Pragash Sinnarajah
மரபணு மாற்ற அல்லது கலப்பு பயிர்களே இன்று வளரும் நாடுகளின் விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றால் மிகையாகாது.
குறிப்பாக மரபணு மாற்றம் என்பது ஒரு பொருளின் அடிப்படை பண்பை மாற்றாமல் அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களை செய்வதே ஆகும்.
சரி விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தொடர்பில் சற்றுப் பார்ப்போம்..
குறுகிய காலத்தில் மகசூல், அதிக மகசூல், பூச்சி எதிர்ப்பு, என விவசாயத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் உணவில் தன்னிறைவு அடையச் செய்வதே நோக்கமென பரவலாக விளம்பரப்படுத்தப்படுவதை நாம் கண்ணூடே பார்க்கலாம்.

சில குறிப்பிட்ட சர்வதேச நிறுவனங்கள் இவ்வாறான மரபணுமாற்ற விதைகளை உருவாக்கி அவற்றை உலகநாடுகளில் சந்தைப்படுத்தியுள்ளன அவற்றை அந்நிறுவனங்களிடம் மாத்திரமே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் உரிமத்தையும் தம் வசம் வைத்துள்ளன உதாரணமாக 'சிவத்த பெண்' எனும் பப்பாசி இன விதை 10 கிராம் 6000 இலங்கை ரூபாய்கள் ஆகும் இது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இலங்கையில் இருந்த நாட்டுப் பப்பாசி இனங்கள் பலாத்காரமாக அழிக்கப்பட்டமையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
உண்மையில் இவ்வாறு மரபணுமாற்றப்பட்டவை விவசாயிகளின் இலாபத்தை அதிகரிப்பதுடன் உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவது உண்மையா?? எனில் இன்றும் மரபணுமாற்ற விதைகளை பயிரிட்ட விவசாயிகள் கடன்சுமையால் தற்கொலை செய்வது அதிகரித்தமை, ஆரோக்கியம் குறைவடைந்து மக்கள் அதிகம் வைத்தியரை நாடல் போன்றவை அதிகரித்தமை பற்றி என்றாவது சிந்தித்துள்ளோமா??
உண்மையில் தொடர்ச்சியாக மரபணுமாற்ற விதைகளை பயிரிடுவதை அதிகரித்தால் அதன் விளைவுகள் அதிக ஏழைகளையும் நோயாளர்களையுமே அதிகரிக்கும் என்பதே நிதர்சனம்.
இயற்கையான விவசாயத்தை விட நவீன மரபணுமாற்ற விதை, களை நாசினி பூச்சி நாசினி அசேதன பசளை நன்மையானவை என மார்தட்டும் நண்பர்களிற்கும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்களிற்கும்
பின்வரும் நூல்கள் சில இது தொடர்பான அறிவூட்டல்களை எமக்கு வழங்கலாம்
1. உழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்
2. பசுமைப் புரட்சியின் கதை - சங்கீதா ஸ்ரீராம்
3. எண்ணெய் மற மண்ணை நினை - வந்தனா சிவா
4. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானாபு புகாகோ
5. உணவு யுத்தம் - ராமகிருஷ்ணன்

கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வ்நதுதான் ஆகவேண்டம் என்பார்கள் அப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்காய் ரகம் சந்தைக்கு வரும் முன்பே சர்ச்சையை கிளப்பியுள்ளது. சரி, மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் மரபணுமாற்றம் என்றாஞூல என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?
ஒவ்வொரு உயிரினத்திலும் அமைந்துள்ள இயல்புகளை எடுத்துக்காட்டாக பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல், போன்ற அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் . ஓர் உயிரிலிருந்து மரபணுக்களை பிரித்து வேறு ஒரு <உயிருக்கு ச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய குணாதிசங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்ற தொழில்நுட்பம். அதாவது,ஒரு உயிர் அதன் சந்ததியை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (டிஎன்ஏ) என்கிறோம். இந்தமரபணு தாய், தந்தையின் உருவ அமைப்புகளையும் குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை மனித இனம் இன்னும் கண்டறிய வில்லை. ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தஆய்வுகளின் ஒருபகுதியாகவே மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.
