Search This Blog

Friday, April 18, 2014

இன்னும் கன்னியாக....

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா













சிங்கப்பூர் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்குக் காத்திருக்கும் பயணிகள் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கிறாள் மாலதி. மெல்பேணிலிருந்து பயணித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு சிங்கப்பூரில் மூன்று மணிநேரத் தரிப்பு. கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். கொழும்புக்கான விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. விமானத்தினுள் பயணிகளை அனுமதிப்பதற்கு இன்னும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதுவரையில் சாய்வுக் கதிரையில் கொஞ்சம் கண்ணயரலாம் என்றால் எண்ண அலைகள் எம்பிக் குதித்து அவளின் இதயத்தில் மோதிக்கொண்டிருந்தன. தன் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட சோகத்துடன் தொடர்பான நிகழ்ச்சிகள் மாறாத காயங்களாக மனதில் எரிந்துகொண்டிருந்தன.

பதினான்கு மாதங்களுக்கு முன்னர் இதே சிங்கப்பூர் விமான நிலையத்தில் இதே இடத்தில்தான் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக அவள் தரித்திருந்தாள். ஆனால் அன்று, கொள்ளை ஆசைகளோடும், குதூகலிக்கும் உள்ளத்தோடும், இல்லறவாழ்வில் நுழையப்போகும் இன்பக் கனவுகளோடும் காத்திருந்தாள். பூரித்த நினைவுகளும், புதுமையான உணர்வுகளும் அன்றைய பயணத்தில் அவளோடு துணையாக வந்தன.

*************
மாலதி மிகவும் அழகானவள். பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டும் கவர்ச்சிகரமான முகம். சிவந்த நிறம். ஒல்லியென்று சொல்ல முடியாத மெல்லிய உடல். அளவான உயரம். பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. தந்தை கருணாகரன் இளைப்பாறிய சுங்க அதிகாரி. தாய் ஜானகி ஆசிரியை. இன்னும் இரண்டுவருடங்களில் சேவையிலிருந்து இளைப்பாறக் காத்திருக்கிறார். இருவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் எத்தனையோ தலைமுறைகளை இருத்தி வைத்துப் பராமரிக்கப் போதுமானவை. வெள்ளவத்தையில் விசாலமான காணியுடன் ஒருவீடு, அதற்கு சற்றுத் தூரத்தில் மூன்றுபடுக்கை அறைகளுடன் ஓர் உயர்தரத் தொடர்மாடி மனை. யாழ்ப்பாணத்தில் வங்கியொன்றிடமிருந்து இன்னமும் கொழுத்த வாடகையை வசூலித்துக் கொண்டிருக்கும் மாடிவீடு இப்படி அசையாச் சொத்துக்கள் ஒருபுறமிருக்க தங்கநகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும், வங்கி வைப்புக்களாகவும் ஏராளமான சொத்துக்கள். எல்லாமே மாலதிக்குத்தான்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் அந்தவருடமே மாலதிக்குப் பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்தது. வேலை பார்க்கவேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை என்றாலும், படித்த படிப்புக்குக் கிடைத்த வேலைக்குக் கொஞ்சநாள் போய்வரட்டுமே என்பது பெற்றோரின் கருத்து. திருமணத்திற்குப்பிறகு அவளுக்கு வேலை தேவையில்லை என்பது அவர்களது எண்ணம். மாலதிக்கும் அதில் உடன்பாடுதான்.

உள்ளுரில் பல நல்ல இடங்கள் தானாகத் தேடியே வந்தன. ஒரேயொரு பிள்ளை. உள்ளதெல்லாம் அவளுக்குத்தான். எனவே, தெறித்துப்பார்த்து மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் மாலதியின் பெற்றோர் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டார்கள். மாலதிக்கு இதுவரை யாரிலும் காதல் ஏற்பட்டதில்லை என்பதும், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையை விருப்போடு ஏற்றுக்கொள்ளும் தெளிவான மனநிலையில் அவள் இருப்பதும் மாலதியின் பெற்றோருக்கு மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் ஒருவித பூரண சுதந்திரத்தைக் கொடுத்திருந்தன. ஆயினும் தாம் தெரிவுசெய்யும் மாப்பிள்ளையை மாலதிக்குப் பிடித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு ஆகவேண்டியவைகளைக் கவனிப்பது என்பதில் இருவருமே மிகவும் தீர்மானமாக இருந்தார்கள். மாலதிக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுமே என்று அவர்கள் இருவரும் சற்று அதிகமாகவே சிரத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அந்தநேரத்தில்தான் மாலதியின் குடும்ப நண்பர் கோவிந்தராஜன் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை ஒருவரின் விபரங்களுடன் வந்தார். பெயர் துஷியந்தன். பொறியியலாளர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஒரேயொரு அக்கா. அவவும் திருமணமாகிக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில்தான். நல்ல இடம் என்று சொன்னார். துஷியந்தன் அங்கே சொந்தமாக வீடும் வாங்கியிருக்கிறாராம். பெற்றோர் தங்களுக்கு ஒரு மருமகளையல்ல மகளையே தேடுவதுபோலத் தேடுகிறார்களாம். மாலதியின் அழகுக்கும் அறிவுக்கும் நல்ல குணத்துக்கும் ஏற்ற இடம் என்றெல்லாம் சொன்னார் கோவிந்தராஜன். துஷியந்தனின் படத்தையும் கொடுத்தார். அழகான மாப்பிள்ளைதான். ஜானகி அம்மாவுக்கு மாப்பிள்ளையின் அழகு பிடித்துவிட்டது. கருணாகரன் இரண்டொருநாளில் பதில் சொல்வதாகக்கூறி கோவிந்தராஜனை அனுப்பிவைத்தார்.

அந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு கணமும் கருணாகரனுக்கும், ஜானகி அம்மாவுக்கும் இதே சிந்தனைதான். பல்வேறு விடயங்களைச் கவனத்திற்கு எடுத்துப் பரிசீலித்தார்கள். நாட்டுப்பிரச்சினை முடிவெடுப்பதை விரைவு படுத்தியது. எவ்வளவு சொத்து இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை. ஒவ்வொருநாளும் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்க முடியாத வாழ்க்கை. நாடு முழுவதுமே இப்படியே என்றால் நாளைக்கு இந்தப் பதற்றமான சூழலில்தானே மாலதி குடும்பம் நடத்த வேண்டும்? மாலதி அவுஸ்திரேலியாவுக்குப் போய்விட்டால் பிறகு ஒன்றிரண்டு வருடங்களில் எல்லாச் சொத்துக்களையும் விற்றுவிட்டுத் தாங்களும் அங்கே போய்விடலாம். மாலதி ஒரே பிள்ளை என்பதால் தங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சுங்க இலாகாவில் வேலை செய்தவர் என்பதாலா அல்லது இந்தச் சம்பந்தம் வந்தபின்னர் விசாரித்து அறிந்து கொண்டதாலா என்று தெரியவில்லை கருணாகரன் தனக்குத் தெரிந்த அவுஸ்திரேலிய குடியேற்ற விபரங்கள் எல்லாவற்றையும் மனைவியிடம் கூறினார்.

'பிறகென்ன? யோசிக்கிறியள்? பிள்ளையோட அங்க நாங்களும் போய் இருக்கலாம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச நாட்டில கிடந்து ஏன் சீரழிய வேணும்' என்று வெளிப்படையாகவே தன் முடிவைச் சொன்னா ஜானகி அம்மா. கருணாகரனும் தலையசைத்தார். மாலதிக்கும் புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளையின் முகம் மனதில் பதிந்துவிட்டது. விடயங்கள் வேகமாக நகர்த்தப்பட்டன. ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டன.

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாலதிக்கும் துஷியந்தனுக்கும் அவுஸ்திரேலியாவில் திருமணம் நடைபெற்றது. முருகன் கோயிலில் திருமணமும் அதனைத்தொடர்ந்து ஒரு பெரிய மண்டபத்தில் வரவேற்பு விழாவும் நடைபெற்றன. தேன்நிலவை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது செலவில் வைப்பதற்கு கருணாகரன் எவ்வளவோ முயன்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இராசியான வீடு, அது இது என்றென்னவோ எல்லாம் சொல்லி வீட்டிலேயே தேன்நிலவுக்கு ஒழுங்கு செய்தார்கள். திருமணத்திற்காக மூன்று மாத விசாவில் சென்றிருந்த கருணாகரனும், ஜானகி அம்மாவும் திருமணம் முடிந்தபின்னர் ஒருமாதகாலம் அவுஸ்திரேலியாவெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

தேன்நிலவு மாலதிக்கு இனிக்கவில்லை. தேன்நிலவே இல்லாத போது எப்படி இனிக்கும்? எல்லாப் பெண்களையும் போலத்தான் மாலதியும் அந்தப் புது உறவின் எதிர்பார்ப்பில், வெட்கம் கலந்த மகிழ்வில் உள்ளம் திளைக்க, உடல் சிலிர்க்க அலங்கரிக்கப்பட்ட அந்த அறைக்குள் நுழைந்தாள். துஷியந்தன் கட்டிலில் ஏனோதானோ என்று வீற்றிருந்தான். மாலதி அறைக்குள் நுழையும்போது நிமிர்ந்து அவளைப்பார்த்துவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் மீண்டும் குனிந்து கொண்டான். கண்கள் சந்திக்காவிட்டாலும் அவன் முகத்தில் உற்சாகம் இன்மை இருப்பதை மாலதி உணர்ந்தாள். வா என்று ஒரு வார்த்தைகூடப் பேசாவிட்டாலும், ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் அவன் இருப்பது அவளுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது. இத்தனைக்கும் கடந்த பத்துமாதங்களுக்கு மேலாக வாரம் ஒருதடவையாவது இருவரும் பலதடவைகள் தொலைபேசியில் கதைத்தவர்கள்தான். திருமண நிகழ்ச்சிகளின்போதும்,  வரவேற்பின்போதும் கலகலப்பாகத்தானே இருந்தார். இப்போது ஏன் இப்படி? என்றெல்லாம் மாலதியின் மனம் குழம்பியது.
ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அவன் வாய் திறந்தான்.

