Search This Blog

Tuesday, October 20, 2015

வாசிங்டன் டி சி யில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் நினைவிடம்.

இது வாசிங்டன் டி சி யில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் நினைவிடம்.இந்த சிலை முழுவதும் வெண் கருங்கல்லால் ஆனது.30 அடி உயரமுள்ள இந்த சிலையை வடிவமைத்தவர் பெயர் லேய் ஈக்சின்.வெஸ்ட் பொட்டமாக் பூங்கா எனப்படும் இடத்தில் அமைந்துள்ள,,இந்த நினைவிடத்திற்கு அருகில் தான் லிங்கன் நினைவிடமும்,,ஜெபர்சன் நினைவிடமும் உள்ளது.

1929 ம் ஆண்டு,,ஜனவரி 15 ம் தேதி,அமெரிக்காவின், அட்லாண்டா வில் பிறந்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
இவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்றால்,,சீனியர் யார்??! இவரின் அப்பா தான்.நம் ஊரில் தாத்தாவின் பெயரை,,பேரனுக்கு வைப்பது போல,,மார்ட்டின் லூதர் கிங் ன் அப்பா,,தன் பெயரான மார்ட்டின் லூதர் கிங் என்பதையே தன் மகனுக்கும் வைத்தார்.குழப்பம் வராமல் இருக்க,,மகனை மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் என்கிறோம்.கிறிஸ்தவ பாதிரியாரான,,லூதர் கிங் சீனியர்,,தனக்கு பிடித்த பாதிரியாரின் பெயர்,,மார்ட்டின் லூதர் கிங் என்பதால், அதையே தன் மகனுக்கு வைத்ததாக கூறப் படுகிறது.


கருப்பின மக்களின் விடிவெள்ளி என்றும்,,கருப்பினர்களின் காந்தி என்றும் போற்றப்படும் மார்ட்டின் லூதர் கிங்,,முன்னெடுத்த முதல் போராட்டம் ரோசா பார்க்ஸ் பிரச்சனை.(ஒரு முறை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியம் தலைமையில், பொதிகை தொலைக்காட்சி பட்டிமன்றத்தில் பேசிய போது,,அவர் மூலமாகவே,முதன் முதலாக ரோசா பார்க்ஸ் குறித்து அறிந்தேன்.)
1955 ம் ஆண்டு,டிசம்பர் 1 ம் தேதி,அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில்,,ரோசா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது,, ஒரு வெள்ளை யர் அவரை எழ சொன்னார்.ஆப்ரிக்கா,ரயிலில் காந்தி க்கு நடந்ததே,,அதே தான் இங்கும்....கருப்பின துவேசம் அதிகமிருந்த காலம் அது,,கருப்பர்கள் அடிமைகளாக வாழ்ந்த காலம் அது....ரோசா பார்க்ஸ் ,,இருக்கையிலிருந்து எழ மறுத்தார்.நான் பயணச்சீட்டு வாங்கி இருக்கிறேன் , நான் ஏன் என் இருக்கையை விட்டுத் தர வேண்டும் என கேட்டார்.ஒரு கருப்பின பெண் எதிர்த்து பேசியதை,,வெள்ளையர்களால் தாங்க முடியவில்லை. ரோசா பார்க் கைது செய்ய பட்டதோடு,,14 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

ரோசா பார்க்ஸ் கைது செய்யப் பட்டதை தொடர்ந்து,,அலபாமா மாகாணத்தில் உள்ள மாண்ட்காமெரி யில்,,கருப்பர்கள் பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகப் புகழ் பெற்ற அந்த போராட்டம் எத்தனை நாட்கள் நடந்தது தெரியுமா.... மிக சரியாக 381 நாட்கள்.எந்த பேருந்தில் ரோசா பார்க்ஸ் க்கு அநீதி இழைக்கப் பட்டதோ,,அந்த பேருந்தை 381 நாட்கள்,40,000 கருப்பர்கள் புறக்கணித்தார்கள்.அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே. அந்த போராட்டத்தின் விளைவாக,, 1956, நவம்பர் 13, ம் தேதி,, ரோசா பார்க்ஸ் செய்தது சரி தான் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மிக சிறந்த பேச்சாளர்.லிங்கன் நினைவிடத்தில் நின்ற படி,,பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்,,i have a dream ( எனக்கு ஒரு கனவு இருக்கிறது) என்னும் தலைப்பில் இவர் பேசிய பேச்சு உலகப் பிரசித்தம்.அந்த பேச்சின் பல வரிகள்,,இந்த நினைவிடத்தில் பொறிக்கப் பட்டுள்ளன.புகைப் படத்தில்,, மரங்களின் அருகே,,பளிங்கு சுவரில்,,அந்த வாசகங்களைப்,, பார்க்கலாம்.

தன் பேச்சாலும்,,தொடர் போராட்டங்களாலும் கருப்பின மக்களின்,,துன்பங்கள் முழுமையாய் நீங்க பாடுபட்ட ,லூதர் கிங்,கிற்கு,,1964 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசை பெற்ற பின் அவர் பேசிய பேச்சு,,எல்லோராலும் பாராட்டப்பட்டது.
லூதர் கிங் காந்தியவாதி. காந்தியின் அகிம்சையையே தன் வழியாகக் கொண்டவர்.
கருப்பின மக்களுக்காக போராடியதற்காக,,பலமுறை கைது செய்யப்பட்டவர்,பிரம்பாலும்,,இரும்பாலும் ஆன தடிகளால்,,உடல் முழுக்க விழுப்புண் பெற்றார்.அத்தனையும்,, கருப்பின மக்களின் விடுதலைக்காக, தாங்கிக் கொண்டவர்.
1968, ஏப்ரல் 4 ம் தேதி,, டென்னசி என்ற இடத்தில்,, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடிய போது,,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை,,ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவன் சுட்டுக் கொன்றான்.(அதற்காக ஜேம்ஸ் ஏர்ல் ரே க்கு 99 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது)
இறப்பதற்கு முந்தைய நிமிடம் வரை,,கடைநிலை மக்களுக்காக குரல் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.கருப்பின மக்களின் விடுதலையில்,,லூதர் கிங்,,ரோசா பார்க்ஸ் இருவரின் பங்கும் அளப்பரியது.
அன்றைக்கு ரோசா பார்க்ஸ்,,என் உரிமையை விட்டுத் தர முடியாது என,,மன உறுதியுடன் எழ மறுத்ததால் தான்,,இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்று கருப்பின மக்கள்,, அவரை,,சிவில் உரிமைகளின் தாய் என போற்றினர்.
I have a dream என்னும் தலைப்பில்,, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பேசிய போது சொன்னார்" என் குழந்தைகள், தோல் நிறத்தால் அல்லாமல்,,குணங்களால் மதிக்கப் படக் கூடிய தேசத்தில் வாழ்வார்கள் என்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது."
அவர் கனவு பலித்து விட்டது. எந்த அமெரிக்கா,, ஒரு கருப்பருக்கு பேருந்து இருக்கையை கூட தர மறுத்ததோ, அதே அமெரிக்கா வின்,,அதிபர் நாற்காலியை இன்று ஒரு கருப்பர் தான் அலங்கரிக்கிறார்.மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்த அட்லாண்டா மாகாணத்திற்கு ,,நான் சென்ற போது,Helena அக்கா சொன்னார்,,"அமெரிக்கா ல யாரையாவது நீக்ரோ னு சொன்னா போச்சு,,ஜெயில் தான் " என.இதற்கு தானே,,லூதர் கிங் அத்தனை பாடு பட்டார்.
Sumathi Srri

This is the real situation in Sri Lanka


Top 10 Movie Snipers

Shirdi Sai Ooravalam Devotional Album - Lord Sai Baba Songs

நவராத்திரி சிறப்புப்பாடல்


Vaishnava Navaratri


8th day glorifying Krishna Avatar
Once the world was overburdened by the unnecessary defense force of different kings, who were actually demons but were posing themselves as the royal order. At that time, the whole world became perturbed, and the predominating deity of this earth, known as Bhumi, went to see Lord Brahma to tell of her calamities due to the demoniac kings. Bhumi assumed the shape of a cow and presented herself before Lord Brahma with tears in her eyes. She was bereaved and was weeping just to invoke the lord's compassion. She related the calamitous position of the earth, and after hearing this, Lord Brahma became much aggrieved, and he at once started for the ocean of milk, where Lord Vishnu resides. Lord Brahma was accompanied by all the devas headed by Lord Shiva, and Bhumi also followed. Arriving on the shore of the milk ocean, Lord Brahma began to pacify Lord Vishnu, who formerly saved the earthly planet by assuming the transcendental form of a boar [as Lord Varaha].