கத்தரிக்காய் நம் மக்களின் உணவில் அன்றாடம் இடம்பெறும் காய். குண்டு கத்தரி, நீளகத்தரி,வெள்ளை கத்தரி ,நாம கத்தரி, என்று அதில் பலரகமுண்டு. இப்போது பிடி கத்தரிக்காய் அப்படி என்றால் என்ன? இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் . காய்ப்புழுத்தாக்குதலை எதிர்க்கும்வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி செடியிலிருந்து காய்க்கும் புதிய வகை கத்தரிக்காய் . பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல் செடியின் உள்ளே பொதிந்துள்ள மரபணுவை மாற்றி விடுவதன் மூலம் பூச்சிகள் செடிகளைத் தாக்குவதைத் தடுக்கும் மரபணு மாற்றத் தொழில்நுடப்த்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கத்தரி செடியில் விளைவது தான் பிடி கத்தரிக்காய்.
மாங்கனிகளில் ஒட்டு மாங்கனி என்று ஒரு வகையை கேள்விப்பட்டிருக்கலாம். நல்ல ருசியுள்ள மா வகையையும் இணைக்கும் விதத்தை உயர்நிலைப்பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருப்போம். இருமரக்கிளைகளை விவசாயிகளே இணைத்து இந்த புதிய ரகங்களை உருவாக்கி விடுவார்கள். இண்டு நல்ல குணங்களையும் இணைத்துக்கிடைக்கும் பழøத்தின் விதை புதிய வீரிய ரக மாமரத்தை உருவாக்கும். மனித முயற்சிகள் இன்றி இயற்கையிலேயே பல வீடரய ரக உயிரனங்கள் தோன்றியுள்ளன. இப்படி குதிரைøயும், கழுதையையும் இணைத்து ஒரு புதிய விலங்கு உருவாக்கப்பட்டது அது கோவேருக்கழுதை . அது பொதியையும் சுமக்கும், குதிரையைப்போல வேகமாகவும் ஓடும். ஆனால், இந்த புதிய விலங்கு மற்ற விலங்குகளைப்போல இயல்பாக இனப்பெருக்கம் செய்யாது. இந்த விலங்கால் மனிதனுக்கு இதுவரை தீங்கு ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்ப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
விலங்குகள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றில் மரபணு மாற்ற தொழில்நுடுப்ம் பயன்படுத்தப்படுகிறது. தன் காரணமாகவே முட்டையிடாத (பிராய்லர்)கோழிகள், முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கும் திறனற்ற முட்டைகளை ஈனும் (லேயர்) கோழிகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோழிகளையும், முட்டைகளையும் உட்கொள்வோருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. தாவரங்களில் அரிசி, கோதுமை , கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு ரகங்களில் மட்டுமல்லாமல் மரவகைளிலும் மூலிகை இனங்களிலும் கூட மரபணு மாற்ற ஆய்வுகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில்,மத்திய அரசு விவசாயத்தின் வளர்ச்சிக்கு முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கி 25 ஆயிரம் கோடி ரூபாயை அதற்கென செலவிட்டு வருகிறது. அதன் மூலம் பாரம்பரிய விவசாய முறையிலே யே நமது விவசாயிகள் நவீன உத்தியைக் கையாண்டு அனைத்து உணவுப் பொருட்கள் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவு பெறும் சாதனையை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் கத்தரிக்காய் பயிரில் மட்டும் மரபணு மாற்றம் அவசியமா? என்ற எதிர்ப்புக்குரல் நாடெங்கும் எழுந்துள்ளது. கத்தரிக்காயின் மரபணுவில் ""கிரை 1ஏசி'' என்ற விஷ வைரஸ் கிருமியை செலுத்தி உருவாக்கப்படுவது தான் பி.