'மாலதி! இருங்க. எனக்கு கொஞ்சம் களைப்பாய் இருக்கு. நேற்றிரவு முழுக்க நித்திரையில்லை. நான் கொஞ்சம் படுக்கிறன். நீங்களும் வேணுமெண்டால் படுங்க. உங்களுக்கும் களைப்பாய்த்தான் இருக்கும். இந்த சாறியளையும் கட்டிக்கொண்டு, காலையில இருந்து ஒரே டென்சனாய் இருந்திருப்பியள்...'
அவன் முடிக்கவில்லை, அவள் தொடங்கினாள், ' அப்பிடியொண்டுமில்ல. நீங்கதான் களைச்சிருக்கிறீங்க. நீங்க றெஸ்ற் எடுங்க. நான் இருக்கிறன்..'

கட்டிலின் ஓர் ஓரத்தில் அவன் சரிந்து படுத்துக்கொண்டான். எவ்வளவு நேரம் மாலதி கட்டிலில் அமர்ந்திருந்தாளோ அவளுக்குத் தெரியாது. துக்கம் தொண்டையில் நெருட, தூக்கம் கண்களை வருட அப்படியே கட்டிலின் மறு ஓரத்தில் படுத்தாள். இடையே ஒருமுறை தூக்கம் கலைந்து மாலதி விழித்தபோது அறை இருளாயிருந்தது. துஷியந்தன் விளக்கை அணைத்திருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டு அவன் படுத்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் குறட்டைச்சத்தம் கூறிக்கொண்டிருந்தது. அவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். மறுநாள் காலை கதவு தட்டப்பட்டது. மாலதியின் மாமியார் இரண்டு தேனீர்க் கோப்பைகளுடன் அறைக்குள் நுழைந்தாள். இவ்வளவுதான் மாலதியின் முதல் இரவு.

நாட்கள் நகர்ந்தன. பகலெல்லாம் பலர் முன்னிலையில் மட்டுமன்றித் தனித்திருக்கும் போதும் கூட துஷியந்தன் மாலதியுடன் கலகலப்பாகவே இருந்தான். இரவானதும் அவளிடம் இருந்து ஒதுங்கினான். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விலகியேயிருந்தான். ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் சிறிது நேரத்தில் எழுந்து தன் படிப்பறையினுள் சென்று கொம்பியூட்டரில் கலந்துவிடுவான். சிலநாட்களில் அங்கேயே மேசையில் தலைசாய்த்துத் தூங்கியும் விடுவான். மாலதிக்கு இனம்புரியாது இழையோடிய துன்பம் நாளாக நாளாக இரணமாகி அணுவணுவாகச் சித்திரவதை செய்யத் தொடங்கியது. திருமணம் முடிந்து ஒருமாதத்தில் பெற்றோர் இலங்கைக்குத் திரும்பியதும் அவளின் வேதனை விம்மி வெடித்தது. உடல் இச்சைக்காக அவள் அலையவில்லை. ஆனால் உள்ளத்து உணர்வுகளுக்குத் தடைபோட அவளால் முடியவில்லை. வாழ்க்கை நியதிகளுக்கு மாறான தனது கணவனின் நடத்தையில் உள்ள புதிரை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதேவேளை, இதுவரை ஒருதடவைகூட அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளாததால், அதனால் உண்டாகக்கூடிய அன்னியோன்னியம், உரிமை நெருக்கம் எதுவுமே அவர்களுக்குள் ஏற்படவில்லை. சட்டப்படி கணவன் மனைவியாக இருந்தாலும், இன்னும் அவர்களின் உள்ளங்களுக்கும், உடல்களுக்கும் இடையே இருந்த இடைவெளி, நேரடியாக அவனிடம் இதுபற்றிக் கேட்பதற்கான துணிவை எழவிடாமல் அவளைத் தடுத்தது.

இந்த நிலையில்தான், ஒருநாள் துஷியந்தனின் அக்கா கௌரி, தாயிடம் கதைத்த வார்த்தைகள் மாலதிக்கு அந்தத் துணிவைக் கொடுத்தன. கௌரி அடிக்கடி வெளியில் எங்காவது அலுவல்களுக்கோ அல்லது கணவனுடன் நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது அவர்களின் ஐந்து வயதுப்பிள்ளை லக்சியை துஷியந்தனின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஒரு மாலைப்பொழுதில் லக் சியை விட வந்தவளிடம், துஷியந்தனின் தாய், தாங்களும் வெளியில் போக இருப்பதாகக் கூறினாள்.

'பிள்ளை! நாங்களும் கலைவிழாவுக்குப் போக இருக்கிறம். லக்சியை என்னெண்டு இங்க விடுறது? அவளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகட்டே..'

'மாலதியும் வருகுதோ அம்மா?'

'இல்லை பிள்ளை. துஷியும் மாலதியும் வரேல்லை. ஆனால் அவையளோடை என்னெண்டு லக்சியை விடுறது..?'
'ஏனம்மா? அவையளோடை விடுறத்துக்கு என்ன? உங்களோடை லக்சியைக் கூட்டிக்கொண்டு போனால் நீங்கள் விழா பாக்க ஏலாது. அவள் குளப்படி பண்ணுவாள். இரவுக்கு லக்சி இங்கேயே நிக்கட்டும். நாங்க லேற்றாத் தான் வருவம். அந்தநேரம் லக்சியை எடுக்க வரமாட்டம் அவளின்ர நித்திரை குழம்பிப்போகும். நான் நாளைக்கு வந்துகூட்டிப் போவன். அவள் இங்க மாலதியோட படுக்கலாம்தானே! மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்?.. லக்சியையை எண்டாலும் கொஞ்சட்டுமன்,'

இதைக்கேட்டுக்கொண்டிருந்த மாலதிக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது.
'மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்?..' என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? 'தன்னால் பிள்ளை பெறுவதற்கு முடியாதா? தன்னால் குடும்பம் நடத்த முடியாதா? தான் குடும்பம் நடத்த தகுதியற்றவளா? அப்படியென்றால்... அப்படியென்றால்... இந்த வார்த்தைகளுக்கும் தன்கணவன் தன்னிலிருந்து விலகி நடப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கும். இருக்க வேண்டும். இவர்கள் எல்லோருக்கும் இடையில் தனக்குத் தெரியாத பயங்கர இரகசியம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.' மாலதிக்குத் தலை சுற்றியது. வயிற்றில் அமிலம் நிறைந்து எரிவது போல இருந்தது. நெஞ்சில் தாங்கமுடியாத சுமை ஏறிக்கனத்தது.

நேராக துஷியந்தனின் அறைக்குச் சென்றாள். திருமணமான நாள்முதல் நெஞ்சில் புகைந்துகொண்டிருந்த எரிமலை வெடித்தது. எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே துஷியந்தனிடம் கேட்க நினைத்தாள்.

' நான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்'

'வாங்க, மாலதி. என்ன கதைக்கோணும். கதைக்கலாம்.'

'உங்கட அம்மாவும், அக்காவும் நான் பிள்ளை பெறமாட்டன் அது இது எண்டு என்னென்னவோ எல்லாம் கதைக்கிறாங்க...ஏன் அப்பிடி?'

'ஒட்டுக்கேட்டீங்களா?'

'ஒரே வீட்டில இருந்துகொண்டு ஒட்டுக் கேட்கவேண்டியதில்லை. அவங்க கதைச்சது எனக்குக் கேட்டது,'

'என்ன கதைச்சவங்கள்..?'

'நான் குடும்பம் நடத்தமாட்டனாம்...லக் ஷியைத்தான் கொஞ்சிக்கொள்ள வேணுமாம்...என்ன கதை இது?'

'ஓ...இவ்வளவுதானா...அக்கா லக் ஷியை விட்டுட்டுப் போக வந்திருப்பா. அதனால அவ என்னவோ சொல்லியிருப்பா.. அத நீங்க பிழையாக விளங்கிக் கொண்டீங்க....'

'எனக்கொண்டும் பைத்தியமில்ல. அவங்கட கதையும் சரியில்ல...உங்கட நடத்தையும் சரியில்ல...'

'என்ர நடத்தையில... என்ன சரியில்ல...?'

மாலதிக்குக் கோபம் தலைக்கேறியது. அவனை உற்றுப் பார்த்தாள். அவளது கண்களில் அனல் தெறித்தது. உடல் நடுங்கியது. அவனது கேள்விக்குப் பதிலாக, ஆயிரமாயிரம் கேள்விகளை அவன்மீது அள்ளி வீசுவதற்கு அவளின் உதடுகள் துடித்தன.