In the Vedic mantras, there is a particular type of prayer called Purusha-sukta. Generally, the devas offer their obeisances unto Vishnu, the Supreme Personality of Godhead, by chanting the Purusha-sukta. It is understood herein that the predominating deity of every planet can see the supreme lord of this universe, Brahma, whenever there is some disturbance on his planet. And Brahma can approach the Supreme Lord Vishnu, not by seeing Him directly but by standing on the shore of the ocean of milk. There is a planet within this universe called Svetadvipa, and on that planet there is an ocean of milk. It is understood from various Vedic scriptures that just as there is the ocean of salt water on this planet, there are various kinds of oceans on other planets. Somewhere there is an ocean of milk, somewhere there is an ocean of oil, and somewhere an ocean of liquor and many other types of oceans. Purusha-sukta is the standard prayer which the devas recite to appease the Supreme Personality of Godhead, Kshirodakashayi Vishnu. Because He is lying on the ocean of milk, He is called Kshirodakashayi Vishnu. He is the Supreme Personality of Godhead, through whom all the incarnations within this universe appear.
After all the devas offered the Purusha-sukta prayer to the Supreme Personality of Godhead, they apparently heard no response. Then Lord Brahma personally sat in meditation, and there was a message-transmission from Lord Vishnu to Brahma. Brahma then broadcast the message to the devas. That is the system of receiving Vedic knowledge. The Vedic knowledge is received first by Brahma from the Supreme Personality of Godhead, through the medium of the heart. As stated in the beginning of Srimad-Bhagavatam, tene brahma hrida ya adi-kavaye: the transcendental knowledge of the Vedas was transmitted to Lord Brahma through the heart. Here also, in the same way, only Brahma could understand the message transmitted by Lord Vishnu, and he broadcast it to the devas for their immediate action. The message was this: The Supreme Personality of Godhead would appear on the earth very soon, along with His supreme powerful potencies, and as long as He remained on the earth planet to execute His mission of annihilating the demons and establishing the devotees, the devas should also remain there to assist Him. They should all immediately take birth in the family of the Yadu dynasty, wherein the Lord would also appear in due course of time. The Supreme Personality of Godhead Himself, Krishna, would personally appear as the son of Vasudeva. Before His appearance, all the devas, along with their wives, should appear in different pious families in the world just to assist the Lord in executing His mission. The exact word used here is tat-priyartham, which means the devas should appear on the earth in order to please the Lord. In other words, any living entity who lives only to satisfy the Lord is a deva. The devas were further informed that the plenary portion of Lord Krishna, Ananta, who is maintaining the universal planets by extending His millions of hoods, would also appear on earth before Lord Krishna's appearance. They were also informed that the external potency of Vishnu (Maya), with whom all the conditioned souls are enamored, would also appear by the order of the Supreme Lord, just to execute His purpose.
After instructing and pacifying all the devas, as well as Bhumi, with sweet words, Lord Brahma, the father of all prajapatis, or progenitors of universal population, departed for his abode, the highest material planet, called Brahmaloka.
The leader of the Yadu dynasty, King Surasena, was ruling over the country known as Mathura, wherein lies the city of Mathura, as well as the district known as Surasena, which was named after him. On account of the rule of King Surasena, Mathura became the capital city of all the kings of the Yadus. Mathura was also made the capital of the kings of the Yadu dynasty because the Yadus were a very pious family and knew that Mathura is the place where Lord Sri Krishna lives eternally, just as He also lives in Dvaraka.
Once upon a time, Vasudeva, the son of Surasena, just after marrying Devaki, was going home on his chariot with his newly wedded wife. The father of Devaki, known as Devaka, had contributed a sufficient dowry because he was very affectionate toward his daughter. He had contributed hundreds of chariots completely decorated with gold equipment. At that time, Kamsa, the son of Ugrasena, in order to please his sister, Devaki, had voluntarily taken the reins of the horses of Vasudeva's chariot and was driving. According to the custom of the Vedic civilization, when a girl is married, the brother takes the sister and brother-in-law to their home. Because the newly married girl may feel too much separation from her father's family, the brother goes with her until she reaches her father-in-law's house. The full dowry contributed by Devaka was as follows: 400 elephants fully decorated with golden garlands, 15,000 decorated horses, and 1,800 chariots. He also arranged for 200 beautiful girls to follow his daughter. The kshatriya system of marriage, still current in India, dictates that when a kshatriya is married, a few dozen of the bride's young girlfriends (in addition to the bride) go to the house of the king. The followers of the queen are called maidservants, but actually they act as friends of the queen. This practice is prevalent from time immemorial, traceable at least to the time before the advent of Lord Krishna 5,000 years ago. So Vasudeva brought home another 200 beautiful girls along with his wife Devaki.
While the bride and bridegroom were passing along on the chariot, there were different kinds of musical instruments playing to indicate the auspicious moment. There were conchshells, bugles, drums and kettledrums; combined together, they were vibrating a nice concert. The procession was passing very pleasingly, and Kamsa was driving the chariot, when suddenly there was a miraculous sound vibrated from the sky which especially announced to Kamsa: "Kamsa, you are such a fool! You are driving the chariot of your sister and your brother-in-law, but you do not know that the eighth child of this sister will kill you."
Kamsa was the son of Ugrasena, of the Bhoja dynasty. It is said that Kamsa was the most demoniac of all the Bhoja dynasty kings. Immediately after hearing the prophecy from the sky, he caught hold of Devaki's hair and was just about to kill her with his sword. Vasudeva was astonished at Kamsa's behavior, and in order to pacify the cruel, shameless brother-in-law, he began to speak as follows, with great reason and evidence. He said, "My dear brother-in-law Kamsa, you are the most famous king of the Bhoja dynasty, and people know that you are the greatest warrior and a valiant king. How is it that you are so infuriated that you are prepared to kill a woman who is your own sister at this auspicious time of her marriage? Why should you be so much afraid of death? Death is already born along with your birth. From the very day you took your birth, you began to die. Suppose you are twenty-five years old; that means you have already died twenty-five years. Every moment, every second, you are dying. Why then should you be so much afraid of death? Final death is inevitable. You may die either today or in a hundred years; you cannot avoid death. Why should you be so much afraid? Actually, death means annihilation of the present body. As soon as the present body stops functioning and mixes with the five elements of material nature, the living entity within the body accepts another body, according to his present action and reaction. It is just like when a man walks on the street: he puts forward his foot, and when he is confident that his foot is situated on sound ground, he lifts the other foot. In this way, one after another, the bodies change and the soul transmigrates. See how the plantworms change from one twig to another so carefully! Similarly, the living entity changes his body as soon as the higher authorities decide on his next body. As long as a living entity is conditioned within this material world, he must take material bodies one after another. His next particular body is offered by the laws of nature, according to the actions and reactions of this life.
"This body is exactly like one of the bodies which we always see in dreams. During our dream of sleep, we create so many bodies according to mental creation. We have seen gold, and we have also seen a mountain, so in a dream we can see a golden mountain by combining the two ideas. Sometimes in dreams we see that we have a body which is flying in the sky, and at that time we completely forget our present body. Similarly, these bodies are changing. When you have one body, you forget the past body. During a dream, we may make contact with so many new kinds of bodies, but when we are awake we forget them all. And actually these material bodies are the creations of our mental activities. But at the present moment we do not recollect our past bodies.
"The nature of the mind is flickering. Sometimes it accepts something, and immediately it rejects the same thing. Accepting and rejecting is the process of the mind in contact with the five objects of sense gratification: form, taste, smell, sound and touch. In its speculative way, the mind comes in touch with the objects of sense gratification, and when the living entity desires a particular type of body, he gets it. Therefore, the body is an offering by the laws of material nature. The living entity accepts a body and comes out again into the material world to enjoy or suffer according to the construction of the body. Unless we have a particular type of body, we cannot enjoy or suffer according to our mental proclivities inherited from the previous life. The particular type of body is actually offered to us according to our mental condition at the time of death.
"The luminous planets like the sun, moon or stars reflect themselves in different types of reservoirs, like water, oil or ghee. The reflection moves according to the movement of the reservoir. The reflection of the moon is on the water, and the moving water makes the moon also appear to be moving, but actually the moon is not moving. Similarly, by mental concoction the living entity attains different kinds of bodies, although actually he has no connection with such bodies. But on account of illusion, being enchanted by the influence of maya, the living entity thinks that he belongs to a particular type of body. That is the way of conditioned life. Suppose a living entity is now in a human form of body. He thinks that he belongs to the human community, or a particular country or particular place. He identifies himself in that way and unnecessarily prepares for another body, which is not required by him. Such desires and mental concoctions are the cause of different types of body. The covering influence of material nature is so strong that the living entity is satisfied in whatever body he gets, and he identifies with that body with great pleasure. Therefore, I beg to request you not to be overwhelmed by the dictation of your mind and body."
Vasudeva thus requested Kamsa not to be envious of his newly married sister. One should not be envious of anyone, because envy is the cause of fear both in this world and in the next, when one is before Yamaraja (the lord of punishment after death). Vasudeva appealed to Kamsa on behalf of Devaki, stating that she was his younger sister. He also appealed at an auspicious moment, at the time of marriage. A younger sister or brother is supposed to be protected as one's child. "The position is overall so delicate," Vasudeva reasoned, "that if you kill her, it will go against your high reputation."
In this way Vasudeva tried to pacify Kamsa by good instruction as well as by philosophical discrimination, but Kamsa was not to be pacified because his association was demoniac. Because of his demoniac associations, he was a demon, although born in a very high royal family. A demon never cares for any good instruction. He is just like a determined thief: one can give him moral instruction, but it will not be effective. Similarly, those who are demoniac or atheistic by nature can hardly assimilate any good instruction, however authorized it may be. That is the difference between deva and demon. Those who can accept good instruction and try to live their lives in that way are called devas, and those who are unable to take such good instruction are called demons. Failing in his attempt to pacify Kamsa, Vasudeva wondered how he would protect his wife, Devaki. When there is imminent danger, an intelligent person should try to avoid the dangerous position as far as possible. But if, in spite of endeavoring by all intelligence, one fails to avoid the dangerous position, there is no fault on his part. One should try his best to execute his duties, but if the attempt fails, he is not at fault.
Vasudeva thought of his wife as follows: "For the present let me save the life of Devaki; then later on, if there are children, I shall see how to save them." He further thought, "If in the future I get a child who can kill Kamsa--just as Kamsa is thinking--then both Devaki and the child will be saved because the law of Providence is inconceivable. But now, some way or other, let me save the life of Devaki."
There is no certainty how a living entity contacts a certain type of body, just as there is no certainty how a blazing fire comes in contact with a certain type of wood in the forest. When there is a forest fire, it is experienced that the blazing fire sometimes leaps over one tree and catches another by the influence of the wind. Similarly, a living entity may be very careful in the matter of executing his duties, but it is still very difficult for him to know what type of body he is going to get in the next life. Maharaja Bharata was very faithfully executing the duties of self-realization, but by chance he developed temporary affection for a deer, and in his next life he had to accept the body of a deer.
Vasudeva, after deliberating on how to save his wife, began to speak to Kamsa with great respect, although Kamsa was the most sinful man. Sometimes it happens that a most virtuous person like Vasudeva has to flatter a person like Kamsa, a most vicious person. That is the way of all diplomatic transactions. Although Vasudeva was deeply aggrieved, he smiled outwardly. He addressed the shameless Kamsa in that way because he was so atrocious. Vasudeva said to Kamsa, "My dear brother-in-law, please consider that you have no danger from your sister. You are awaiting some danger because you have heard a prophetic voice in the sky. But the danger is to come from the sons of your sister, who are not present now. And who knows? There may or may not be sons in the future. Considering all this, you are safe for the present. Nor is there cause of fear from your sister. If there are any sons born of her, I promise that I shall present all of them to you for necessary action."
Kamsa knew the value of Vasudeva's word of honor, and he was convinced by his argument. For the time being, he desisted from the heinous killing of his sister. Thus Vasudeva was pleased and praised the decision of Kamsa. In this way, he returned to his home.
Each year thereafter, in due course of time, Devaki gave birth to a child. Thus she gave birth to eight male children, as well as one daughter. When the first son was born, Vasudeva kept his word of honor and immediately brought the child before Kamsa. It is said that Vasudeva was very much elevated and famous for his word of honor, and he wanted to maintain this fame. Although it was very painful for Vasudeva to hand over the newly born child, Kamsa was very glad to receive him. But he became a little compassionate with the behavior of Vasudeva. This event is very exemplary. For a great soul like Vasudeva, there is nothing considered to be painful in the course of discharging one's duty. A learned person like Vasudeva carries out his duties without hesitation. On the other hand, a demon like Kamsa never hesitates in committing any abominable action. It is said, therefore, that a saintly person can tolerate all kinds of miserable conditions of life, a learned man can discharge his duties without awaiting favorable circumstances, a heinous person like Kamsa can act in any sinful way, and a devotee can sacrifice everything to satisfy the Supreme Personality of Godhead.
Kamsa became satisfied by the action of Vasudeva. He was surprised to see Vasudeva keeping his promise, and being compassionate upon him and pleased, he began to speak as follows: "My dear Vasudeva, you need not present this child to me. I am not in danger from this child. I have heard that the eighth child born of you and Devaki will kill me. Why should I accept this child unnecessarily? You can take him back."
When Vasudeva was returning home with his firstborn child, although he was pleased by the behavior of Kamsa, he could not believe in him because he knew that Kamsa was uncontrolled. An atheistic person cannot be firm in his word of honor. One who cannot control the senses cannot be steady in his determination. The great politician Chanakya Pandita said, "Never put your trust in a diplomat or in a woman." Those who are addicted to unrestricted sense gratification can never be truthful, nor can they be trusted with any faith.
At that time the great sage Narada came to Kamsa. He was informed of Kamsa's becoming compassionate to Vasudeva and returning his firstborn child. Narada was very anxious to accelerate the descent of Lord Krishna as soon as possible. He therefore informed Kamsa that in Vrindavana personalities like Nanda Maharaja and all the other cowherd men and their wives, and on the other side Vasudeva, his father Surasena and all his relatives born in the family of Vrishni of the Yadu dynasty, along with all their friends and well-wishers, were actually devas. Narada warned Kamsa to be careful of them, since Kamsa and his friends and advisors were all demons. Demons are always afraid of devas. After being thus informed by Narada about the appearance of the devas in different families, Kamsa at once became very much alarmed. He understood that since the devas had already appeared, Lord Vishnu must be coming soon. He at once arrested both his brother-in-law Vasudeva and Devaki and put them behind prison bars.
Within the prison, shackled in iron chains, Vasudeva and Devaki gave birth to a male child year after year, and Kamsa, thinking each of the babies to be the incarnation of Vishnu, killed them one after another. He was particularly afraid of the eighth child, but after the visit of Narada, he came to the conclusion that any child might be Krishna. Therefore it was better to kill all the babies who took birth from Devaki and Vasudeva.
This action of Kamsa is not very difficult to understand. There are many instances in the history of the world of persons in the royal order who have killed father, brother or a whole family and friends for the satisfaction of their ambitions. There is nothing astonishing about this, for members of the demoniac, greedy royal order can kill anyone for their nefarious ambitions.
Kamsa was made aware of his previous birth by the grace of Narada. He learned that in his previous birth he was a demon of the name Kalanemi and that he was killed by Vishnu. Having taken his birth in the Bhoja family, he decided to become the deadly enemy of the Yadu dynasty; Krishna was going to take birth in that family, and Kamsa was very much afraid that he would be killed by Krishna, just as he had been killed in his last birth.
He first of all imprisoned his father, Ugrasena, because he was the chief king among the Yadu, Bhoja and Andhaka dynasties, and he also occupied the kingdom of Surasena, Vasudeva's father. He declared himself the king of all such places.

