Search This Blog

Monday, March 31, 2014

எனக்கான வெளி

லறீனா அப்துல் ஹக்








என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள் உடன்படவில்லை. போகும் போது மன்றாட்டமாய் அவள் குரல், 'கட்டாயம் வீட்டுக்கு வா. ஓரிரு நாட்கள் தங்கிப்போகவே வா, காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போல அரக்கப்பரக்க வராதே.' 'அண்ணா, உங்களுக்கு நேரமில்லாட்டில் அவளை மட்டுமாவது அனுப்பி வைங்களேன்' - இது என் கணவரிடம். அவர் புன்னகையோடு தலையசைக்கிறார்.
அன்றிரவு ஜன்னலோரம் நின்றபடி அகன்று விரிந்திருந்த வான்வெளியைப் பார்க்கின்றேன். என்வசம் சிறகுகள் இருக்கின்றன. கூடவே முழுமையான சுதந்திரமும். ஆனாலும் பறப்பதற்கான எனது 'வெளி' வரையறுக்கப்பட்டிருப்பதாக உணர்தலை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனக்கான 'வெளி'யை வரையறுத்தது யார்?
விழிகளைத் திருப்பிப் பார்க்கின்றேன். முன்னறையில் மடிக் கணினித் திரையில் கண்களைப் பதித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் என் கணவர். கிட்டத்தட்ட ஒருவகைத் தவநிலையில் அவர். மிக மெலிந்த தோற்றம். அந்தக் கண்களில் தூக்கக் கலக்கத்தை மீறிய கூர்மை. 'கண்மணி, உனக்குப் போகணும் போல இருந்தா போய் ரெண்டுநாள் தங்கிட்டு வாடா. பிள்ளைகளை நான் சமாளிக்கிறேன்' இரவுணவின்போது பரிவோடு ஒலித்த அவர் குரல் மீண்டும் ஒருமுறை என் காதுக்குள் ஒலிப்பதாய் உணர்கிறேன். எனக்குள் மெல்ல ஏதோ புரிவது போல்... எனக்கான வெளியை நானேதான் வரையறுத்துக் கொண்டிருக்கிறேனா? இது... இது... எப்படி சாத்தியமானது? மனசு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது.

அவருக்குப் புத்தளத்தில் வேலை. இங்கிருந்து மூன்று பஸ் மாறிப் போகவேண்டும். அதிகாலை நாலரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினாரென்றால், வீடு திரும்ப எப்படியும் இரவு பத்து மணியாகிவிடும். அங்கே அவருக்குத் தங்குமிட வசதி உண்டுதான். எனினும், அவரால் என்னையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்க முடியவில்லை. எங்களுக்கும்தான். மாலையில் நான் அலுவலகத்திலிருந்து வீடுவரும்வரை வழிபார்த்திருந்து ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்ளும் பிள்ளைகளின் குதூகலம்... இரவில் அலுத்துக் களைத்து வீடுவந்துசேரும் என்னவர் முகத்தில் எங்களைக் கண்டதும் தோன்றும் மலர்ச்சி... இரவுணவின்போது எல்லோருமாய் அமர்ந்து சிரித்துப் பேசியபடி உணவருந்துகையில் ஏற்படும் கலகலப்பு... பிள்ளைகள் உறங்கியபின், என்னதான் களைப்பாக இருப்பினும் நான் கண்ணயரும் வரை என் கூந்தல் கோதிவிடும் என் இனியவரின் கைவிரல்கள் தரும் இதம்... என் மனசின் மெல்லிய பயங்கள், சின்னச் சின்ன கலக்கங்களைத் தட்டுத் தடுமாறி வார்த்தைகளால் வெளிப்படுத்தும் போதெல்லாம் வேலைப் பளுவுக்கு மத்தியிலும் செவிதாழ்த்திக் கேட்டு, என்னைத் தேற்றி 'நிமிர' வைக்கும் அந்தக் கனிவும் காதலும்... சின்னதாய் ஒரு தலைவலி வந்தாலும் துடித்துப் பதறும் அந்த ஆழ்ந்த நேசமும் பரிவும்... இவைதாம் நான் சிறகடித்துப் பறக்கவிழையும் எனக்கான வான்வெளியை நிர்ணயித்தனவா? எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.

