Search This Blog
Tuesday, August 7, 2012
ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் .....
1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது
2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology
5 இவரது வங்கி நிலுவை 0
6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .
7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..
9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.
10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்
11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம் ..
Ginger could manage diabetes
THE UNIVERSITY OF SYDNEY |
Share on print
Ginger, the common spice and ancient Asian remedy, could have the power to help manage the high levels of blood sugar which create complications for long-term diabetic patients, a University of Sydney study reports.
The study, published in the prestigious natural product journal Planta Medica, reveals the potential power of ginger to control blood glucose by using muscle cells. Professor of pharmaceutical chemistry Basil Roufogalis who led the research says ginger extracts obtained from Buderim Ginger were able to increase the uptake of glucose into muscle cells independently of insulin. "This assists in the management of high levels of blood sugar that create complications for long-term diabetic patients, and may allow cells to operate independently of insulin," says Professor Roufogalis. "The components responsible for the increase in glucose were gingerols, the major phenolic components of the ginger rhizome. "Under normal conditions, blood glucose level is strictly maintained within a narrow range, and skeletal muscle is a major site of glucose clearance in the body." The pharmacy researchers extracted whole ginger rhizomes obtained from Buderim Ginger and showed that that one fraction of the extract was the most effective in reproducing the increase in glucose uptake by the whole extract in muscle cells grown in culture. Analysis by colleagues in the University's Faculty of Pharmacy Dr Colin Duke and Dr Van Tran showed this fraction was rich in gingerols, particularly the [6]- and [8]-gingerols. Work also undertaken to determine how the gingerols could increase glucose uptake showed an increase in the surface distribution of the protein GLUT4. When the protein localises on the surface of muscle cells it allows transport of glucose into cells. In type 2 diabetic patients, the capacity of skeletal muscle to uptake glucose is markedly reduced due to impaired insulin signal transduction and inefficiency of the GLUT4. "It is hoped that these promising results for managing blood glucose levels can be examined further in human clinical trials," said Professor Roufogalis. The work was carried out through an Australian Research Council Linkage grant.
Editor's Note: Original news release can be found here.
|
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)By ரவிநாக ராஜன்.
இதை ப்டிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள் தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலை தன் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்க்கு தெரியுமா அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளி கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்ப்டியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்க்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரி தான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்ட்வர்களுக்கு இது ஒரு ஆன்டி பயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்களை தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்க்கு இது தான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்க்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிக்கை மற்றும் எல்லாவற்றிக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜி தான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றூம் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்க்கை விஷயம் தான். நல்ல மானிடர் இரு வேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
நயினாதீவுச் சுவாமிகள்
உலகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை.
நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவில் பெரும்பகுதியோர் சைவவேளான் மரபைச்சார்ந்தவர்களாகும். இம்மரபிலே ஆறுமுகம் எனும்பெரியார் ஒருவர் வாழ்நதார். அவருக்கு ஒரு மகன். அம்மகனுக்கு முத்துக்குமாரசாமி என்று நாமகரணம் சூட்டினர். இந்த முத்துக்குமாரசாமியே பிற்காலத்தில் நயினாதீவுச் சாமியார் என்று அழைக்கப்பட்டார்.
உரிய காலத்தில் ஆரம்பக்கல்வி பெற்றார். அக்கால இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆரம்பக்கல்வி முடிந்ததும் முடியாததுமாக யாழ்ப்பாண நகருக்கோ, கொழும்புக்கோ அன்றி கண்டி போன்ற பட்டினங்களுக்கோ சென்றுவிடுதல் வழக்கமாக இருந்தது. முத்துக்குமாரசாமி ஆரம்பக்கல்வி முடிந்ததும் கொழும்புக்குச் சென்று ஒரு வர்த்தக நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். முத்துக்குமாரசாமி வர்த்தக நிலையத்தில் சிப்பந்தியாக வேலை பார்த்தாலும் மனம் இறைபணியையே நாடி நின்றது. ஒருநாள் வர்த்தக நிலைய அதிபர் இவரை ஏசிவிட்டார். அந்த வன்சொல்லை அவரால் பொறுக்க முடியவில்லை.