Monday, October 19, 2015

காவற்பெண்டு




ஒரு பெண் தன்னைக் கொண்டாடுகிறாள்:

பெண் உடல் இயற்கையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது . பூப்பதும் கனிவதும் பலுகிப் பெருகுவதும் இயற்கையின் செயல் என்றால் பெண்ணும் அப்படியே . மாதாந்திர பெருக்கும் பேறுகாலக் குருதியும் பெண்ணை அச்சப்படுத்துவதில்லை . தாய்வழிச் சமூகக் அமைப்பில் பெண்ணின் பலுகிப் பெருகுதலும் பாலூட்டுதலும் ஆணுக்கு மர்மமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது . ஆண் மையச்சமூகம் வலுபெற்றுவிட்ட காலத்தில் பெண்ணைத் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவளாக மாற்றுகிறான் . சங்க காலம் அப்படியான ஒரு காலமே . ஆனால் தாய்வழிச் சமூக எச்சங்கள் மிச்சமிருப்பதை சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடல்களின் வழியே உணரமுடியும் . பேறுகாலக் குருதியைக் கண்ணில் பார்த்து குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்க நினைக்கிற பெண், தன்னிலிருந்து உயிர்பெருகிற அத்தனை உயிர்களையும் காக்க நினைக்கிற பெண், போர் விரும்பாதவளாகத் தான் இருந்தாள்.

