Search This Blog
Thursday, May 10, 2012
களத்து மேட்டிலும் உற்பத்தி செய்யலாம் கரன்ட்...
ரங்க ராசு கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம்.
''ஆம்... இது ஒன்றுதான் எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் போகிறது. இதுதான் உண்மை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார்... இந்த சூரியசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்துப் பாசனம் செய்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயகுமார்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் குளிர்காற்று சிலுசிலுக்க, தோட்ட எல்லையில் ரயில்கள் தடதடக்க, தென்னை மரங்கள் குடை பிடித்துக்கொண்டிருக்க, ரம்மியமாக இருக்கிறது விஜயகுமாரின் தென்னந்தோப்பு. களத்துமேட்டில், தான் அமைத்திருக்கும் சூரியசக்தி மின்சார உற்பத்தி அமைப்புகளை நம்மிடம் காட்டியவர், ''கரன்ட் தட்டுப்பாடை என்னால சமாளிக்க முடியல. அதனாலதான், சோலார் பவர் ஜெனரேட்டர் மூலமா, பம்ப்செட்டை இயக்க ஆரம்பிச்சுட்டேன்.
கோயம்புத்தூர்தான் என்னோட பூர்விகம். போன தலைமுறையில செல்வாக்கான விவசாயக் குடும்பம். ஆனா, நான் இன்ஜீனியரிங் படிச்சுட்டு, 40 வருஷமா மெஷினுக்குள்ளயே வாழ்ந்துட்டேன். ஆனாலும், மனசுக்குள்ள விவசாய ஆசை போகல. பொண்ணு, பையன் ரெண்டுபேரும் படிச்சு அமெரிக்காவுல செட்டிலாகி நல்லா சம்பாதிக்கறாங்க. 'இனி மெஷின் வாழ்க்கை போதும்’னு விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். கணிசமான பணம் கையில இருந்துச்சு. அதை வெச்சு, செழிப்பா இருக்குற இந்தத் தோப்பை வாங்கினேன்.
வருஷம் முச்சூடும் தண்ணீர் தளும்புற கிணறு. இருந்தாலும், சொட்டுநீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். காய்ப்புக்கெல்லாம் குறையில்ல. அதனால என்னோட விவசாய வாழ்க்கை சந்தோஷமாதான் போயிட்டிருந்திச்சு. ஆனா, கரன்ட் பிரச்னை வந்ததுக்கப்பறம் ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. கிணறு நிறைய தண்ணி இருந்தும் ஒழுங்கா பாசனம் பண்ண முடியாம, மரங்கள்லாம் காய ஆரம்பிச்சுச்சு. குரும்பையெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.
'என்ன செய்றது’னு தீவிரமா யோசிச்சு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டேன். 'ஜெனரேட்டர் வாங்கலாம்’னு சிலர் யோசனை சொன்னாங்க. அதைப்பத்தி விசாரிச்சப்போ... 'அது, சாத்தியமே இல்லை. விவசாயத்தைக் காலி பண்ணிடும்’னு தெரிய வந்துச்சு. அதுக்கப்பறம்தான் 'சோலார் பம்ப்செட்’ பத்திக் கேள்விப்பட்டேன்.
உடனே, ஒரு கம்பெனியில விசாரிச்சேன். ஒருத்தரோட தோட்டத்துல சோலார் மூலமா இயங்குற பம்ப்செட்டை நேர்ல போய் பாத்தேன். 500 அடி ஆழ கிணத்துல இருந்து சோலார் மூலம் தண்ணீர் கொட்டுச்சு. அதைப் பாத்ததும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே, 5 ஹெச்.பி மோட்டாரை இயக்குற அளவுக்கு அரை சென்ட் நிலத்துல சோலர் பேனல்களை அமைச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் விஜயகுமார்.
6 hours ago · Like · 1
ரங்க ராசு Anbalagan Veerappan இந்த சூரியசக்தி மின்சாரத் தயாரிப்புக்கான ஒரு பேனல், நான்கே முக்கால் அடி நீளமும்... இரண்டேகால் அடி அகலமும் இருக்கும். ஒரு பேனல் 145 வாட்ஸ் திறன் அளவுக்கு மின் உற்பத்தி செய்யும். ஒரு குதிரைத்திறன் மோட்டாருக்கு 1,000 வாட்ஸ் தேவை. இந்தக் கணக்கில் 5 குதிரைத்திறன் மோட்டாரை இயக்க 36 பேனல்கள் தேவைப்படும். இவற்றின் மூலம், ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரத்து 220 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
பேனல்கள் டி.சி. மின்சாரத்தைத்தான் உற்பத்தி செய்கின்றன. அதை ஏ.சி. மின்சாரமாக மாற்றினால்தான் பம்ப்செட் இயங்கும். அதற்கான அமைப்புகளும் உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரைதான் நல்ல சூரிய ஒளி கிடைக்கும். அந்த நேரத்தில்தான் இந்த அமைப்பை இயக்க முடியும். இதன் மூலம் மணிக்கு 6 ஆயிரம் லிட்டர் முதல்
8 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் இறைக்க முடியும்.
