Search This Blog

Monday, December 21, 2015

Nature


















பேசாம மாடுமேய்க்கப் போயிருக்கலாமோ????????????????

ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்... அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்...
ராமசாமி பி.டெக் முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க... அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்... ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க.... இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்...
ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்... வீட்டில் வசவுகள் தாங்க முடியவில்லை... வீட்டில் மட்டுமா?... சுற்றத்தார். நண்பர்கள் என்று அனைவரும் கரித்துக் கொட்டுகிறார்கள்...
அதுமட்டுமா?... ஆலோசனைகள் அள்ளி வழங்குகிறார்கள்... இட்லிகடை வை, காய்கறி விற்கப்போ, பெட்டிக்கடை வை, பால் வியாபாரம் செய், மளிகைக்கடை வை என்று..... மாடசாமியின் அப்பாவுக்கோ சொல்லவொண்ணா வேதனை... மகன் இப்படி செய்து விட்டானே என்று... மாடசாமியோ இடிந்து போய் விட்டான்... கடைசியில் ஒரு வழியாய் மனதை தேற்றிக்கொண்டு.. அம்மாவின் நகைகளை வங்கியில் வைத்து இரண்டு லட்சமும், அப்பாவிடம் இரண்டு லட்சமும் கடன் வாங்கி, நான்கு எருமைகள் வாங்கி பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்...
ராமிசாமி க்ரடிட் கார்டுமூலம் பைக் வாங்குகிறார்... மகிழ்ச்சியாய் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார்... மாடசாமி டி.வி.எஸ் 50 வாங்குகிறார்... அதில் பால் கேன்களை கட்டிக் கொண்டு பால் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறார்... இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள்... ராமசாமி மகிழ்ச்சி பொங்க ‘ஹாய்’ என்று சொல்லி கையசைக்கிறார்... மாடசாமியோ அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டு ‘ஹாய்’ சொல்லிவிட்டு தப்பித்து வீட்டுக்கு வேகமாக சென்று விடுகிறார்...
ஆறு மாதங்களுக்குப் பிறகு.......
ராமசாமி தான் வாங்கிய பைக் லோனில் 20 சதவீதத்தை கட்டியிருக்கிறார்.... மாடசாமி தன் அப்பாவிடம் வாங்கிய 2 லட்சம் கடனில் 1 லட்சத்தை எப்படியோ கட்டி விடுகிறார்... அதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிடுகிறார்... இப்போது மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் கட்டவேண்டிய லோன் பாக்கி நினைவுக்கு வருகிறது... மாடசாமிக்கோ... தான் இன்னும் கட்டவேண்டிய ஒரு லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது...
ஒரு வருடத்திற்குப் பிறகு.........
ராமசாமி சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்... பொருளாதார மந்த நிலை காரணமாக சம்பள உயர்வு இல்லை.... இப்போது அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகிறது... மாடசாமிக்கு 30% லாபம் கூடுகிறது... அப்பாவிடம் வாங்கின கடனை அடைத்து... அம்மாவின் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு விடுகிறார்... ராமசாமி தன் பைக் லோனை அடைத்துவிட்டு, சொந்த லோனாக 2 லட்சம் 16% வட்டியில் வெளிநாட்டு வங்கியில் வாங்குகிறார்... அதைக்கொண்டு வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், எல்.சி.டி டிவி, லேப்டாப் என்று வாங்கி மகிழ்கிறார்... சுற்றத்தாரும் நண்பர்களும் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நன்றாக சம்பாதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்கிறார்கள்... மாடசாமியோ... மேற்கொண்டு 12 எருமைகள் வாங்குகிறார்....
இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் வாங்கிய 2 லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது... மாடசாமியோ கம்பீரமாக புன்னகைக்கிறார்... காரணம் அவருக்கு எந்த கடனும் இல்லை....
இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
ராமசாமிக்கு 10% சம்பள உயர்வு வருகிறது... அதைக் கொண்டாட குறைந்த வட்டியில் கார் லோனில் கார் வாங்குகிறார்...அந்த சமயத்தில் மாடசாமி... எருமைகள் மேய இடம் போதாமையால் 2 ஏக்கர் நிலம் வாங்குகிறார்... மேலும் அதில் மேய இரண்டு டஜன் எருமைகளும் வாங்குகிறார்... இப்போது பாலின் விலை 30% அதிகரிக்கிறது... இப்போது மாடசாமியின் வருமானம் 200% அதிகரிக்கிறது... மாடசாமி ஒரு ஆட்டோ வாங்கி... பால் வியாபாரத்தை கவனிக்கிறார்... இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமி கடன்வாங்கி வாங்கிய காரிலும், மாடசாமி சொந்த ஆட்டோவிலும் இருக்க..... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.....
நான்கு வருடங்களுக்குப் பிறகு..........
ராமசாமி 40 லட்சம் கடனில் அடுக்குமாடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்... மாடசாமியின் எருமைகளின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது....மாடசாமி சொந்தமாய் ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்..... இப்போது மீண்டும் பாலின் விலை உயர்கிறது.... லிட்டர் விலை 40 ரூபாய்... மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 500% உயர்ந்திருக்கிறது... வேறு வழி இல்லாமல் மாடசாமி ஒரு ஸ்கோடா காரும், ஒரு இன்னவோ காரும் வாங்குகிறார்.... இப்போது இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.... ராமசாமிக்கோ 40 லட்சம் கடனை நினைத்து பயங்கர டென்சன்... அதேமாதிரி மாடசாமிக்கோ சொந்தமாய் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பித்த டென்சன்... இப்போது அவரிடம் 25 பேர் தொழிலாளிகளாய் வேலை செய்கிறார்கள்....
ஐந்து வருடங்களுக்குப் பிறகு.....
ராமசாமியின் வருட வருமானம் 7 லட்சமாய் உயர்ந்திருக்கிறது... ஆனால் மாடசாமிக்கோ சொத்தின் மதிப்பு நான்கு கோடியாகவும், மாத வருமானம் 5 லட்சமாய் இருக்கிறது...
*
*
*
*
2008 ல் பாலின் விலை... லிட்டர்15 ரூபாய்... இப்போது 40 ரூபாய்... அப்போது தங்கம் பவுன் 12,500. இப்போது பவுன் 25,000. ஐந்து வருடங்களாக பொறியாளர்களின் சம்பள உயர்வு 30% மட்டுமே... ஆனால் பெரும்பாலான மக்கள் பொறியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்கள்......
கதையின் நீதி..... பேசாம மாடுமேய்க்கப் போயிருக்கலாமோ????????????????