காதலும் போரும் என்பதாக இருந்தது சங்க காலம் . அருகிலிருக்கும் இன்னொரு இனக்குழுவின் நிலங்களை அபகரிக்கவோ தங்களுடைய நிலங்களைப் பாதுக்காக்கவோ போரிடவேண்டிய அவசியம் ஒவ்வொரு இனக்குழுவின் தலைவனாக இருக்கும் ஆணுக்கு இருந்தது . நிலத்தின் மீது கவனம் கொண்டிருந்த ஆணின் மனம் பெண்ணின் குழந்தை பிறப்பின் மீதும் கவனம் கொள்ளத் தொடங்கியது . அதன் விளைவே பெண்ணின் உடல் மீது செலுத்தப்படுகிற அதிகாரச் சொல்லாக கற்பு என்கிற சொல் மாறியது .தன்னுடைய வாரிசாக பெண் வயிற்றில் வளர்ந்து பிறக்கும் குழந்தை அவன் சேர்த்து வைத்த நிலத்திற்கு உரிமையாளனாகிறான். மேலும் அந்த நிலத்தைக் காப்பதற்காக போரிட வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது . இதற்காக அந்த தாயும் அவனுடைய உடல் வலிவை வளர்ப்பவளாக இருக்க வேண்டியது ஆகிறது . அதனாலேயே பெண்ணும் போரினை விரும்புவளாக காட்சிவழி காட்டப்படுகிறாள் . அகமும் புறமும் எனப் பகுக்கபட்டிருக்கும் சங்கப்பாடல்களில் பெரும்பாலும் பெண்ணின் மனம் அகம் சார்ந்த பாடல்களில் தான் அறிய இயலும் . புறப்பாடல்களிலும் கூட அகம் சார்ந்த உணர்வோ அல்லது பெண் உடல் பற்றிய தன்உணர்வோ இழையோடி இருப்பதைக் காண இயலும் .
காவற்பெண்டு என்கிற பெண்பாற்புலவரின் பாடல் ஒன்று
“ சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே “
பாடல் சொல்லும் செய்தியாக இரண்டு விதங்களில் உரைகள் எழுதப்பட்டிருக்கிறது .ஒன்று, இந்தப் பாடல் ஆண்பிள்ளையின் வீரத்தைப் பாடுவதாகக் கருத்தில் கொண்டு ஏறான்முல்லை என்கிற துறையின் கீழ் புறப்பாடலாகக் கருதப்படுகிறது . ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கக் கூடிய நாட்டில் இன்னும் போருக்கு ஆட்கள் தேவைப்படுகிற நிலையில் அரசனிடமிருந்து இந்த வீட்டிலிருக்கும் இளைஞனுக்கும் அழைப்பு வந்ததாகக் கொண்ட ஒரு காட்சி, தாய் ஒருத்தி குடிசையில் வசித்து வந்தாள் . ஒருவன் அவள் வீட்டுக்கு வந்து அந்த வீட்டின் தூணைப் பற்றி நின்று ” உன் மகன் எங்கே?” என்று கேட்டான். அப்போது அவள் சொல்கிறாள்.”என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனை பெற்ற வயிறு, புலி தங்கிச் சென்ற குகை போல இங்கே இருக்கிறது. அவன் கட்டாயம் போர்க்களத்துக்குத் தானே வந்து நிற்பான் நீ செல், என்று சொல்வதாக உரை அமைந்துள்ளது.
இன்னொன்று , காதலரைப் பிரிந்த காதலி, காதலனின் வீடேறித் துணிவாக அவன் தாயிடம், ‘என்னைப் பிரிந்த உன் மகன் எங்கே’ என்று கேட்கிறாள்.
எனது சிறிய வீட்டின் தூணைப் பிடித்தவாறு உன் மகன் எங்குளான்? என்று கேட்கின்றாய்: அவன் எங்குள்ளானோ எனக்குத் தெரியாது. ஆயினும், புலி இருந்து பின்னர்ப் போகிய மலைக்குகை போல, அவனைச் சுமந்து பெற்ற வயிறும் இதோ! அவன் போர்க்களத்தில் தான் இருப்பான் என்று அவன் தாய் பதில் சொல்கிறாள் என்று புறப்பாடலில் அக உணர்வுடன் உரை அமைக்கப்பட்டுள்ளது .
முதலாவதில் பெண் போரினை விரும்புகிறவள் ஆகிறாள் . ஒரு பெண்ணின் தந்தை போர்க்களத்தில் முன்னொருநாள் யானையை வென்று இறந்து விடுகிறான் . அவளின் கணவன் பின்னொரு நாள் பசுக்கூட்டத்தை வென்று இறந்து போனான் . இப்போது போர் முரசு கேட்கிறது . உடனே தன்னுடைய சின்னஞ்சிறு மகனை ,வெள்ளாடை உடுத்தி, வேலினைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்புகிறாள் என்கிறார் ஒக்கூர் மாசாத்தியார். . மேலும் முதியவள் ஒருத்தி தன்னுடைய மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் எனக் கேட்டு , அவன் அவ்வாறு செய்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய முலையை அறுப்பேன் “ என்று வாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கே மார்பில் காயம்பட்டு இறந்து கிடக்கும் மகனைப் பார்த்து அவனைப் பெற்ற நாளிலும் மகிழ்ந்ததாக காக்கைப் பாடினியார் பாடுகிறார். இவை போன்ற பாடல்களுக்கு வலுச்சேர்ப்பது போல காவற்பெண்டின் அமைகிறது.
பெண் என்பவள் போரினை விரும்புகிறவள் அல்ல என்றபோதிலும் அடிப்படையில் பெண் என்பவள் மிக வலிமையானவள். எனவே ஆண்களை வழி நடத்துகிறவளாக இருக்கிறாள் . நிலத்தையும் குடும்பத்தையும் காக்கத் தேவையான உடல்வலிவும் மனவலிவும் ஏற்படும் வகையில் ஆணின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறவளாக அவனுடனிருக்கிறாள் . அவ்விதமே அவனுக்கு வீரம் சார்ந்த செயல்பாடுகளை பயிற்றுவிக்கிறாள்.
இரண்டாவது உரை வழியே இந்தப் பாடலைத் தொடர்ந்தால், புறப்பாடலில் இழையோடுகிற அக உணர்வை உணரமுடியும் . இன்றைக்கும் கிராமப் புறங்களில் தன்னுடைய முறைமாமன் உறவில் இருக்கும் ஆணைப் பற்றி அவனுடைய முதிய தாயிடம் வம்பு செய்கிற பெண்களைக் காணமுடியும் . உம்மகன் எங்கே காணோம் , வெட்டியா ஊர் சுத்த போயிட்டாரா , எப்படி இப்படி பொறுப்பில்லாம ஆம்பளப் புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க என மனதுக்குள் இருக்கும் அன்பை தன்னுடைய மெல்லிய புன்னகையில் மறைத்துக் கொண்டு கேட்கும் இளம் பெண்களுண்டு . அவர்களுக்கு “அட போடி நான் ஆம்பள சிங்கத்தைப் பெத்துவச்சிருக்கேன் , அவன் எங்கேயும் போயி தன்னோட பேரை நிறுத்தி வருவான் “என பதிலுக்கு அந்த பெண்களின் மனம் புரிந்தும் புரியாதது போல பேசுகிற தாய்களும் உண்டு . பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகி துடுக்காக கதாநாயகனின் அம்மாவிடன் அவர் மகனைப் பற்றி விசாரிப்பது போல காட்சிகள் அமைப்பட்டிருப்பது எல்லாம் இந்த நிலத்தின் நீட்சியே .
தந்தைமைச் சமூகத்தில் ஒரு காலக்கட்டம் வரையில் ஆண்குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய சமூக அங்கீகாரமாக இருந்தது . இன்றும் கூட பலரும் ஆண்குழந்தை பெற்றுக் கொள்வதன் மீதான தங்களுடைய விருப்பத்தை ரகசியமாக வைத்துகொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். கொள்ளிபோடவும் , பெயர் சொல்லவும் ஒரு ஆண்பிள்ளை வேண்டாமா என வெளிப்படையாக சொல்கிறவர்களும் இருக்கிறார்கள் .
ஒரு பெண் கருவுற்றவுடன் , ஆண் பிள்ளையாக பெற்றுத் தரவேண்டும் என அவள் சுற்றம் விருப்பம் கொள்கிறது . இப்படியான சூழலில் எழுதப்பட்ட
சுகந்தி சுப்ரமணியன் கவிதை,
இன்னும் பிறக்காத
உனக்கு
என் முத்தங்கள் .
உன்னுடன் வீட்டுப்
புல்வெளியில் விளையாடி ,
கவிதைகள் வாசித்துக் காட்டி ,
கதைகள் சொல்லி ,
நட்சத்திரம் காட்டி
பூரித்துவிட்டேன் மனசில்,
நீயும் கையசைத்து ,
கால் நீட்டி ,
உடல் முறித்து ,
என் வயிற்றுள்
உன் பரபரப்பைக் காட்டுகிறாய் .
வெளி உலகம்
பூவும் ,புல்வெளியும் ,
ரத்தமும் முட்களுமாய் .
அதுவும் நீ பெண்ணாயிருந்தால் ?
என்றாலுமென்ன ;
எப்போதுமிருக்கும்
என் முத்தங்கள்”
இந்தக் கவிதையின் குரல் கேட்பதற்கு பெண் மிக நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறாள் . பெண் குழந்தைகளைக் கொண்டாடுகிற மனதை சுகந்தி சுப்ரமணியம் இவ்விதமாகத் தொடங்கி வைத்திருக்கிறார்.
காவற்பெண்டு எழுதியுள்ள பாடலை நான் வேறு விதமாக பார்க்கிறேன் , அவர் ஆண்பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பதற்காக பெருமிதம் அடைகிறவளாகப் பார்க்கவில்லை .வேறு இனக்குழுவோடு போருக்கு செல்லும்வீரமகனைப் பெற்ற தாயாகவும் நினைக்கவில்லை . அவள் தன்னுடைய உடலை கொண்டாடுகிறவளாகப் பார்க்கிறேன் . சங்கச் சமூகத்தில் நிலம் சார்ந்த தொழில் செய்வதும் நிலத்தைக் காப்பதும் இயல்பு என்பதால் ஒரு ஆண் உடல் வலிவுடன் இருப்பதும் போர் செய்வதும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . பெண் தன்னுடைய உடல் பற்றிய தன்னுணர்வுடன் இருக்கிறாள் என்று தான் பார்க்கத் தோன்றுகிறது . பெரும்பாலும் மகன்கள் பற்றிய பாடல்களே காணப்படுகிற சங்கப் பாடல்களில் தன்னுடைய கருவறை புலி தங்கிச் சென்ற குகை போல இருப்பதாக ஒரு பெண் சொல்வதும் , அவனுக்கு ஊட்டிய முலையை அறுத்தெறிவேன் என இன்னொரு பெண் சொல்வதும் தன்னுடல் பற்றிய கவனம் அகப் பாடல்களில் மட்டுமல்ல புறம் பாடும் பொழுதும் சங்கப் பெண்பாற் புலவர்களுக்கு இருந்திருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது . அகத்தில் பசலை படர்ந்த அல்குலைப் பாடுவது போலவே புறத்தில் பெற்றுத் தருவதையும் பாலூட்டி வளர்ப்பதையும் தன்னால் மட்டுமே கூடுகிற ஒன்றாக பெண் கருதுகிறாள் .
தன்னுடைய உடல் பற்றிய புரிதல் பெண்ணுக்கு இருக்கிறது . பெண்ணே இந்த உலகைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் அவளே இந்த உலகுக்கு ஊட்டுகிறவளாகவும் நம்புகிறாள் . உயிர்களைப் பலுகிப் பெருகச் செய்கிற அவளின் மனமே அவளுடையை கருவறையினைக் கொண்டாடுவதாக இருக்கிறது . அவள் முலைகளைத் தாங்கியிருப்பது என்பதே இந்த உலகுக்கே ஊட்டுவதற்குத் தான் என அவள் நம்புகிறாள் . அதனால் தன்னுடைய உடலை பெண் கொண்டடுகிறவளாக இருக்கிறாள் .
மாலதி மைத்ரியின் “பூமாதேவி” என்றொரு கவிதை ,
“மணல்வெளியில் காற்றில் தீற்றலென
அம்மாவின் அடிவயித்றுக் கோடுகள்
குஞ்சு நண்டின் தடங்களைத் தரித்த
மேல் வயிறு
பூஞ்சை ரோமங்களை
வருடியபடியே கேட்கிறாள்
அம்மா
எப்படி நீ
பெத்து உயிர் பிழைச்ச
இது என்ன அதிசயம்
இந்த உலகத்தையே
உன் பாட்டிக்கு பாட்டிதான் பெத்தாள்
கோழி முட்டை இடுவதைப் போல
பாட்டி உலகை இடுவதை
நினைத்தபடி உறங்கிவிடுகிறாள் சிறுமி
கனவில்
பனிப்புயலும் அலைச் சீற்றமும்
அருவியின் குதூகலமும் கானகக் கொண்டாட்டமும்
எரிமலையின் பெருவெடிப்புமாகிறாள் “