டி.கத்தரிக்காய் . இந்தக் கத்தரிக்காயில் விஷத்தன்மை இருப்பதால் புழு,பூச்சி வெட்டு ஏற்படாது. இந்தக்கத்தரிக்காயை கடிக்கும் பூச்சிகள் உடனடியாக இறந்துவிடும். இதனால் இக்கத்தரிக்காய் நீண்டநாள் கெடாமல் இருக்கும். இதனால் இதை சாப்பிடுவோரை வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் கூட மரபணு கத்தரிக்காயை நன்றாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வைரஸ் கிருமி தாக்கி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் மேலும் , ஆந்திராவில் நடந்த மரபணு கத்தரிக்காய் ஆராய்ச்சியின் போது மரபணு கத்தரிக்காய் செடியின் இலைகளை சாப்பிட்ட ஆடு இறந்துபோனதாக ""அதிர்ச்சி'' தகவல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. எனவே மரபணு கத்தரிக்காய் செடிகளை ஆடுமாடு சாப்பிட்டால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் வேளாண்மை விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மருத்துவர்கள், இயற்கை ஆர்வலர்களும் மரபணு கத்திரிக்காய்க்கு தடைகோரிதொடர் பேராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து கேரளா,கர்நாடகம் போன்ற சில மாநிலங்கள் மரபணு கத்தரிக்காய்க்கு தடை விதித்தன. தமிழக அரசு, மத்திய அரசு முடிவை அறிவிக்கும் வரை வேளாண்மை அதிகாரிகள் மரபணு கத்தரிக்காயை தமிழ்நாட்டில் விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று அவசர உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார்கள்.
இந்நிலையில் மரபணு கத்தரிக்காயின் பேராபத்தை உணர்ந்த உத்தரகாண்ட் முதல் மந்திரிரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் அதற்கு தடை விதித்தார். இதுபற்றி அவர் கூறும்போது உத்தரகாண்ட்டில் அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மரபணு கத்தரிக்காய் பயிரிட அனுமதி அளித்தால் விவசாய நிலங்கள் அனைத்தும் பயிரிட முடியாத அளவுக்கு மாறிவிடும். மரபணு கத்தரிக்காய் செடிகளில் உள்ள விஷத்தன்மை கொண்ட வைரஸ் கிருமிகள் நன்மை செய்யும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். என்பதால் மரபணு கத்தரிக்காயை தடை செய்துள்ளோம்.என்றார்.
மரபணு கத்தரி பயிரிட்டால் விலங்குகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வேளாண் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு உடலில் ஏராளமான அலர்ஜியை உருவாக்கி விடும். என்றும் எச்சரிக்கிறார்கள். நம்நாட்டில் 2500க்கும் மேற்பட்ட இயற்கையான கத்தரிக்காய் ரகங்கள் உள்ளன. அவற்றை பாதுகாப்பது நமது கடமை. மரபணு கத்தரிக்காய் வர்த்தக ரீதியாக பயன்படுத்த அனுமதி அளிப்பது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் ஆறு இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்கிறார்.