ரமண பகவானுக்கு பதினாறு வயதாயிருக்கும்போது இவரது தமையனார் இவர் ஒழுங்காக படிப்பதில்லை என்பதை மனதிற்கொண்டு இப்படிப்பட்டவனுக்கு இங்கு என்ன வேலை என்று ஏசினார். இந்த ஏச்சு மனதில் தைக்க, ‘இது நல்ல விடயத்தை நாடிச்செல்லுகின்றது, இதையாரும் தேடவேண்டாம்” என்று ஒரு கடிதத்திலே எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டார். இவருடைய துறவுக்கு இவரது தமையனாரே காரணம் ஆனார்.
இச்செய்தி போன்றுதான் முத்துக்குமாரசாமியும் ஒரு சீட்டுக்கவி மாத்திரம் எழுதிவைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு சென்றுவிட்டார். கவி ஒரு விரசமான கவிதான். ஆனால் அந்த நேரத்து மனஉணர்வை அக்கவி படம்பிடித்து காட்டுகின்றது. பல இடங்களிலும் தேடினார்கள். ஊரிலும் தேடினார்கள். முத்துக்குமாரசாமி சென்ற இடத்தை யாரும் அறியார். துறவுக்கேற்ற பக்குவநிலை ஏற்படும்போது சிறு சம்பவங்கள் கூட துறவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
அக்காலத்திலே இந்தியாவுக்கு சென்று வருவதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. முத்துக்குமாரசுவாமியாருடைய உள்ளம் இறைவனை நாடி இருந்தமையால் தலயாத்திரை மேற்கொண்டார்.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த்த தொடங்கினர்க்கு
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
என்ற தாயுமானவரின் வாக்குப்படி இவரது யாத்திரை வீண்போகவில்லை. இவரிடத்து விளங்கிய தெய்வபக்தி, ஞானம், தூய்மை, மனஅடக்கம், இன்சொல், அருளோடு கூடிய நோக்கு, எந்த நேரமுஞ் சிவசிந்தனை ஆகிய குணங்கள் இவரைத் தகுந்த ஒரு குருவிடம் கொண்டு சென்று சேர்த்தன. அவரோடு பல ஆண்டுகள் தங்கிக் குரு உபதேசமும், சந்நியாசமும் பெற்றுக்கொண்டார். இவரது பக்குவநிலை அறிந்த குருநாதர் நீ உனது ஊருக்கு செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். குருநாதரை பிரிய மனமின்றி பிரிந்து ஊர்நோக்கி வந்தார்.
பல ஆண்டுகளுக்கு பின் நீண்ட சடா முடியும், காவிஉடையும் தரித்த சுவாமியார் ஒருவர் நயினாதீவில் உலாவுவதை நயினாதீவு மக்கள் பார்தனர். எங்களுடைய ஆறுமுகத்தாரின் மகன் முத்துக்குமாரசாமியைப்போலல்லவா தோற்றம் இருக்கின்றது என்று சிலர் பேசிக்கொண்டனர். வேறுசிலர் அதற்கு மறுப்புத்தெரிவித்தனர். முத்துக்குமாரசுவாமி இருக்கும் இடமோ போன இடமோ யாருக்கும் தெரியாது. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே சந்தேகம் என்றனர். மிக நெருங்கிய உறவினர் முத்துக்குமாரசாமியுடன் நெருங்கிப்பழகி அவர் முத்துக்குமாரசாமிதான் என்று தெளிந்து கொண்டனர். உற்றார் உறவினர் அவரை அணுகி தமது இல்லத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர் யாருடைய இல்லத்திற்கும் செல்லுவதற்கு மறுத்துவிட்டார். நாளொரு கோயிலில் சென்று தங்கி வந்தார். கோயில் மண்டபங்களையே தமது வசிப்பிடமாக்கி கொண்டார். கோயில் மண்டபங்களிலேயே படுத்துறங்கி தானும் தன்பாடுமாய் திரிந்த சுவாமியார் என்ன சாப்பிடுகிறார்? எங்கே சாப்பிடுகின்றார் என்பதை யாரும் அறியார்.
நயினாதீவிலே உள்ள மக்கள் சுவாமிகளை முத்துக்குமார சாமியார் என்றே அழைத்தனர். அனால் அயலூரவர்கள் சுவாமியாரை பெயர் சொல்லி அழைக்க அஞ்சிப்போலும் நயினாதீவுச் சுவாமியார் என்றே அழைத்தனர். சுவாமிகளுடைய குருநாதன் பெரியானைக்குட்டி சுவாமிகளேதான். குருநாதன் அவருக்கு என்ன பெயர் வைத்தாரோ யாரறிவார்? இப்படி ஊர்பேர் தெரியாது, உலகுக்குத்த தம்மைக் காட்டி கொள்ளாது மறைந்த மகான்கள் எத்தனைபேரோ யாரறிவார்?
