங்குறிகள் தோன்றாது போகலாம் அதனால் அவர்கள் நோயாளராக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் இவர்கள் மூலமாக பலருக்கும் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது.
தற்சமயம் இலங்கை உலக சுகாதார தாபனத்தின் கொவொயிட் 19 தரப்படுத்தலிற்கமைவாக நிலை 3ஏ யில் இருந்து நிலை 3பி யை அடைகின்றது மிகவிரைவில் நிலை 4ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிக்றது இந்நிலையில் எமது வீடுகளிலும் பல சித்த ஆயர்வேத மருத்துவமனைகளிலும் உபத்திரவங்கள் ஏற்படாத கொவொயிட் 19 நோயாளர்களை வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலைகள் ஏற்படலாம் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சித்த மருந்துகள் எமக்கு உபத்திரவங்களைத் தடுப்பதற்காக கைகொடுக்கலாம் எனவே தற்போதய சூல்நிலையில் குறித்த மருந்துகளை வீண்விரயமாக்காமல் அவற்றை முறையாகத் தயாரித்து சேமித்து வைத்து அடுத்துவரும் கிழமைகளில் அவற்றின் தேவை ஏற்படும்போது சரியாகப் பயன்படுத்துவது சித்த மருத்துவத்துறை சாரந்த அனைவரதும் கடமையாகும்.


Tuesday, March 31, 2020

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!


1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .
6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்
1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .
14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .
22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..
23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...
24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது
25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .
26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .
3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.
வணக்கம்

லலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை!



அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.
 லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.

உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல.
உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிவம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்?
அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது.
ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப்படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுகிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தின் மேலும் கூறும் பொழுது

* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.

* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.

* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்

* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.

* அன்றாடம் சொல்வதில் தீமைகள் விலகும்.

* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.

* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.

* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.

* எதிரிகள் நீங்குவர்.

* வெற்றி கிட்டும்.

* பொன், பொருள், புகழ் சேரும்.

* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.

* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.

* தன்னம்பிக்கை கூடும்.

* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.

* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.

படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒருகுரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.
நன்றி
மாலைமலர்



ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸிந்தூராருணவிக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத்
தாராநாயக சேகராம்
ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம்
பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் ||


அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் |
அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-
ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 ||
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித
வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்


கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம் –
பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் || 3||
ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி – கஸ்தூரிகாம்
ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் |
அசேஷஜனமோஹிநீ–மருண-மால்ய-பூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் ||



ஸ்தோத்ரம்

ஓம்ஐம்ஹ்ரீம்ஶ்ரீம்


ஓம் ||
ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ

ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ |
சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா ||1||

உத்யத்பானு-ஸஹஸ்ராபா சதுர்பாஹு-ஸமன்விதா |
ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா ||2||

மனோரூபேக்ஷுகோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா |
நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா ||3||

சம்பகாசோக-புன்னாக-ஸௌகந்திக-லஸத்-கசா |
குருவிந்தமணி-ச்ரேணீ-கனத்-கோடீர-மண்டிதா ||4||

அஷ்டமீசந்த்ர-விப்ராஜ-தளிகஸ்தல-சோபிதா |
முகசந்த்ர-களங்காப-ம்ருகநாபி விசேஷகா ||5||

வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா |
வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலன்-மீனாப-லோசனா ||6||

நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா |
தாராகாந்தி-திரஸ்காரி நாஸாபரண-பாஸுரா ||7||

கதம்ப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹரா |
தாடங்க-யுகளீபூத-தபனோடுப-மண்டலா || 8||

பத்மராக-சிலாதர்ச-பரிபாவி- கபோலபூ: |
நவ-வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி ரதனச்சதா ||9||

சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா |
கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா ||10||

நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ |
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா ||11||

அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா |
காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா ||12||

கனகாங்கத-கேயூர-கமனீய-புஜான்விதா |
ரத்னக்ரைவேய-சிந்தாக-லோல-முக்தா-பலான்விதா||13||

காமேச்வர-ப்ரேமரத்ன- மணி-ப்ரதிபணஸ்தனீ |
நாப்யாலவால-ரோமாலி-லதா-பல-குசத்வயீ ||14||

லக்ஷ்யரோம- லதா-தாரதா- ஸமுன்னேய-மத்யமா |
ஸ்தனபார-தலன்-மத்ய- பட்டபந்த-வலித்ரயா ||15||

அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்- கடீதடீ |
ரத்ன-கிங்கிணிகாரம்ய- ரசநா-தாம-பூஷிதா ||16||

காமேச-ஜ்ஞாத-ஸௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா |
மாணிக்ய-முகுடாகார-ஜானுத்வய-விராஜிதா ||17||

இந்த்ரகோப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப- ஜங்கிகா |
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா ||18||

நக-தீதிதி- ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா |
பதத்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா ||19||

ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர- மண்டித-ஸ்ரீபதாம்புஜா |
மராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி: || 20 ||

ஸர்வாருணாsநவத்யாங்கீ ஸர்வாபரணபூஷிதா |
சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீனவல்லபா ||21||

ஸுமேரு-மத்யச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நகர-நாயிகா |
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸநஸ்திதா ||22||

மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தா கதம்பவன-வாஸிநீ |
ஸுதாஸாகர-மத்யஸ்தா காமாக்ஷீ காமதாயினீ||23||

தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமாநாத்ம-வைபவா |
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேநா-ஸமன்விதா || 24||

ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வ்ரஜ-ஸேவிதா |
அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபி-ராவ்ருதா ||25||

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா |
கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதா || 26||

கிரிசக்ர-ரதாரூட தண்டநாதா-புரஸ்க்ருதா |
ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த-வஹ்நி-ப்ராகார-மத்யகா || 27||

பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா |
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகா || 28||

பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா |
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா || 29||

விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா |
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேச்வரா||30||

மஹாகணேச-நிர்ப்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா |
பண்டாஸுரேந்த்ர-நிர்முக்த சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ ||31||

கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருதி: |
மஹா-பாசுபதாஸ்த்ராக்னி-நிர்தக்தாஸுர–ஸைநிகா || 32||

காமேச்வராஸ்த்ர-நிர்தக்த-ஸபண்டாஸுர-சூன்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர-மஹேந்த்ராதி-தேவ-ஸம்ஸ்துத-வைபவா||33||

ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநௌஷதி: |
ஸ்ரீமத்-வாக்பவ-கூடைக- ஸ்வரூப-முக-பங்கஜா || 34||

கண்டாத:-கடிபர்யந்த-மத்யகூட-ஸ்வரூபிணீ |
சக்தி-கூடைகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ || 35||

மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய-கலேபரா |
குலாம்ருதைக-ரஸிகா குலஸங்கேத-பாலினீ || 36 ||

குலாங்கனா குலாந்தஸ்தா கௌலினீ குலயோகினீ |
அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார-தத்பரா || 37||

மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ |
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ ||38||

ஆஜ்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ |
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி-வர்ஷிணீ || 39||

தடில்லதா-ஸமருசி: ஷட்சக்ரோபரி-ஸம்ஸ்திதா |
மஹாசக்தி : குண்டலினீ பிஸதந்து-தனீயஸீ || 40||

பவானீ பாவனாகம்யா பவாரண்ய-குடாரிகா |
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர்-பக்தஸௌபாக்ய-தாயினீ ||41||

பக்திப்ரியாபக்திகம்யா பக்திவச்யா பயாபஹா |
சாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயினீ||42||

சாங்கரீஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |
சாதோதரீசாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜனா || 43||

நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |
நிர்குணா நிஷ்கலா சாந்தாநிஷ்காமாநிருபப்லவா||44||

நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா ||45||

நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |
நீராகா ராகமதனீ நிர்மதாமதநாசினீ || 46 ||

நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ |
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ ||47 ||

நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசினீ |
நி:ஸ்ஸம்சயா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ || 48||

நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசினீ |
நிர்நாசா ம்ருத்யுமதனீநிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா ||49||

நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |
துர்லபா துர்க்கமா துர்க்கா து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா ||50||

துஷ்டதூரா துராசார-சமனீ தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா ||51||

சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ ||52||

ஸர்வ-யந்த்ராத்மிகா-ஸர்வ-தந்த்ரரூபா மனோன்மனீ |
மாஹேச்வரீமஹாதேவீ மஹாலக்ஷ்மீர்-ம்ருடப்ரியா ||53||

மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக-நாசினீ |
மஹாமாயா மஹாஸத்வா மஹாசக்திர்-மஹாரதி: ||54||

மஹாபோகா மஹைச்வர்யா மஹாவீர்யாமஹாபலா |
மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ || 55||