'கண்மணி, என்னம்மா கடும் யோசனை?' என்னவரின் பரிவான குரல் மிக மிக அருகில் ஒலிக்கவே, விழிகள் பனிக்க அவரை ஏறிட்டேன். 'உங்களையெல்லாம் விட்டுட்டு எனக்கு மட்டும் அங்கே போகேலாது' –என் குரல் ஏன் இப்படித் தளுதளுக்கிறது?
'சரி, அதுக்கேண்டா இப்படிக் கலங்குறாய்? எனக்கு விளங்குது. என் கண்மணிக்கு அங்கே போகவும் வேணும். போகவும் மனசில்லை, அப்படித்தானே?' என் தலை மட்டும் அசைந்தது. அவர் அப்படியே தன் மார்போடு என்னை அணைத்துக் கொள்கிறார். எவ்வளவு இதமாக இருக்கிறது! இப்படியே... இந்தக் கணமே செத்துப்போய்விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது, எனக்கு. எவ்வளவு காதலும் கனிவும் இவருக்கு என்மீது! அப்படியே வானத்தில் பறப்பதான பெருமித உணர்வு. அடுத்த கணத்தில்... 'யார் இது? ஏன் இப்படி என் தோளைப் பற்றி இவ்வளவு முரட்டுத்தனமாக உலுக்குகிறார்கள்? ஏன், என்ன நடந்துவிட்டது?' நான் அலங்க மலங்க விழிக்கிறேன்.

'ஏய், எழும்பு சீக்கிரம்! சின்னவனுக்கு லூஸ் மோஷனோ என்னவோ! கையோட காலோட பண்ணிக்கிட்டு நிற்கிறான், சீக்கிரமா அவனைக் கழுவி, அந்த இடத்தைக் க்ளீன் பண்ணிடு. ! சொல்ல மறந்துட்டேன், என்னோட அக்காவும் மச்சானும் இன்னைக்கி நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்களாம். ஸ்பெஷலா ஏதாவது பண்ணிவை' அவர் அடுக்கிக்கொண்டே முன்னறைப் பக்கம் நகர்ந்தார். படுக்கையிலிருந்து மெல்ல எழுந்திருக்க முனைந்த போதுதான் மீண்டும் அது! 'சுரீர்' என்று அடிவயிற்றுக்குள்ளிருந்து அந்தப் பாழாய்ப் போன வயிற்று வலி தன் இருப்பை எனக்கு உணர்த்திற்று. '!' என்று கத்தி அழவேண்டும் போல ஒரு வேதனை. நேரே நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. மீண்டும் தலையணையை வயிற்றில் இறுக்கிக்கொண்டு கைகால்களைக் குறுக்கிக்கொண்டு கட்டிலில் குப்புறக் கிடந்தேன். பற்கள் உதட்டை இறுகக் கடித்துக்கொள்ள...கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. இந்தப் பாழும் வயிற்றுவலிக்கு இதுவரை பார்க்காத வைத்தியமில்லை. 'கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளைப் பெற்றால் எல்லாம் தானாகச் சரிவந்துடும்' என்றுதான் வைத்தியர்கள் சொன்னார்கள். இதோ கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் மாதமொருமுறை விடாது வதைக்கும் இந்தக் கொடிய வயிற்றுவலி. மீண்டும் 'சுரீர்!'. விலா என்புகளைக் குடைந்துகொண்டு அடிவயிற்றில் சம்மட்டி அடியாய் அந்த வலி... 'செத்துப் போய்விட்டால் எவ்வளவு நல்லது!'.