சுவாமியார் என்று பெயர் எடுத்துவிட்டால் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நயினாதீவுச்சுவாமிகள் அதற்கு விலக்கானவர் அல்ல. சுவாமிகள் தமது அடியார் கூட்டத்தோடு வடபகுதியில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் யாத்திரை செய்தருளினார்கள்.
சுவாமியை நாடி வந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றே சென்றனர். சுவாமி கொடுத்த விபூதியை பெற்று உடல்நோய், உள்ளநோய் தீரந்தவர் ஆயிரத்திற்கதிகமானவர்கள். ஆத்மஞானம் நாடிவந்தவர்கள், ஆத்மஞானம் பெற்றனர். சுவாமிகளின் சீடர் கூட்டம் இன்று எல்லா ஊர்களிலும் இருக்கின்றது. தமது சீடர்களின் முதல்வரான சண்முகரத்தினம் அவர்களை கொண்டு நயினாதீவு தென்மேற்கு பகுதி கடற்கரையில், ஒரு தீர்த்தக்கேணி அமைப்பித்தார். இன்றும் நயினாதீவு நாகம்மாள் தீர்த்தம் ஆடிவருவது இத்தீர்த்தக்கேணியில்தான் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
சுவாமிகள் இயல்பாகவே கவிபாடும் திறமை வாய்ந்தவர். இவரியற்றிய தனிப்பாடல்கள் பல உள்ளன. நாகேஸ்வரி தோத்திரமாலை, நாகேஸ்வரி அந்தாதி போன்ற நூல்கள் அன்னாரின் சமாதி நிலையத்தொண்டர் சபையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அடியவர்களுடைய இன்னல்களை வாக்கினாலும் நோக்கினாலும் தீர்த்தருளிய சுவாமியவர்கள் 1949ம் ஆண்டு தை மாதம் 26ம் திகதி தமது அன்பரின் இல்லத்தில் யாழப்பாணம் சிவலிங்கப்புளியடியில் சமாதிநிலை எய்தினார். சுவாமிகளின் திருவுளப்படி அவரின் பூதவுடல் நயினாதீவு காட்டுக்கந்தசுவாமி கோவிலின் மேற்குப்புறத்தில் அடியார்களால் சமாதி வைக்கப்பட்டது. இன்று அதனமேல் ஒரு சோமாஸ்கந்த லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.
சி. வை. தாமோதரம்பிள்ளை
இராவ்பஹதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும், அவர் பத்தினியாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 செப்டெம்பர் 12 இலே பிறந்தார்கள்.
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத்தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக்கற்றுணர்ந்து, சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப் பயிற்சியும், இலக்கணப்பயிற்சியும் பெற்றுத் தமிழ் விற்பன்னராய் விளங்கினார்கள்.
தமிழோடு ஆங்கிலமும் பயில விரும்பிய பிள்ளையவர்கள், தெல்லிப்பழை அமெரிக்க மிசன் கலாசாலையிலே ஆங்கிலக்கல்வியை ஆரம்பித்தார்கள். பின்னர் அம்மொழியிலேயே உயர்தரக்கல்வி பெறும் நோக்கமாக வட்டுக்கோட்டையிலுள்ள, யாழ்ப்பாணச் சர்வ சாத்திரக் கலாசாலையை அடைந்து 1844 ஒக்டோபர் 12 தொடக்கம் பயிற்சி பெற்று வருவாராயினார்கள். அக்கலாசாலையிலே, கறல் விஷ்வநாதபிள்ளை, நெவின்ஸ், சீ. டி. மில்ஸ் முதலிய பேரறிஞர்கள் பிள்ளையவர்களுக்கு ஆசிரியர்களாயிருந்து கற்பித்து வந்தார்கள். பிள்ளையவர்கள் அங்கு கற்பிக்கப்பட்ட பாடங்களுட் கணிதம், ஆங்கிலம், தமிழ், தத்துவம், வானசாத்திரம், என்னும் பாடங்களிலே விசேட திறமைபெற்று முதன்மாணவராய் விளங்கி, யாவராலும் நன்கு மதிக்கப்பெற்றார்கள். பிள்ளையவர்களிடத்திலே விளங்கிய தமிழறிவைக்கண்டு இறும்பூதெய்திய ஆசிரியர் நெவில்ஸ் அவர்கள், பிள்ளையவர்களைப் ‘பண்டிதன்’ என்று அழைப்பது வழக்கமாயிற்று.