உயிருக்கு வேட்டுவைக்கும் பிடி கத்தரிக்காய் உலகம் முழுவதிலும் மரபணு பயிர்கள் ,காய்கறிகள், பழங்கள் அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்க நிறுவனங்களான மான்சான்டோ, பயோனியர் போன்ற நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் தரகர்களை நியமித்து அரசியல் வாதிகள் உதவியுடன் கள்ளத்தனமாக மரபணு பயிர்கள் அந்நாடுகளில் பயிரிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் பிடி கத்தரிக்காய் மனித உடல் நலத்தை பாதிக்குமா என்று இதுவரை ஆய்வுகள் செய்யப்படவில்லை.அது எந்தமாதிரியான அலர்ஜிகளை உருவாக்கும் என்ற சோதனையும் நடத்தப்படவில்லை. பிடிகத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளைப் பொருத்தவரை யில் மரபணு கத்தரிக்காய் விதைககளின் விலை குறையும் என்று எதரிப்பார்க்கக் கூடாது. காரணம் விதைகளை குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யமுடியும். விதைகளின் விலையை அமெரிக்க நிறுவனம் நிர்ணயிக்கும் விதையின் விலையை கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. மரபணு பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு விதை கிடைக்காது. அமெரிக்க சார்பு நிறுவனமானது. ஒவ்வொரு மரபணு பயிர் விதையிலும் உள்ள முளைக்கும் தன்மையை அகற்றி விடுகின்றன. விதைக்கும் அமெரிக்க நிறுவனங்களை மட்டுமே நம்பி இருப்பதால் விவசாயிகள் எதிர்காலம் கோள்விக்குறி ஆகிவிடும். விதைகளில் மரபணுவில் செயற்கையாக மலட்டுத்தன்மை யை உருவாக்கி வேண்டியதன் அவசியம் தான் என்ன?மான்சாண்டோ போன்ற அமெரிக்க மரபணு விதை நிறுவனங்கள் விவசாயத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தலைவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து தொழிலை வெற்றிகரகரமாக செயல்படுத்தி வருகினறன.
நம்நாட்டில் மரபணுகாய்கறிகள் பழங்கள் பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அவர்களை தங்கள் வலையில் வீழ்த்த வேண்டும். என்றால் மரபணு கத்தரிக்காயைத்தான் முதலில் அறிமுகப்படுத்த வேண்டும். என்று சர்வதேச மரபணு விதை நிறுவனங்கள் திட்டம் தீட்டின. காரணம் கத்தரிக்காயில் தான் புழு பூச்சிகள் வெட்டு அதிகம். மரபணு கத்தரிக்காய் பயிரிட்டால் பூச்சி வெட்டே இருக்காது. என்ற கோசத்துடன் இந்திய விவசாயிகளை வீழ்த்த பிடி ரக கத்தரிக்காயை துணைக்கு வைத்துக் கொண்டு அந்நிறுவனங்கள் களம் இறங்கிஉள்ளன.
முதலில் கத்தரிக்காய் அடுத்து வாழைப்பழம் ,கேரட், முட்டைகோஸ்,தக்காளி,மக்காச்சோளம் , நெல், கோதுமை, பீன்ஸ், பீட்ருட், ஆப்பிள், ஆரஞ்சு என்று அத்தனை வகையான மரபணு காய்கறி , பழங்களையும் கொண்டு வரதிட்டமிட்டுள்ளது என்கிறார் கள்.
மரபணு மாற்றம் என்ற ஒரு துறை செய்து வரும் பல்வேறு விதமான கொடிய ஆய்வுகளின் விளைவாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே அறிய முடியாத ஒரு விசயமாக இருக்கிறது. தக்காளி, முருங்கைக்காய் என்று எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் . பத்து மாடுகளில் உள்ள சத்தை ஒரு முருங்கையில் மரபணு மாற்றம் செய்து ஏற்ற முடியும். அல்லது ஒரு காலத்தில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற கற்பனையான பயத்தில் விலங்குகளின் மரபணுவை தாவரங்களுக்கு ஏற்றலாம். அல்லது இறைச்சிகள் இனிமேல் இறைச்சிகள் அல்ல 2040க்கு பிறகு பிறக்கும் கோழிகளும், ஆடு,மாடுகளும் நம் கத்தரிக்காய், வெண்டைக்காய்க்கு சமமே என்று கூறி உலகை அதிசயிக்க வைக்கலாம்.
இன்று நாம் உட்கொள்ளும் அரிசி மரபணு மாற்றப்பட்ட அரிசி என்றால் அதன் பாதிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளோ அல்லது பொது மக்களோ அறிவார்களா?