'ஏய், என்ன நீ? இன்னும் எழும்பாமல் கட்டிலில் புரண்டுகொண்டு என்ன பண்ணுறாய்? எல்லாம் சம்பாதிக்கிற திமிர்! வேறென்ன? நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன், நீபாட்டுக்கு மகாராணி மாதிரி படுத்திட்டிருந்தா என்ன அர்த்தம், ?' அவர் காட்டுக்கத்தல் கத்தினார்.
'என்னங்க, கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டீங்களா? எனக்கு உடம்புக்கு முடியல்லைன்னு தெரியும்தானே? வயித்துவலி...அம்மோவ்!'
'ஆமாமா, இன்னைக்கு எங்கக்கா வர்றான்னதும் உனக்கு எல்லா வலியும் வரும் என்று எனக்கும் தெரியும்! சும்மா மாய்மாலம் காட்டாமல், எழும்பி சின்னவனைக் கழுவி விட்டுட்டு, சமையலை ஆரம்பி. ஏதோ உலகத்துலயே இவள் ஒருத்திதான் பொம்பிளையாப் பொறந்துட்டாவாம்! மற்றப் பொம்பிளையெல்லாம் இப்படி வயித்துவலின்னு இவளை மாதிரி கூப்பாடு போட்டுட்டா இருக்காங்க? என்னவோ இவளுக்கு மட்டும்தான்...' அவர் தயைதாட்சண்ணியமின்றிச் சொல்லிவிட்டுப் போனார்.
இதற்கு மேலும் எழுந்திருக்காவிட்டால் நிலைமை ரசாபாசமாகிவிடும் என்ற அச்சத்தில் ஒருவாறு பலத்தையெல்லாம் திரட்டி மெல்ல மெல்ல சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்கின்றேன். தலைசுற்றுவது போல் இருந்தது. பக்கத்து மேசை மேலிருந்த தம்ளரில் நீரை வார்த்துக் குடித்தேன். குளிர்ந்த நீர் தொண்டையை நனைத்துக்கொண்டு மெல்ல உள்ளிறங்கியதில் சற்று ஆசுவாசமாய் இருந்தது.

பெண்ணாகப் பிறந்துவிட்டதன் பலனை மாதந்தோறும் நான் அனுபவிக்கின்றேன். கூடவே இருந்து இத்தனை வருடம் வாழ்ந்தவனுக்கு மனைவியுடைய வலியும் கண்ணீரும் கொஞ்சம்கூட உறுத்துவதே இல்லையா? 'ஆண்' என்பதாலேயே இதயம் இப்படி இறுகித்தான் போயிருக்குமா? குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்திய அப்பாவோடு ஒப்பிடுகையில் இவர் ஆயிரம் மடங்கு மேலானவர்தான். ஆனால், அவருக்கு ஒன்றென்றால் துடித்துப்போய் பணிவிடை செய்பவளுக்கு மாதந்தோறும் ஏற்படும் இந்தத் தாளமுடியாத வேதனை நிமிஷங்களின்போது குறைந்தபட்சம் இதமாக நாலு வார்த்தைகள்... ஆறுதலாகவேனும்... ச்சே!
அவன் மெல்ல அவளருகே நெருங்கி வருகின்றான். கண்களில் அவள் இதற்கு முன்பு பார்த்திராத பரிவு. முதுகை மெல்லத் தடவி விடுகின்றான்.

'கண்மணி, என்னம்மா? ரொம்ப வலிக்குதா? மாத்திரை ஏதாவது போட்டுப் பாரேன்...'
அவளுக்கு வலி சற்றே குறைந்தது போலிருந்தது. மெல்லப் புன்னகைக்க முடிகின்றது. ! இந்தக் கனிவும் காதலும்... இன்னும் என்ன சந்தேகம்? எல்லாம் வெறும் கனவு! மனசு முழுக்க நிறைந்துள்ள ஏக்கமும் தவிப்பும் தன்னையறியாமலேயே கனவின் வடிவில்... 'ச்சே! நின்றுகொண்டே கனவு காணத் தொடங்கிவிட்டேனா?' என்னைச் சுதாகரித்துக்கொண்டு குளியலறையை நோக்கித் தள்ளாடியபடி நடக்கின்றேன்.
'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்' என்று பாடினானாமே ஒரு கவிஞன்! அவன் தன் மனைவிக்கு மாதவிடாய் வந்துள்ள நேரத்தில் அவள்படும் பாட்டைக் கண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பானா? எனக்கு வலியையும் மீறிக்கொண்டு சிரிப்பு வந்தது.