இவ்வாறு நன்மதிப்புப் பெற்று, எட்டுவருட காலத்தை ஆங்கில உயர்தரக்கல்வியிற் பயன்படுத்திய பிள்ளையவர்கள், 1952 செப்டெம்பர் 23 இல் தம் இருபதாவது வயதிலே, கோப்பாயிலிருந்த போதனாசத்தி வித்தியாசாலையின் ஆசிரியர்களுள் ஒருவராக நியமிக்கப்பெற்றார்கள். இங்கு கற்பித்து வரும் நாளிலேயே, நீதிநெறிவிளக்க உரை பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது.
அந்நாளில் சென்னையிலே வாழ்ந்த பார்சிவல் பாதிரியார் பிள்ளையவர்களின் விவேகசாதுரியத்தையுந், தமிழ்ப் புலமையையுங் கேள்வியுற்று, அவர்களைச் சென்னைக்கு அழைத்துத் ‘தினவர்த்தமானி’ என்னும் பத்திரிகை ஆசிரியராக நியமித்தார்கள். பிள்ளையவர்கள் பத்திரிகாதருமத்தினின்றும் எட்டுணையுந் தவறாமல், நடுநின்று, விடயங்களை ஆராய்ந்து, வசனநடையை அணிபட அமைத்துப் பத்திரிகையை நடத்தியும் லஷ்சிங்டன் துரை முதலான ஆங்கிலேயருக்கு தமிழ் கற்பித்தும் வந்தார்கள். இதனால், பிள்ளையவர்களது திறமையை நன்கு அறிந்த அரசினர், அவர்களை சென்னை இராசதானிக் கல்லூரித் தமிழப் பண்டிதராக நியமித்தார்கள்.
பிள்ளையவர்கள், இராசதானிக் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராயிருந்து கடமைபுரிந்துவருநாளிற் சென்னைச் சர்வசாத்திரக் கலாசாலை தாபிக்கப்பட்டது. அக்கலாசாலையிலே 1857ம் வருடம் முதன்முதல் நடாத்தப்பட்ட பிரவேச பரீட்சைக்குத்தோற்றிச் சித்தியடைந்த மூவரிற் பிள்ளையவர்களும் ஒருவர். பிரவேச பரீட்சைக்குப்பின் நான்கு திங்களுள், முதன்முதல் பி.ஏ பரீட்சையும் நடைபெற்றது. இப்பரீட்சைக்கும் பிள்ளையவர்கள் தமது ஆசிரியரான காறல் விஷ்வநாதபிள்ளையவர்களுடன் தோற்றிச் சித்தியடைந்தார்கள். இதன்பின், கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலை உதசியாசிரியராக நியமிக்கப்பெற்றார்கள். அவ்வித்தியாசாலையிற் கடமையாற்றிய ஆறு மாதகாலத்துள், அவ்வித்தியாசாலையிலுண்டாக்கிய விசேட அபிவிருத்திகள், சீர்திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர்களுக்கு அரசாங்க வரவு செலவு கணக்குச் சாலையிற் கணக்காய்வாளர் பதவியும், அத்துறையில் காட்டிய திறமை காரணமாக விசாரணைக்கர்த்தர் பதவியும் முறையே கிடைத்தன. இக்காலத்திலே (1871) பிள்ளையவர்கள் பி.எல் பரீட்சையிலும் வெற்றி பெற்றார்கள்.