Saturday, December 19, 2015

Etruscan gold and amber ornaments * 400 BC


The tyres/tires are black because:



The tyre's black colour comes from the carbon black which makes the tyre rough and tough, and gives high heat resistant character. Moreover the old tyres which were used long back were white in color only.

30 மணிநேரத்தில்,1330 குறள்களால் வரைந்து முடிக்கப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்


Mystic River


Based on the novel of the same name by Dennis Lehane, Mystic River is a 2003 mystery drama/phychological thriller directed by Clint Eastwood and starring Sean Penn, Tim Robbins, Kevin Bacon and Laurence Fishburne.
The movie starts off with a scene set in 1975 when childhood friends Jimmy, Sean, and Dave are playing baseball in the street. A man posing as a police officer orders Dave to get into his car, leading to his abduction and sexual assault in the basement of two men from which he manages to escape after four days of torture.
In 2003, Dave (Robbins) has become a timid and scarred family man whilst Jimmy (Penn) is a reformed convict and Sean (Bacon) a homocide detective. When Jimmy's 19-year-old daughter is found brutally murdered, Sean gets to investigate the case with his partner Whitey (Fishburne), taking him back into his old Irish Boston neighborhood and both of his old pals. As the investigation progresses, Jimmy vows to find his daughter's killer before the police do and both him and Sean slowly start to suspect that their strangely behaving old friend Dave might be keeping a dark secret from them.
Mystic river stands out because of its tightly constructed screenplay, which handles a plethora of characters with seeming ease whilst slowly building tension throughout the entire film. Not only does the film work as an intricately woven murder mystery but it also handles the theme of how the past influences the present with grace whilst giving all its characters sufficient screen time. The film also looks great thanks to Tom Stern's solemn cinematography and it's the first of director Clint Eastwood's films to also be scored by the Hollywood legend. My personal favorite in the director's lengthy career, Mystic River is a very solid crime drama which doesn't shy away from a consistently bleak tone. The film was nominated for six Academy Awards, including Best Film and Director, winning two for Best Actor for Penn and Best Supporting Actor for Robbins who both also walked away with the Golden Globes in the same categories. It was also nominated for the Palme d'Or at Cannes, where it won the Golden Coach award, was nominated Movie of the Year at the AFI Awards and won Best Foreign Film at the Blue Ribbon Awards, the César Awards and the Kinema Junpo Awards in addition to many other worldwide nominations and awards.