ஆனால், கோபத்தையும் மீறி குமுறிவந்த அழுகை பேச முடியாமல் தடுத்தது. அங்கிருந்து ஓடிச்சென்று தன் அறைக்குள் கட்டிலில் குப்புற விழுந்து விம்மி வெடித்தாள்.

அன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணீரால் தலையணை முற்றாக நனைந்தது. எதை நினைத்தாலும் கண்ணீர் பெருகியது. தொண்டைப்பகுதி இறுகிக் கனத்து நோவெடுத்தது. விடியவிடிய அவளது சிந்தனை சுழன்றது. எந்தத் திசையும் தெரியாத பாலைவனத்தின் மத்தியிலே தன்னந்தனியே விடப்பட்டது போன்றதொரு வெறுமை உணர்வில் இனம் புரியாத பயம் இதயத்தைக் கவ்வியது. அன்றுவரை பூரணமான ஒரு கணவனாகத் தன்னுடன் நடந்துகொள்ளாத துஷியந்தன் மேல் அதுவரை எழாத ஒரு சந்தேகம் அவளுக்கு மெல்லத் தலைதூக்கியது. அப்படியொரு சந்தேகம் எழுந்த கணத்திலிருந்து அவளது சிந்தனை முழுவதும் அதனைச்சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.

மறுநாள் துஷியந்தன் வேலைக்குச் சென்றதும் அவனது படிப்பறையினுள் சென்று அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் ஆராய்ந்தாள். இந்த ஒரு நேரத்திற்காக விடியும்வரை கண்விழித்து அவன் செல்லும்வரை காத்திருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அந்த அறையை துருவிவத்துருவி அசுரத்தனத்தோடு துளாவினாள். அங்கே இருந்த பொருட்கள் அவளுக்கு ஆச்சரியத்தையும், பயத்தையும் கொடுத்தன. எத்தனையோ விதம்விதமான மருந்துக்குளிசைகள், மருத்துவஅறிக்கைகள். சிலவற்றை வாசித்துப்பார்த்தாள். அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. தொடர்ந்து தினமும் மருந்தெடுக்கவேண்டிய ஏதோ ஒரு நோய் துஷியந்தனுக்கு இருக்கிறது என்று மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அது புரிய வந்தபோது அவளின் இதயமே வெடிப்பது போல இருந்தது. ஓவென்று அழவேண்டும்போல இருந்தது. ஆனால் அழுகை வர மறுத்தது. கண்கள் மட்டும் நீரை வடித்தன. நெஞ்சு கனத்தது. சித்தசுவாதீனமற்ற ஒருவரைப்போல அந்த மருந்துகளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். சில நிமிடங்களில் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளைப் போல எழுந்தாள். அந்த அறிக்கைகளிலே சிலவற்றை அங்கிருந்த தொலைநகலி மூலம் பிரதி எடுத்தாள். கண்ணில் பட்ட மருந்துகளின் பெயர்களையெல்லாம் ஒரு தாளில் எழுதினாள். தனது அறைக்குள் சென்று கட்டிலில் வீழ்ந்தாள். அன்றே தனது பள்ளித்தோழி இராதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி எல்லாவற்றையும் அனுப்பிவிட்டாள்.

மாலதியோடு க.பொ.த. உயர்தர வகுப்பவரை ஒன்றாகப்படித்த இராதா இப்பொழுது ஒரு மருத்துவராக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் கடமையாற்றுகிறாள். மாலதியும் இராதாவும் பள்ளித்தோழிகள் மட்டுமல்ல குடும்ப நண்பர்களும்கூட.

அதனால் இதுபற்றி இராதா மாலதியின் பெற்றோரிடம் சிலவேளை ஏதாவது சொல்லிவிடக்கூடும் என்றெண்ணிய மாலதி அவ்வாறு செய்துவிடவேண்டாம் என்று இராதாவிடம் மன்றாடிக்கேட்டு எழுதினாள்.

ஒருவாரத்தில் இராதா மாலதியைத் தொலைபேசியில் அழைத்தாள். அழுதுகொண்டே அவள்கூறிய விடயம் மாலதிலின் தலையில் இடிபோல் விழுந்தது. மாலதியின் கணவன் குடும்பவாழ்க்கையில் ஈடுபடமுடியாத நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை அவளிடமே சொல்லும்போது என்னதான் டாக்டராக இருந்தாலும் இராதாவால் எப்படி அழாமல் இருக்கமுடியும்? மாலதிக்குத் தன் வாழ்க்கையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும்
தகர்ந்து விட்டது.

'துஷியந்தனால் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாது, அவனைப் பீடித்திருக்கும் நோயை முற்றாகக் குணப்படுத்தவும் முடியாது, பொரும்பாலும் தவறான சிற்றின்பத் தொடர்புகளினால்தான் இந்த நோய் ஒருவருக்குத் தொற்றிக்கொள்ளும்' என்கின்ற விபரங்களையெல்லாம் இராதாவிடமிருந்து அறிந்தபோது மாலதியின் இதயம் நொறுக்கியேவிட்டது. அப்போதே அவளின் உடலில் இருந்த இரத்தமெல்லாம் உறைந்துவிட்டது போல இருந்தது அவளுக்கு.
அன்றிலிருந்து அவள் நடைப்பிணமானாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைமட்டுமன்றித் தன் பெற்றோரையும் துஷியந்தனும் அவனின் குடும்பத்தினரும் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார்களே என்பது அவளது உள்ளத்தை ரணகளமாக்கியது.

அவளால் உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. எவருடனும் பேசப் பிடிக்கவில்லை. யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சதிகாரர்கள், மோசக்காரர்கள் என்ற எண்ணம் அவளைப் பயமூட்டி வாட்டி வதைத்தது. எடுத்ததற்கெல்லாம் துஷியந்தன் மீது எரிந்து விழுந்தாள். அவளது மாற்றத்தைக்கண்டு கலவரமடைந்த துஷியந்தனின் தாயும், கௌரியும் அவளிடம் வந்து என்ன ஏது என்று அறிவதற்காகப் பேச்சுக் கொடுத்தார்கள். அப்போது மாலதி அவர்களைப் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போனார்கள். எதுவுமே பேசாமல், சுட்டெரிக்கும் கண்களால் அவர்களை ஒருநிமிடம் அப்படியே இமை வெட்டாமல் அனல் கக்கப் பார்த்துவிட்டு, விருட்டெனத் தன் அறைக்குள் சென்று படாரெனக் கதவைச் சாத்தினாள். மறுநாள் அவள் தன் தந்தையைப்போல எண்ணி மிகவும் மதித்து நடந்த துஷியந்தனின் அப்பா அவளிடம் ' மகள், மாலதி நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் பிள்ளை' என்று சொல்லிக்கொண்டு வந்தார். மாலதி, நிமிர்ந்து ஓர் அருவருப்பான பிராணியைப்பார்ப்பது போல அவரைப்பார்த்து, ' சீ நீயும் ஒரு மனுஷனா..தூ' என்றாள். அதைப் பார்த்துவிட்ட துஷியந்தன் பாய்ந்தோடி வந்து, 'ஏய்! என்னடி செய்த நீ?' என்று கேட்டுக்கொண்டே அவளை அடிக்கக் கையை ஓங்கினான். ஓங்கிய கையை தடுத்துப் பிடித்த மாலதி, அதனை உதறித் தள்ளிய வேகத்தில் அவன் நிலை குலைந்துபோனான்.

'என்ன அடிக்க வாறீங்களா? பெம்பிளைய அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களா?' என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் மின்னலென அவ்விடத்தை விட்டகன்று தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் கையை அவள் உதறித்தள்ளிய வேகத்தில் ஓர் ஆணுக்கு இருக்கக்கூடிய பலம் இருப்பதை உணர்ந்துகொண்ட துஷியந்தனுக்கு, 'பெம்பிளையை அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களோ?' என்ற கேள்வி பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கணையாக நெஞ்சில் பாய்ந்து, அவனின் உடற்பலத்தையும், மனப்பலத்தையும் ஒரே கணத்தில் உறிஞ்சிக் குடித்தது.

அடுத்தடுத்த நாட்களில் வீட்டுக்கு முன்னால் வாடகைக் கார் வந்து நிற்பதும், மாலதி ஏறிப் போவதும், பின்னர் வாடகைக் காரிலேயே அவள் வந்து இறங்குவதும் எல்லோருக்கும் பதற்றத்தைக் கொடுத்தது. எங்கே போகிறாய் என்று கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை. துஷியந்தன் ஒரு தடவை கேட்டான். 'மாலதி..என்ன நீ உன் பாட்டுக்கு எங்கேயோ போறாய்.. வாறாய்.. அதுவும் டாக்ஷியில...?' அவள் சொன்ன பதில் அவனைத் திக்கமுக்காடச் செய்துவிட்டது. ' பயப்பிடாதீங்க.. உங்கட அக்கா நினைக்கிற மாதிரி நான் ஆம்பிளை தேடிப் போகேல்ல.' துஷியந்தன் மௌனமானான்.