சின்னஞ்சிறு பராயந்தொட்டே தமிழ்மொழியில் மிக்க பயிற்சியும் சிறந்த தமிழபிமானமுமுடையவராய் இருந்த பிள்ளையவர்களுக்கு, வரவுசெலவுக் கணக்குச்சாலையிற் கடமையாற்றிவருங் காலத்திலே – ஓய்வு நேரங்களிலே, பண்டைத் தமிழ்க் கிரந்தங்களை மேன்மேற் கற்பதிலும், பரிசோதனஞ் செய்வதிலும் ஈடுபாடு உண்டாயிற்று. கடல்கோளாலும் பிற காரணங்களாலும் அரிய பெரிய தமிழ்நூல்களெல்லாம் அழிந்தொழிய, எஞ்சிநின்ற சில நன்னூல்களும், அந்நாளிலே ‘செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னாளேடு’ களாய், ஓரஞ்சிதைந்தும் இதழ் ஒடிந்தும் ‘சீரழிந்து கெட்டுச் சிதைந்து நிரைமாறிப் – பேரழிந்து பூஞ்சு பிடித்துப் பிடியாகி – முன்பின் முரணி முழுதும் புழுவுழுது – கம்பை நடுமுரிந்து கட்டுவிட் டுச்சிதறி – மூலைக்கு மூலை மடங்கி முடங்கி’ எடுப்பாரும் அடுப்பாருமின்றி மண்ணுக்கிரையாகிக் கிடந்தன. இந்நிலையைக் கண்ட பிள்ளையவர்கள், அழிந்தொழிவனவாய அக்கிரந்தங்களுட் சிறந்தனவற்றை விரைந்தச்சிட்டுப் பாதுகாக்க வேண்டியது எத்துணை இன்றியமையாப் பெருங் கடமையென்பதை யுணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளை மேற்கொண்டார்.
முன்னர் – தமது இருபதாவது வயதிலேயே நீதிநெறிவிளக்கத்தை அச்சிட்டு வெளிப்படுத்திய பிள்ளையவர்களுக்கு ஏடுகளைப் பரிசோதனஞ்செய்து அச்சிடுவது புதியதொரு முயற்சியன்று. ஆயினும், இராசாங்க உத்தியோகத்திலிருந்த தமக்கு தேசமெங்குஞ்சென்று பரிசோதனத்துக்குத் தேவையான ஏட்டுப்பிரதிகளைப் பெறுதற்கு போதிய அவகாசமின்மையானும், அந்நாளிலே தமிழ்நாடெங்கணும் மெய்யறிவுறித்திய ஆசாரியாரும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கிய சிறீலசிறீ ஆறுமுக நாவலரவர்கள் இப்பெருங் கடமையை மேற்கொண்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளக்கியும் விரித்தும் அச்சிடுவித்து வந்தமையானும் தாம் அச்சிட்டு வெளியிடத்தொடங்காமல், நாவலரவர்களது பரிசோதனம்பெற்று வெளியாவதே நன்றென்று கருதி, அவர்களுக்கு தம்மாலியன்ற உதவிகளைப் புரிந்து வந்தார்கள். இத்தொடர்பினால் நாவலரவர்கள் பரிசோதித்துக்கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைப் பிள்ளையவர்கள் தம்பெயரால் அச்சிட்டு விபவ (1868) வருடம் புரட்டாதி வெளியிட்டார்களென்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நூல் வெளிவந்தபின் பதினொரு வருடங்கள் கழித்து – 1879 வருடம் கார்த்திகை மாதம் 21 இல் நாவலரவர்கள் இறைவனடி யடைந்தார்கள். அதனால்,
வேதம்வலி குன்றியது மேதகுசி வாகம
விதங்கள் வலிகுன்றி னவடற்
சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது
சொல்லவரி சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்போதிய மாமுனி
புகன்றமொழி குன்றியது நம்
நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக
நாவல ரடைந்த பொழுதே
என்று வருந்தி, நாவலரவர்கள் மேற்கொண்ட பணியைத்தொடர்ந்து நன்னூல்களையெல்லாம் அச்சிட்டுத் தமிழைப் பாதுகாத்தலே தம் வாணாட் கடமையாமெனத் துணிந்த பிள்ளையவர்கள், வீரசோழியம் என்னும் நூலை 1881ம் வருடம் வெளியிட்டார்கள். நாவலரவர்களது மறைவுக்குப்பின் இரண்டு வருடங்கள் கழித்து இராசாங்க உத்தியோகத்தினின்றும் பிள்ளையவர்கள் இழைப்பாறினார்கள். அதன்பின், தமது முழுநேரத்தையும் தாம் ஆற்றத்துணிந்த நற்பணிக்கு செலவிடுவாரானார்கள். அதன்பயனாய், 1883ம் வருடம் தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் என்பனவும், 1885ம் வருடம் தொல்காப்பியம் பொருளதிகாரமும், 1887ம் வருடம் கலித்தொகையும், 1889ம் வருடம் இலக்கண விளக்கம் சூளாமணி என்பனவும், 1891ம் வருடம் தொல்காப்பியம் எழுத்ததிகாரமும், 1892ம் வருடம் தொல்காப்பியம் சொல்லதிகார(நச்சினார்க்கினிய)மும் வெளிவந்தன. (1897 வருட பிற்பகுதியில் புறநானூறு – மணிமிடை பவளம் வரை பிள்ளையவர்களால் பரிசோதிக்கப்பட்டதாயினும், வெளியிடப்படவில்லை)
இந்நூல்களை வெளியிட்டதோடமையாது, கட்டளைக்கலித்துறை என்னும் இலக்கண நூலையும், பொருட்பொலிவு உவமான உவமேயச்சிறப்பு நடையழகு முதலியன செறிந்து கற்றோர்க்கு வியப்பை தரும் வசனசூளாமணியையும் சைவ மகத்துவம் என்னும் செய்யுளும் உரையும் செறிந்த சைவ நூலையும், ஆறாம் ஏழாம் வாசக புத்தகங்களையும் நட்சத்திர மாலை முதலியனவற்றையும் தாமே யாத்து வெளியிட்டார்கள்.
