Search This Blog

Thursday, February 13, 2014

சோதனை

தி.ஞானசேகரன்









பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட இழுத்துச் சாத்தியபோது நான் கதவின் கம்பிகளைப் பிடித்தவாறு கெஞ்சினேன்.

                “ நாளை எனக்குச் சோதனை.... என்னைச் சோதனை எழுத அநுமதியுங்கள்.... நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

                இந்த இரண்டு வருடப் பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அரைகுறைச் சிங்களத்தில் கெஞ்சியது அந்தப் பொலிஸ்காரனுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை. 

                “காகன்ட எப்பாநிக்கங் இன்ட”  அவன் அலட்சியமாகக் கூறியபடி வெளியே பூட்டைப்போட்டுப் பூட்டினான்.

                எனது கண்கள் கலங்கின.  மயக்கம் வருவதுபோல இருந்தது.  அடிவயிற்றைக் குமட்டியது. விழுந்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற உணர்வில் மெதுவாகத் தரையில் அமர்ந்தேன்.  அறையின் ஒரு மூலையிலிருந்து குப்பென்று சிறுநீரின் நெடி வீசியது.

                எதிரே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறையிலிருந்து வந்த மெர்க்குரி பல்ப்பின் வெளிச்சம் நானிருந்த அறையின் கதவினூடாக உள்ளேயும் வந்து விழுந்தது.  கதவின் இரும்புக் கம்பிகள் ஏற்படுத்திய கருநிழல்கள் ஆரம்பத்தில் ஒடுங்கியும் பின்னர் சற்று விரிந்தும் ஓர் அரக்கனின் கைவிரல்கள் போல என்மேல் படர்ந்தன.

                நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை.  அங்கிருந்த நான்கைந்து பொலிஸ்காரர்களும் அசட்டையாக ஏதேதோ தமக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.  ஒருவர் மட்டும் காதுகளில் ஒரு கருவியைப் பொருத்திக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும் ரேடியோ மெசேஜ்களைப் பெறுவதும் இடையிடையே ஏதோ குறிப்பெடுப்பதுமாக இருந்தார்.

                நான் இருந்த அறையின் வலதுபுறத்தில் இதுபோன்ற வேறும்சில அறைகள் இருக்கவேண்டும்.  அங்கு பலர் பலமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.  யாரோ ஒரு குடிகாரன் கத்துவதும் கேட்டுக் கொண்டிருந்தது.

                கடந்த சிலநாட்களாக வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.  சந்திக்குச் சந்தி செக் பொயின்ற்’  சோதனைகள், ஆள் அறிமுக அட்டைப் பரிசீலனைகள், சுற்றிவளைப்புத் தேடுதல்கள்பரவலான கைதுகள், விரோதப் பேச்சுகள்..... ஏச்சுகள்......

                நான் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஓர் எதிர்பாராத நிகழ்வுதான்.  இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எனது அறைக்குவந்து படுப்பதற்கு ஆயத்தமானேன்.  நாளை நடக்கவிருக்கும் தவணைப் பரிட்சைக்கு வேண்டிய ஆயத்தங்களைத் திருப்தியாகச் செய்ததில் மனது லேசாக இருந்தது.  அறை நண்பன் குமரேசன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குப் போவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லை.

                அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டின் சொந்தக்காரி சுதுமெனிக்கா உள்ளே எட்டிப்பார்த்தாள்.  என்றுமில்லாதவாறு அவளது முகத்தில் பதட்டம் தெரிந்தது.

                “புத்தே, ஹம்முதாவ அவில்ல இன்னவா.இராணுவத்தினர் வந்திருக்கிறார்கள் என அவள் கூறியதைக் கேட்டதும் என்மனம் திக்திக்கென அடித்துக்கொண்டது. பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று தேடுதல் நடக்கலாமென மூன்று நாட்களுக்கு முன்னரே குமரேசன் கூறியது என் நினைவில் வந்தது.

                வீட்டின் முன்விறாந்தையில் சுதுமெனிக்காவுடன் இராணு வத்தினர் உரையாடுவது கேட்டது.
                “இங்கு எத்தனைபேர் இருக்கிறார்கள்?”

                “இரண்டு பேர்

                “ஏன் இவர்களுக்கு அறையை வாடகைக்குக் கொடுத்தீர்கள்?”

                கிழவி மௌனம் சாதித்தாள்.

                “நாங்கள் அவர்களை விசாரிக்கவேண்டும்.

                சுதுமெனிக்காவும் இராணுவத்தினரும் உள்ளே நுழைந்தனர்.  அவர்களுடன் இரண்டு பொலிசாரும் இருந்தனர்.

                “கோ..... பென்னன்டஐடென்ரிற்றி.

                எனது அறிமுக அட்டையை ஒருவன் வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ஏதோ தனக்குள் முணுமுணுத்தான். வேறு இருவர் அறையில் இருந்த உடுப்புகள், புத்தகங்கள், மூலையிலிருந்த கட்டிலின் கீழ்ப்புறம், குப்பைக் கூடை, எல்லாவற்றையுமே புரட்டி எடுத்தனர்.

                மேசையிலிருந்த எனது என்ஜினியரிங்நோட்ஸ் கொப்பியை ஒருவன் எடுத்து விரித்தபோது அதற்குள் இருந்த புகைப்படங்கள் சில வெளியே விழுந்தன. 

                “இதென்ன போட்டோக்கள்?”

                “சென்ற மாதம் என்ஜினியரிங் மாணவர்கள் ஸ்ரடி ரூர்போனோம்; அப்போது எடுத்த போட்டோக்கள்தான் இவை.

                “மின் உற்பத்தி நீர்நிலையத்தின் அமைப்பு வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும்.  இந்தப் போட்டோக்களை யார் எடுத்தது?”

                “எனது சகமாணவர்கள்... ரஞ்சித் சில்வா.... புஞ்சிஹேவா... இன்னும் பலர் புகைப்படங்கள் எடுத்தார்கள். அவற்றில் சில பிரதிகளை நான் பெற்றேன்.

                உண்மையில் எனது அறை நண்பன் குமரேசனும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் அமைப்பினைப் பல்வேறு கோணங்களில் படம் எடுத்திருந்தான்.  அவன் எடுத்த படங்களில் சிலவும் அவற்றுடன் இருந்தன. இப்போது குமரேசனின் பெயரைக் கூறினால் சிக்கலாகிவிடும்.

                “கோ அனித்தெக்கனா?”

                மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றவன் இன்னும் திரும்பவில்லை என்ற விபரத்தைக் கூறினேன்.

                “சரி, காற்சட்டையை அணிந்துகொண்டு எங்களுடன் வாபுறப்படு.

                எனது மனதைப் பயங் கௌவிக்கொண்டது.  நண்பர்கள் கூறிய சித்திரவதைச் செய்திகள், வாவியில் மிதந்த பிணங்கள், எனது எதிர்காலம் தமது வாழ்வின் விடிவெள்ளியாக அமையுமென்ற கற்பனைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது ஏழைத் தாய்தந்தையர், இயக்கம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொண்டு திடீரெனக் காணாமல் போய்விட்ட  எனது ஒரே அன்புத் தங்கை.... இப்படிப் பலவாறான எண்ணங்கள் எனது மனதில் தத்தளித்தன.