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா |
மஹாயாக-க்ரமாராத்யா மஹாபைரவ-பூஜிதா ||56||

மஹேச்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ ||57||

சதுஷ்ஷஷ்ட்-யுபசாராட்யா சதுஷ்ஷஷ்டி-கலாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டிகோடி-யோகினீ-கணஸேவிதா ||58||

மனுவித்யா சந்த்ரவித்யா சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர-கலாதரா ||59||

சராசர-ஜகந்நாதா சக்ரராஜ-நிகேதநா |
பார்வதீ பத்மநயநாபத்மராக-ஸமப்ரபா || 60||

பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ |
சின்மயீ பரமாநந்தா விஜ்ஞான-கனரூபிணீ ||61||

த்யான-த்யாத்ரு-த்யேயரூபா தர்மாதர்ம-விவர்ஜிதா |
விச்வரூபா ஜாகரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா ||62||

ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா-விவர்ஜிதா |
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ ||63||

ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீச்வரீ |
ஸதாசிவாSனுக்ரஹதா பஞ்சக்ருத்யபராயணா ||64||

பானுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ |
பத்மாஸநா பகவதீ பத்மநாப-ஸஹோதரீ ||65||

உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-புவனாவளீ |
ஸஹஸ்ரசீர்ஷ-வதநா-ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபாத்||66||

ஆப்ரஹ்ம-கீடஜனநீ வர்ணாச்ரம-விதாயிநீ |
நிஜாஜ்ஞாரூப-நிகமா புண்யாபுண்ய-பலப்ரதா ||67||

ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரீ-க்ருத- பாதாப்ஜதூலிகா |
ஸகலாகம-ஸந்தோஹ-சுக்தி-ஸம்புட மௌக்திகா ||68||

புருஷார்த்த-ப்ரதா பூர்ணா போகினீ புவனேச்வரீ |
அம்பிகாSனாதி-நிதனா ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா ||69||

நாராயணீ நாத-ரூபா நாமரூபா-விவர்ஜிதா |
ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா ஹேயோபாதேய வர்ஜிதா ||70||

ராஜராஜார்ச்சிதாராஜ்ஞீ ரம்யா ராஜீவலோசனா |
ரஞ்ஜனீ ரமணீ ரஸ்யா ரணத்கிங்கிணி-மேகலா ||71||

ரமா ராகேந்துவதனா ரதிரூபா ரதிப்ரியா |
ரக்ஷாகரீ ராக்ஷஸக்னீ ராமா ரமணலம்படா ||72||

காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ ஜகதீ-கந்தாகருணாரஸ-ஸாகரா ||73||

கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீப்ரியா |
வரதா வாமநயனா வாருணீ-மத விஹ்வலா ||74||

விச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல-நிவாஸிநீ |
விதாத்ரீ வேதஜநநீ விஷ்ணுமாயா விலாஸிநீ ||75||

க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞபாலினீ |
க்ஷயவ்ருத்தி-விநிர்முக்தா க்ஷேத்ரபால-ஸமர்ச்சிதா || 76||

விஜயா விமலா வந்த்யா வந்தாரு-ஜன-வத்ஸலா |
வாக்வாதினீ வாமகேசீ வன்ஹிமண்டல-வாஸிநீ ||77||

பக்திமத்-கல்பலதிகாபசுபாச-விமோசிநீ |
ஸம்ஹ்ருதாசேஷ-பாஷண்டாஸதாசார-ப்ரவர்த்திகா|| 78||

தாபத்ரயாக்னி-ஸந்தப்த-ஸமாஹ்லாதன-சந்த்ரிகா |
தருணீ தாபஸாராத்யா தனுமத்யா தமோபஹா ||79||

சிதிஸ்-தத்பத-லக்ஷ்யார்த்தா சிதேகரஸ-ரூபிணீ |
ஸ்வாத்மாநந்த-லவீபூத-ப்ரஹ்மாத்யானந்த-ஸந்ததி: ||80||

பரா ப்ரத்யக்-சிதீ-ரூபா பச்யந்தீ பரதேவதா |
மத்யமா வைகரீரூபா பக்த-மானஸ ஹம்ஸிகா ||81||

காமேச்வர-ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா |
ச்ருங்கார-ரஸ-ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தர ஸ்திதா ||82||

ஓட்யாண-பீட-நிலயா பிந்துமண்டல-வாஸிநீ |
ரஹோ-யாகக்ரமாராத்யா ரஹஸ்தர்பண-தர்ப்பிதா ||83||