Advance Vijayadhasami wishes...








எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான உங்கள் வாழ்க்கைத் துணையின் எண் என்ன?

எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான உங்கள் வாழ்க்கைத் துணையின் எண் என்ன? எந்த தேதிகளில் திருமணம் செய்துகொள்ளலாம்..?
1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர்
திருமணம் இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.
1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.
திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.
2,11,20,29 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ) கூட்டு எண்) மிகவும் சிறந்தவள்.
ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள்.
எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
3,12,21,30 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.
2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.
5,14,23 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.
மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.
குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
6,15,24 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்!
1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
7,16,25 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.
8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான்.
8,17,26 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.
8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.
திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
9,18,27 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.
சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள்.
திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

சினிஸ்டர் (SINISTER):

True crime writer Ellison Oswalt (Ethan Hawke) arrives in a small town with his wife (Juliet Rylance) and two kids -- Trevor (Michael Hall D'Addario) and Ashley (Clare Foley) -- in tow, preparing to work on his latest book. He's writing about a family of four that was murdered, hung simultaneously from a tree, after which the youngest daughter disappeared. Unfortunately, Ellison has chosen to move into the murder house itself, where he finds a box of Super 8 films that depict the actual murder, as well as several others. As he pieces the puzzle together, strange and terrifying things begin to happen. Ellison's life becomes a race to finish the book before he and his family become too deeply involved in a deadly situation.
Theatrical release date:October 12, 2012
DVD release date:February 19, 2013
Cast:Ethan Hawke, Fred Dalton Thompson, Juliet Rylance
Director:Scott Derrickson
Studio:Summit EntertainmentGenre:
HorrorRun time:110 minutes
MPAA rating:R
MPAA explanation:disturbing violent images and some terror







தொடக்க காட்சியிலேயே ஒரு மரத்தின் நீண்ட கிளையில் வரிசையாய் நான்கு பேர் முகம் மறைத்து தூக்கில் தொங்க தயாராக இருக்கிறார்கள்.மெதுவாக கயிறு இறுக்கப்பட்டு கால்களை உதைத்து துடித்து இறக்கிறார்கள்.இப்படி தொடங்கும் படம் இது.