அதற்கு முதல் நாள் துஷியந்தனின் அம்மா. அப்பா, அக்கா கௌரி, கொளரியின் கணவர் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து மாலதியைக் குறை சொல்லி குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்தது துஷியந்தனுக்குத் தெரியும். தாங்கள் செய்த தவறை மறைத்து, மாலதியைப் பற்றிக் கண்டவிதமாகப் பேசினார்கள்.

'இப்ப என்ன நடந்த போச்சுதெண்டு இப்பிடிக் குதிக்கிறாள்.'

'உலகத்தில நடக்காத ஒண்டா? கலியாணம் நடந்த பிறகு ஒரு விபத்தோ. நோயோ வந்து புருஷனுக்கு ஏலாமல் போனால் என்ன செய்யுறது..எத்தினை குடும்பத்தில அப்பிடியெல்லாம் நடந்திருக்குது?'
 
'அவளுக்குத் திமிர்.'

'போயும் போயும் இப்படி ஒருத்திய எங்கயிருந்து அப்பா கண்டு பிடிச்சீங்க?'

இப்படியெல்லாம் மாலதிக்குக் கேட்கக்கூடியதாக அவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைத் தனது அறைக்குள் இருந்து மாலதி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தன்னை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்துவதற்காகத் திட்டமிட்டே இப்படி நடக்கிறது என்பதை மாலதி உணர்ந்து கொண்டாள். கோபத்தை அடக்கி மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அப்போது, கௌரிசொன்ன வார்த்தைகள் அவளைக் கொந்தளித்தெழத் தூண்டின. ஆனாலும் மிகவும் க
ஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டாள்.

'அவுஸ்திரேலியா வாழ்க்கை கிடைச்சது அதிஷ்டம் எண்டு நினைக்காமல் ஆம்பிளைச் சுகத்துக்கு அலையுறாள்...இவளெல்லாம் ஒரு பொம்பிளையா...? என்று கௌரி கக்கிய வார்த்தைகள் வெகுநேரத்திற்கு மாலதியின் மனதை எரித்துக்கொண்டிருந்தன. 'அஞ்சு வயதுப் பிள்ளையை தன்ர தாயோட விட்டுப்போட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவிரவா நைற் கிளப்பில கூத்தடிக்கிற கௌரி என்னையா ஆம்பிளைச் சுகத்துக்கு அலைபவள் என்று சொல்கிறாள்' என்று நெஞ்சுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அந்த வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. ஆத்திரம், துக்கம் எல்லாம் அழுகையாக வெடித்தது. நீண்டநேரம் அழுது தீர்த்தபின்னர் அவள் நிதானமானாள்.

எல்லோரும் சேர்ந்து தன்வாழ்வைப் பாழாக்கிவிட்டு இப்போது தன்னையே குற்றவாளியாக்கிக் கதைக்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் படிப்பிப்பதை விடத் தன்வாழ்வை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று தீர்மானித்தாள். அதன் விளைவாகத்தான் அவள் அடிக்கடி வெளியே சென்றாள். யாருக்கும் தெரியாமல் தன் பயண ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அந்தநேரத்தில்தான் துஷியந்தனின் கேள்விக்கு அப்படியொரு சூடான பதில் அவளிடமிருந்து வெளிப்பட்டது. முதல்நாள் தமக்கை கூறிய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாயிருந்த துஷ்யந்தனின் குற்றமுள்ள நெஞ்சுக்கு மாலதியின் பதிலுக்கும் மௌனமாவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

*******************************
பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் எழுந்து பரபரப்போடு தமது உடமைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். அறிவித்தல் பலகையில் மாலதி செல்லும் கொழும்பு விமானம் பயணிகளை ஏற்றுவதாக அறிவிக்கும் குறிப்பு வந்து விழுகின்றது. அவர்களும் அதே விமானத்தில் பயணிப்பவர்களாக இருக்க வேண்டும். மாலதி எழுந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவளது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு உட்புகவேண்டிய நுழைவாயிலை நோக்கி நடக்கிறாள். அங்கே பாதுகாப்புச் சோதனைகள் முடிவடைந்து விமானத்தினுள் சென்றதும் விமானப் பணிப்பெண் அவளுக்குரிய இருக்கை அமைந்துள்ள பகுதியைச் சுட்டிக்காட்டுகிறாள். மாலதி தன் இருக்கையில் அமர்ந்து, தனது கைப்பையினுள் இருந்து ஒருதாளை எடுத்தாள். அது அவள் துஷியந்தனுக்கு முகவரியிட்டு, மெல்பேண் விமான நிலையத்தில் இருந்த தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுவந்த கடிதத்தின் பிரதி. அமைதியாக அதை வாசித்துப்பார்க்கிறாள்.


துஷியந்தனுக்கும் குடும்பத்தாருக்கும் வணக்கம்.
துஷியந்தனுக்கு என்ன நோய் என்று தெரிந்திருந்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழடிக்க நினைத்த உங்களையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்தால் பார்த்துக்கொள்ளட்டும். எனது வாழ்க்கையை நான் தீர்மானித்துக்கொள்வேன். நான் கொழும்பிற்கு எனது பெற்றோரிடம் செல்கிறேன்.
யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று நீங்கள் ஊரெல்லாம் பறையடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்கள் பாவச் சுமையை மேலும் கூட்டுமேயன்றி என்னைப் பாதிக்காது.

இறுதியாக துஷியந்தனுக்கு சில வார்த்தைகள். அவுஸ்திரேலியச் சட்டப்படி என்னை விவாகரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உங்கள் பாவங்களில் சிறுபகுதியையாவது கழுவிக்கொள்ளப் பாருங்கள். நீங்கள் அதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் இன்னும் ஒரு திருமணம் செய்யத்தான் போகிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எனது பெற்றோர் இறுதிக்காலத்திலும் அப்படியே வாழவேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்வேன். எவ்வளவோ நல்லவர்கள் உத்தமர்கள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள். அவர்களில் என் கதை முழுவதையும் கேட்டு என்னைத்திருமணம் செய்துகொள்ளும் ஒருவருடன் நான் சந்தோஷமாக வாழ்வேன். ஒருவகையில், உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவுஸ்திரேலிவுக்கு நான் வரும்போது இருந்ததுபோலவே என்னைத் திரும்பிச் செல்ல வைத்திருக்கிறீர்கள். இன்னும் கன்னியாகவே நான் இருப்பது உங்களால்தானே. அந்த நன்றிக்கடனுக்காக, உங்களுக்குக் கொடுத்த சீதனப்பணம், வெள்ளவத்தை வீடு எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் திருப்பித்தரத் தேவையில்லை. உங்கள் வைத்தியச் செலவுக்குப் பயன்படுத்துங்கள். நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ இனிமேலும் யாரையும் ஏமாற்றாதீர்கள்.

இப்படிக்கு
மாலதி
வாசித்து முடிந்ததும் மெல்லியதொரு நிம்மதிப் பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகின்றது. கடிதப் பிரதியை மடித்து மீண்டும் தன் கைப்பைக்குள் வைக்கிறாள். இருபது நிமிடங்களில் விமானம் தரையோட்டத்தைத் தொடர்ந்து மெல்ல எழும்பிக் கொழும்பைநோக்கிப் பறக்கின்றது.
(யாவும் கற்பனை)

The Majestic Lofoten Islands in Norway. Photo by Daniel Korzhonov.

Thursday, April 17, 2014

Scientists generate solar power in the dark

ScienceAlert Staff      
Molecules known as photos witches can absorb energy from the sun, store it and release it on demand, and researchers have devised a way to use them in domestic environments.

Image: NASA
When exposed to the sun, photoswitches absorb energy that is stable for long periods. To liberate the energy, all you have to do is expose the molecules to a very small amount of light, heat or electricity, explained Todd Woody at The Atlantic. The challenge, however, is to use photoswitches to make technology that releases energy on demand and can be easily installed in houses or offices. 
Researchers used a chemical compound known as azobenzene and carbon nanotubes to generate solar power from photoswitches, and they succeeded in producing molecular solar storage technology that can be used at night to produce electricity. Commercialisation is now the big question. 
Timothy Kurcharski, lead author of the study published in Nature Chemistry, told The Atlantic that the technology could be used in developing nations and will most likely be stored in liquid form, as it would be easy to transport.
The users will need to store the liquid in a tank that is near a window to make sure the molecules receive energy from the sun, and then the charged liquid would need to be transported to a storage tank, where it will remain until needed. 
“For solar cooking, one would leave the device out in the sun during the day,” Kucharski explained. “One design we have for such an application is purely gravity driven – the material flows from one tank to another. The flow rate is restricted so that it's exposed to the sun long enough that it gets fully charged. Then, when it's time to cook dinner, after the sun is down, the flow direction is reversed, again driven by gravity, and the opposite side of the setup is used as the cooking surface… As the material flows back to the first tank, it passes by an immobilized catalyst which triggers the energy-releasing process, heating the cooking surface up.”
So yes, solar power in the dark is now a reality. Thank you, science!
Source: The Atlantic

கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை


இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது
மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.
யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.
தொலைத்துவிட்ட பாதை
வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.
புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.
கண்டுபிடிப்புகளின் அடிப்படை
விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.
இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.
சுதந்திரம் ஒருபோதும் அழியாது
நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.
நீங்கள் இயந்திரங்கள் அல்ல
போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.
உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!
கடவுளின் சாம்ராஜ்யம்
17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.
மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.
புதியதோர் உலகைப் படைப்போம்!
அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.
இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!
சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.
அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்!
(ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)
தமிழில்: ஆசை( தி இந்து,16.04.2014)

மகாபாரதப் போரும் தமிழர்களும்!