ஸத்ய:-ப்ரஸாதினீ விச்வஸாக்ஷிணீஸாக்ஷிவர்ஜிதா |
ஷடங்க-தேவதாயுக்தா ஷாட்குண்ய-பரிபூரிதா ||84||

நித்யக்லின்னா நிருபமா நிர்வாணஸுக-தாயினீ |
நித்யா-ஷோடசிகா-ரூபா ஸ்ரீகண்டார்த்தசரீரிணீ || 85||

ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |
மூலப்ரக்ருதி ரவ்யக்தா வ்யக்தாவ்யக்த-ஸ்வரூபிணீ ||86||

வ்யாபினீவிவிதாகாரா வித்யாவித்யா-ஸ்வரூபிணீ |
மஹாகாமேச-நயனா-குமுதாஹ்லாத-கௌமுதீ ||87||

பக்தஹார்த-தமோபேத-பானுமத்-பானு-ஸந்ததி:|
சிவதூதீ சிவாராத்யாசிவமூர்த்தீ: சிவங்கரீ ||88||

சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |
அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா ||89||

சிச்சக்திச்-சேதனா-ரூபாஜடசக்திர் ஜடாத்மிகா |
காயத்ரீவ்யாஹ்ருதி: ஸந்த்யா த்விஜப்ருந்த-நிஷேவிதா || 90||

தத்வாஸனா தத்வமயீ பஞ்சகோசாந்தர-ஸ்திதா |
நி: ஸீம-மஹிமா நித்ய-யௌவநா மதசாலினீ || 91||

மதகூர்ணித-ரக்தாக்ஷீ மதபாடல-கண்டபூ: |
சந்தன-த்ரவ-திக்தாங்கீ சாம்பேய-குஸும-ப்ரியா ||92||

குசலா கோமலாகாராகுருகுல்லா குலேச்வரீ |
குலகுண்டாலயாகௌலமார்க்க-தத்பர-ஸேவிதா ||93||

குமாரகணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்-மதிர்-த்ருதி: |
சாந்தி:ஸ்வஸ்திமதீ காந்திர்-நந்தினீவிக்நநாசினீ ||94||

தேஜோவதீ த்ரிநயநாலோலாக்ஷீ- காமரூபிணீ |
மாலினீ ஹம்ஸினீ மாதா மலயாசல-வாஸிநீ ||95||

ஸுமுகீ நலினீ ஸுப்ரூ: சோபனா ஸுரநாயிகா |
காலகண்டீ காந்திமதீ க்ஷோபிணீஸூக்ஷ்மரூபிணீ ||96||

வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா-விவர்ஜிதா |
ஸித்தேச்வரீஸித்தவித்யா ஸித்தமாதா யசஸ்விநீ ||97||

விசுத்தி-சக்ர-நிலயா-SSரக்தவர்ணா த்ரிலோசனா |
கடவாங்காதி-ப்ரஹரணா வதநைக-ஸமன்விதா ||98||

பாயஸாந்ந-ப்ரியாத்வக்ஸ்தா பசுலோகபயங்கரீ |
அம்ருதாதி-மஹாசக்தி ஸம்வ்ருதாடாகினீச்வரீ ||99||

அநாஹதாப்ஜ-நிலயாச்யாமாபா வதனத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தராருதிரஸம்ஸ்திதா ||100||

காலராத்ர்யாதி-சக்த்யௌக-வ்ருதா ஸ்நிக்தௌதனப்ரியா |
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ ||101||

மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா ||102||

ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா |
ஸமஸ்த பக்த-ஸுகதா லாகிந்யம்பா-ஸ்வரூபிணீ ||103||

ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா |
சூலாத்யாயுத-ஸம்பந்நா பீதவர்ணாSதிகர்விதா ||104||

மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்திந்யாதி-ஸமன்விதா |
தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ ||105||

மூலாதாராம்புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா |
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா ||106||

முத்கௌதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா-சக்ராப்ஜநிலயா சுக்லவர்ணாஷடாநநா ||107||

மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி ஸமன்விதா |
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகிநீ-ரூபதாரிணீ ||108||

ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா |
ஸர்வாயுத-தரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ ||109||

ஸர்வௌதன-ப்ரீதசித்தா யாகிந்யம்பா-ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா ஸ்வதாSமதிர்மேதா ச்ருதிஸ்ம்ருதிரனுத்தமா ||110||