நாயகன் ஒசவல்ட் ஒரு எழுத்தாளன் .ஒரு வெற்றிகரமான புத்தகத்தால் உலகிற்கு அறியப்பட்டவன்.அதன்பின் எழுதியவை எல்லாம் தோல்வி அடைய,இழந்த பேரை மீண்டும் மீட்க விரும்புகிறான்.அவன் மனைவியோ அவனை வேறு வேலைகளுக்கு செல்ல கேட்டுகொள்கிறாள் .அவன் பிடிவாதமாக எழுத்திலேயே இருக்கிறான்.இந்த நிலையில் காவல் துறையால் இன்னும் முழுதும் முடிக்கமுடியாத கொலைகள் நடந்த அந்த வீட்டிற்கு குடி வருகிறான்.அவன் வீட்டின் வெளியில் உள்ள மரத்தில் தான் தொடக்க காட்சியில் வந்த தூக்கு நடந்த இடம்.ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் தனிமையான வீடு அது.
அவனுக்கு ஒரு மகன் ,ஒரு மகள்.அவனை தவிர அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இங்கே வந்தது பிடிக்கவில்லை.அவனும் இந்த புதிய கதை எழுதி முடித்ததும் மீண்டும் பழைய வீட்டிற்க்கே போய் விடலாம் என்று சொல்கிறான்.அன்று இரவு சாமான்களை அடுக்க வீட்டின் மேலுள்ள தளத்திற்கு செல்கின்ற அவன் அங்கே ஒரு அட்டை பெட்டி .அதில் சில பிலிம் ரோல்கள் ,ஒரு ப்ரொஜெக்டர் போன்றவை இருக்கின்றன .இரவு எல்லோரும் உறங்கிய பின் அவன் அவனது அறையில் அந்த பிலிம் ரோல்களை ஓட விடுகிறான்.அவை SNUFF FILM வகையாறக்கள் .
அந்த படங்களில் நான்கு குடும்பங்கள் தனித்தனியே பல முறைகளில் கொல்லபடுவதை பார்த்து உறைகிறான்.கடைசியாக அவன் பார்க்கும் கொலை அவன் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் நான்கு பேர் தூக்கில் தொங்குவது .இவற்றை பார்த்ததும் இதில் உள்ளவற்றை ஆராய்ந்து அதை கதையாக எழுதி மீண்டும் வெற்றி பெற நினைக்கிறான்.மீண்டும் மீண்டும் அவற்றை ஓட விடுகிறான்.யார் இந்த படங்களை எடுத்தது? அந்த படத்தில் இருக்கும் சிறுமி என்ன ஆனால்? என்று பல கேள்விகள் அவனுள் எழுகின்றது.
எல்லா கொலைகளிலும் ஒரு பயங்கரமான உருவம் எங்கோ ஒரு இடத்தில இருப்பதை கண்டு பிடிக்கிறான்.அந்த முகத்தை பிரிண்ட் எடுத்து கொள்கிறான்.போலீசை அழைக்கும் ஒஸ்வல்ட் அவரிடம் தான் கண்டுபிடித்ததை சொல்கிறான்.1960 களில் தொடங்கி பல்வேறு நகரங்களில் பல்வேறு காலங்களில் இது போல் கொலைகள் நடந்துள்ளதாக சொல்கிறார் போலீஸ்.மேலும் எல்லா கொலைகளிலும் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் காணமல் போகிறது என்றும் சொல்கிறார்.
சில நாட்கள் கழித்து ஒரு இரவு ,அவர் அறையில் இருந்து சத்தம் .பார்த்தால் என்ன? சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம்.
அந்த இரவே அந்த படங்களை கொளுத்தி விட்டு அவசரமாக குடும்பத்தோடு வீட்டில் இருந்து காலி செய்து வேறு இடம் சென்று விடுகிறான் .புதிய வீட்டில் இருக்கும் ஒஸ்வல்ட் அந்த போலீஸ் அதிகாரி மூலம் சில உண்மைகள் அறிகிறான்.அது என்ன? இறந்த 4 குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம் ? வீடு மாறியுள்ளதால் இப்பொது அவன் சந்திக்க இருக்கும் ஆபத்து என்ன? புதிய வீட்டிலும் அவனுக்கு ஒரு அட்டை பெட்டியில் சில பிலிம் ரோல்கள் .அதில் தொடர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது .அவற்றை ஓடவிட்டு பார்க்கிறான். என்ன பார்க்கிறான்?
ஒளிப்பதிவு முழுக்க முழுக்க இருளிலே ஒரே வீட்டிலே எடுத்திருக்கிறார்கள். நிறைய திரில்லர் படம் பார்த்தவர்களுக்கு இதன் ஒளிப்பதிவு புதிதாக தெரியாது.
காட்சிகளை விட இசை நிறைய இடங்களில் பயமுறுத்தியது. இறுதி காட்சியில் நம்மை பயமுறுத்த இசையின் பங்கு அதிகம்.
இரவில் தனியாக பாருங்கள் நான் சொல்வது புரியும்
கா.அருண் பாண்டியன்.

வேற்றுகிரகவாசிகளுடன் சந்திப்பு-இந்தியாவில்...


ஏன் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான சம்பவங்கள் மேலை நாடுகளிலேயே நடக்கின்றன,நம் நாட்டில் நடப்பதில்லை என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றும்.இந்தியாவிலும் நடக்கின்றன,இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை.
அப்படித்தான் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒடிசா மாநிலத்துக்கு சில வேற்றுகிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக்காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.
ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31-ம் தேதி வந்து இறங்கினர். தீரம் மிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றிவந்தனர். பிறகு அவர்களை அந்த இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.
அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராமவாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ""பட்ட சித்திரக்காரர்'' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.
அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒடியா வார இதழ் ஒன்று 1947 ஜூன் 15-ம் தேதி அச் செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால் ""கிராமவாசிகளின் அதீத கற்பனை'' என்ற காட்டமான விமர்சனத்தோடு.
இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுகிரக மனிதர்கள் எந்திர மனிதர்களாக வரையப்பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவோ, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.
சிலருடைய கைகள் வட்டவடிவில் பந்து போல உருண்டிருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.
இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்தவரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல்(ROSWELL) என்ற இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.
இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து ஒடிசா தலைநகர் பூரியில்(PURI) விற்றுக்கொண்டிருக்கின்றனர்.
விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால், வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் ""முதலில் சந்தித்தது இந்தியாவில்'' என்ற வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக்கூடும்.

Thursday, October 15, 2015

Brain structure generates pockets of sleep within the brain.


Sleep is usually considered an all-or-nothing state: The brain is either entirely awake or entirely asleep. However, MIT neuroscientists have discovered a brain circuit that can trigger small regions of the brain to fall asleep or become less alert, while the rest of the brain remains awake.
This circuit originates in a brain structure known as the thalamic reticular nucleus (TRN), which relays signals to the thalamus and then the brain’s cortex, inducing pockets of the slow, oscillating brain waves characteristic of deep sleep. Slow oscillations also occur during coma and general anesthesia, and are associated with decreased arousal. With enough TRN activity, these waves can take over the entire brain.
The researchers believe the TRN may help the brain consolidate new memories by coordinating slow waves between different parts of the brain, allowing them to share information more easily