                “விசாரிக்க வேண்டியதை இங்கேயே விசாரியுங்கள்..... தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்.  நாளைக்கு எனக்குச் சோதனை இருக்கிறது.நான் மன்றாடினேன்.

                அவர்கள் விடுவதாயில்லை. பயப்பட வேண்டாம், விசாரணை முடிந்ததும் உடனே அனுப்பிவிடுவோம்என்றனர்.

                சுதுமெனிக்காவும் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினாள். இரண்டு வருடங்களாக இவர்கள் இந்த அறையிலே தான் இருக்கிறார்கள்.  எந்தவிதத் தொந்தரவுக்கும் போக மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னாள்.

                “நாங்கள் எங்களது கடமையைச் செய்யவேண்டியிருக்கிறது; கூடியவரை விரைவாகத் திருப்பியனுப்புவோம்.

                என்னை அழைத்துவந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் அவர்கள் தங்களது தேடுதல் நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
                அவர்கள் அறைக்கு வந்தநேரத்தில் குமரேசன் அங்கு இல்லாதது நல்லதாய்ப் போய்விட்டது.  நாளைக்குச் சோதனை இருப்பதால் எப்படியும் குமரேசன் இதுவரையில் அறைக்கு வந்துசேர்ந்திருப்பான்.  சுதுமெனிக்கா எல்லா விபரங்களையும் அவனிடம் கூறியிருப்பாள்.

                குமரேசனுக்குக் கொழும்பில் பலரைத் தெரியும்.  தேடுதலின்போது கைதானவர்களை விடுவிப்பதற்கு வேண்டிய வழிவகைகள் தெரியும். முன்பொருமுறை அவனை வெள்ளவத்தையில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.  அப்போது அவர்கள் அவனது அறிமுக அட்டையைப் பறித்துக் கிழித்து வீசிவிட்டார்கள்.  ஆனாலும் அவனுக்கு வேண்டியவர்கள் மேலிடத்துடன் தொடர்புகொண்டு ஒருசில மணித்தியாலங் களுக்குள்ளேயே  அவனை விடுவித்துவிட்டார்கள்.  அதற்காகப் பெருந்தொகைப் பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாக அவன் கூறினான்.  சிலநாட்களுக்குள் யார்யாரையோ பிடித்துக் கொழும்பு விலாசத்துடன்கூடிய அறிமுக அட்டையையும் பெற்றுக்கொண்டான்.

                குமரேசனுக்கு எதிலுமே ஓர் அலட்சியப்போக்கு; பணத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்ற நினைப்பு அதற்கேற்ப அவனது கையிலே நிறையப் பணம் புரண்டு கொண்டிருக்கும்.  உறவினர் யாரோ கனடாவிலிருந்து செலவுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னான்.

                சிலவேளைகளில் அவனது போக்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விரிவுரைகளுக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கியிருந்து ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பான். ஏனென்று கேட்டால் சிரித்து மழுப்பிவிடுவான். சில நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென எங்கோ புறப்பட்டுச் செல்வான். இரண்டு மூன்று நாட்கள் கழித்தே அறைக்குத் திரும்புவான். அவனை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

                வேறொரு பொலிஸ்காரன் இப்போது அறையின் கதவைத் திறந்தான்.  இரண்டு நடுத்தரவயதான முரட்டு ஆசாமிகளை உள்ளே தள்ளிப் பூட்டினான்.

                இருவரும் நன்றாகக் குடித்திருந்தனர். ஒருவன் அந்தப் பொலிஸ்காரனிடம் தனக்குப் பசிக்கிறதெனவும் சாப்பாடு தரும்படியும் அலட்சியமான தொனியில் கூறினான். பொலிஸ்காரன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
                மற்ற ஆசாமி என்னை முறைத்துப் பார்த்தான். அவனை மாலைவேளைகளில் பல்கலைக் கழகத்திற்குச் சமீபமாகவுள்ள கடற்கரையோரத்தில் பார்த்திருக்கிறேன்.  அந்தப் பகுதியில் யாரோ போதைப் பொருட்கள் விற்பதாகவும் குடுஅடிப்பவர்கள் அங்கு கூடுவதாகவும் முன்பொருமுறை குமரேசன் சொன்னான்.

                என்னைப் பயங் கௌவிக்கொண்டது. இரவு முழுவதும் இவர்களுடன்தான் இருக்கவேண்டுமா? இவர்கள் என்னை என்ன செய்வார்களோ?.

                மனதிலே பலவாறான சிந்தனைகள். மெதுவாக எனது விரலிலிருந்த மோதிரத்தை அவர்களுக்குத் தெரியாமல் கழற்றி காற்சட்டை மடிப்புக்குள் செருகிக்கொண்டேன்.

                தனக்குப் பசிக்கிறதெனக் கூறிய ஆசாமி சிறிது நேரம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான்.  பொலிஸ்காரன் தன்னைச் சரியாக உபசரிக்கவில்லை என்றான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படு பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாக இருப்பதில்லை எனவும், அதனால் அவர்களை எவ்வாறு கண்ணியமாக நடத்தவேண்டும் எனவும் மற்றவனிடம் கூறினான்.  இடையிடையே என்னிடமும் அவற்றைக்               கூறி எனது அபிப்பிராயத்தை எதிர்பார்த்தான். அவன் கூறியவற்றை ஆமோதிப்பதுபோல நான் பரிதாபமாகத் தலையாட்டிக் கொண்டி ருந்தேன்.

                சிறிது நேரத்தில் அவன் ஓய்ந்துபோய் குறட்டை விடத்தொடங்கினான்.

                இப்போது மற்றவன் எழுந்து என்னருகே வந்தான்.  எனது கைகளை முரட்டுத்தனமாகப் பற்றினான். மல்லி, சல்லி தியனுவத?”

                என்னால் பேசமுடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. உமிழ்நீரை விழுங்கியபடி இல்லை என்னும் பாவனையில் தலையைமட்டும் ஆட்டினேன்.

                “பொறு கியன்டெப்பா.....

                அவன் எனது சம்மதம் எதையும் எதிர்பார்க்காமல் எனது  சேட் பொக்கற்றுக்குள் கையைவிட்டான். பின்னர் காற்சட்டைப் பொக்கற்றுகளை ஒவ்வொன்றாகத் துழாவினான்.  ஏமாற்றத்துடன் என்னைத் தகாத வார்த்தைகளில் ஏசினான்.
                “ஒயா திறஸ்தவாதிநே..... ஒயாவ மறன்டோன .எனது கழுத்தைப் பிடித்து நெரித்துப் பின்புறமாகத் தள்ளினான்.  எனது தலை பின்புறச் சுவரில் மோதிக் கண்கள் கலங்கின. 

                முதலில் மல்லிஎன அழைத்தவன் இப்போது திறஸ்தவாதிஎன்கிறான்.  எனது பொக்கற்றில் சிறிது பணம் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

                அவனது பலத்த சத்தத்தைக் கேட்டு வெளியே நின்ற பொலிஸ்காரன் கதவின் அருகேவந்து அவனை எச்சரித்தான்.  அதன்பின் அவன் அடங்கிப்போனான்.  ஆனாலும் என்னைப் பார்த்து இடையிடையே முறைப்பதை மட்டும் விட்டுவிடவில்லை.