புண்யகீர்த்தி: புண்யலப்யா புண்ய-ச்ரவண-கீர்த்தனா |
புலோமஜார்ச்சிதா-பந்தமோசனீ பர்ப்பராலகா ||111||

விமர்ச-ரூபிணீ வித்யா வியதாதி-ஜகத்ப்ரஸூ: |
ஸர்வவ்யாதி-ப்ரசமனீஸர்வம்ருத்யு-நிவாரிணீ ||112||

அக்ரகண்யாSசிந்த்யரூபா கலிகல்மஷ-நாசினீ |
காத்யாயனீ காலஹந்த்ரீ கமலாக்ஷ-நிஷேவிதா ||113||

ம்பூல-பூரித-முகீ தாடிமீ-குஸுமப்ரபா |
ம்ருகாக்ஷீ மோஹினீ முக்யா ம்ருடானீ மித்ரரூபிணீ ||114||

நித்யத்ருப்தா பக்தநிதிர்-நியந்த்ரீ நிகிலேச்வரீ |
மைத்ர்யாதி-வாஸநாலப்யா மஹாப்ரலய ஸாக்ஷிணீ ||115||

பராசக்தி: பராநிஷ்டா ப்ரஜ்ஞானகன-ரூபிணீ |
மாத்வீபானாலஸா மத்தா மாத்ருகாவர்ண ரூபிணீ ||116||

மஹாகைலாஸ-நிலயா ம்ருணால ம்ருது-தோர்லதா |
மஹநீயா தயாமூர்த்திர்- மஹாஸாம்ராஜ்ய-சாலினீ || 117||

ஆத்மவித்யா மஹாவித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா |
ஸ்ரீஷோடசாக்ஷரீ-வித்யா த்ரிகூடா காமகோடிகா ||118||

கடாக்ஷகிங்கர-பூத-கமலாகோடி-ஸேவிதா |
சிர:ஸ்திதா சந்த்ரநிபா பாலஸ்தேந்த்ர-த்னு:ப்ரபா ||119||

ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா த்ரிகோணாந்தர-தீபிகா |
தாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ தக்ஷயஜ்ஞவிநாசினீ ||120||

தராந்தோளித தீர்க்காக்ஷீ தரஹாஸோஜ்வலன்முகீ |
குருமூர்த்திர்-குணநிதிர்-கோமாதா குஹஜன்ம-பூ: ||121||

தேவேசீ தண்டநீதிஸ்தா தஹராகாச ரூபிணீ |
ப்ரதிபன்-முக்ய-ராகாந்த-திதி-மண்டலபூஜிதா ||122||

கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப-விமோதினீ |
ஸசாமர-ரமா-வாணீ -ஸவ்ய-தக்ஷிண-ஸேவிதா ||123||

ஆதிசக்திரமேயா$$த்மா பரமா பாவனாக்ருதி:|
அநேககோடி-ப்ரஹ்மாண்ட-ஜநநீ திவ்ய-விக்ரஹா || 124||

க்லீங்காரீ கேவலா குஹ்யா கைவல்யபத-தாயினீ |
த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா த்ரிமூர்த்திஸ் த்ரிதசேச்வரீ ||125||

த்ர்யக்ஷரீ திவ்யகந்தாட்யா ஸிந்தூர-திலகாஞ்சிதா |
உமா சைலேந்த்ர-தநயா கௌரீகந்தர்வ-ஸேவிதா ||126||

விச்வகர்ப்பா ஸ்வர்ண-கர்ப்பாSவரதா வாகதீச்வரீ |
த்யானகம்யா-Sபரிச்சேத்யா ஜ்ஞானதா ஜ்ஞானவிக்ரஹா ||127||

ஸர்வ வேதாந்த-ஸம்வேத்யா ஸத்யாநந்த-ஸ்வரூபிணீ |
லோபாமுத்ரார்ச்சிதா லீலாக்லுப்த- ப்ரஹ்மாண்ட-மண்டலா ||128||

அத்ருச்யா த்ருச்ய-ரஹிதா விஜ்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா |
யோகினீ யோகதா யோக்யா யோகானந்தா யுகந்தரா || 129||

இச்சாசக்தி-ஜ்ஞானசக்தி- க்ரியாசக்தி-ஸ்வரூபிணீ |
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணீ ||130||

அஷ்டமூர்த்தி-ரஜாஜேத்ரீ லோகயாத்ரா-விதாயினீ |
ஏகாகினீ பூமரூபா நிர்த்வைதா த்வைத-வர்ஜிதா ||131||