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.
இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.
தமிழ் மன்னர்கள்:
தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.
இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.
தருமன்:
பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா
மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.
அர்ஜுனன்:
குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.
அருஞ்சுனையன் -----> அர்ஜுனா
பீமன்:
மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.
பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா
அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)
சகாதேவன்:
நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
சகடதேவன் ------> சகாதேவா
வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நகுலன்:
பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
நற்குலன் -----> நகுலா
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.
இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.
போர் நடந்த இடம்:
இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.
போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.
ஆதாரங்கள்:
மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.
மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.
அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
- புறநானூறு - 2
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
- பெரும்பாணாற்றுப்படை - 415-417
நன்றி - பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)
மகாபாரதப் போரும் தமிழர்களும்!

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:
நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417

நன்றி - பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)

தீரன் சின்னமலை



தீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது.
மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரத்ருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

Conversion disorder (Functional Neurological Symptom Disorder)

1. Conversion disorder and its prevalence
Conversion a term was firstly used by Freud. Conversion disorder (Functional Neurological Symptom Disorder) is a disorder of the brain accompanied by emotions disordered. 25% of patients in a general medical setting have individual symptoms of conversion disorder in their lives and around 5% of referrals to neurology clinics. Conversion symptoms are mostly observed in Females.
2. Causes of conversion disorder (Etiology)
Strict social systems due to lack of direct expression of feelings and emotions with others, impairment of cortical and subcortical functioning is associated with conversion disorder. Relationship found between conversion disorder and psychological issues, conversion disorder have a high frequency of co-morbid anxiety and depressive symptoms. Convergence disorder symptoms also report in childhood physical/sexual abuse patients. Psychosocial stressors, low educational level, rural background and low socioeconomic status have been associated with conversion disorder
3. Sign-symptoms of conversion disorder
Conversion disorder affects voluntary motors and special sensory functions.
• Sensory symptoms
Diplopia, blindness, deafness, numbness, anosmia, ageusia
• Motor symptoms
Paralysis, dysphasia, ataxia, tremor, seizures, facial weakness
4. Conversion disorder treatment
Conversion disorder treatment emphasize on multidisciplinary treatment approach such as:
• Cognitive behavior therapy
• Psychodynamic therapy
• Behavioral therapy
• Transcranial magnetic stimulation
• Electromyographic biofeedback
• Neurofeedback Therapy

Aanandha yaazhai - Lyrical video in tamil

தூரத்திலிருக்கும் நிலவில் நீயும் நானும்

கண்ணில்பட முடியாத தூரத்திலிருந்துகொண்டு உனை நினைத்து உருகிக்கொண்டிருக்கிறேன் உருகியோடும் பனிக்காலத்தின்
குளிர்ந்த நீரோடையின் நடுக்கங்களுடன்
பனிக்கூழ் போர்த்திய மரங்களில் காற்றின் சலசலப்பைக்கூட கேட்கமுடியாத காலத்தில் உன் குரலின் வழியாய்
வெப்பக்காற்றினை நுகர்ந்து சுகம் காண்கிறேன்
தீர்ந்துவிடாதா உன் தனிமை என்றிருக்கும் உனக்கு 
அவ்வப்போது எங்கிருந்தோ கத்தும் பறவையில்
உன் முன் இல்லாதிருக்கும் என்னைக் கண்டுகொள்கிறாய்
அமைதிகூடிய உன் தனித்த பெருவெளியில் நானென்பதின் புனைவில் நீ உயிர்த்திருப்பதை அறிந்து எதுவும் செய்யவியலா
அபலையாக அல்லல் படுகிறேன்
கோடையும் பனியுமாய் மாறும் பருவங்களில் நம் புலம்பல்கள் எவருக்கும் கேட்கா வண்ணம் தீர்க்கப்படாமலேயே மடிகின்றன
துளிர்த்து உயிர்த்து பூக்கும் மரங்களில் நானும் நீயும் அருகருகே
பூத்துப் பழுக்கும் காலங்கள் உண்டாவதற்கு
என் சொற்களில் பிரார்த்தனை செய்கின்றேன்
தூரத்திலிருக்கும் நிலவில் நீயும் நானும்
வெவ்வேறு திசைகளில் அமர்ந்து
புனைந்து ரசிப்பதாய் உன்னை இந்தப் பொழுதில்
திருப்தியுறச் செய்கிறேன்
என்னருகில் மரங்கள் வெயிலில் காய்ந்து
பழுத்த வெடிக்கும் உன் ஞாபகங்களை
உதிர்ப்பதாய் கலங்கி உதிர்கிறேன்
சருகுகளின் சரசரப்புகளினூடே
வெற்று வானத்தின் கீழ் வாழ நிர்பந்திக்கின்ற பொழுதுகளில்.Iyyappa Madhavan
கண்ணில்பட முடியாத தூரத்திலிருந்துகொண்டு உனை நினைத்து உருகிக்கொண்டிருக்கிறேன் உருகியோடும் பனிக்காலத்தின் 
குளிர்ந்த நீரோடையின் நடுக்கங்களுடன்
பனிக்கூழ் போர்த்திய மரங்களில் காற்றின் சலசலப்பைக்கூட கேட்கமுடியாத காலத்தில் உன் குரலின் வழியாய் 
வெப்பக்காற்றினை நுகர்ந்து சுகம் காண்கிறேன்
தீர்ந்துவிடாதா உன் தனிமை என்றிருக்கும் உனக்கு 
அவ்வப்போது எங்கிருந்தோ கத்தும் பறவையில் 
உன் முன் இல்லாதிருக்கும் என்னைக் கண்டுகொள்கிறாய்
அமைதிகூடிய உன் தனித்த பெருவெளியில் நானென்பதின் புனைவில் நீ உயிர்த்திருப்பதை அறிந்து எதுவும் செய்யவியலா 
அபலையாக அல்லல் படுகிறேன்

கோடையும் பனியுமாய் மாறும் பருவங்களில் நம் புலம்பல்கள் எவருக்கும் கேட்கா வண்ணம் தீர்க்கப்படாமலேயே மடிகின்றன
துளிர்த்து உயிர்த்து பூக்கும் மரங்களில் நானும் நீயும் அருகருகே 
பூத்துப் பழுக்கும் காலங்கள் உண்டாவதற்கு 
என் சொற்களில் பிரார்த்தனை செய்கின்றேன்

தூரத்திலிருக்கும் நிலவில் நீயும் நானும் 
வெவ்வேறு திசைகளில் அமர்ந்து 
புனைந்து ரசிப்பதாய் உன்னை இந்தப் பொழுதில் 
திருப்தியுறச் செய்கிறேன்
என்னருகில் மரங்கள் வெயிலில் காய்ந்து 
பழுத்த வெடிக்கும் உன் ஞாபகங்களை
உதிர்ப்பதாய் கலங்கி உதிர்கிறேன் 
சருகுகளின் சரசரப்புகளினூடே
வெற்று வானத்தின் கீழ் வாழ நிர்பந்திக்கின்ற பொழுதுகளில்.

கூகுள் கண்ணாடி (Google Glass):

கூகுள் கண்ணாடி (Google Glass):
அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட கூகுள் கண்ணாடிகள்-இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.
தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஉலகில் அறிவியலில். புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது.
அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம். இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.
by
V Nadarajan Vnrcud with Collections (தொகுப்புகள்)
கூகுள் கண்ணாடி (Google Glass):

அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட கூகுள் கண்ணாடிகள்-இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.

தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஉலகில் அறிவியலில். புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது.

        அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

      தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம். இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.

by

V Nadarajan Vnrcud with Collections (தொகுப்புகள்)

Wednesday, April 16, 2014

ரேடியோப்பெட்டி

அகில்

















அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தேன். மாலதி சாப்பாடு பரிமாறிவிட்டு, குழந்தைக்கு பம்பஸ் மாத்தவென்று உள்ளே புகுந்தவள் இன்னும் வெளியே வரவில்லை. அவள் மணக்க மணக்க சமைத்திருந்த மட்டன்கறியைச் சாப்பிட்டது, நெஞ்சுக்குளிக்குள் பந்தை இறுகிக்கியது போல ஒரு அமுக்க உணர்வு.

என்னதான் இருந்தாலும் மாதம் ஒருக்காவாவது மட்டன் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது.

''ஏப்ப்......''

என்னையும் மீறிக்கொண்டு கொஞ்சம் சத்தமாகவே ஏப்பம் ஒன்று வெளிப்பட்டது.

''ஏப்ப்ப்......'' மறுபடியும்.

மாலை ஆறுமணி என்று சொல்ல முடியாமல் யன்னல் கண்ணாடிகளில் சூரிய ஒளிபட்டு கண்களைக் கூசச் செய்தது. வெளியில் வெய்யில் அடித்தாலும் வீட்டுக்குள் லேசாகக் குளிர்ந்தது. மெல்லிய சேர்ட் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு விறாந்தைக்கு வந்தேன். என் கைகள் இயல்பாக ரிமோட்டைத் தேடி பட்டனை அழுத்த தொலைக்காட்சி உயிர்பெற்றது.