                என்னை விடுவிப்பதற்கு சுதுமெனிக்கா ஏதாவது முயற்சி எடுப்பாளா என எனது மனம் எண்ணியது. அது ஒரு முட்டாள்தனமான எண்ணம் ; ஏன் அவள் முயற்சிக்க வேண்டும் ஆனாலும் குமரேசன் அறைக்குத் திரும்பியிருந்தால் அவள் அவனிடம் எல்லா விபரங்களையும் கூறியிருப்பாள்.

                குமரேசனுக்குச் சரளமாகச் சிங்களம் பேசத்தெரியும்.  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதியவுடனேயே அவன் எப்படியோ கொழும்புக்கு வந்துவிட்டான்.  என்னைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியே வருவதற்கு பாஸ்’  எடுப்பதில் சிரமம் இருந்தது. பல்கலைக் கழக அநுமதி கிட்டும்வரை இரண்டு வருடகாலம்  காத்திருந்துதான் நான் கொழும்புக்கு வரமுடிந்தது.  இந்தக் காலகட்டத்தில் அவன் நன்றாகச் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டான். அதனால் அவன் சுதுமெனிக்காவுடன் சரளமாகக் கதைக்கமுடிகிறது.

                யாழ்ப்பாணத்தில் நானும் குமரேசனும் அயலூரவர்கள். நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளிலேதான் கல்வி கற்றோம். பல்கலைக் கழகத்திற்கு வந்தபின்தான் அவனுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

                ஒருநாள் குமரேசன் என்னைச் சந்தித்தபோது, “உம்முடைய தங்கச்சியைப்பற்றி ஒரு விஷயம் அறிஞ்சனான்; உண்மையே?”  எனக்கேட்டான்.

                நான்  திடுக்குற்றுவிட்டேன்.  எந்த விஷயம் ஒருவருக்கும் தெரியவரக்கூடாதென நான் விரும்பினேனோ அதையே குமரேசன் என்னிடம் கேட்டான்.  இவனுக்கு இது எப்படித் தெரியவந்தது!

                நான் பதில் சொல்லவில்லை. கண்களுக்குள் நீர் முட்டி நின்றது.

                “சரி சரி பயப்பிடாதையும்....  நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்”  என்றான்.  அன்றிலிருந்து அவன் என்னிடம் அன்பாக நடந்துகொண்டான்.  எங்களுடைய நட்பு இறுக்கம் பெற்று அறை நண்பர்களானோம்.

                இப்போது நான் அடைக்கப்பட்டிருந்த அறையில் மற்ற இருவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். எனது கண்கள் கனத்தன. சோர்வு பெரிதும் வாட்டியது.  ஆனாலும் நித்திரை மட்டும் வரவில்லை.  மறுநாள் விடியும்வரை நான் விழித்திருந்தேன்.

                காலையில் ஒருபொலிஸ்காரன் வந்து என்னை நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்றான்.

                “இன்று எனக்குத் தவணைச் சோதனை நான் போகவேண்டும். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். வேண்டுமானால் சோதனை முடிந்ததும் இங்கு வருகிறேன்.

                இதனை நான் கூறியபோது அந்த அதிகாரி எனக்கு ஆறுதல் கூறினார்.

                “உம்மைப் பற்றிய விபரங்களை எடுப்பதற்கு உடனே நான் ஒழுங்கு செய்கிறேன் இன்னும் சிறிது நேரத்தில் நீர் போகலாம்”  எனக்கூறி மேசையில் இருந்த மணியை அழுத்தி வேறொரு பொலிஸ்காரனை வரவழைத்து, “இவரது விபரங்களை எடுத்துவிட்டு சந்தேகத்திற்கு இடமில்லையெனில் அனுப்பி விடுங்கள்”  எனக்கூறினார்.

                அந்தப் பொலிஸ்காரன் என்னைப் பக்கத்திலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றான்.  அங்கு வேறும் பலர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.  அவர்களில் முதலாம் வருட  மாணவர்கள் சிலரும் இறுதிவருட மாணவர்கள் சிலரும் இருந்தனர்.  அவர்கள் எவருமே என்னைப் பார்த்து அறிமுகச் சிரிப்பைக்கூட  உதிர்க்கவில்லை.

                என்னை முதலில் விசாரணை செய்தார்கள்.

                “நம மொக்கத?”
                “பாலேந்திரன்.

                “சிங்கள தன்னுவத?”

                “எச்சற தன்னனே..........

                இப்போது வேறொருவன் ஆங்கிலத்தில் விசாரணையைத் தொடர்ந்தான்.

                “எவ்வளவு காலமாகக் கொழும்பில் வசிக்கிறீர்? இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதாசகோதரர்கள் யாராவது இயக்கத்தில் இருக்கிறார்களா? நண்பர்கள் யாருக்காவது இயக்கத் தொடர்பு இருக்கிறதா? என மாறிமாறிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான்.

                எல்லாவற்றிற்குமே இல்லையெனப் பதிலளிப்பதைவிட நான் வேறென்ன சொல்லமுடியும்.

                பின்பு வேறொருவன் எனது சேட்டைக் கழற்றச் சொல்லி உடம்பு முழுவதையும் சோதனை செய்தான். எனது நெற்றியில் இருந்த தழும்பு ஒன்றினைக் காட்டி இது எப்படி ஏற்பட்டது ? எனக் கேட்டான்.

                சிறுவயதில் நான் கால்பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தின் தழும்பு விசாரணை செய்பவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  அவர்கள் அந்தத் தழும்பைக் காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

                பின்னர் என்னைப் பலவித கோணங்களில் புகைப் படமெடுத்தார்கள் வீடியோ படம் எடுத்தார்கள் கைரேகைகளைப் பதிவுசெய்தார்கள்.

                என்னைக் கைதுசெய்து அழைத்துவந்த பொலிஸ்காரர் அப்போது அங்கு வந்தார்.  இரவு எனது அறையிலே கண்டெடுத்த புகைப்படங்களைக் காட்டி, “இது சம்பந்தமாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது”  எனக் கூறினார்.

                அந்தப் படங்களை ரஞ்சித் சில்வாவும் புஞ்சிஹேவாவும் எடுத்ததாகக் கூறியிருந்தேன்.  அவர்களிடம் விசாரித்தால் என்ன கூறுவார்களோ ? குமரேசன் எடுத்த படங்கள் சிலவும் அவற்றுடன் இருந்தன.
                விசாரணை முடிந்ததும் அந்த அறிக்கையை என். ஐ. பி. க்கு அனுப்பி அங்கிருந்து பதில் வந்த பின்னர்தான் என்னை விடுதலை செய்யமுடியுமென இப்போது புதிதாகக் கூறினார்கள்.

                எனக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் அற்றுப்போய் விட்டது. நான் சரியாக இரண்டு மணிக்குப் பரீட்சை மண்டபத்தில் இருக்க வேண்டும் அதற்குமுன் குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து பதில் வந்துசேருமா?