அர்ஜென்டினா நாட்டில் இயற்கையாக பயிரிடப்பட்ட சோயாபீன்ஸ் பயிர் செய்யும் முறை ஒழிக்கப்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக்கொண்டு தற்போது சோயாபீன்ஸ் விளைவிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்டின் சோயாபீன்ஸ் ஏற்றுமதி 2008ம்ஆண்டு 16.5பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இப்போது இது சுற்றுச்சூழல் வாதிகளால் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது. இந்தமரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ காப்புரிமை எடுத்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கிளைபோசேட் என்ற இலைப்புழு கொல்லி மருந்தை தாங்கும் சக்தியுடன் அளிக்கிறது. ஆனால், விளைவு இது மற்ற பயிர்களை அழிப்பதோடு அருகில் இருக்கும் மக்களுக்கு நோய்களையும் , குழுந்தைகள் பிறக்கும் போது உடல் ஊனங்களையும் ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோவை வேனளாண்பல்கலைக்கழக்கத்தில் இப்புதிய வகை கத்தரிக்காய் விதைக்கப்பட்டு , செடிகள் வளர்ந்து காயும் பிஞ்சுமாக செழித்து நின்றது. அமெரிக்க விதைக் கம்பெனியான மாண்சாண்டோவின் இந்திய பங்கு நிறுவனமான மஹிகோ நிறுவனமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் கூட்டுசேர்ந்து ரகசியமாக இப்புதிய ரக கத்தரியை பரியிட்டு கள ஆய்வு செய்து வந்தன. இதையறிந்த தமிழக வேளாண் காப்புக்குழு ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு பல்கலைக்கழகத்தின் அருகே திரண்டு இந்த ஆராய்ச்சியை நிறுத்தக்கோரி ஆர்பாட்டம் செய்தார்கள்.
உடனே இப்பல்கலைக்கழக துணைவேந்தர் ""பட்டினிச்சாவுகளைத் தடுத்து பல லடச்சக்கணக்கான மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு விவசாயமும் சமுதாயமும் பயனடைய வேண்டும் என்பதற்காக இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அதனடிப்படையிலேயே மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கள ஆய்வு செய்யப்படுகின்றன. '' என்று கூறி போராடிய அமைப்புகள் மீது கிரமினல் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் உயிரி தொழில்நுட்ப புரட்சியும் விவசாய உற்பத்தியை பெருக்குமா? மரபணு மாற்றம் செய்யப்ப்பட்ட விவசாய விளைபொருட்களால் மனித இனத்துக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? இவை குறித்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன? மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களாலும் அவற்றின் பூக்கள் , காய்கள் , கிழங்குகள் , விதைகளாலும் மனித இனத்துக்கு ஒவ்வாமையும் இனம் புரியாத பல்வேறு நோய்களும் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். நோபல்பரிசு பெற்ற பிரென்னர் எனும் விஞ்ஞானி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாக பாதுகாப்பானவை என்று கூற பெரும்பாலான விஞ்ஞானிகள் தயங்குகிறார்கள். ஏனென்றால் அவர்களின் ஆயுட்காலத்திலேயே மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை என நிரூபிக்கப்பட்டுவிடும் என்கிறார்.