என்னதான் படித்திருந்தாலும் நல்லதொரு தொழில் பார்த்துக் கைநிறையச் சம்பாதித்தாலும் இந்த மாதிரியான சமயங்களில்... உயிரைப் பிழிவதான வேதனையில் தவிக்கும் தருணங்களில் இதமான நாலு வார்த்தைக்காய்... கனிவான ஒரு வருடலுக்காய்... கருணையான ஒரு பார்வைக்காய் ஏங்கித் தவிக்கும் ஒரு மனசும், அதில் மெல்லிய உணர்வுகளும் உள்ளனவே! அதை ஏன் என் கணவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை? இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்ற பரஸ்பர வாக்குறுதியில்... நம்பிக்கையில் காதலித்து மணந்த நமக்கிடையில் ஏன் இந்தக் கண்ணுக்குத் தெரியாத இடைவெளி? வலிகளும் வேதனையும் பெண்ணுக்கு வரவே கூடாதா? வந்தாலும் அவள் அவற்றை உணர்ந்து, உணர்த்துவது தப்புத்தானா? அல்லது... என்னதான் வேதனையில் துடித்துத் துவண்டாலும் அவள் அவற்றை வெளிக்காட்டாது தனித்துச் சகித்தபடி தன் அன்றாடப் பணிகளைச் செய்துதான் ஆகவேண்டுமா? கொஞ்சம் கால் வலி வந்துவிட்டால் 'ஆய்...ஊய்...! அந்தத் தைலத்தை எடுத்து என் காலில் தேய்ச்சுவிடு...இதமாய்ப் பிடிச்சுவிடு' என்றெல்லாம் கூப்பாடு போட்டு அவளிடம் பணிவிடையைக் கேட்டுப்பெறும் அவள் கணவனுக்கு, 'வலி' என்பது பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்பதோ, அதனை அவள் வெளிக்காட்டுவது இயல்பு என்பதோ ஏன் புரியவில்லை? மனைவி என்பதற்காக மேலதிகக் கரிசனையெல்லாம் தேவையில்லை. கூடவே உள்ள ஓர் 'உயிரி' என்றாவது... குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அன்பாக ஒரு வார்த்தைகூறித் தேற்றவேண்டும் என்றுகூடத் தோன்றாத அவனது மனசு... இவ்வளவுக்கும் அவன் நாய்க்குட்டிக்குக் காலில் சற்று அடிபட்டபோது துடித்துப் போனவன்... ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'உம்' என்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தவன்... அவனைப் பொறுத்தவரை 'அவளின் வலி' அந்த நாய்க்குட்டியின் காயத்தின் அளவுக்குக்கூட பெறுமானமற்றுப் போய்விட்டதா என்ன?
'பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பார்- கண்மணியே!
பேய்கள் இரங்கிடினும் மண்ணுலகில் பெண்மணந்த
புருஷன் இரங்குவனோ? நீ வலியில் துடித்திருக்க
பரிவுடன் தேற்றுவனோ? இன்சொல்லால் ஆற்றுவனோ?...'
எப்போதோ வளாகத்தில் இடம்பெற்ற வில்லுப்பாட்டில் கேட்ட வரிகள் காதோரம் ஒலிப்பதான பிரமை. தலையைச் சிலுப்பி தறிகெட்ட குதிரை போல் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளை உதறியெறிய முயற்சிக்கின்றேன். சின்ன மகனைக் கழுவி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினேன். சமையலறைக்கு விரைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கோழிப் பார்சலை எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டேன். மீண்டும் அடிவயிற்றில் 'சுரீர்!' என்று அதே வலி 'நான் இன்னும் உனக்குள் தான் இருக்கிறேன்' என்பதை எனக்கு நினைவூட்டியதுபழைய சுடிதாரின் துப்பட்டா ஒன்றை எடுத்து வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டேன். கைகள் பரபரவென்று இயங்கத் தொடங்கின. பிரியாணி செய்தாயிற்று. வந்தவர்கள் ஒருகை பார்த்தனர்.