                நான் சோர்ந்துபோய் வாங்கொன்றில் அமர்ந்தேன்.  சாப்பிடும்படி பாணும் பருப்பும் தந்தார்கள்.  வயிற்றுக்குள் ஒரே குமட்டல்.  அவர்கள் கொடுத்த வெறும் தேநீரைமட்டும் குடித்தேன்.

                சிறிது நேரத்தில் நிலையப் பொறுப்பதிகாரி என்னை அழைத்து, “உம்மைப்பற்றிய விசாரணைகள் இன்னும் முடியவில்லை.  ஆனாலும் சோதனை எழுதும் மாணவர்களுக்கு உதவும்படி பல்கலைக்கழக மேலிடத்திலிருந்து என்னைக் கேட்டிருக்கிறார்கள்.  அதனால் இப்போது உம்மை அனுப்பி வைக்கிறேன்.  சோதனை முடிந்ததும் மீண்டும் இங்கு வந்துவிட வேண்டும்”  எனக்கூறினார்.

                நான் வெளியே வந்தபோது என்னைக் கண்காணிப்பதற்காக ஒரு பொலிஸ்காரன் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

                இந்நிலையில் என்னால் எப்படி நிம்மதியாகச் சோதனை எழுதமுடியும். ? ஆனாலும் வேறுவழி ஏதுமில்லை.

                முதலில் நான் அறைக்குச் சென்றேன். சுதுமெனிக்காவைச் சந்தித்த போதுஇரவு குமரேசன் வந்ததாகக் கூறினாள். அவனிடம் நடந்த விஷயங்கள் யாவற்றையும் தான் தெரிவித்ததாகவும் அவன் உடனேயே எங்கோ புறப்பட்டுச் சென்றதாகவும் சொன்னாள்.

                சோதனைக்கு நேரமாகிவிட்டது.

                குமரேசன் எப்படியும் பரிட்சை மண்டபத்திற்கு வந்து விடுவான்.  நான் பரிட்சை மண்டபத்தை  அடைந்தபோது பரிட்சை ஆரம்பமாகியிருந்தது.

                என் கண்கள் குமரேசனைத் தேடின.  அவனை அங்கு காணவில்லை....... எங்கே போயிருப்பான்?

                அவன் என்றுமே ஒரு புரியாத புதிர்தான் !.

# பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம் #

# மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பாலு மகேந்திரா


1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும்.


தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.

சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.


தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.

இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா.

இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள்.

பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது ##


" எனது முதல் தமிழ் படத்துக்கு “அழியாத கோலங்கள்” என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்க்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார்.

அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.

ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.
எனவே எனது அழியாத கோலங்கள் படத்தை தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...

முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு.

எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு.

எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்கள் அல்ல ! "

= பாலு மகேந்திராவின் பேட்டியிலிருந்து



# பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம் #

# மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பாலு மகேந்திரா  

1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும்.

தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.

சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.

தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.

இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா.

இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள்.

பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது ##

2561315212327

Best of 60's - Jukebox - 1 - Non Stop Bollywood Old Hits (1960-1969)

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

LIMITS OF HUMAN BODY

The psychological origins of waiting (... and waiting, and waiting) to work


Wikimedia Commons
Like most writers, I am an inveterate procrastinator. In the course of writing this one article, I have checked my e-mail approximately 3,000 times, made and discarded multiple grocery lists, conducted a lengthy Twitter battle over whether the gold standard is actually the worst economic policy ever proposed, written Facebook messages to schoolmates I haven’t seen in at least a decade, invented a delicious new recipe for chocolate berry protein smoothies, and googled my own name several times to make sure that I have at least once written something that someone would actually want to read.

Lots of people procrastinate, of course, but for writers it is a peculiarly common occupational hazard. One book editor I talked to fondly reminisced about the first book she was assigned to work on, back in the late 1990s. It had gone under contract in 1972.

I once asked a talented and fairly famous colleague how he managed to regularly produce such highly regarded 8,000 word features. “Well,” he said, “first, I put it off for two or three weeks. Then I sit down to write. That’s when I get up and go clean the garage. After that, I go upstairs, and then I come back downstairs and complain to my wife for a couple of hours. Finally, but only after a couple more days have passed and I’m really freaking out about missing my deadline, I ultimately sit down and write.”

Over the years, I developed a theory about why writers are such procrastinators: We were too good in English class. This sounds crazy, but hear me out.

Most writers were the kids who easily, almost automatically, got A's in English class. (There are exceptions, but they often also seem to be exceptions to the general writerly habit of putting off writing as long as possible.) At an early age, when grammar school teachers were struggling to inculcate the lesson that effort was the main key to success in school, these future scribblers gave the obvious lie to this assertion. Where others read haltingly, they were plowing two grades ahead in the reading workbooks. These are the kids who turned in a completed YA novel for their fifth-grade project. It isn’t that they never failed, but at a very early age, they didn’t have to fail much; their natural talent kept them at the head of the class.

Forced into a challenge we're not prepared for, we often engage 'self-handicapping': deliberately doing things that set us up for failure.
This teaches a very bad, very false lesson: that success in work mostly depends on natural talent. Unfortunately, when you are a professional writer, you are competing with all the other kids who were at the top of their English class. Your stuff may not—indeed, probably won’t—be the best anymore.

If you’ve spent most of your life cruising ahead on natural ability, doing what came easily and quickly, every word you write becomes a test of just how much ability you have, every article a referendum on how good a writer you are. As long as you have not written that article, that speech, that novel, it could still be good. Before you take to the keys, you are Proust and Oscar Wilde and George Orwell all rolled up into one delicious package. By the time you’re finished, you’re more like one of those 1940’s pulp hacks who strung hundred-page paragraphs together with semicolons because it was too much effort to figure out where the sentence should end.

The Fear of Turning In Nothing
Most writers manage to get by because, as the deadline creeps closer, their fear of turning in nothing eventually surpasses their fear of turning in something terrible. But I’ve watched a surprising number of young journalists wreck, or nearly wreck, their careers by simply failing to hand in articles. These are all college graduates who can write in complete sentences, so it is not that they are lazy incompetents. Rather, they seem to be paralyzed by the prospect of writing something that isn’t very good.

“Exactly!” said Stanford psychologist Carol Dweck, when I floated this theory by her. One of the best-known experts in the psychology of motivation, Dweck has spent her career studying failure, and how people react to it. As you might expect, failure isn’t all that popular an activity. And yet, as she discovered through her research, not everyone reacts to it by breaking out in hives. While many of the people she studied hated tasks that they didn’t do well, some people thrived under the challenge. They positively relished things they weren’t very good at—for precisely the reason that they should have: when they were failing, they were learning.

Dweck puzzled over what it was that made these people so different from their peers. It hit her one day as she was sitting in her office (then at Columbia), chewing over the results of the latest experiment with one of her graduate students: the people who dislike challenges think that talent is a fixed thing that you’re either born with or not. The people who relish them think that it’s something you can nourish by doing stuff you’re not good at.

“There was this eureka moment,” says Dweck. She now identifies the former group as people with a “fixed mind-set,” while the latter group has a “growth mind-set.” Whether you are more fixed or more of a grower helps determine how you react to anything that tests your intellectual abilities. For growth people, challenges are an opportunity to deepen their talents, but for “fixed” people, they are just a dipstick that measures how high your ability level is. Finding out that you’re not as good as you thought is not an opportunity to improve; it’s a signal that you should maybe look into a less demanding career, like mopping floors.