நம்ப முடியவில்லை!! தமிழ்நாட்டில் இப்படிஒரு ஹை-டெக் கிராமம்




நம் தமிழ்நாட்டில் இப்படிஒரு ஹை-டெக் கிராமம் !!!
பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.

இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார். இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
“திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங் களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக் களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விக்ஷன்’ கேமரா வசதியும் உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்துள்ளார்கள். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கின்றார்கள். இந்த ஒலிபெருக்கி மூலம் எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம்.
அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத் திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.
இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கின்றார்கள். எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கின்றார்கள். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து வாங்குகின்றார்கள்.
இந்த ஊரில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் இந்த கிராமம் செயல்படுகிறது.
ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம், ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக் கழிப்பறை கள், குளியலறைகள் என பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகின்றார்கள். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றார்கள்.
இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம், வெளிநாடு களில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியால் தான் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியிருக்கின்றார்கள். இதுவரைக்கும் சி.சி.டி.வி கேமரா மூலம் 6 திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
சிசிடிவி கேமரா மாட்டியிருப்பதால் இது ஒரு வசதியாப் போச்சு. எதுவானாலும் கேமராவுல பதிஞ்சுடும்னு ஒரு பயம் இருக்கு. நைட் விஷன் பதிவு வசதி இருப்பதால் இரவில் மது அருந்துவது, தெருக்களில் உறங்குவது தடுக்கப்பட்டுள்ளது.108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் இந்த ஊர் மக்கள் திட்டம் போட்டுருக்காங்க..
கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், பளிச்சிடும் தெருவிளக்குகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலிப்பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கவனிக்கத்தக்கவையும் கூட. பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டியுள்ளது. இந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன..
இந்த ஊரின் பஞ்சாயத்து தலைவி திருமதி கமலா பாலகிருஷ்ணனை மனதார பாராட்டுவோம்....

Friday, December 18, 2015

G Space


The article linked in this post is proclaiming and, above all, calculating that spacetime is emerging from quantum entanglement, a concept that Mark Van Raamsdonk tantalized years ahead. But it is just a twisting the holographic Maldacena's most famous idea with the CFT. Thus it is a role model Universe, a possible Universe, but not our Universe. So far, following up this math way of making "physics" I will bet for the concept in the paper published in ArXiv some months ago and pasted at the end of this paragraphs. It is connected with the "G Space", beyond the Hilbert Space, postulated in the UNST or Nature Mechanics.
That paper has explored a starting point for quantum gravity grounded in quantum mechanics, rather than beginning with spacetime. This approach is suggested by indications that the usual locality of local quantum field theory is not a fundamental property of gravitational theory, as I showed in other posts in my page Nature Mechanics some days ago, and by difficulties of approaches that begin with spacetime and then try to quantize the metric.
If the correct framework for quantum gravity is intrinsically quantum-mechanical, an important question is what mathematical structure is needed beyond that of Hilbert space. While for finite or locally finite quantum systems important additional structure is supplied by a tensor factor structure for the Hilbert space, such a structure is problematic even in field theory both due to the type-III property (infinite entanglement), together with the presence of long range gauge fields. Instead, one focuses on the algebraic structure, and a net of subalgebras which correspond to subregions of the spacetime. Moreover, in gauge theory only certain restricted classes of operators define commuting subalgebras.
These observations prompt exploration of a possible fundamental role for the algebra of observables in quantum gravity, and indicate the importance of understanding further refinements of this algebraic structure. Given that a particle is inseparable from its gravi- tational field, and that gravity apparently cannot be screened, one finds an obstacle to even identifying a subalgebra structure associated with regions, a subtlety going beyond that of gauge theory. This is readily seen if one assumes a principle of correspondence, where the quantum structure of gravity approximately matches onto that of quantized general relativity in the long-distance/low-energy limit. Even in this limit, gravitationally-dressed operators generally fail to commute even when describing excitations which na ̈ıvely are created in spacelike-separated regions. Thus, this further confirms and quantifies the limi- tations of local quantum field theory that have been parameterized by locality bounds. One does find that commutators can be small, in the long-distance/low-energy limit, so it appears possible to recover the subalgebras of local quantum field theory approximately in the correspondence limit.
This discussion appears to have important implications for attempts to find a quantum theory of gravity. There is not a clear primary role for entanglement, given the difficulty with defining tensor factorizations, and it is difficult to see how spacetime itself could emerge from entanglement. Moreover, if one takes a quantum information perspective and thinks of particles as roughly corresponding to qubits, and asks the question “how big is a qubit?” it appears that the answer is that the qubit is arbitrarily large in the sense of having infinitely extended weak field, and moreover its strong-field region grows with the energy of the qubit. This is a qualitative difference with behavior of more familiar quantum systems.
If quantum gravity can be formulated in such an intrinsically quantum-mechanical framework, it will be very important to further characterize the structure of its algebra of observables, and possible refinement of that structure. Important guides in this include correspondence with the known long-distance/low-energy behavior of gravity. Indeed, ul- timately one might anticipate that the familiar geometric structure of spacetime emerges from a more basic quantum algebraic structure, defining such a “quantum emergent geometry.”
In conclusion, the phys-math Nature Individuality is at the very deep bottom of the reality.
http://arxiv.org/pdf/1503.08207.pdf