அன்னதா வஸுதா வ்ருத்தா ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ ப்ரஹ்மாநந்தா பலிப்ரியா ||132||

பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா |
ஸுகாராத்யா சுபகரீ சோபநா-ஸுலபாகதி: ||133||

ராஜராஜேச்வரீ ராஜ்யதாயினீ ராஜ்யவல்லபா |
ராஜத்க்ருபா ராஜபீட-நிவேசித-நிஜாச்ரிதா ||134||

ராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா சதுரங்க-பலேச்வரீ |
ஸாம்ராஜ்யதாயினீ ஸத்யஸந்தா ஸாகர-மேகலா ||135||

தீக்ஷிதா தைத்யசமனீ ஸர்வலோகவசங்கரீ |
ஸர்வார்த்த-தாத்ரீ ஸாவித்ரீ ஸச்சிதானந்தரூபிணீ ||136||

தேசகாலாபரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினீ |
ஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ குஹாம்பாகுஹ்யரூபிணீ ||137||

ஸர்வோபாதி-விநிர்முக்தா ஸதாசிவ-பதிவ்ரதா |
ஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ குருமண்டல-ரூபிணீ ||138||

குலோத்தீர்ணா பகாராத்யா மாயா மதுமதீ மஹீ |
கணாம்பா குஹ்யகாராத்யா கோமாலாங்கீ குருப்ரியா ||139||

ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்த்தி-ரூபிணீ |
ஸநகாதி-ஸமாராத்யா சிவஜ்ஞாநப்ரதாயிநீ ||140||

சித்கலா SSநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ |
நாமபாராயண-ப்ரீதா நந்திவித்யா நடேச்வரீ ||141||

மித்யா ஜகததிஷ்டாநா முக்திதா முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா ரம்பாதிவந்திதா ||142||

பவதாவ-ஸுதாவ்ருஷ்டி: பாபாரண்ய-தவாநலா |
தௌர்ப்பாக்ய-தூலவாதூலா ஜராத்வாந்த-ரவிப்ரபா ||143||

பாக்யாப்தி-சந்த்ரிகா பக்தசித்த-கேகி-கநாகநா |
ரோகபர்வத-தம்போலிர் ம்ருத்யுதாரு-குடாரிகா || 144||

மஹேச்வரீ மஹாகாளீ மஹாக்ராஸா மஹாசநா |
அபர்ணா சண்டிகா சண்ட-முண்டாஸுர-நிஷூதினீ ||145||

க்ஷராக்ஷராத்மிகா ஸர்வலோகேசீ விச்வதாரிணீ |
த்ரிவர்க்க-தாத்ரீ ஸுபகா த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா ||146||

ஸ்வர்க்காபவர்க்கதா சுத்தா ஜபாபுஷ்ப-நிபாக்ருதி : |
ஓஜோவதீ த்யுதிதரா யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா ||147||

துராராத்யா துராதர்ஷா பாடலீகுஸுமப்ரியா |
மஹதீ மேருநிலயா மந்தார-குஸும-ப்ரியா ||148||

வீராராத்யா விராட்ரூபா விரஜா விச்வதோமுகீ |
ப்ரத்யக்ரூபா பராகாசா ப்ராணதாப்ராணரூபிணீ ||149||

மார்த்தாண்ட-பைரவாராத்யா மந்த்ரிணீ-ந்யஸ்தராஜ்யதூ : |
த்ரிபுரேசீ ஜயத்ஸேநா நிஸ்த்ரைகுண்யா பராபரா : ||150||

ஸத்யஜ்ஞாநாநந்த-ரூபா ஸாமரஸ்ய-பராயணா |
கபர்த்தினீ கலாமாலா காமதுக்-காம-ரூபிணீ ||151||

கலாநிதி : காவ்யகலா ரஸஜ்ஞா ரஸசேவதி: |
புஷ்டா புராதனாபூஜ்யா புஷ்கரா புஷ்கரேக்ஷணா ||152||

பரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா |
பாசஹஸ்தா பாசஹந்த்ரீ பரமந்த்ரவிபேதினீ ||153||

மூர்த்தாSமூர்த்தா-Sநித்யத்ருப்தா முநிமானஸஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினீ ஸதீ ||154||

ப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜநநீ பஹுரூபா புதார்ச்சிதா |
ப்ரஸவித்ரீ ப்ரசண்டாSSஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி: ||155||

ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ பஞ்சாசத்-பீட-ரூபிணீ |
விச்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ: ||156||

முகுந்தா முக்திநிலயா மூலவிக்ரஹ-ரூபிணீ |
பாவஜ்ஞா பவரோகக்னீ பவசக்ரப்ரவர்த்தினீ ||157||

சந்த:ஸாரா சாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரா தலோதரீ |
உதாரகீர்த்தி-ருத்தாம- வைபவா வர்ண-ரூபிணீ ||158||

ஜன்ம-ம்ருத்யு-ஜராதப்த-ஜந-விச்ராந்தி-தாயினீ |
ஸர்வோபநிஷ-துத்குஷ்டா சாந்த்யதீத-கலாத்மிகா ||159||

கம்பீரா ககநாந்தஸ்தா கர்விதா கானலோலுபா |
கல்பனா-ரஹிதா காஷ்டாSகாந்தா காந்தார்த்த-விக்ரஹா ||160||

கார்ய-காரண-நிர்முக்தா காமகேலி-தரங்கிதா |
கநத்கநக-தாடங்கா லீலா-விக்ரஹ-தாரிணீ ||161||

அஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா க்ஷிப்ர-ப்ரஸாதானீ |
அந்தர்முக-ஸமாராத்யா பஹிர்முக-ஸுதுர்லபா ||162||

த்ரயீ த்ரிவர்க்க-நிலயாத்ரிஸ்தாத்ரிபுர-மாலினீ |
நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா ஸுதாஸ்ருதி: ||163||
ஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா |
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமாநஸ்வரூபிணீ ||164||

தர்மாதாரா தநாத்யக்ஷா தநதாந்ய விவர்த்திநீ |
விப்ரப்ரியா விப்ரரூபா விச்வப்ரமண காரிணீ ||165||

விச்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |
அயோநிர் யோநி நிலயா கூடஸ்தா குலரூபிணீ ||166||

வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ |
விஜ்ஞாநகலநா கல்யா விதக்தா பைந்தவாஸநா ||167||

த்வாதிகா தத்வமயீ தத்வமர்த்த ஸ்வரூபிணீ |
ஸாமகாநப்ரியா ஸௌம்யா ஸதாசிகுடும்பிநீ ||168||

ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணீ |
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்ச்சிதா ||169||

சைதந்யார்க்ய ஸமாராத்யா சைதந்ய குஸுமப்ரியா |
ஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்யபாடலா ||170||

தக்ஷிணா-தக்ஷிணாராத்யா தரஸ்மேர-முகாம்புஜா |
கௌலினீ-கேவலா Sனர்க்ய-கைவல்ய-பத-தாயிநீ ||171||

ஸ்தோத்ர-ப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா |
மநஸ்விநீ மானவதீமஹேசீ மங்கலாக்ருதி: ||172||

விச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாக்ஷீவிராகிணீ |
ப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயீ |||73||

வ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணீ வாமகேச்வரீ |
பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்ச-ப்ரேத-மஞ்சாதிசாயிநீ ||174||

பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ |
சாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினீ ||175||

தராதரஸுதா தன்யா தர்மிணீ தர்மவர்த்தினீ |
லோகாதீதா குணாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா ||176||

பந்தூக-குஸும-ப்ரக்யா பாலாலீலாவிநோதினீ |
ஸுமங்கலீ ஸுககரீ ஸுவேஷாட்யா ஸுவாஸினீ ||177||

ஸுவாஸின்யர்ச்சன-ப்ரீதா SSசோபனா சுத்தமானஸா |
பிந்துதர்ப்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா ||178||

தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ |
ஜ்ஞான-முத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேயஸ்வரூபிணீ ||179||

யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா |
அநகாSத்புத-சாரித்ரா வாஞ்சிதார்த்த-ப்ரதாயினீ ||180||

அப்யாஸாதிசய-ஜ்ஞாதா ஷடத்வாதீத-ரூபிணீ|
அவ்யாஜ-கருணா-மூர்த்தி-ரஜ்ஞான-த்வாந்த-தீபிகா ||181||

ஆபாலகோப-விதிதா ஸர்வானுல்லங்க்ய-சாஸனா |
ஸ்ரீசக்ரராஜ-நிலயா ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ ||182||

ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய- ரூபிணீ லலிதாம்பிகா |
ஸ்ரீலலிதம்பிகாயை ஓம் நம இதி ||

{ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :}
இதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகாண்டே
ஸ்ரீஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


உலகை உலுக்கிய ஒரு புகைப்படம்.