பம்ப்செட்டை இயக்கிக் காட்டிய விஜயகுமார், ''இதோட விலைதான் ரொம்ப அதிகமா இருக்கு. 5 ஹெச்.பி. மோட்டார் இயங்குற அளவுக்கு பேனல்கள் அமைக்க 5 லட்ச ரூபாய்க்கு மேல செலவாகுது. அரசாங்கம் மானியங்களை அதிகப்படுத்திக் கொடுத்தா, சோலார் மின்வசதியை சிறு-குறு விவசாயிகளும் பயன்படுத்த முடியும்'' என்கிற நியாயமான வேண்டுகோளையும் முன் வைத்தார்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் துணைப்பொது மேலாளர் சையது அகமதுவிடம் சூரியசக்தி பம்ப்செட் பற்றி பேசியபோது, ''நீர் இறைக்கும் பம்ப்செட்டுக்கு, ஒரு வாட் திறனுக்கு 81 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியமாக கிடைக்கும். அண்மையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற வேளாண் மானியக் கோரிக்கையில் கூட, 'சோலார் பம்ப்செட் அமைக்க உதவி செய்யப்படும்’ என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, வரும் காலங்களில் சோலார் பம்ப்செட்டுக்கு நல்ல காலம்தான். மேலும் தகவல் தேவைப்படுபவர்கள் எங்களது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று சொன்னார்.
6 hours ago · Like · 1
ரங்க ராசு தொடர்புக்கு,
விஜயகுமார், செல்போன்: 97900-05054.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே சம்பத் மாளிகை,
5-வது தளம், கல்லூரிச் சாலை, சென்னை-6.
தொலைபேசி: 044-28224830, 28236592.
பேராசிரியர். வெங்கடாச்சலம்,
செல்போன்: 94429-61793..
அடுத்தத் தலைமுறைக்கானது சூரிய மின்சக்திதான்...
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிராற்றல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் வெங்கடாச்சலம், ''பல்கலைக்கழகத்தில், சூரியஒளி மின் ஆற்றல் உற்பத்திக்கான ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு எனர்ஜி டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன் மற்றும் புதிய மற்றும் வற்றாத ஆற்றல் வள அமைச்சகம் ஆகியவற்றிடம் சோலார் உபகரணங்களுக்கு மானியம் கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளோம். ஏழை விவசாயிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வாடகை முறையில் சோலார் உபகரணங்கள் அமைத்துக் கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
அடுத்தத் தலைமுறை விவசாயத்தை ஆளப்போவது சோலார் எனர்ஜிதான் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதற்கான ஆலோசனைகளை வழங்க உயிர்-ஆற்றல் துறை தயாராக உள்ளது. மேலும் கார்ப்பரேட் கம்பெனிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களின் மொட்டைமாடிகளும் சோலார் மின்சார உற்பத்திக் களங்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை'' என்றார்.
20 ஆண்டுகள் உழைக்கும்!
கடந்த 25 ஆண்டுகளாக சூரிய மின்னாற்றல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியாளர் உதயகுமார், ''சோலாருக்கு தேவையான எல்லா மூலப்பொருட்களும் பல சட்டதிட்டங்களுடன் இறக்குமதி செய்யவேண்டி இருக்கிறது. அதற்கான வரிகளும் அதிகமாக இருப்பதால்தான் இதன் விலை அதிகமாக உள்ளது. சோலார் எனர்ஜி மூலமாக எல்லா பம்ப்செட்டுகளையும் இயக்கலாம். கிணற்றின் ஆழம், குறையகுறைய நீரின் வேகம் அதிகரிக்கும். வெயில் அதிகம் கொளுத்துகிற மாவட்டங்களில் இது மிகச் சிறப்பாக செயல்படும். சோலார் பேனல்களை ஒரு முறை பொருத்தி விட்டால்... 20 ஆண்டுகள் வரை எந்தப் பிரச்னையும் இருக்காது. குறைந்த சூரியஒளியில் இதை இயக்குவது பற்றியும், கட்டுப்படியாகிற விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும் நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னார்.
கோபக்கார மனைவியை சமாளிக்க சில டிப்ஸ்
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர்.
குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.
உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்
உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.
உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.
முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.
வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.
மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.
கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.
மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.
மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.
எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்.
|
விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீகள்
கணணி பாவனையாளர்கள் மத்தியில் விண்டோஸ் 8 பிரபல்யமடைந்து வருகின்றது, இதற்கான ஷார்ட் கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் கீ: தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.
விண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
விண் கீ +Tab: மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
விண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
விண் கீ + H: ஷேர் சார்ம் கிடைக்கும்.
விண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
விண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.
விண் கீ + F: பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.
விண் கீ + W: செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.
விண் கீ + P: செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.
விண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற.
விண் கீ + X: விண்டோஸ் டூல் மெனு பார்க்க.