The fear of being unmasked as the incompetent you 'really' are is so common that it actually has a clinical name: impostor syndrome.
This fear of being unmasked as the incompetent you “really” are is so common that it actually has a clinical name: impostor syndrome. A shocking number of successful people (particularly women), believe that they haven’t really earned their spots, and are at risk of being unmasked as frauds at any moment. Many people deliberately seek out easy tests where they can shine, rather than tackling harder material that isn’t as comfortable.

If they’re forced into a challenge they don’t feel prepared for, they may even engage in what psychologists call “self-handicapping”: deliberately doing things that will hamper their performance in order to give themselves an excuse for not doing well. Self-handicapping can be fairly spectacular: in one study, men deliberately chose performance-inhibiting drugs when facing a task they didn’t expect to do well on. “Instead of studying,” writes the psychologist Edward Hirt, “a student goes to a movie the night before an exam. If he performs poorly, he can attribute his failure to a lack of studying rather than to a lack of ability or intelligence. On the other hand, if he does well on the exam, he may conclude that he has exceptional ability, because he was able to perform well without studying.”

Writers who don’t produce copy—or leave it so long that they couldn’t possibly produce something good—are giving themselves the perfect excuse for not succeeding.

“Work finally begins,” says Alain de Botton, “when the fear of doing nothing exceeds the fear of doing it badly.” For people with an extremely fixed mind-set, that tipping point quite often never happens. They fear nothing so much as finding out that they never had what it takes.

 “The kids who race ahead in the readers without much supervision get praised for being smart,” says Dweck. “What are they learning? They’re learning that being smart is not about overcoming tough challenges. It’s about finding work easy. When they get to college or graduate school and it starts being hard, they don’t necessarily know how to deal with that."

Embracing Hard Work
Our educational system is almost designed to foster a fixed mind-set. Think about how a typical English class works: You read a “great work” by a famous author, discussing what the messages are, and how the author uses language, structure, and imagery to convey them. You memorize particularly pithy quotes to be regurgitated on the exam, and perhaps later on second dates. Students are rarely encouraged to peek at early drafts of those works. All they see is the final product, lovingly polished by both writer and editor to a very high shine. When the teacher asks “What is the author saying here?” no one ever suggests that the answer might be “He didn’t quite know” or “That sentence was part of a key scene in an earlier draft, and he forgot to take it out in revision.”

Or consider a science survey class. It consists almost entirely of the theories that turned out to be right—not the folks who believed in the mythical “N-rays,” declared that human beings had forty-eight chromosomes, or saw imaginary canals on Mars. When we do read about falsified scientific theories of the past—Lamarckian evolution, phrenology, reproduction by “spontaneous generation”—the people who believed in them frequently come across as ludicrous yokels, even though many of them were distinguished scientists who made real contributions to their fields.

“You never see the mistakes, or the struggle,” says Dweck. No wonder students get the idea that being a good writer is defined by not writing bad stuff.

Unfortunately, in your own work, you are confronted with every clunky paragraph, every labored metaphor and unending story that refuses to come to a point. “The reason we struggle with"insecurity,” says Pastor Steven Furtick, “is because we compare our behind-the-scenes with everyone else’s highlight reel.”

Young people are uncomfortable with the unstructured world of work. No wonder so many elite students go into industries with clear boundaries, like finance and consulting.
About six years ago, commentators started noticing a strange pattern of behavior among the young millennials who were pouring out of college. Eventually, the writer Ron Alsop would dub them the Trophy Kids. Despite the sound of it, this has nothing to do with “trophy wives.” Rather, it has to do with the way these kids were raised. This new generation was brought up to believe that there should be no winners and no losers, no scrubs or MVPs. Everyone, no matter how ineptly they perform, gets a trophy.

As these kids have moved into the workforce, managers complain that new graduates expect the workplace to replicate the cosy, well-structured environment of school. They demand concrete, well-described tasks and constant feedback, as if they were still trying to figure out what was going to be on the exam. “It’s very hard to give them negative feedback without crushing their egos,” one employer told Bruce Tulgan, the author of Not Everyone Gets a Trophy. “They walk in thinking they know more than they know.”

When I started asking around about this phenomenon, I was a bit skeptical. After all, us old geezers have been grousing about those young whippersnappers for centuries. But whenever I brought the subject up, I got a torrent of complaints, including from people who  have been managing new hires for decades. They were able to compare them with previous classes, not just with some mental image of how great we all were at their age. And they insisted that something really has changed—something that’s not limited to the super-coddled children of the elite.

“I’ll hire someone who’s twenty-seven, and he’s fine,” says Todd, who manages a car rental operation in the Midwest. “But if I hire someone who’s twenty-three or twenty-four, they need everything spelled out for them, they want me to hover over their shoulder. It’s like somewhere in those three or four years, someone flipped a switch.” They are probably harder working and more conscientious than my generation.  But many seem intensely uncomfortable with the comparatively unstructured world of work.  No wonder so many elite students go into finance and consulting—jobs that surround them with other elite grads, with well-structured reviews and advancement.

Today’s new graduates may be better credentialed than previous generations, and are often very hardworking, but only when given very explicit direction. And they seem to demand constant praise. Is it any wonder, with so many adults hovering so closely over every aspect of their lives? Frantic parents of a certain socioeconomic level now give their kids the kind of intensive early grooming that used to be reserved for princelings or little Dalai Lamas.

All this “help” can be actively harmful. These days, I’m told, private schools in New York are (quietly, tactfully) trying to combat a minor epidemic of expensive tutors who do the kids’ work for them, something that would have been nearly unthinkable when I went through the system 20 years ago.  Our parents were in league with the teachers, not us. But these days, fewer seem willing to risk letting young Silas or Gertrude fail out of the Ivy League.

Thanks to decades of expansion, there are still enough spaces for basically every student who wants to go to college. But there’s a catch: Most of those new spaces were created at less selective schools. Two-thirds of Americans now attend a college that, for all intents and purposes, admits anyone who applies. Spots at the elite schools—the top 10 percent—have barely kept up with population growth. Meanwhile demand for those slots has grown much faster, because as the economy has gotten more competitive, parents are looking for a guarantee that their children will be successful. A degree from an elite school is the closest thing they can think of.

So we get Whiffle Parenting: constant supervision to ensure that a kid can’t knock themselves off the ladder that is thought to lead, almost automatically, through a selective college and into the good life.  It’s an entirely rational reaction to an educational system in which the stakes are always rising, and any small misstep can knock you out of the race. But is this really good parenting? A golden credential is no guarantee of success, and in the process of trying to secure one for their kids, parents are depriving them of what they really need: the ability to learn from their mistakes, to be knocked down and to pick themselves up—the ability, in other words, to fail gracefully. That is probably the most important lesson our kids will learn at school, and instead many are being taught the opposite.