''அப்பாடி.....'' என்றபடி சோபாவில் அமர்ந்து, கோப்பி டேபிளில் கால்களைத் தூக்கிப் போட்டதுதான் தாமதம். தொலைபேசி மணி கிணுகிணுத்தது. அலுத்துக்கொண்டே ரிசீவரைத் தூக்கி காதில் பொருத்தினேன்.

மறுமுனையில் பூரணம் மாமி.

''தம்பி எப்பிடி இருக்குறீங்க?''

பூரணம் மாமி ஏதாவது அலுவல் இல்லாமல் எனக்கு போன் எடுக்கமாட்டா.
''இருக்கிறன். சொல்லுங்க மாமி.......''

மாமி நேரடியாக விசயத்துக்கு வந்தா.

''தம்பி நான் ஒருக்கா ரேடியோக் கடைக்கு போக வேணும். என்ர ரேடியோ இன்றைக்கு விடிஞ்சதில இ;ருந்து வேலசெய்யுதில்ல. திருத்தவேணும்..... குறைநினைக்காமல்.... ஒருக்கா வர ஏலுமே தம்பி......''

''சரி மாமி. நீங்க வெளிக்கிடுங்க. நான் இறங்கேக்க அடிக்கிறன். கீழ் புளோருக்கு வாங்க..'' என்றபடி ரிசீவரை வைத்தேன். எதிரே முகத்தில் சிடுசிடுப்புடன் மாலதி நின்றுகொண்டிருந்தாள்.

அவள் விசயத்தை ஊகித்திருப்பாள் போல.

''என்னப்பா வரட்டாமோ....'' ஏளனமாக அவள் வார்த்தைகள் உதிர்ந்தன. வந்து என்னருகில் அமர்ந்துகொண்டாள்.
'ஓம். பாவம் மனுசி. தனிய இருக்கிறது. கூப்பிடுறா ஒருக்கா போயிற்றுவாறன். இப்பிடிப்பட்டவைக்கு உதவி செய்தால் எங்களுக்குப் புண்ணியம் தானே..' என்றேன்.

மாலதியை ஏதாவது சொல்லி தேற்ற வேண்டும் . இல்லாவிட்டால் அவள் புறுபுறுக்கத் தொடங்கிவிடுவாள்.

வேலைக்குப் போய் விட்டு வீட்டுக்கு வந்தால் குறைந்தது இரண்டு மணித்தியாலமாவது ஓய்வு எடுத்துவிட்டுத்தான் மறுவேலை செய்வேன். ஆனால் பூரணம் மாமி விசயத்தில மட்டும் நான் விதிவிலக்கு.

ஊரில பூரணம் மாமி எங்கட வீட்டுக்கு பக்கத்து வீடுதான். அதோட எனக்கு அப்பாவின்ர வழியில தூரத்து சொந்தம் வேற.

நான்.... விசாகன், வனஜா, கிருபாகரன்..........

நாங்கள் எல்லாரும் ஒருதாய் பிள்ளையள் போலத்தான் பழகுவோம். பூரணம் மாமி வீட்டபோனால் அவா என்னைச் சாப்பிடாமல் போகவே விடமாட்டா. அம்மாவின்ட சமையலை விடவும் பூரணம் மாமிதான் நல்லாச் சமைப்பா. அங்க குழம்பு கொதிக்கிற வாசனையைப் பிடிச்சே எனக்கு பசி வந்திரும். ஏதாவது சாட்டுச் சொல்லிவிட்டு பூரணம் மாமி வீட்டுக்கு ஓடீருவன்.

இரவு, பகல் எந்தநேரமும் நான் அங்கதான்.

வனஜா அக்கா எனக்கும், கிருபாவுக்கும் கணக்குப் பாடமும், விஞ்ஞானமும் சொல்லித்தருவா. படிச்சுக்கொண்டு இருக்கேக்க பூரணம் மாமி தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்து தருவா. அதோட பனங்காப் பணியாரமோ, முறுக்கோ, வடையோ ஏதாவது ஒன்டு இருக்கும். அதுக்காகவே நான் நாள்தவறாமல் படிக்கப்போவன்.

வளர்ந்த பிறகும் மனுசி என்னை தன்ர பிள்ளையளைக் கவனிக்கிற மாதிரிதான் கவனிச்சா.

நாங்கள் அளவெட்டியில இருந்து இடம்பெயர்ந்த பிறகு அவை யாழ்ப்பாணத்தில சொந்தக்காரர் வீட்ட இருந்தவை. நாங்க எங்களுக்குத் தெரிஞ்ச ஆட்கள் கோண்டாவில்ல இருந்தவை. அவையளோட தங்கீட்டம். அப்பவும் ஏ. லெவல் படிக்க யாழ்ப்பாணத்துக்கு டியுசனுக்கு வரேக்க கிருபா தன்னோட என்னையும் வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போவான். அங்கதான் சனி, ஞாயிற்றுக்கிழமையல்ல மத்தியானச் சாப்பாடு.

அவ்வளவு கஸ்டத்திலயும் மனுசி முகம்கோணாமல் எனக்கும் சாப்பாடு தரும்.

இடம்பெயர்ந்த நேரம் வீட்டில ஷெல் விழுந்தப்போ அப்பாவும் இறந்ததினால எங்களுக்குக் கொஞ்சம் கஸ்டம்தான். சில நேரங்களில டியூசன் காசு கட்டவும் வசதியிருக்காது. பூரணம் மாமி இரண்டொரு தடைவ எனக்கு டியூசன் பீஸ் கட்ட காசு தந்திருக்கிறா.

பழைய நினைவுகளுடன் பூரணம் மாமியை ஏற்றிக்கொண்டு என் கார் ரேடியோக் கடையை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

எனக்கு வலப்புறமாக அமர்ந்திருந்த பூரணம் மாமி ஒரு குழந்தையை அணைத்திருப்பது போல ரேடியோவை மடியில் வைத்திருந்தார். என் முகத்தில் லேசாக புன்னகை அரும்பியது.

'வயது போகப் போக பூரணம் மாமி குழந்தையாகவே மாறிவிட்டா'

''அதைத் தாங்களென் மாமி. பின் சீட்டில வைக்கிறன்'' என்றபடி ரேடியோவுக்காக கையை நீட்டினேன்.

'வேண்டாம் தம்பி நான் வைச்சிருக்கிறன்' என்றபடி முன்னிலும் அதிகமாக ரேடியோவை அணைத்துக்கொண்டா.

ஒரு பிள்ளையை வருடுவது போல அந்த ரேடியோவைத் தன் மெல்லிய விரல்களால் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தா.

''தனிய இருக்கிற மனுசிக்கு இந்த ரேடியோ தானே பொழுதுபோக்கு.....'' என்னுள் நினைத்துக்கொண்டேன்.

பூரணம் மாமியின் முகத்தில் ஏதோ ஒருவித சோகம் அப்பிக்கிடந்தது....!

பாவம் அவவும். மூன்று பிள்ளைகளை  கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்தும் இன்டைக்கு ஆரும் இல்லாத அனாதை போல தனியக் கிடந்து கஸ்டப்படுகிறா.

கார் ரேடியோ கடை இருக்கும் பக்கமாக வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது.

பூரணம் மாமியின்ர மூன்று பிள்ளையளும் கனடாவிலதான் இருக்கீனம். ஆனால் அவையளுக்கு தாயைக் கவனிக்க நேரமில்ல.

திருமணம் முடிந்துக் கொடுத்த பின்னர் பெத்த பிள்ளைகள் எல்லாம் மூன்றாம் மனிதர்களாகிப் போனார்கள். அவர்களும், அவர்களது தேவைகளுமே பிள்ளைகளுக்குப் பெரிதாகப் பட்டது. பெற்றவர்களைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் போதவில்லை. கடைசி மகன் கிருபாவுடன் அவர்களால் தொடர்ந்து வசிக்கமுடியவில்லை. அவ்வப்போது வீட்டுக்கு காவலாளியாகவும், பிள்ளைகளை பராமரிக்கும் ஆயாவாகவும் மட்டுமே அவர்களுக்கு பெற்றோர் பயன்பட்டனர்.

அங்கிளால் பொறுக்கமுடியவில்லை.

அதுவும் அவர் ஆஸ்துமா வந்து இழுத்துக்கொண்டு கிடக்கும்போதும், பூரணம் மாமி காய்ச்சல் வந்து இருமி, வாந்தியெடுக்கும்போதும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் அவர்களை வேண்டாப் பொருளாகவே பார்த்தனர்.

''பிள்ளைகளுக்கு எங்களால எந்த இடைஞ்சலும் வரக்கூடாது'' என்றபடி அவர்கள் மனங்கோணாமல் அங்கிள் பூரணம் மாமியையும் கூட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் வந்துவிட்டார்.

பெற்றோர்கள் தாங்களாகவே விலகிக்கொண்டதில் பிள்ளைகளுக்கும் திருப்திதான்.

எப்போதாவது பெற்றோரின் நினைவு வரும்போது வந்து பார்த்துவிட்டு போவதோடு அவர்கள் உறவு முடிந்துவிடும்.

அங்கிள் இருக்கும் வரை பூரணம் மாமிக்கு தனிமை பெரிதாகத் தெரியவில்லை. போன வருஷம்தான் அங்கிள் திடீரென்று நெஞ்சை வலிக்கிறதென்று படுக்கையில் சாய்ந்தவர் அந்த சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்துவிட்டது.