மனித இனம் மட்டுமின்றி இப்பயிர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தாவரங்களுடன் ஒட்டுறவு கொண்டுள்ள பல்வேறு பூச்சிகள், நுண்ணுயிர்கள் மட்டுமின்றி நன்மை செய்யும் மண்புழுக்களும் இப்புதிய வகைப்பயிற்களால் அழிக்கப்படுகின்றன. மறுபுறம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்ததங்கள் களைகளின் மகரஙந்தங்களுடன் சேர்ந்து களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட புதியவகை சூப்பர் களைகளை உருவாக்கி விடுகின்றன. இவற்றை எந்த களைக்கொல்லி மருந்தாலு<ம் கட்டுப்படுத்தவே முடியாது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம் அது பயிரிடப்படும் பகுதிகளில் காலனியாதிக்கம் செய்யக்கூடியது. அதாவது பிற தாவரங்களின்ல வளர்ச்சியை அழித்து தான் மட்டும் செழித்து வளரக்கூடியது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களில் பூக்களில் தேன் சுரக்குமா அவற்றை சாப்பிடும் தேனீக்கள் உறிஞ்சினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. இவை ஒரு புறமிருக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி பயிற்களில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை. மாறாக அப்புழுக்கள் எதிர்பபுத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003முதல் 2006வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம் , மிசிசிபி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் நடத்திய ஆய்வுகள் இதை நிரூபத்துள்ளன. எனவே தான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்பு க்குழ , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை களச்சோதனை முறையில் பயிரிடுவதற்கு க்கூட தடை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் , இத்தொழில் நுடப்த்திற்கும், இதனைப்பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடான இந்தியாவில் 2002 ம்ஆண்டு மரபணு மாற்றப்பட்ட கடுகும், 2003 ம்ஆண்டில் 8விதமான பருத்தியும் அனுமதிக்கப்பட்டு நாடெங்கும் 30லட்சம் ஏக்கரில் களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத் , மத்தியபிரதேசம், மராட்டிய ஆகி ய மாநிலங்களில் நடப்பட்ட பருத்தியானது பாரம்பரிய பருத்தியைவிட 5மடங்கு குறைவான விளைச்சலையேதந்தது. அது பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நஷ்டமேற்ப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கொண்டு போனது. இந்த உண்மையை நாடாளுமன்ற மேளவையின் கேள்விநேரத்தில் போதே அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இப்பினும் எல்லாவிதமான தானியங்களுக்கும் மரபணு மாற்ற ஆராய்ச்சி மற்றும் களப்பரிசோதனைகளை அரசு தாராளமாக அனுமதித்து வருகிறது. நம் நாடு சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டுவிட்டது. பிடி பருத்தியிலிருந்து தொடங்கி கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து உணவு தானியங்களும் இந்திய விவசாயத்தின் உயிர்நாடியான நெல் சாகுபடிக்கும் பேராபத்தாக பிடி நெல்லும் வந்துவிட்டது.
அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும் ஐதாராபாத் பல்கலைக்கழகமும் கூட்டுசேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை உருவாக்க புதுடில்லி, ஐதாராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக்கம்பெனியுடன் கூட்டு சேர்ந்துள்ளன. தங்க அரிசி எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டு சேர்ந்து ய்வுகள் நடத்துகின்றன. மேலும் ஏறத்தாழ 75லட்சம் பேர் பயனடையவதாக சொல்லப்படும் ஒருங்கிணந்த ஊட்டச்சத்து திட்டத்தை இந்திய அரசு உலக வங்கிக்கடனைக் கொண்டு நடத்திவருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6வயதுக்குட்பட்ட குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்கள் , குழுந்தைக்குப்பாலுõட்டும் தாய்மார்கள் ஆகியோருகுஞூகு சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில "கேர்' எனும் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மரபணு மாற்றம் செய்யப்ப்டட சோயாமாவையும் சோயா எண்ணெயையும் வழங்கி அத்தாய்மார்கள் குழுந்தைகளிடம் அதன் விளைவுகளை 2002ம்ஆண்டில் சோதிஞூததுப்பார்த்துள்ளனர். இந்த உணவின் தன்மை , விளைவுகள் பற்றிக்கண்டறிய எவ்வித பகுப்பாய்வு முறையும் இதுவரை இல்லை என்பது தான் மிக்பெரிய கொடுமை.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் எந்த வித தொந்தரவு மில்லைதாராளமாக வாங்கிச் சாப்பிடுங்கள் பிடி கத்தரிக்காய் என்கிறார். பிடி பருத்தி தந்துள்ள அனுபவம் உலகம் தழுவிய விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையும் பலஉலக நாடுகளின் மரபணு மாற்றம் பெற்ற உணுவு குறித்த தயக்கமும் நம்மை "" சே நாட் டு ஜெனிட்டிகலி மாடிபைடுபுட் '' என்று சொல்லவைக்கிறது. கிரீன்பீஸ் அøம்பபு தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் குறிஞூதது மைக்கோ சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைகளைப் பெற்று ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன.