'ஆனாலும் மதினியின் கைப் பக்குவமே தனிதான்டா!' அவனின் அக்கா ஐஸ்வைத்தாள்.
'ஐயோ, மதினி உங்களுக்கு 'பீரியட்' வருத்தமா? தெரிந்திருந்தால் நானே உங்களுக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வந்திருப்பேனே!'
'அதெல்லாம் என்ன பெரிய விஷயம்! நீ சும்மா கவலைப்படாதேக்கா. கண்மணிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எவ்வளவு காலத்துக்குப் பிறகு நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்கே? உனக்கும் மச்சானுக்கும் ஒரு நல்ல சாப்பாடு தராம நான் அனுப்பிடுவேனா, என்ன?' என்றவாறு கோழிக்காலை சுவைக்கிறான்.

எனது தொண்டைக்குள் ஏதோ ஒன்று வந்து அடைப்பதான உணர்வு. மனசின் மூலைக்குள் எழுந்த வலி உயிரின் வேர்வரை பரவுவதுபோல்... கண்களின் அணைகள் எந்தக் கணத்திலும் உடைந்து விடலாம். பிறகு இன்னும் அசிங்கமாய்ப் போய்விடும்.

'என்ன மதினி, எழும்பிப் போறீங்க? நீங்க சாப்பிடல்லையா? வாங்களேன்!'
'இல்லை... அவளுக்கு வாந்திக் குணமாயிருக்கும். இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு வாந்தி எடுத்துவச்சிட்டா, நாங்க ஒருத்தரும் நிம்மதியா சாப்பிடேலாமப் போயிடும். அதுதான் அவ போறா. அதெல்லாம் அவ பின்னாடி மெல்ல சாப்பிட்டுக்குவா. மச்சான் இன்னும் கொஞ்சம்...' அவன் வந்தவர்களை உற்சாகமாக உபசரிக்கலானான்.

நான் எழுந்துபோய் ஜன்னலருகில் நின்றபடி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானம் அகன்று பரந்திருந்தது எப்போதும் போல! அந்த மேகக்கூட்டத்தின் இடையே என்னுடைய குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற முகங்கள் பளிச்சிடுகின்றன. போதையிலேயே ஈரல் கருகி அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்துவிட்ட அப்பா. அவரது கொடுமைகளால் நைந்து நொடிந்து போனாலும் மகளை நிம்மதியாகக் 'கரைசேர்த்து' விட்ட ஆசுவாசத்துடன் அம்மா. இன்னும்... மேகக்கூட்டம் கலைந்து நகர்ந்துசென்றுவிட்டது. நிர்மலமான வான்வெளி கம்பீரமாய் விரிந்து வியாபித்து... சிறகுகளை நான் இன்னும் இழந்துவிடவில்லைதான். ஆனால்... எனக்கான 'வெளி' மட்டும் கண்ணுக்குத் தெரியாத நூல்வேலிகளால் வரையறுக்கப்பட்டு... யாரால்? விடை எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.

'அம்மா, தம்பி என் கையைக் கடிச்சிவச்சிட்டான்... அம்...ம்...மா.. ...' அழுதுகொண்டுவந்த மகளை இழுத்து அணைத்துக் கொள்கின்றேன். நாளை பருவம் மலர்ந்தபின் இவளுக்கும் எனக்குப் போலவே அந்த வலி...? அவளுடைய வான் வெளியும்  வரையறைகளுடன்...?
'அம்மா நீங்க ஏன் அழுறீங்க?' மகள் என் கண்ணீரைத் தன் பிஞ்சுக் கரங்களால் துடைக்க முயல்கிறாள். ஆனால்... என் கண்ணீர் மட்டும் கட்டுடைத்த வெள்ளமாய்... கரைபுரண்டு....

Saturday, March 29, 2014

ஜூலியஸ் சீசர்

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது.
 
வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.


அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை ‘மகாகவி’ ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான ‘ஜூலியஸ் சீசர்’. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர்.
அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் ‘Gaul’ என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய ‘Gaul’ பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும்.
இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை ‘Ides of March’ என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார்.

நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் “Et tu, Brutes?” (“You too, Brutus?”) அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல… வரலாற்று உண்மை!.