தகப்பனின் காரியங்கள் முடிந்தபிற்பாடு பிள்ளைகள் அடியோடு தாயை மறந்துவிட்டார்கள். பூரணம் மாமியும் திடீரென்று பத்துவருடங்களைக் கடந்து விட்டவா போல தளர்ந்துபோனா.

வயதின் முதிர்ச்சியை விட, பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட தனிமை வாழ்வே அவவை இன்னும் ஒடுக்கி விட்டது.

நானும் கிருபாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். இப்போதெல்லாம் அவன் என்னைக் கண்டாலே ஓடி ஒளித்துக்கொள்கிறான்.

ஏதோ என்னால் முடிந்தது என்று அப்பப்போ பூரணம் மாமி கூப்பிடும் குரலுக்கு உதவியாய் இருக்கிறன்.

ஒரு மணி நேரமாகியும் ரேடியோ திருத்திய பாடில்லை. கடைக்காரர் எவ்வளவோ சொல்லியும் பூரணம் மாமியும் கேட்பதாக இல்லை.

''அம்மா இந்த ரேடியோ பழசாய் போட்டுது. திருத்துறது கஸ்டம். பேசாமல் புதுசா ஒரு ரேடியோ  வாங்குங்களேன்'' என்ற கடைக்காரரைக் கெஞ்சுவது போல பார்த்தாள் பூரணம் மாமி.

''இல்லத் தம்பி. இந்த ரேடியோவை எப்பிடியாவது திருத்தித் தாங்க. இது அவ்வளவு பழைய ரேடியோ இல்ல. இப்பத்தான் வாங்கி ஒரு வருஷமாகுது''

''அம்மா போன வருஷம் திருத்த வரேக்கயும் இதையேதான் சொன்னீங்க'' என்று கடைக்காரர் சொன்னது காதில் விழாதவள் போல தலையைத் திருப்பிக்கொண்டாள்.

''வேற கடையில குடுத்திருக்கலாம் தம்பி...'' என்னருகே வந்து காதில் கிசுகிசுத்தாள்.

''இல்ல மாமி. அவர் சொல்லுறது உண்மைதான். உதைத் திருத்திற காசுக்கு வேற புது ரேடியோவே வாங்கீறலாம். அதுவும் அவர் திருத்த ஏலாது என்டு புறுபுறுத்துக்கொண்டு இருக்கிறார்.''

நான் இரண்டாவது தடவையாக சொல்லிவிட்டேன் மாமியும் அசைவதாக இல்லை. எனக்கு எரிச்சலாக வந்தது.

''பழைய ரேடியோவைத் தூக்கி எறிஞ்சுட்டு ஒரு புது ரேடியோ வாங்கக் கூடாதா?...... பென்சன் காசு நல்லா வருகுதுதானே. கிருபா சொல்லுறதும் சரி போலத்தான் இருக்கிறது. வயது போகப் போக மனுசிக்கு பிடிவாதமும் கூடிக்கொண்டு போகுது. மனுசி இனி காசை மிச்சம் பிடிச்சு ஆருக்குக் குடுக்கப் போகுதோ......''

என் சிந்தனையைக் கலைத்தது மாமியின் கனிவான குரல்.

''தம்பி நீங்கள் அந்த ரிம்கொட்டனில ஏதாவது சாப்பிட்டுட்டு, கோப்பி குடிச்சுட்டு வாங்களேன். அதுக்கிடையில அவர் ரேடியோவை திருத்தீருவார்.''

''பூரணம் மாமி என்ர முகத்தில இருந்து என் மனநிலையை ஊகித்திருப்பாவோ''

சங்கடத்துடன் மேவாயைத் தடவினேன்.

''மாமி உங்களுக்கு ஏதாவது......''

''எனக்கு ஒன்டும் வேண்டாம் தம்பி. இந்த ரேடியோ பாடும்வரைக்கும் என்ர வாயில பச்சைத் தண்ணியும் படாது'' ஏதோ விரதம் பூண்டவள் போல பூரணம் மாமி சொன்னது மேலும் எரிச்சலைத்தர எழுந்து ரிம்கொட்டனை நோக்கி நடந்தேன்.

நான் திரும்பி வந்தபோது பூரணம் மாமி ஒரு ஓரமாகக் கிடந்த கதிரையில் அமர்ந்து நிலத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தா. கடைக்காரர் என்னைக் கண்டதும் புன்னகைத்தார். அவர் கைகள் வேறு ஒரு ரேடியோவை சரிபார்த்துக்கொண்டிருந்தன.

''தம்பி நீங்களாவது அந்த அம்மாவுக்கு சொல்லக்கூடாதா. நான் ஏற்கனவே ரெண்டு மூன்று தடைவ இந்த ரேடியோவைத் திருத்திப் போட்டன். போனமுறை அந்த அம்மாட்ட சொன்னனான். இனி உதைத் திருத்த ஏலாது. புதுசா ஒரு ரேடியோவை வாங்குங்கோ.''

எங்கள் சந்தடிகேட்டு பூரணம் மாமி எழுந்து என்னருகில் வந்து விட்டா. எனக்கு அவவைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாக வந்தது.

''வேலைக்களைப்போட பாவம் மனுசியென்டு நான் பார்த்தால்....... மனுசி காசு செலவழிக்க இந்தப் பாடுபடுகுது. இதுக்கு நானே பேசாமல் ஒரு புது ரேடியோவை வாங்கிக் குடுத்திடலாம் போல இருக்குது''.

'மாமி இந்த பழைய ரேடியோவைத் தூக்கிப்போட்டுட்டு, ஒரு புதுரேடியோவை வாங்குங்களேன். வேணுமென்டால் நானே ஒரு நல்ல ரேடியோவொன்டு உங்களுக்கு வாங்கித்தாறன்'

நான் இப்படிக் கேட்பேன் என்று மாமி கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை போலும். சில நிமிடங்கள் மௌனமாக என் முகத்தை பார்த்தா. பின்னர் புன்னகைத்தபடியே பதில் சொன்னார்.

''நீ போ. உனக்கு என்ன தெரியும் இந்த ரேடியோவைப் பற்றி'' என்ற பூரணம் மாமி, கடைக்காரரைப் பார்த்து,

''தம்பி இந்த ரேடியோவை எப்பிடியென்டாலும் திருத்தித்தாங்க. நான் காசு எவ்வளவு என்டாலும் தாரன்'' என்றாள்.

என்னை அர்த்தபுஷ்டியுடன் பார்த்த கடைக்காரர், ''அம்மா, இப்ப போயிற்று நாளைக்கு வாங்க. நான் நாளைக்கு ஏதாவது திருத்த எலுமா என்று பார்க்கிறன்'' என்றார் கடைக்காரர்.

வழிநெடுக பூரணம் மாமி அமைதியாகவே வந்தா. நானும் அவவை தொல்லைப் படுத்த விரும்பவில்லை. அவவின் குழந்தைதனமான செய்கைக்காக கோபப்படுவதா, சிரிப்பதா என்று எனக்குப் புரியவில்லை.

மறுநாள் காலை நான் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

கேன்போன் தன் அதிர்வலைகளை எழுப்பியது. அப்போதுதான் எனக்கு பூரணம் மாமியின் ஞாபகம் வந்தது. வேலை இடைவேளையின் போது பார்த்தேன். நான்கைந்து மிஸ்கோல்கள். எல்லாம் பூரணம் மாமிதான்.

 ''மாமிக்கு அந்த ரேடியோ இல்லாமல் இருக்கேலாது போல...'' என் உதடுகள் முணுமுணுத்தன.

இப்பவும் அவதான். என்னுள் சிரித்துக்கொண்டேன்.

''மன்னிக்க வேணும் தம்பி உங்களுக்கு கரைச்சல் குடுக்கிறதுக்கு. அந்த ரேடியோவை எனக்கு ஒருக்கா கடையில இருந்து எடுத்துவந்து தாங்க தம்பி. அந்த ரேடியோ இல்லாதது எனக்கு என்னவோ போல இருக்குது. அந்த ரேடியோவை திருத்த ஏலாட்டியும் பரவாயில்ல. அதையொருக்கா வாங்கிக்கொண்டு வந்து தாங்க தம்பி'' என்ற மாமி திரும்பவும் சொல்லத்தொடங்கினா.

''அந்த ரேடியோ எனக்கு வேணும் தம்பி. அது வேலைசெய்யாட்டிலும் பரவாயில்ல. அவர் உயிரோட இருக்கேக்க எனக்கு வாங்கித்தந்த ரேடியோ அது. ரேடியோவை கட்டில் தலைமாட்டில வைச்சு கேட்டுக்கொண்டிருந்தால் அவரே என்ர பக்கத்தில இருந்து பேசுகிறாப்போல ஆறுதலா இருக்கும். எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அதுதான் தம்பி.'' என்றபடி தொடர்பை துண்டித்துவிட்டா மாமி.

அப்போதுதான் மாமியின் தவிப்பின் காரணம் புரிந்தது. என்னுள் இனம்புரியாத வேதனை. வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்த காரை ரேடியோ திருத்தும் கடையை நோக்கித் திருப்பினேன்.

மாமி முதல்நாள் சொன்ன வார்த்தைகள் என் காதில் மறுபடி வந்து ஒலித்தன.