பிரெஞ்சு விஞ்ஞானி முன் வைக்கும் கருத்துகள்
மைக்கோவின் ஆய்வுகளை மறுஆய்வு செய்த கில்லிஸ் எரிக் செராலினி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி முன்வைக்கும் கருத்துக்கள்..
1. நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை (ஆன்டிபையாடிக்) செயல் புரிய முடியாமல் செய்யும் தன்மை பிடி கத்தரிக்காயில் ஊடுருவியுள்ள பிடி ஜீனின் உள்ளதால் மனிதனின் நோய்க்கு கொடுக்கப்படும் (முக்கியமாக நியோமைசின், ஸ்டெப்டோமைசின்) போன்ற மருந்துகள் செயல்பட முடியாமல் போகும்.
2. பிடி கத்தரிக்காயில் உள்ள புரதம் (கிரஸ்டல் புரொட்டீன்) மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மை உடையது.
3. இந்த ஆய்வு90 நாட்களுக்குள்ள ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டு உள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால் தான் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபணு மாற்ற கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.
4. சுற்றுப்புற சூழலின் சமனை அழிப்பதில் இந்த மரபணு மாற்ற தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுப்புகதிகளில் இருக்கும் சாதாரண பயிர்களை இவை பாதிக்கின்றன. மகரந்தத்துõள்கள் காற்றில் பரவுவதால் இந்தப்பாதிப்பு ஏற்படுகிறது. மரபணு மாற்றபயிர்களின் விளைவாக இயற்கையில் இருந்து வரும் உயுடர் சங்கிலித்தொடர் சீர்குலையும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. சில பூச்சிகள், புழுக்கள் ஒரே யடியாக இல்லாமற் போய்விட்டால் , அவற்றை உண்டு உயிர் வாழுறும் சில வகைப்பறவைகள் இல்லாமற் போய்விடும் . அவற்றின் அழிவு, தொடர் விளைவை ஏற்படுத்தும் . மரபணு மாற்ற பெற்ற தானிய ம்விளைந்த நிலங்களை சுற்றி அமெரிக்காவில் கொத்து கொத்தாய் வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போயின. சொல்ல முடியஆது இந்த நிலை நீடித்தால் நாமும் நம் வண்ணத்துப்பூச்சிடீகளை இழக்கலாம்.
5. மான்சாண்டோ போன்ற விதை நிறுவனங்கள் தாங்கள் விற்கும் விதைகளில் டெர்மினேட்டர் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த விதைகளிலிருந்து விளையும் தானியங்களிலிருநுஞூது பெறப்படும் விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. அவைகள் மலட்டு விதைகளாக இருக்கும். எனவே விதைகளுக்கு நாம் மீண்டும் விதை நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டும். இதனால் விதை தானியங்கள் மீதான சுதந்திரம் விவசாயிடமிருந்து பறிக்கப்படும். உணவு உற்பத்தி ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக உரிமையாகக்கூடும். இப்படிப்பட்ட சூழநிலையில் இந்தியாவில் எந்த விவாதமும் இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகள் , வேளாண்பல்கலைக்கழகங்கள் அரசு ஆதரவுடன் மரபணு மாற்ற பயிர்களைப்பரப்புவதில் இறங்கியிருக்கின்றன.
வர்த்தக உற்பத்திக்கு மரபணு மாற்ற கத்தரிக்காயின் அவசியம் என்ன என்று கிரீன்பீஸ் அமைப்பிடம் கேட்டால் , அவர்கள் சொல்கிற காரணம் இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுனத்துக்கு ராயல்டி செத்தியாக வேண்டும். இரண்டாவதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனில் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள். நாம் விழித்துக் கொள்வோம் என்கிறார்கள்.
Thanks https://vgselva.blogspot.com