This post is adapted from Megan McArdle's The Up Side of Down: Why Failing Well Is the Key to Success.
thanks http://www.theatlantic.com/

New blood test for schizophrenia

 by Elmar Bartlmae 
Currently the diagnosis of most mental illnesses is based on conversations and questionnaires. These could now be supported by a new low-cost blood test developed within the European research project SchizDX.
This test evaluates the presence of certain proteins in blood samples of patients. Sabine Bahn from the University of Cambridge says that the new test is able to diagnose schizophrenia with a certainty of 83% and depression with a certainty of about 90%. Although the test could never stand on its own, it provides doctors with valuable backup information.
Also patients are likely to profit from the new test, because now their illness is no longer an abstract condition that is restricted to something that happens in the mind. The abnormality in the blood will help patients psychologically to deal with their psychiatric disorder as with any other illness. thanks http://medicalxpress.com/

Wednesday, February 12, 2014

யௌவனம்

கே.எஸ்.சுதாகர











கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டான். 'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம்  இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். அவள் அருகே பையன் ஒருவனைத் தூக்கி வைத்திருந்தபடி சேலை அணிந்த இன்னொரு வயது முதிர்ந்த பெண்.

 அந்த இளம்பெண் ஒரு கலைப்படைப்பு. அப்படித்தான் இருக்க வேண்டும். அடிக்கடி சட்டையை மேலும், பாவாடையைக் கீழும் இழுத்து விட்டுக்கொண்டாள். இரட்டைப் பின்னலைத் தூக்கிப் பின்னாலே எறிந்து கொண்டாள். இரட்டைப் பின்னலுக்கு தப்பிய முடி, புகையிரத நிலையத்தின் செயற்கை ஒளியில் பொன்னிறமாகத் தகதகத்து காற்றினில் துடித்துக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த 'லிப்ஸ்டிக்'கை எடுத்து உதட்டருகே கோடிழுத்துக் கொண்டாள். உதடுகளை மேலும் கீழும் அசைத்து சப்புக்கொட்டி அழகு காட்டினாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருபது இருபத்திரண்டு வயது இருக்கலாம்.

 இவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். புகையிரதம் புறப்படுவதற்கு இன்னமும் இரண்டோ மூன்று நிமிடங்கள் தானிருந்தன. புகையிரதம் கொஞ்சம் தாமதித்துப் புறப்பட்டால் நல்லது போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனம் பரபரப்படையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் மறைந்துவிடுவாள்.

 புகையிரதம் புறப்படுவதற்காகக் கூவியது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சேலை அணிந்திருந்த பெண் - அந்த இளம்பெண்ணைத் தேற்றுவது போலவும், அவள் ஏதோ சிணுங்கிச் செல்லம் கொஞ்சுவது போலவும் தெரிந்தது. புகையிரதம் புறப்பட ஆயத்தமானதும் - பையனை அந்த இளம் பெண் அவளிடமிருந்து வாங்கிக்கொண்டாள். சேலை அவளைக் கட்டித் தழுவிக்கொண்டது. மறுகணம் பிள்ளை – பிள்ளையைத் தூக்கிக்கொண்டு சிட்டாகப் பறந்து வந்து புகையிரதத்தில் ஏறிக்கொண்டது. இவனுக்கு எதிராக மூலைக்குள்ளிருந்தவன் எழுந்துகொள்ள – அவள் அந்த இடத்தை நிரப்பினாள். இருவரும் ஒருமுறை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அசப்பில் அவள் அண்ணனைப் போன்றிருந்த அவன், அந்தச் சிறுவனின் கன்னங்களைத் தடவிக்கொண்டே விறுவிறெண்டு இறங்கிப் போனான். அவள் கண்கள் அழுதுவிடுமாப்போல் கண்ணீர் ததும்பி நின்றது.

 கீழே இறங்கிக் கொண்ட அவனும், சேலை அணிந்த பெண்ணும் 'பாய்' என்று அவளிற்கு கை காட்டினார்கள். புகையிரதம் புறப்பட்டது.

 எந்த தேவதையின் கடைக்கண் பார்வை விழாதோ என ஏங்கினானோ – அந்த தேவதை இப்பொழுது வரம் கொடுப்பதற்காக இவனின் முன்பாக கறுப்பு என்றாலும் பளிங்கு போன்ற படிகம். முகத்திலே ஒரு தனிக்கவர்ச்சி. அவளின் தோடு - இன்னமும் தோணி போல காதிலே ஆடிக்கொண்டிருந்தது. இலவச அழகை தாராளமாக அள்ளிப் பருகிக் கொண்டான்.

 பிரயாணம் எந்தவித கஸ்டமுமின்றி இருக்கவேண்டுமென இவன் வேண்டிக் கொண்டான். இவனிடம் அரச அலுவலகத்தில் வேலை செய்வதற்கான அத்தாட்சி இருந்த போதிலும் உள்ளூர ஒரு பயம். மோப்ப நாய்களுக்கு முகரும் சக்தி போல. முகமூடிகளுக்கும் இராணுவத்துக்கும் அப்பாவித்தமிழர்களைக் கண்டுபிடிக்கும் வல்லமை அதிகம். போனதடவை கூட வவனியாவிலிருந்து கொழும்பிற்கு வரும்போது மூன்று நான்கு தமிழ் இளைஞர்களை குருநாகலில் இறக்கி இராணுவத்தினர் கொண்டு போனார்கள்.

 இவனிற்கு அருகே இருந்தவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த பேப்பரை வாசிக்கத் தொடங்கினார்கள். சிங்களப் பேப்பர். எதிரே இருந்த அவள் 'இவனை' ஒருதடவை பார்த்துவிட்டு, குழந்தையை மடி மீது சௌகரியமாக இருத்திக் கொண்டாள். இவன் செக்கச் செவேல் என்ற தோற்றம். 'கிளீன் Nஷவ்'. முறுக்கேறிய உடல். ஏதோ ஒரு உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். இவன் தன் கால்களைப் பக்கவாட்டில் நீட்டி அவள் சௌகரியமாக இருக்கும் பொருட்டு வழி சமைத்தான். சிறு பையன் சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். புகைவண்டி சட்டங்கள் மீது தனது தலையைச் சாய்த்து எங்கோ தொலைவில் மலையிடுக்கை நோக்கி அவளது பார்வை நீண்டு போனது. மலைத்தொடருக்கு மேலால் முகில்கூட்டங்கள் விரைந்து சென்றன. அவள் கண்களில் ஏக்கமும் சிந்தனையும் குடிகொண்டு இருந்தன. அவள் கூட ஒரு மழை முகில்தான்.

 அவள் யார்? சிங்களப் பெண்ணா அல்லது தமிழ்ப்பெண்ணா?

 ரயில் பூமி அதிர கடகடத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் குலுக்கத்தில் - சிலவேளைகளில் அவளின் கால்கள் இவன் மீது பட்டு விலகின. குளிர்ந்த பஞ்சிலாலான ஒரு உரசல். அந்தப் பொழுதெல்லாம் ஒரு 'ஜென்டில்மன்' ஆக இவன் நடந்துகொண்டான். இருப்பினும் அவன் மனதினுள்ளே ஒரு மிருகத்தின் பாதச்சுவடுகள் உள்ளே நுழைய எத்தனித்துக் கொண்டிருந்தன.