The Chenab Bridge it will be the tallest rail bridge in the world and even 35m higher than the Eiffel Tower!

The Chenab Bridge is an under-construction rail bridge, located between Bakkal and Kauri in the Reasi district of Jammu and Kashmir. the bridge will be 1,315m-long, with a 480m-trussed arch span, 359m above the river Chenab and a 650 m-long viaduct on the Kauri side. Once completed, it will be the tallest rail bridge in the world and even 35m higher than the Eiffel Tower!

An ancient carving of Dancing Ganesha dating back to the 10th centruy AD found in Ashapuri

An ancient carving of Dancing Ganesha dating back to the 10th centruy AD found in Ashapuri now in the State Museum of Madhya Pradesh, India

Anarkali Tomb (Lahore)


Paintings on Buddhism


















Is Quantum Weirdness Confined to the Micro Scale?


Physics is very good at producing pristine models clear of noise that perform over time exactly as predicted. This became a world view known as ‘determinism’, that if you knew enough about the initial conditions of a system with sufficient precision you could predict all future events associated with that system.
Whilst precision was never sufficient to predict the state of a system perfectly for long, any deviation was seen as the result of noise, variables not identified or lack of precision of the measuring instruments.
This all changed with the discovery of quantum uncertainty and the probabilistic nature of events at the quantum scale. Even though the macro world is built upon the quantum world, the old world view persists anyway on the macro scale. But are we just choosing not to look at the macro world, the world of the human scale, in a way in which the uncertainty known at the quantum is not in evidence?
Ordinary people believe that the future is uncertain and use language to describe it that is more like scientist’s description of the probabilistic quantum world. The assumption has always been that individuals simply can’t have enough information about current conditions to predict future events. But does predictability have a thermodynamic nature in that only closed systems, those swept of noise, are actually predictable and only when there are large numbers of particles? Are open systems intrinsically unpredictable due to the accumulation of uncertainty?
Let us consider a photon emitted from some point and interacting without being absorbed. The probabilistic nature of the photon’s path spreads from each point of interaction (see the attached illustration). Looking back from the point of interaction we can determine the photon’s path (or confine the probable paths) but looking forward we can only say that the photon will take one of the possible paths but not which path it will take.
If, instead of a single photon we project a laser beam then the majority of photons will follow the shortest path between emitter and absorber, but all other possible paths are still in play. So the beam is more predictable than the single photon.
Now we consider the point of interaction. Let us call the interaction point ‘The Present’, the path followed to that point ‘The Past’ and the field of possible paths to the absorber ‘The Future’. Does this look familiar to us? Of course it does, that is our lives. Looking back from the present we can see the path we took to arrive at where we are today, or limit the possible paths we could have taken, and looking into the future we see the possible paths spread out into a field of possibilities.
In physics we typically have a time line with a future and past and events arrayed quite differently to the above description. Why the big difference? The answer is that we typically map the evolution of interaction points, the present, and never the future and past fields if they can be avoided. Thus we do not identify a fixed point and consider the future and past *relative* to that point but map only the ‘present’ at a future or past time (hence the imagined time travel to ‘the present’ at a different point on a timeline). This is actually very similar to the more deterministic past in the illustration. Shift the observation point to half way between the interaction point and the emission point on the left in the illustration and you have something resembling a standard timeline presentation.
In the quantum world we effectively see ‘chunks’ of time which include the particle’s more deterministic past and indeterminate future. We do not normally see chunks of human time, we never ‘see’ the array of future paths, we tend to see the world from the interaction point, the present, unless we are looking at, for instance, a newborn baby in which case there is so little past that we can only see (in our imagination) the array of possible paths from the present and the probabilistic nature of the baby’s future.
Viewed from a sufficiently objective distance, the human world includes many of the unusual conditions thought to be confined to the quantum world alone smile emoticon