‘ஜூலியஸ் சீசர்’ என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை ‘லீப்’ ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே ‘ஜூலியன் காலண்டர்’ என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ‘Gaul’ பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை “De Bello Gallico” என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் “I came, I saw, I Conquered” என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் ‘கைசர்’ என்றும் ரஷ்ய அரச பட்டம் ‘ஷா’ என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே ‘சீசர்’ என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர்.

சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும், மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர். உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது .
சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார், பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார்; பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார்.
ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார், எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர்.
போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட, நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட
எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான்
அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது. செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.
குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள்; அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .
எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.

How is this

ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?

பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன்றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீ.ருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர்.
டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924யில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோதான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூசித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக்கொல்லவில்லை. ஒரு பெரிய பறவை தான். வேட்டையாடிக் கொன்றது என்று பத்தாண்டுகளுக்கு முன்பு லீ பெர்ஜர், தமது சக ஆராய்ச்சியாளர் ரோன் கிளர்க்குடன் சேர்ந்து நிரூபித்தார். ஆதிமனிதனின் புதைபடிவுகள் கிடைத்த இடத்தில் இருந்த சிறிய குரங்குகளின் புதைபடிவுகளில் இருந்து அவை பறவையைல் தான் கொல்லப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டது. ஆகவே குரங்கு போன்று இருந்த ஆதிமனிதனும் பறவையால் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். ஆனால் பறவை தாக்கிதான் ஆதிமனிதன் இறந்தான் என்பதை, அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிரூபிக்க முடியாமல் இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் கழுகுகள், ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்துக்காட்டும் ஓஹேயோ அரசினர் பலகலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார். கழுகுகள் மேலே இருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து, தங்களது கூரிய கால்விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்ததில், கண் துளைளுக்குப் பின்னால், ஒரே மாதிரியான துளைகளும், வெட்டுக்களும் தெரிந்தன. இதைப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக்காயம் ஏற்பட்ட சேதம் தெரிந்தது. ஆகவே, ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது

English Tenses


English Tenses – Simple & Clear Guide

English has 12 main tenses. They are grouped into:

  • Present (4)

  • Past (4)

  • Future (4)



🔵 1. Present Tenses

1️⃣ Present Simple

Structure: Subject + V1 (base verb)
Use: Habits, facts, general truths

Example:

  • I work every day.

  • She teaches English.

  • The sun rises in the east.

2️⃣ Present Continuous

Structure: Subject + am/is/are + V-ing
Use: Happening now

Example:

  • I am working now.

  • She is reading a book.

3️⃣ Present Perfect

Structure: Subject + has/have + V3
Use: Completed action (time not mentioned)

Example:

  • I have finished my work.

  • She has visited Colombo.

4️⃣ Present Perfect Continuous

Structure: Subject + has/have been + V-ing
Use: Action started in past and still continuing

Example:

  • I have been working for 2 hours.

  • She has been studying since morning.

🔴 2. Past Tenses

5️⃣ Past Simple

Structure: Subject + V2
Use: Completed action in the past

Example:

  • I worked yesterday.

  • She went to school.

6️⃣ Past Continuous

Structure: Subject + was/were + V-ing
Use: Action happening at a specific time in the past

Example:

  • I was working at 5 PM.

  • They were playing football.

7️⃣ Past Perfect

Structure: Subject + had + V3
Use: One action finished before another past action

Example:

  • I had finished before he arrived.

8️⃣ Past Perfect Continuous

Structure: Subject + had been + V-ing
Use: Ongoing action before another past action

Example:

  • I had been working for 3 hours before he came.

🟢 3. Future Tenses

9️⃣ Future Simple

Structure: Subject + will + V1
Use: Future decision/prediction

Example:

  • I will work tomorrow.

  • She will call you.

🔟 Future Continuous

Structure: Subject + will be + V-ing
Use: Action happening at a specific time in future

Example:

  • I will be working at 5 PM tomorrow.

1️⃣1️⃣ Future Perfect

Structure: Subject + will have + V3
Use: Completed before a future time

Example:

  • I will have finished by 6 PM.