 வெளியே இருட்டி விட்டிருந்தது. ராகம – பொல்காவெல போன்ற இடங்கள் தாண்டி விட்டன. உள்ளே சில விளக்குகள் மாத்திரம் எரிய பெரும்பாலானவர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். அவள் இவனை ஒரு தடவை பார்த்துவிட்டு, ஜன்னலின் முன்னால் இருந்த சட்டத்தை இழுத்துவிட்டாள். புற உலகக் காட்சிகள் மறைந்தன.

 'ஜனகன். புhலைக் குடிச்சிட்டுப் படு' தனது மகனை அழகு தமிழில் கூப்பிட்டாள். தமிழ்! தமிழ்ப்பெண்!! அந்தச் சிறுவன் பேந்தப் பேந்த விழித்து பால் போத்தலை வாயினுள் வைத்து உறுஞ்சினான். சற்று நேரத்தில் இருவரும் உறக்கத்திற்குப் போய் விட்டார்கள். இவன் தனது வலது கையை மடக்கி தலையணையாக்கி உறங்க முயற்சித்தான்.

 உறக்கம் வரவில்லை. அவளை மேலும் கீழும் ஒவ்வொரு அவயவமாகப் பார்த்தான். கண் மூடி ஒரு மெருகுச்சிலை போல அவள் இருந்தாள். அவளின் எடுப்பான தோற்றமும், கிளர்ச்சியைத் தூண்டும் பருவ மொக்குகளும் இவனை அவளின்பால் ஈர்த்தது. கீறிப் பிளந்து விட்ட உதடுகளில், லிப்டிக்ஸ்கின் சாயம் வைரத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளியென மின்னியது. அவள் பாதங்கள் செருப்பை விட்டு வெளியே வந்து இவனுக்காகவே காத்துக் கிடந்தன. கொழுத்த குட்டிக் குட்டி விரல்கள். ஒரு விரலிலே 'மெட்டி'. அதன் வெண்ணிற ஒளி இவனை 'வா' என்று சமிக்கை செய்தது. இளமையின் மதர்ப்பில் உடல் சிலிர்த்து உன்மத்தம் கொண்டது. ஒட்டகம் இவனது கூடாரத்தினுள் கேட்பாரற்று நுழையத் தொடங்கியது.

 எவ்வளவு நேரந்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது! ஆமை தன் ஓட்டிற்குள்ளிருந்து அவயவங்களை வெளியே நீட்டி அவள் விரல்களிற்கு கொக்கி போட்டது. சங்கமித்ததில் அவன் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியது. மனச்சாட்சி உறுத்த, அறிவு மழுங்கி உணர்ச்சி கொப்பளித்துப் பாய்கிறது. அவள் பேய்த் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தாள்.

 இவனது அங்க சேஷ;டைகள் ஒவ்வொரு படி நிலையாக உயர்ந்தது. ஒரு நிலையில் அவள் இருக்கையில் அங்கும் இங்கும் நெளிந்து விழித்தெழுந்தாள். இவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். சற்று நேரத்தில் மெதுவாக கண்களை இவன் திறந்த போது – அவள் ஒன்றுமே நடவாதது போல இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் அந்தச் செய்கை இவனுக்கு விசித்திரமாக இருந்தது. தனக்கு உடன்பாடாக இருப்பது போலவே உணர்ந்து கொண்டான். அப்போது நேரம் இரவு ஒரு மணியைத் தாண்டியிருந்தது.

 மேலும் அத்தகையதொரு சுகமான வாசிப்பிற்காகக் காத்திருந்தான். இரண்டாம் ஜாமப்பொழுதில் மீண்டும் தன் திருவிளையாடலை ஆரம்பித்தான். முற்றாக விளக்குகள் அணைந்திருந்தன. எங்கும் இருள். அந்தத் தடவை அவள் கண்களைத் திறந்து கொள்ளவேயில்லை. எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் ஒரு அசைவற்ற ஜடம் போல பொறுமையாக சகித்துக்கொண்டாள். தனது முயற்சியில் தோற்றுப் போய் வலிந்த ஒரு கனவுக்குள் இவன் நழுவினான். கனவின் புலத்தில் அந்த அதிசய இரவில் அவளுடன் உறக்கம் கொண்டான்.

 திடீரென இவனை யாரோ தொடுவது போல் இருக்க மெல்ல விழித்துக் கொண்டான். அவள் இவனது கால்களைச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தாள். மெதுவாக விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். அவள் எங்கோ சிந்தனையில் இருப்பவள் போல காணப்பட்டாள்.

 இரவின் நீட்சியில் இயற்கை அவர்கள் இருவரையும் வென்றது.

 வெளியே இருள் விலகத் தொடங்கியிருந்தது. புகையிரதம் மாகோ, அனுராதபுரம் போன்ற இடங்களைத் தாண்டி மதவாச்சியை எட்டிப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் சட்டங்களிற்குள்ளால் செந்நிற ஒளி உள்ளே கசியத் தொடங்கியது. அவள் சட்டங்களை மீண்டும் மேல் உயர்த்தினாள். தக தகத்த செந்நிறச் சூரியன் வானத்தை மெல்ல எட்டிப் பார்த்தான். அவள் முகம் ஒளியில் சிவந்து ஒரு சௌந்தர்ய தேவதை போலக் காட்சி தந்தது. குருவிகளின் கீச்சிட்ட சத்தம் உள்ளே வந்து காதை எட்டியது.

 அவள் ஒரு கையில் பிள்ளையை அணைத்தபடி மறுகையை புகையிரதத்திற்கு வெளியே தொங்க விட்டாள். இவனும் தனது கையை வெளியே நீட்டினான். குளிர்ந்த காற்று இருவரது கைகளையும் வருடிச் சென்றது. இவன் சட்டென்று அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான். இருவருது கைகளும் ஒன்றையொன்று தழுவின. உணர்வின் வெப்பம் உடல்களை ஊடுருவின. இரண்டு குளிர்ந்த கால்கள் இவன் முழங்காலை முறுக்கின. திடீரென ஏதோ நினைத்தவாறு அவள் தன் கையை உள்ளே எடுத்துக் கொண்டாள்.

 இந்தப் பயணம் இனி எதில் போய் முடியும்?

 அருகே இருந்தவர்கள் மெல்ல விழிப்படையத் தொடங்கினார்கள். ஒரு சிலர் தாம் கொண்டுவந்திருந்த பொதிகளை மேலிருந்து இறக்கத் தொடங்கினார்கள்.

 ஈரப்பெரியகுளத்தில் ஒரு சில இராணுவவீரர்கள் புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டார்கள். அவள் ஊர் போய்ச் சேரும் வரைக்கும் - இவன்தான் அவளுக்கு 'கார்டியன்'. அவளது தூக்கியடிக்கும் அங்க அசைவுகளில் சொக்கி, மீண்டும் மீண்டும் அவளைச் சீண்டினான். அவள் ஒன்றுமே நடவாதது போல தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றாள்.