Wednesday, October 14, 2015

MH17 Crash - based on the Dutch Safety Board’s investigation reports

சக்திஜோதியின் சொல் எனும் தானியம் நூல் குறித்து

 சொல் எனும் தானியம்

ஒரு கவிதை, அதன் நிலையிலிருந்து அழகை வர்ணனையை, சூழ்நிலையை, உணர்த்துதலை நமக்கு கற்பிக்கும்போதுதான் நமக்கான ஓர்தனித்த மனநிலையில் அது அமர்கிறது அல்லது அப்பிக்கொள்கிறது .
அப்படித்தான், சொல் எனும் தானியம் என்னுள் நூற்றுக்கணக்கான விதைகளை முளைத்தருள விட்டிருக்கிறது .
பிரபஞ்சத்தின் முக்கிய அம்சத்தில் கலையெனும் பிரமிப்பு, நம்மை ஆட்கொள்கிறது .
ஏதாவதொரு கலையின் உடம்பில் ஒரு செல்லாக நாம் உட்புகும்போதுதான் நமக்கான ஞாலத்தை நாம் உரசி உரசி செல்வதை உணரமுடியும் .
கவிதை எனும் தீவிரவாதத்தால்
என்னை கொன்றுவிடுங்கள்
என்னை காப்பாற்றுங்கள் என்று எவராது தன் முணங்களை முன் வைக்கும்போதுதான்
கவிதை நம்மலை அரவணைக்கிறது, நம் சுயத்தை குளிப்பாட்டுகிறது .
இப்படியொரு தீவிரவாத்ததால் தான், சில நாட்களுக்கு முன் நான் கொலைசெய்யப்பட்டேன். மீண்டும் கவிதையை வாய்பொழியவே ஜனனித்திருக்கிறேன் .
என்னை கொலைசெய்த தீவிரவாதம் " சொல் எனும் தானியத்தில் " எழுத்துரு வடிவில் துப்பாக்கியாய் அல்லது துப்பாக்கி வடிவில் எழுத்துருவாய் எனக்குள்ளான ரசணை பிரபஞ்சத்தில், பிரளயம் நடத்திவிட்டு சற்று ஓய்வெடுக்கிறது .
" சக்தி ஜோதி" என்கிற பாத்தோட்டத்திலிருந்து, சில பூக்களை வாய்வழி ரசணைநரம்பிற்கு செருகிப்பார்த்தபொழுது,
என் உடம்பின் அனைத்து நரம்பிலும் , குருதி ருசிக்க வந்த கவிதையாகவே அதன் வாசத்தை பரப்பி விட்டது .
"" வகுப்பறையில் நண்பன் ஒருவன்
மூங்கில் கழியினால் அடிவாங்கிக்கொண்டிருக்கையில்,
அதே செயலுக்காக தப்பித்துக்கொண்டிருந்தேன் .
- இந்த உண்மை, ஆறுவருடங்களுக்குப்பிறகு எனக்கு எப்பொழுது நியாபகம் வருகிறதென்றால்,
சொல் எனும் தானியத்தில் முதல் கவிதையான சூரியனை நேர்ந்து கொண்டிருப்பவளை தரிசிக்கும்போதுதான் .
" அவன் விதைப்பது
பெயர்தெரியாத சின்னஞ்சிறு
பறவைகளுக்கும்தான் "
- என்கிற வரி, ஓர் உணர்தலை எனக்குள் உணர்த்திவிடுகிறது .
சக்தி ஜோதி என்கிற கவி விதைத்தது,
கண்டுபிடிக்க இயலாத நம் உடம்பின் ஏதாவதொரு ரசணை நரம்பு பருகத்தான்.
கவிதையின் ஸ்பரிசத்தில் நாம் அமர்ந்துகொண்ட போது,
ஒரு இரவை, ஒரு பௌர்ணமியை, ஒரு காதலை அல்லது ஒரு காமத்தை நாம் முதல்முதலாக எழுதி நனைந்திருப்போம் .
இக்கவிதை தொகுப்பின் ஸ்பரிசக்கூந்தலில், பேன்களெல்லாம் வண்ணத்துப்பூச்சியாய் போகிற மாயம் தான்,
இக்கவிதைகளை எழுதிய கணத்தை தீர்மானிக்கிறது.
ஒரு இருள் சாதாரணமாக
ஒரு இடத்தை அடைவதில்லை.
இடம் அறிந்து இடை புகுந்து நெழிந்து வளைந்து நேர்கோட்டில் செல்கிற இருளை, எப்படி காட்சிப்படுத்துவது என்கிற உண்மையை ஒரு உவமையாக்கி தெளித்திருக்கிறது, மழை மறைவு நிலத்தில் ஓர்வரி .
அது,
" தோப்புத்துரவென செழித்து இருக்கும்
மலையடிச்சரிவில் இருக்கிற கிராமத்தில்
கூடடைந்த பறவைகளின்
சிறகசைவுக்குள் இருள் புரள்கையில் "
இப்படியொரு காட்சிப்படுத்துதல் தான்
கவிதையை, அதன் உயிரை மிக எளிதில் அடையாளம் காண வைக்கிறது.
" ஓவியத்தினுள் புல்வெளி"
" துயரத்தை பொசுக்கும் எரிநட்சத்திரம்"
" நிலவு விலையாட்டின் சுழற்சி"
" அமிழ்தலும் மிதத்தலும அற்ற ஆறு "
" மழை மறைவு நிலம்"
" முந்தானைச் சோளம்"
- இக்கவிதைகளும் இதற்கான கணமும் களமும் எனக்கான உயிரை பூப்பெய்துவிட செய்கின்றன. மற்ற கவிதைகளின் பொழிவுமொழி, என் ஜனனத்தை மீண்டும் ஒருமுறை ஜனனிக்க வைக்கிறது.
முந்தானைச்சோளமெனும் சாமானிய சாதாரண பெண்களுக்கான ஓர் கவிதை,
அவ்வினத்தின் காதலை சொகுசாக நிலைநிறுத்துகிறது.
" பகலெல்லாம் கசிந்து மீந்திருக்கும் பாலை சிசுவிற்க்கும்
இரவை கணவனுக்குமாகக் காட்டி
விளைநிலமாக்கிக் கொண்ட
பெண்ணின் மார்பகத்திலிருந்து
காதல் பெருகி வடிந்துகொண்டிருக்கிறது "
- இக்கவிதையின் கருவிலிருந்து என் ஜென்மத்திற்கான நீர் ஆனந்தத்தில் இதயம் கிழித்து வடிகிறது காகிதமெங்கும் .
ஒரு புத்தகத்தை முழுமைபடுத்துதல் என்பது,
அதன் கருவில் நாம் சிசுவாக முளைத்து மார் பருகும் போது தான்.
இப்புத்தகத்தின் முழுமையை என் தனித்த அறையின், குளிர் வெளிச்சத்தில் இரவு 2.30 மணியின் போதுதான்.
அவ்விரவிலே நான் சிசுவாகி விட்டேன், இந்நிகழ்வின் மகிழ்வில் மார் பருகி விட்டேன்.
மொழி இடறிய கணத்திலிருந்து
தோன்றுகின்ற எழுத்து பிம்பத்தின் சக்திதான் ஒரு கவிதையை அதன் வெற்றியை நிலை நிறுத்துகிறது.
சமூகம் தூங்கிக் கொண்டிருக்கும் நாளில்,
பெண்ணியம் இடிவாங்கிக்கொண்டிருக்கும் நாகரிகத்தில்,
கருவறைக்குள் கொலைசெய்து கொண்டிருக்கும் இவ்வுலகில்,
ஒருபெண் தன் வீரியத்தை மொழியின் துணையால் கவியின் பேரானந்தத்தால் இப்பிரபஞ்சத்தை தட்டி தட்டி உசுப்புவதென்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.
" பசித்த ஆட்டுக்குட்டியின் மிரண்ட கண்களைப்போலவே "
- இக்கவிதை உலகில், கவி சமைத்து உண்ணும் என் ஐம்புலனிற்கு , சக்திஜோதி என்கிற நிஜம், என்போன்றோரை மிரட்டிப்போகவே இக்கவிதைகளால் எங்களுக்கு பசி தந்திருக்கிறார்.
" முதல் முதலாக பெற்றுக்கொண்ட முத்தம் "
" முதல் முதலாக எழுதிப்பார்த்த கவிதை "
" முதல்முதலாக பிடித்துப்போன ஆசிரியை "
" முதல் முதலாக பிரசவவலி பொருத்த தாய்மை "
- இவையாவுமே நம் ஜென்மத்தின் மூச்சுக்குள், மறவாது இருந்து மகிழ்வு தரக்கூடிய விசயம்.
இதன் நுனியிலிருந்து நீண்டுகொண்டிருக்கிறது சொல் எனும் தானியத்திற்கான என் பிரியம்.
" பாம்பின் விஷம் போல
காமம் தாங்கியே
கோடையின் பூக்கள் மலர்கின்றன "
- இக்கவிதையின் மெய்பித்தல், கோடைபூக்களின் மொட்டவிழ்த்தலை, அதன் தேகப் பிளவுகளை, விஷம விருட்சத்தை மிக நாசூக்காக உணர்த்திவிட்டு மனதில் ஜில் என சூடிக்கொள்கின்றன கோடைப்பூக்கள்.
ஒரு ஜென்ம காலத்தை கவிதைகளுக்குள் முக்கி, நனைந்த ஈரம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கலந்துபோகும் சமயத்தில்தான், கவிதைகளுக்கான சுவாரசியம் மட்டும் நீர்நிலையற்ற மனதில் ஒரு ஊஞ்சல் கட்டி ஆடித்திரியும்.
கவிதைகளுக்கான உடம்பை ஆடையை தயார்படுத்திக்கொண்டு, அக்கவிதையின் உயிரை எங்கேயாவது தேடுபொருளாக்கி வினவிக்கொண்டிருக்கும் கலை கட்டத்தில், உடம்பையும் ஆடையையும் தவிர்த்து, வரிகள் முழுக்க உயிரை வடியவிட்ட சொல் நிர்வாணத்தின் அழகு , எல்லா சாமணியனாலும் கொண்டாடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதை சக்தி ஜோதியின் கவிதைகளில் பல இடங்களில் பார்க்கலாம்.
பெண் ஒருத்தி சாதாரண நாளிற்காக திணிக்கப்பட்ட மனநிலையை எப்போதும் உடுத்திக்கொண்டிருக்கிறாள்.
அவள் தாய்மை வலி உணருகிறாள், உழைக்கிறாள், நாற்று நடுகிறாள் , பிரபஞ்சத்தை உருவாக்க தன் கடமை உடமைகளை வெளிக்காட்டுகிறாள். இந்நாடு பெண்களால் நிறைந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ பெண்ணியம் இடி வாங்கிக்கொண்டிருக்கிறது. பெண்கள் பெற்றிட்ட செல்வத்தைதான் யாவரும் கொண்டாடுகிறோம். பெண்கள் உருவாக்கிய வீட்டின் அறையில் ஆண்களின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது. பெண் உறங்குவதற்கான வசதியை அமைத்து தருகிறாள். ஆனால், அவள் உறங்க மட்டும் நாம் அனுமதிப்பதில்லை. பெண்களின் உறக்கம் பல தவிப்புகளை மறைப்பதற்காகவே.
உண்மையில் பெண் ஒரு நீள் உறக்கத்தையே விரும்புகிறாள். சவம் போலொரு யுகாந்திர உறக்கத்தையே விரும்புகிறாள்.
- இந்த மாதிரியான உறக்கத்தின் பின்னணியில் தான் அவளின் ஜென்மம், காலம், அழகு, ஆசை, கொண்டாட்டம், சுவாசம் அனைத்துமே நிறைந்திருக்கிறது.
எல்லா இரவின் உறக்கத்தைப்போலவே இந்த உறக்கம் இருந்துவிடாது. ஏனெனில், அவள் கேட்டது சவம் போலொரு யுகாந்திர உறக்கம். இந்த உறக்கத்தில் அவள் வேண்டுவது யாவரும் அறியாத்தாய் போகிறது.
சக்திஜோதி எழுதியிருக்கிற இந்த யுகாந்திர உறக்கத்தில், அதன் மென் முடிச்சுக்களை அவிழ்த்து பார்த்தால், சிலநூறுஆயிரம் பெண்களின் தவிப்புகள் உறங்கிக்கொண்டிருக்கும் என
நினைக்கிறேன்.
யுகாந்திர உறக்கத்தை கொண்டாடக்கூடிய ஒரு இரவும், இக்கவிதைக்காரியை கொண்டாடக்கூடிய ஒரு பகலும் எப்போதும் நிலைத்திடவே வேண்டுது இந்த கவிமனசு.
அழகியலின் மொழியை பிளந்து நவீன காலத்து இயல்பையும் சொல்லாடலையும் கவிதையெனும் அதிரூபமான வடிவத்திற்குள் நுழைத்து, இக்காலத்தின் சமவெளிப்பரப்புகளில் ஒழிந்தும் மறைந்தும் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய புரிதலற்ற அழகை , அம்சத்தை, தத்ரூபத்தை உணர்ந்து, கவியின் நயத்திற்கு பொன்னாடை அணிவிக்கிற சக்திஜோதி என்கிற பெண்மீனுக்கு ஒரு விண்மீனைத்தான் பரிசளிக்க வேண்டும்.
இக்கவிதை நூலுக்கு
தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், அன்பின் அனற்பனியொன்றை மிகச்சிறப்பாக அணிந்துரை ஆக்கியிருக்கிறார்.
கவிதையும்
கவிதையின் பிம்பமும்
கணப்பொழுதில் தோன்றி
யுகக்காலம் வரை நீடிக்கிறதென்பதற்கு
- சொல் எனும் தானியம் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.
மொத்ததில் ,
சொல் எனும் தானியம்
ஒரு நல்ல கலைஞர்களுக்கான தீனி
ஒரு நல்ல கவிஞர்களுக்கான பசி..
- ச.விவேக்