பிள்ளையவர்கள் இராசாங்க உத்தியோகத்தினின்று ஓய்வுபெற்ற பின் 1887ம் வருடம் தொடக்கம் புதுக்கோட்டை சமஸ்தான மகாமன்றத்து நியாயாதிபதிகளில் ஒருவராயும் நீதிபதியாயும் நான்கு வருடங்கள் கடமையாற்றியவர்கள். சென்னைத் திராவிடக்கிரந்த பரிபாலன சபை, நியாய பரிபாலன சபை என்பவற்றில் அங்கத்தவராயும், சென்னைச்சர்வகலாசாலைத் தமிழ்ப் பரீட்சகராயும் இருந்து பணிபுரிந்தவர்கள். சென்னைச் சர்வகலாசாலையின் முதல் வித்தியார்த்தி என்ற பெருமைக்கும் உரியவர்கள்.
தேசமத பாசாபிமானமிக்கவரும் சிவபூசாதுரந்தரரும் ஏடுகாத்த பீடுடையாரும் ஆகிய சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களது சால்புடைமையைக் கண்ட சென்னை அரசாங்கம் 1875ம் வருடம் இராவ் பகதூர் என்னுங் கண்ணிய பட்டம் நல்கி கௌரவித்தது. இத்துணைப் பெருஞ்சிறப்பெய்தித் தமிழரனைவர்களுக்கும் ஒரு தமிழ்த் தந்தையாய் வாழ்ந்த பிள்ளையவர்கள் 1901ம் வருடம் தை 1 செவ்வாயக்கிழமை காலை 9.30 மணியளவிலே வைகுந்த ஏகாதசி என்னும் புண்ணிய காலத்திலே சங்கமிருந்து தமிழாய்ந்த சிவனார்தந் திருவடிக்கீழ் எய்தி அயராவின்பத் தழுந்தினார்கள்.
http://www.thejaffna.comவாழிய வமலன் பாதம் வாழிய தமிழன் மாட்சி
வாழிய வதுகொள் சங்கம் வகுத்தநன் னூல்களெல்லாம்
வாழிய ரருநூல் வல்ல வண்புகழ்ப் புலவர் மேலும்
வாழிய ரந்நூ லோம்பும் வள்ளலெந் தாமனன்னார்.
Monday, August 6, 2012
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்
லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால
வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிரு
க்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

அணுகுண்டு நினைவு நாள் 1945, ஆக., 6ம் தேதி
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இந்த நினைவு நாள், ஒவ்வொரு ஆண்டும் ஆக.6ம் தேதியன்று ‘உலக ஹிரோஷிமா தினம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.‘லிட்டில் பாய்’ எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த ‘பி-29 ரக எனோலாகெய்’ என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இந்த அணுகுண்டு அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். ‘சின்னப்பையன்’ அணுகுண்டு 29 இன்ச் விட்டமும், 126 இன்ச் நீளமும் 9700 பவுண்ட் எடையும் யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்டதாகும்.
இது, அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். (இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது) குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார் (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதனை செய்தது எனவும் கூறப்படுகிறது). இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது, உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது ‘பேட்மேன்’ என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து 6 நாட்கள் கழித்து, 1945 ஆக., 15ம் தேதி ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதலும், கடைசியாகவும் அமைந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த 2 நகரங்களும், இன்று அதன் சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து நிற்பது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது
Subscribe to:
Posts (Atom)