1️⃣2️⃣ Future Perfect Continuous

Structure: Subject + will have been + V-ing
Use: Duration before a future time

Example:

  • I will have been working for 5 hours by 6 PM.

📌 Quick Summary Table

TimeSimpleContinuousPerfectPerfect Continuous
PresentI workI am workingI have workedI have been working
PastI workedI was workingI had workedI had been working
FutureI will workI will be workingI will have workedI will have been working

Cooking meat with beer can protect you from cancer


Polycyclic aromatic hydrocarbons (PAHs) form when meat is cooked on a grill at very high temperatures. Previous studies conducted at the Universidade do Porto, in Portugal, have shown an association between grilled meat consumption and a high incidence of colorectal cancer. This doesn't mean that you need to stop eating grilled meat; it just means that you have to be mindful about potential carcinogens when you cook on the barbecue.
But there are good news. Research published recently in the Journal of Agricultural and Food Chemistry has shown that some marinades can reduce the levels of these potential carcinogens in cooked meat.
The hero of the study is beer. After researchers grilled pork marinated for four hours in Pilsner beer, non-alcoholic Pilsner beer or black beer ale to well-done in a charcoal grill, they confirmed that beer reduces levels of PAHs.
“Black beer had the strongest effect, reducing the levels of eight major PAHs by more than half compared with unmarinated meat,” explained the researchers in a news release.
Wine and tea marinades can also reduce the levels of PAHs. So next time you are ready to grill on the barbie, remember this study and perhaps add some beer to your marinade.
Sources: Science Daily and Discovery News

Friday, March 28, 2014

Bigger than Mohenjo-daro, claims expert

The newly discovered mound number nine situated to the west of the Harappan
site of Rakhigarhi in Hisar district, Haryana. Photo: Vasant ShindeThe discovery of two more mounds in January at the Harappan site of Rakhigarhi in Hisar district, Haryana, has led to archaeologists establishing it as the biggest Harappan civilisation site. Until now, specialists in the Harappan civilisation had argued that Mohenjo-daro in Pakistan was the largest among the 2,000 Harappan sites known to exist in India, Pakistan and Afghanistan. The archaeological remains at Mohenjo-daro extend around 300 hectares. Mohenjo-daro, Harappa and Ganweriwala (all in Pakistan) and Rakhigarhi and Dholavira (both in India) are ranked as the first to the fifth biggest Harappan sites.
“With the discovery of two additional mounds, the total area of the Rakhigarhi site will be 350 hectares,” asserted Professor Vasant Shinde, Vice-Chancellor/Director, Deccan College Post-Graduate & Research Institute, a deemed-to-be university in Pune. The two mounds are in addition to the seven mounds already discovered at Rakhigarhi, about 160 km from New Delhi. The eighth and ninth mounds, spread over 25 hectares each, are situated to the east and west of the main site. Villagers have destroyed much of these two mounds for cultivation. A team of archaeology teachers and students of the Deccan College discovered them when they surveyed the site in January.
Dr. Shinde, a specialist in Harappan civilisation and Director of the current excavation at Rakhigarhi, called it “an important discovery.” He said: “Our discovery makes Rakhigarhi the biggest Harappan site, bigger than Mohenjo-daro. The two new mounds show that the Rakhigarhi site was quite extensive. They have the same material as the main site. So they are part of the main site. On the surface of mound nine, we noticed some burnt clay clots and circular furnaces, indicating this was the industrial area of the Harappan site of Rakhigarhi.”
Dr. Shinde had earlier led the excavations done by the Deccan College at the Harappan sites of Farmana, Girawad and Mitathal, all in Haryana.
On the surface of mound eight were found terracotta bangles, cakes, and pottery pieces, typical of the Harappan civilisation, said Nilesh P. Jadhav, Research Assistant, Department of Archaeology, Deccan College.
Artefacts found
From January 10, the Deccan College team has excavated five trenches on the slope of the mound four and another trench in the burial mound numbered seven. The excavation in mound four has yielded a cornucopia of artefacts, including a seal and a potsherd, both inscribed with the Harappan script; potsherds painted with concentric circles, fish-net designs, wavy patterns, floral designs and geometric designs; terracotta animal figurines, cakes, hopscotches and shell bangles, all belonging to the Mature Harappan phase of the civilisation. The five trenches have revealed residential rooms, a bathroom with a soak jar, drainages, a hearth, a platform etc … The residential rooms were built with mud bricks. The complex revealed different structural phases, said Kanti Pawar, assistant professor, Department of Archaeology, Deccan College.
Much of the Harappan site at Rakhigarhi lies buried under the present-day village, with several hundreds of houses built on the archaeological remains. The villagers’ main occupation is cultivation of wheat and mustard, and rearing of buffaloes.
Making cow dung cakes is a flourishing industry. There is rampant encroachment on all the mounds despite the Archaeological Survey of India fencing them. Amarendra Nath of the ASI had excavated the Rakhigarhi site from 1997 to 2000.
An important problem about the Harappan civilisation is the origin of its culture, Dr. Shinde said. The Harappan civilisation had three phases: the early Harappan from circa 3,500 BCE to circa 2,600 BCE, the mature Harappan which lasted from circa 2,600 BCE to circa 2000 BCE, and the late Harappan from circa 2000 BCE to 1,600 BCE.
Dr. Shinde said: “It was earlier thought that the origin of the early Harappan phase took place in Sind, in present-day Pakistan, because many sites had not been discovered then. In the last ten years, we have discovered many sites in this part [Haryana] and there are at least five Harappan sites such as Kunal, Bhirrana, Farmana, Girawad and Mitathal, which are producing early dates and where the early Harappan phase could go back to 5000 BCE. We want to confirm it. Rakhigarhi is an ideal candidate to believe that the beginning of the Harappan civilisation took place in the Ghaggar basin in Haryana and it gradually grew from here. If we get the confirmation, it will be interesting because the origin would have taken place in the Ghaggar basin in India and slowly moved to the Indus valley. That is one of the important aims of our current excavation at Rakhigarhi.” thanks http://www.thehindu.com