விண் கீ +O: ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட.
விண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல.
விண் கீ +Shift + .: ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல.
விண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக்(Toasts/Notifications) கொண்டு வர.
விண் கீ +: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப்(Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர.
விண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.
விண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.
விண் கீ + E: கம்ப்யூட்டர்(மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.
விண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
விண் கீ + U: Ease of Access Center திறக்கப்படும்.
விண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
விண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.
விண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
விண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
விண் கீ + Alt + 1..10: டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.
விண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
விண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.
விண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
விண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
விண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
விண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
விண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
விண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
விண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.
விண் கீ + F1: Windows Help and Support இயக்கப்படும்.
விண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up: முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்.
Page Down: பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்.
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.
Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.
|
மச்சத்தின் மகத்துவங்கள்
மச்சம் உடம்பில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், ஆனால் மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவதே மச்சம் ஆகும்.
இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது.
அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிஸ்பேன், அவுஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
|
புற்றுநோய்க்கு புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு
புற்றுநோயை குணப்படுத்துவதற்கு தற்போது புதிய ஊசி மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் கீமோதெரபி, ஊசி மருந்து போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கிளாஸ்கோ மற்றும் என்.எச்.எஸ் வோதியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய ஊசி மருந்தை புற்றுநோய் பாதித்த பகுதியில் செலுத்தினால், அதன் பாதிப்பு பெருமளவில் குறைவதுடன், தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஊசி மருந்து பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|
பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.
இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர், கடவுச் சொல் கொண்டு லொகின் செய்தும் இருக்கலாம்.
பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.
இதைச் செய்வதற்கு,
1. பேஸ்புக்கில் லொகின் செய்த பின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down மெனுவில் "Privacy Settings." ஐ தெரிவு செய்யுங்கள்.
2. அதில் Apps and Websites சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்.
3. Apps You Use இல் கிளிக் செய்த பின்னர் "Edit Settings" அழுத்தினால் application settings செல்ல முடியும்.
4. அங்கே பட்டியலிடப்படும் application களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.
பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
|
Wednesday, May 9, 2012
Improved roots will boost crops
THE UNIVERSITY OF WESTERN AUSTRALIA |
Share on print
Researchers at The University of Western Australia say that "next frontier" of agricultural science is understanding the root system and function of crop plants to significantly increase Australian grain production, keep farms viable and help continue to feed the world despite the onset of increasing drought and climate change.
In a project at The University of Western Australia, researchers experimented with lupin roots with an overall aim to improve the water use and nutrient uptake of narrow-leaf lupin varieties that account for half of all grain legumes produced in Australia - an industry worth more than $600 million a year. The study, published this week in the international journal Plant Soil, warned that Australian grain producers faced increasing threats from poor local soils, harsh growing conditions and declining, less-predictable rainfall due to climate change. To help address this, a team led by UWA-based Chief Investigators Winthrop Professor Zed Rengel and Winthrop Professor Kadambot Siddique used new screening techniques and advanced computer modelling to understand lupin root systems variability. "We screened world's largest lupin genetic resource collection and identified tremendous genetic variation in lupin root systems," Professor Zed Rengel said. "Our findings may be used in breeding new varieties of lupins with modified root system and function that may produce higher yields in soils with relatively limited water and nutrient resources." Similar approaches could also be used to identify genetic variation in root system and function in Australian cereal crops such as wheat and barley, said Winthrop Professor Kadambot Siddique, Director of the Institute of Agriculture at The University of Western Australia. Professor Siddique said climate change and increased risk of drought made it imperative for Australia to develop new ways to make crops more water and nutrient-efficient. Roots efficient in acquiring soil resources (water and nutrients) are fundamental to growing high-yielding crops in Australian soils, but have been largely ignored by scientists - "it's the next frontier of agricultural science", he said. "Traditional crop root systems are poorly suited to the harsh environmental conditions of Australian agriculture. Their inefficient use of water and fertilisers not only reduces yields but also increases salinity and algal blooms (eutrophication) in waterways due to excessive nutrient run-off. "Farming terms of trade - commodity value relative to production cost - have declined consistently over time. Although this has been offset substantially by increased production efficiency, the onset of climate change may ultimately make farming unprofitable and threaten our ability to feed the world." "Use of nitrogen and phosphorus fertilisers to grow crops in water-limited, nutrient-poor Australian soils is a big cost that will increase for grain producers as energy prices rise and rock phosphate stocks dwindle. "Improved and more efficient root capture systems may cut costs and substantially increase Australian grain harvest yields, with the added benefit that better nitrogen uptake may also significantly improve grain quality. The UWA-based study - in collaboration with the Western Australian Department of Agriculture and Food, Tasmanian Institute of Agricultural Research and US Pennsylvania State University - was funded by an Australian Research Council Discovery Project grant and paves the way for further similar research in wheat and barley.
Editor's Note: Original news release can be found here.
|
Subscribe to:
Posts (Atom)