Thursday, December 17, 2015

Big moves in protein structure prediction and design


Custom design with atomic level accuracy enables researchers to craft a whole new world of proteins



The potential of modular design for brand new proteins that do not exist in the natural world is explored Dec. 16 in the journal Nature. The reports are the latest in a recent series of developments toward custom-designing proteins.
Naturally occurring proteins are the nanoscale machines that carry out nearly all the essential functions in living things.
While it has been known for more than 40 years that a protein's sequence of amino acids determines its shape, it has been challenging for scientists to predict a protein's three-dimensional structure from its amino acid sequence.
Conversely, it has been difficult for scientists to devise brand new amino acid sequences that fold up into hitherto unseen structures. A protein's structure dictates the types of biochemical and biological tasks it can perform.
The Nature papers look at one type of natural construction: proteins formed of repeat copies of a structural component. The researchers examined the potential for creating new types of these proteins. Just as the manufacturing industry was revolutionized by interchangeable parts, originating protein molecules with the right twists, turns and connections for their modular assembly would be a bold direction for biotechnology.

What high blood pressure (hypertension) can do


High blood pressure is a major cause of heart disease and strokes, but it also cause kidney disease, some types of dementia and eye problems.
Your brain
High blood pressure is one of the leading causes of strokes, and can lead to a form of dementia called vascular dementia:
Your heart and arteries
High blood pressure can severely damage your arteries and blood vessels. It can also cause heart disease and enlargement of the heart muscle, which can be very dangerous to your health:
Your kidneys
Your kidneys have a very important role in removing waste products from your body. High blood pressure can damage your kidneys and, in addition, damage to your kidneys can raise your blood pressure:
Your eyes and limbs
High blood pressure does not just affect your internal organs. It can also damage the blood vessels in your eyes and limbs, causing sight and mobility problems:
control high blood pressure without medication
1. Blood pressure often increases as weight increases. Being overweight also can cause disrupted breathing while you sleep (sleep apnea), which further raises your blood pressure.
2. Regular physical activity — at least 30 minutes most days of the week — can lower your blood pressure by 4 to 9 millimeters of mercury (mm Hg). It's important to be consistent because if you stop exercising, your blood pressure can rise again.
3. Eating a diet that is rich in whole grains, fruits, vegetables and low-fat dairy products and skimps on saturated fat and cholesterol can lower your blood pressure by up to 14 mm Hg. This eating plan is known as the Dietary Approaches to Stop Hypertension (DASH) diet.
4. Reduce sodium in your diet
Even a small reduction in the sodium in your diet can reduce blood pressure by 2 to 8 mm Hg.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood pressure) பெயர் .
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension) என்று பெயர்.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை


விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய், பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்
போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபம் ஏற்றும் நேரம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கு ஏற்றும் முறை
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் - புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்
வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில்துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். விளக்கேற்றலாம்.

அஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்


* இஞ்சி சாற்றில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
* இஞ்சிச்சாறு கொதிக்க வைத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் உணவுக்குப் பின்னர் குடித்தால் பெருத்த வயிறு குறையும்.
* தோல் நீக்கப்பட்ட இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
* இஞ்சியுடன் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
* எலுமிச்சை பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமா னத் தொல்லைகள் தீரும்.
* ஏலக்காய் விதை, ஓமம், சீரகம் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மூன்று வேளையும் உணவுக்குப் பின் மூன்று கிராம் அளவுக்கு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
* கடுகு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை கஷாயம் வைத்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்