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்;

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம்.

ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.

நமது உடலில் பிராண சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த பெண்ணை உளமார பாராட்டுவோம் !!!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறியஆர்வமாக இருக்கிறதா... சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள்விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு-லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும்என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின்தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தைஇந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள்உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டபிள்ளைகளைமீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள்மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள்மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்'ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும்வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன்அணுகினால் ஜெயிக்கலாம்' என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியைவாழ்த்த விரும்புபவர்கள்தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999.(சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)

DUAL EXPRESSIONS OF THE SUPREME

By Chandrasekharendra Saraswathi Mahaswamiji
The dancing Nataraja and the reclining Rangaraja are but dual expressions of the one Supreme. Different schools of philosophy have come into existence to satisfy the needs of varying human temperaments, tastes and aspirations and any path, if consistently pursued, will lead to the same goal.

NATARAJA AND RANGARAJA

In most of our temples, the principal deity is installed to face east, though in a few temples we have the deity facing west also. In the latter case, the principal gopuram (tower) will be on the eastern side. But in Chidambaram and Srirangam, the deities face south, as if proclaiming to the devotees that they are there to protect them from the threat coming from the south, namely, mortality, as the God of Death, Yama, hails from that direction. As Lords of the entire created world, both are called "Raja", and each holds His court in a ranga (stage), the Lord of Chidambaram dancing in joy with uplifted leg and the Lord of Srirangam stretching himself at ease in the repose of yoga nidra. Dakshinamurti, another aspect of Siva, is also found facing south. Nataraja stands for aananda (bliss), which expresses itself in the dynamic rhythm of ecstatic dance.

அரிசி

அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவற்றை விரும்பி உண்ணும் மனிதன் அவற்றின் குணங்ளையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.

பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.

தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி???

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.


 1, திங்களூர் (சந்திரன்):

நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு) :

கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம்.

3, திருநாகேஸ்வரம் (ராகு) :

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.


4, சூரியனார் கோவில் (சூரியன்) :

சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்) சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.


6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்) :

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.


9, திருநள்ளாறு (சனி) :

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.

“விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான் .

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.
எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.
சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று.
கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.
அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…!” என்றார்.
எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.
“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.
சரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான் .