 இவனது தொடர்ந்த செய்கைகள் அவளிற்கு இப்போது கோபத்தையும் எரிச்சலையும் ஊட்டியது. உணர்ச்சியற்ற ஜடம் போல இருந்த அவளது உடல் எதனாலோ ஒருமுறை குலுங்கியது. கண்களில் நீர் திரண்டது. வெறுப்பைக் கக்கும் விழிகளால் இவனை உற்றுப் பார்த்தாள். 'தூ' என்று காறி உமிழ்ந்து ஜன்னலிற்கு வெளியே துப்பினாள். 'இனி என்னைத் தொடாமல் இரு' என்ற எச்சரிக்கையுடன் எச்சில் நிலத்திலே விழுந்தது.

 ஒரு சிறங்கை எச்சிலால் இந்த மனித மனங்களை அடக்க முடியுமா?

 இவன் திடீரென்று அதிர்ச்சிக்குள்ளானான். அவளது அந்த அதிர்ச்சி வைத்தியம் - இவனது அவயவங்களை உள்ளிளுத்து ஒடுங்கச் செய்தது. இதுவரையும் அப்படி நடந்து கொண்டவள் திடீரென்று ஏன் இப்படி மாற வேண்டும்? ஏமாற்றம் கொண்டான். அவளின் அந்தச் செய்கையானது – வடபகுதியின் எல்லைவரை தொட்டு வந்த யாழ்தேவி, வவனியா வரை தனது சேவையை நிறுத்தியது போல இருந்தது.

 புகையிரதம் வவனியாவில் தரிப்பதற்கு முன்பதாகவே அவசர அவசரமாக இருக்கையைவிட்டு எழுந்து கொண்டாள் அவள். 'பாக்'கை தோளிலே மாட்டிக் கொண்டாள். பையனைத் தூக்கி இடுப்பிலே இருத்திக் கொண்டாள். விழுந்துவிடுமாப் போல் தள்ளாடி நடந்து கதவருகே போய் நின்றுகொண்டாள். இவனிடமிருந்து எவ்வளவு விரைவாக தப்பித்துக் கொள்ளலாம் என்பதில் அவள் கவனம் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி சனங்களின் மத்தியில் கலந்துகொண்டாள்.

 இவன் விரைவாகப் புகையிரதத்திலிருந்து குதித்து அவளை அங்குமிங்கும் தேடினான். அப்பொழுது அவள் ஸ்ரேசனின் உட்புறமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். இவன் விரைவாக நடந்து ஸ்ரேசன் வளவிற்குள் நின்ற அரசமரத்தின் பின்னால் ஒதுங்கினான். முன்னே விரிந்து சென்ற பாதை வழியே நடந்து கொண்டிருந்த அவள் - ஒரு தடவை நின்று தன்னை யாராவது பின் தொடருகின்றார்களா எனப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

 'பாரடா தம்பி! உதிலை போறது அகிலாதானே?' அரசமரத்தின் வேரிலே குந்தியிருந்த வயது போன ஒரு முதியவர், தனக்குப் பக்கத்திலே நின்ற சை;ககிள்காரப் பெடியனிடம் கேட்டார்.

 'ஓம் அப்பு!' என்றான் அவன்.

 இவன் முதியவருக்குப் பக்கத்தில் வந்து, 'ஐயா! உங்களுக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா?' என்றான்.

 முதியவர் இவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

 'பாவமடா பெடிச்சி! இப்ப நாலைஞ்சு வரிசமா பிள்ளையோடை புருஷனைத் தேடி, கொழும்பு அங்கை இஞ்சையெண்டு அலையுறாள். கொழும்புக்குப் போன இடத்திலை வெள்ளை வானிலை வந்தவங்கள் பிடிச்சவங்கள். இன்னமும் வச்சிருக்கிறான்களோ அல்லது சுட்டுப் போட்டான்களோ ஆருக்குத் தெரியும்! ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத அப்பாவி அவன்' என்றார்.

 பின் ஏதோ எண்ணம் கொண்டு, 'அவளுக்கு அவள் புருஷன் - வாழ்க்கையிலை ஒரு மின்னலைப் போல' என்றார்.

 முதியவரின் பேச்சில் இவன் திகைத்துப் போனான். ஒருவேளை புகையிரதத்தினுள் நடந்தது கூட அவளின் ஒரு 'தற்காப்பு' முயற்சியோ என்று இவனை சிந்திக்க வைத்தது.

 அவள் போன வழியே – ஆனால் சற்றுத் தாமதித்து - இவனும் நடக்கலானான். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடும் இவன் நெஞ்சை அழுத்தியது. தம்மைத்தாமே எல்லா வகையிலும் மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்த உலகத்தில் - மன்னுப்புக் கேட்கும் திராணியற்று – அவளின் பின்னாலே நடந்து கொண்டிருந்தான். அவளது இடுப்பிலே தொங்கிய பையனின் கால்கள் இவனது மனத்தைப் போல இருபுறமும் ஆடிக்கொண்டிருந்தன.

 அடுத்து வந்த சந்தியில் அவள் மேற்குப் புறமாகவும் - இவன் கிழக்குப் புறமாகவும் பிரிந்து சென்றார்கள். 

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்

Posted by
Aashy

Wednesday, February 5, 2014

The History of the English Language, Animated

by Maria Popova
“The Sun never sets on the English language.”
The history of language, that peculiar human faculty that Darwin believed was half art and half instinct, is intricately intertwined with the evolution of our species, our capacity for invention, our understanding of human biology, and even the progress of our gender politics. From the fine folks at Open University — who previously gave us these delightful 60-second animated syntheses of the world’s major religions, philosophy’s greatest thought experiments, and the major creative movements in design — comes this infinitely entertaining and illuminating animated history of the English language in 10 minutes:
Complement with these 5 essential reads on language and the only surviving recording of Virginia Woolf’s voice, in which she explores the beauty of the English language.

thanks  http://www.brainpickings.org

இராவணன் உபதேசம்

 
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம், இராமன், பவ்யமாக அவன் காலடியில் நின்று, "உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும்" என உபதேசம் வேண்டினான். இராவணன் உபதேசித்தான் ........ 1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர். 2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே . 3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு . 4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே . 5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள். 6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் . Tamil Selvi

Scientists create bone-like material that is lighter than water but as strong as steel

Details -- A new material has been developed, which is said to be lighter than water and stronger than steel. The bone-like stuff was created by Jens Bauer at the Karlsruher Institute of Technology, according to Phys.org.

The reason it's so interesting is that materials which are less dense than water - such as wood and bone - are porous but are generally less intense than denser materials.

Theoretical studies and mathematical models have shown that finding a better balance between strength and density with patterns on the scale of human hair is possible. Building them seemed impossible. But using Nanoscribe 3D printers, the German team made a new material which is both porous and extremely strong based on that research.

"This is the first experimental proof that such materials can exist," Jens Bauer said.

The technique is complex, involving removing areas of polymer with a computer-aided laser, then adding aluminium oxide and submitting materials to stress tests. Bauer's best result is more substantial than all natural and man-made materials, lighter than 1000kg/m3, and as strong as some types of steel. Of course, making it in bulk is still a long way off, and this material won't replace traditional materials. But the more work done in this area, the more likely it is that one day we'll be printing the stuff our homes are made with - if not our homes themselves.

அதிமதுரம்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
முடி உதிர்தல், இளநரை சரியாக....

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.
Photo: முடி உதிர்தல், இளநரை சரியாக....

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 —

முத்திரை..!

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
Photo: முத்திரை..!

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.