தமிழ் இலக்கியம் சினிமாவா எடுக்கும் போது ஏன் பெயிலியர்


சினிமா ஒரு நிகழ்த்துக்கலை இலக்கியம் படைப்புக் ( சிந்தனை) கலை இரண்டின் அடிப்படையே வேறு வேறு சினிமா இரண்டு மணிநேரம் திரையில் நிகழ்வதை அடிப்படையாகக் கொண்டு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது. அங்கு காலம் மிக முக்கியம் . பார்வையாளன் நேரத்தை பொறுத்தே அக்கலை யின் வடிவம் தீர்மானிக்கப் படுகிறது .
நாவல் அப்படியல்ல அதில் காலத்திட்டம் ஏதுமில்லை எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமனாலும் நிகழலாம் வாசிப்பவனுக்கும் எழுதுபவனுக்கும் நேரம் முக்கியமில்லை .
உதாரணத்துக்கு பொன்னியின் செல்வன் புரட்டி புரட்டி ஆயுள் முடியும் வரை படித்து முடிக்கலாம் ஆனால் படமாக வரும் போது அது இரண்டு அல்லது மூன்று மணிக்குள் இருக்கவேண்டும் . அது பத்தாயிரம் பக்கமாக இருந்தாலும் சரி
ஆகவே சினிமவில் ஒரு செயல் அல்லது நிகழ்வு தான் அக்கலையின் மையப்பொருள் அந்த செயல் அவனை இரண்டு மணிநேரம் உட்காரவைக்க வேண்டும் . பூமணியின் வெக்கையில்  ஒரு கொலை மற்றும் பழி வாங்கல் குறித்த பதட்டம்தான் கதைப்பொருள் சுஜாதாவின் ப்ரியாவிலும் ஒரு நாயகிக்கு ஆபத்து அதை வக்கீல் முறியடிப்பது .. இப்படி செயலை அடிப்படையாக க்கொண்டிருக்கும் நாவல்கள் சினிமாவுக்கு எடுபடும்
செயல் என்றால் குத்து வெட்டு கொலை என்றில்லை இரண்டுபேர் காதலிக்கின்றனர் இறுதியில் சேருவார்களா இல்லையா இதுவும் செயல்தான் காதலிப்பவர்கள் பிரிந்து விட்டனர் சேருவார்களா இல்லையா இதுவும் செயல்தான் . பெரும்பாலான நாவல்களில் பல செயல்கள் இருக்கின்றன . சிலர் இது தெரியாமல் ஒட்டுமொத்த நாவலையும் கதை என நினைத்து களமிறங்கும் போது தான் சிக்கல்


What are the different types of cells in the nose




The nasal cavity refers to the interior of the nose or the structure which opens exteriorly at the nostrils. It is the entry point for inspired air and the first of a series of structures which form the respiratory system. The cavity is entirely lined by the nasal mucosa, one of the anatomical structures (others include skin, body encasements like the skull and non-nasal mucosae such as those of the vagina and bowel) which form the physical barriers of the body’s immune system. These barriers provide mechanical protection from the invasion of infectious and allergenic pathogens.


Humans can smell thousands—perhaps even millions—of different scents. Yet scientists know that in the nose, there are only about 400 different types of odour receptors—proteins that capture scented molecules so that smells can be identified. Thus, there isn’t, obviously, one type of receptor that responds to a rose, while another jumps for jasmine.

So how can we smell so much, with so few types of receptors?

The answer is that cells mix and match. Each nerve cell in the nose can sense more than one odour but picks up the smell to a different degree. An odour's unique signature depends on which cells respond to it, and how intensely.

What happens when you inhale a rose is that a group of cells is stimulated, and that group sends a combination of signals to the olfactory bulb—the site at the very front of the brain where smell perception takes place. This unique combination of signals tells the brain the odour is the smell of a rose.

What are the different types of cells in the nose
The epithelium of the nasal mucosa is of two types – respiratory epithelium, and olfactory epithelium differing according to its functions. In the respiratory region, it is columnar and ciliated. Interspersed among the columnar cells are goblet or mucin cells, while between their bases are found smaller pyramidal cells.


உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.
அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.
எந்த தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.
பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.
ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.
அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.
அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.
ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.
என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.
உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.
ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.
எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?
உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.
(உஙக்ளால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்க்கவும்)