''இந்த ரேடியோ பாடும்வரைக்கும் என்ர வாயில பச்சைத் தண்ணியும் படாது''

மாமியின் குரல் ஈனஸ்வரத்தில் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுந்து ஒலித்த வேதனைக் குரலாகவே அது எனக்குத் தோன்றியது.

என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கடைக்காரர், என் கைகளில் அந்த ரேடியோவைத் திணித்தார்.

''தம்பி இனி இதைத் தூக்கி காபேஜூக்க போட்டுட்டு, அந்த அம்மாவை புதுசா ஒரு ரேடியோ வாங்கச் சொல்லுங்க. மனுசிக்கு எத்தினை தரம் சொன்னாலும் விளங்காது.......''

புறுபுறுத்தார் கடைக்காரர்.

ரேடியோவை அணைத்தபடி என் கால்கள் காரை விட்டு இறங்கின. ஒரு குழந்தையைத் தூக்குவது போல அந்த ரேடியோவை இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டு எலிவேட்டருக்குள் நுளைந்தேன்.

''இந்த ரேடியோ வேலைசெய்யாவிட்டாலும் இது பூரணம் மாமிக்கு எவ்வளவு ஆறுதலைக் கொடுக்கும்'' அந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த சீனியர் கோமில் நான்காவது புளோரின் மூன்றாவது அறைதான் பூரணம் மாமியின் வசந்த மாளிகை.

என் கால்கள் அறையை நெருங்கியதும் தயங்கி நிற்கின்றன. அறைக்கதவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டிருக்க உள்ளேயிருந்து வனஜாவின் விசும்பல் ஒலி மெல்ல எழுகிறது.

என் மனதில் ஒரு செய்தி ஆழமாக உறைக்க, சடார் என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுளைகிறேன்.

பூரணம் மாமி கட்டிலில் சாய்ந்து படுத்தபடி..... கண்கள் விரிந்தபடி...... சொருகிக்கிடந்தன.

''ஐயோ.....'' என் மனம் ஓலமிடுகிறது.

மாமியின் கண்கள் தலைமாட்டுப் பக்கமாகவே சரிந்திருக்கிறது.

''இந்த ரேடியோ பாடும்வரைக்கும் என்ர வாயில பச்சைத் தண்ணியும் படாது'' மாமியின் குரல் மறுபடி என் காதுகளில் வந்து மோதுகிறது.

என் கைகள் நடுங்க ரேடியோவை இறுக அணைத்துக்கொள்கிறேன்.

''கிருபா ஓடிவந்து என் கையைப்; பற்றினான். '' அம்மா எங்கள விட்டுட்டு போயிட்டா'' என்றான் கண்கலங்கியபடி.

விசாகன், வனஜா, கிருபா.......

எல்லோரும் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்கள்.

என்னையும் மறந்து என் விரல்கள் ரேடியோப் பெட்டியின் பட்டனை அழுத்துகின்றன.

ரேடியோப்பெட்டியும் பூரணம் மாமியைப் போலவே அமைதியில் ஆழ்ந்துவிட்டிருந்தது.

பூரணம் மாமியின் தலை மாட்டில் அந்த ரேடியோப் பெட்டியை வைத்துவிட்டு சொருகிப் போயிருந்த பூரணம் மாமியின் கண் இமைகளை மெல்ல அழுத்தி மூடிவிட்டு என் கால்கள் வாசல்ப்பக்கம் விரைகின்றன. ஒரு பெருமூச்சுடன் என் இதயம் வெடித்து கண்ணீர் ததும்ப காரை ஸ்டாட் செய்தேன்.

Study links domestic abuse to mental health problems in new mothers

"Sixty-one percent of the study participants reported symptoms of postpartum mental health problems within the first three months after childbirth. And 47 percent of the 100 women reported symptoms at "clinical" levels, meaning the symptoms were of at least moderate severity.
Eighty-four percent of the participants reported experiencing physical, psychological or sexual abuse at the hands of a partner prior to becoming pregnant. Seventy percent of the 100 participants reported some form of abuse by their romantic partner during pregnancy. These forms of abuse ranged from name-calling to rape and physical assault with a weapon."

Protein researchers closing in on the mystery of schizophrenia


Schizophrenia is a severe disease for which there is still no effective medical treatment. In an attempt to understand exactly what happens in the brain of schizophrenic people, researchers from the University of Southern Denmark have analysed proteins in the brains of rats that have been given hallucinogenic drugs. This may pave the way for new and better medicines.
Seven per cent of the adult population suffer from schizophrenia, and although scientists have tried for centuries to understand the disease, they still do not know what causes the disease or which physiological changes it causes in the body. Doctors cannot make the diagnosis by looking for specific physiological changes in the patient's blood or tissue, but have to diagnose from behavioral symptoms.
In an attempt to find the physiological signature of schizophrenia, researchers from the University of Southern Denmark have conducted tests on rats, and they now believe that the signature lies in some specific, measurable proteins. Knowing these proteins and comparing their behaviour to proteins in the brains of not-schizophrenic people may make it possible to develop more effective drugs.
It is extremely difficult to study brain activity in schizophrenic people, which is why researchers often use animal models in their strive to understand the mysteries of the schizophrenic brain. Rat brains resemble human brains in so many ways that studying them makes sense if one wants to learn more about the human brain.

Schizophrenic symptoms in rats

The strong hallucinogenic drug phenocyclidine (PCP), also known as "angel's dust", provides a range of symptoms in people which are very similar to schizophrenia.
“When we give PCP to rats, the rats become valuable study objects for schizophrenia researchers,” explains Ole Nørregaard Jensen, professor and head of the Department of Biochemistry and Molecular Biology.
Along with Pawel Palmowski, Adelina Rogowska-Wrzesinska and others, he is the author of a scientific paper about the discovery, published in the international Journal of Proteome Research.
Among the symptoms and reactions that can be observed in both humans and rats are changes in movement and reduced cognitive functions such as impaired memory, attention and learning ability.
"Scientists have studied PCP rats for decades, but until now no one really knew what was going on in the rat brains at the molecular level. We now present what we believe to be the largest proteomics data set to date," says Ole Nørregaard Jensen.
PCP is absorbed very quickly by the brain, and it only stays in the brain for a few hours. Therefore, it was important for researchers to examine the rats' brain cells soon after the rats were injected with the hallucinogenic drug.
"We could see changes in the proteins in the brain already after 15 minutes. And after 240 minutes, it was almost over," says Ole Nørregaard Jensen.
The University of Southern Denmark holds some of the world's most advanced equipment for studying proteins, and Ole Nørregaard Jensen and his colleagues used the university's so-called mass spectrometres for their protein studies.

352 proteins cause brain changes

"We found 2604 proteins, and in 352 of them, we saw changes that can be associated with the PCP injections. These 352 proteins will be extremely interesting to study in closer detail to see if they also alter in people with schizophrenia - and if that's the case, it will of course be interesting to try to develop a drug that can prevent the protein changes that lead to schizophrenia," says Ole Nørregaard Jensen about the discovery and the work that now lies ahead.
The 352 proteins in rat brains responded immediately when the animals were exposed to PCP. Roughly speaking, the drug made proteins turn on or off when they should not turn on and off. This started a chain reaction of other disturbances in the molecular network around the proteins, such as changes in metabolism and calcium balance.
"These 352 proteins are what causes the rats to change their behaviour - and the events are probably comparable to the devastating changes in a schizophrenic brain," explains Ole Nørregaard Jensen.
The protocol for studying rat brain proteins with mass spectrometry, developed by Ole Nørregaard Jensen and his colleagues, is not limited to schizophrenia studies - it can also be used to explore other diseases.
The research was a collaboration between the University of Southern Denmark, the Danish Technological Institute and NeuroSearch A/S.
Details about the experiment
Twelve rats were used for the experiment. Six received an injection with the hallucinogenic drug PCP (10 mg/kg body weight), and six were injected with a saline solution to serve as controls. After 15 minutes, the first two animals in each group were killed and within less than two minutes, samples of their brains (temporal lobes) were taken and quickly frozen in liquid nitrogen.
After 30 and 240 minutes, respectively, the same was done to other rats. All experiments were conducted in accordance with Danish and EU guides for the handling of laboratory animals. The collected tissue samples were then subjected to various mass spectrometric protein analyses. The analyses revealed differences in the phosphorylation of proteins indicating which proteins had been affected by the drug PCP.
Interpretation of the complex protein data set suggest that PCP affects a number of processes in brain cells and leads to changes in calcium balance in the brain cells, changes in the transport of substances into and out of cells, changes in cell metabolism and changes in the structure of the cell's internal skeleton, the cytoskeleton.
Contact Professot Ole Nørregaard Jensen, Head of the Department of Biochemistry and Molecular Biology. Tel. +45 6011 2368
This research was supported by the Villum Foundation and the Danish Ministry of Higher Education and Science (Grant No. 08-034107, Innovation Consortium "New drugs").
Ref: Acute Phencyclidine Treatment Induces Extensive and Distinct Protein Phosphorylation in Rat Frontal Cortex.Palmowski P, Rogowska-Wrzesinska A, Williamson J, Beck HC, Mikkelsen JD, Hansen HH, Jensen ON. J Proteome Res. 2014 Feb 24.
thanks http://sdu.dk/