கடவுளின் கடந்த காலம்-கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்
திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை வெந்து ரணமாகியிருந்தது. மருத்துவரிடம் சென்று, களிம்பு ஒன்று தடவியதில் சில தினங்களில் குணமாயிற்று. ஆனால், தீ வடு நிலைத்தது. இரண்டு நாட்கள் கழித்து, வலது தொடைமீது எரிந்து கொண்டிருக்கும் பீடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் சென்று பீடி அகன்றது. தீக்காயம் ஏற்பட்டிருந்தது.
mandala-yab-yum-tibetan-buddhism-drawing-modern-art-work
இப்பொழுது இந்த அனுபவம் அவருக்குப் பழக்கப்பட்டுவிட்டிருந்தது. திடாரென அவரது கைக்கடியார வார் முறுக்கப்பட்டது. மணிக்கட்டில் தாங்க முடியாத இறுக்கம் ஏற்பட்டது. அவர் எச்சரிக்கையானார். இப்படியே விட்டால் இது அவரைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும். அவர் சில முடிவுகளை உடனடியாக எடுக்கத் தொடங்கினார். புதிய முயற்சிகளில் ஈடுபடலானார். இன்னும் மணிக்கட்டில் இறுக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் விவேகத்துடன் மானசீகமாகக் கைக்கடியாரத்தைக் கழற்றினார். உடனே இறுக்கம், உபாதை வடிந்தது. அவர் தான் கையாண்ட உத்திக்காகத் தன்னைப் பாராட்டிக் கொண்டார். அந்த வினோதமான ஒன்றை வென்ற திருப்தி அவருக்கு மனநிறைவைத் தந்தது. அப்பாடா ' இந்தக் கஷ்டத்திலிருந்து ஒருவாறு விடுபட்டாகிவிட்டது.
ஆனால், அவரது நிம்மதி நெடுமூச்சு அதிககாலம் நிலைக்கவில்லை. தலைமுடிக்குள்ளே ஒருபல்லி ஊர ஆரம்பித்தது. இப்பொழுது அவர் அலறவில்லை. பல்லியை மானசீகமாகக் கை கொண்டு தட்டிவிட்டார். உடனே ஊரல் அகன்றது. மீண்டும் அவர் தன்னைப் பாராட்டிக்கொண்டார். மென்மேலும் நெருப்புத் துண்டுகள் அவரை இம்சித்தபடி இருந்தன. அவர் மனரீதியில் அவற்றை அகற்றி நிவாரணம் தேடிக் கொண்டிருந்தார்.
இப்படியே காலம் நகர்ந்துகொண்டிருந்தது. மானுட சோதனைகளில் நேரம் அதிகம் விரயமாகிக் கொண்டிருந்தது. அவர் சளைக்காமல் அந்த விசித்திரத்துடன் மல்லாடிக் கொண்டிருந்தார். ஒரு கற்பித மதம்பிடித்த யானையுடன் உக்கிரத்துடன் போரிட்டு அடிக்கடி வெற்றிகாணும் உணர்வு அவருக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவருக்கு அதிகாலை வேளையில் ஒரு ரம்மியமான அனுபவம் ஏற்பட்டது. வசீகரமான ஆகாயப் பரப்பு. ஒரு பூதாகரப் பருந்து சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தது. பிரபஞ்சம் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தது. பருந்து அனைத்துக்கும் மேலாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. பருந்து அழகே உருப்பெற்றதாக இருந்தது. அதன் கழுத்தை வெள்ளை வட்டம் ஒன்று ஆரமாக அலங்கரித்திருந்தது. வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து அந்தரத்தில் நிலைத்து நின்றது. தன் அலகுகளை அகலத் திறந்தது. அவர் உட்சென்றார்மிகவும் பிரியப்பட்டு. அந்த அழகான உயிரினத்தினுள் அவர் ஒரு கணம் ஐக்கியமானார். நேரம் கழிந்தது. பருந்தின் அலகுகளில் இருந்து அவர் வெளிவந்தார். உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன: 'நான் சக மனிதனை நேசிப்பவன், காதலிப்பவன், இனி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களும் என் உற்ற தோழர்கள். ' அவரது உறக்கம் கலைந்தது. கண்ணெதிரே ஓர் ஒளிவட்டம் தென்பட்டது. அதிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது: 'அன்பு, எல்லாம் அன்பு மயம் ' ஒளிவட்டம் அகன்றது. ஆனால் செய்தி மனதில் ஆழமாகப் பதிந்தது.
அடுத்த இரவு இன்னொரு அனுபவம்: உறக்கம் கலைந்த நிலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். எந்தவொரு சிந்தனையும் அவரை ஆட்கொள்ளவில்லை. முற்றாக ஒரு சிந்தனையும் அற்றநிலை. அந்த அனுபவம் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் அவர் அதை உணரவில்லை. மனம் ஓர் அனுபவத்தை நுகர்ந்து கொண்டிருக்கும்போது அது எப்படிச் செயல்படுகிறது என்பதை உணர்வது அசாத்தியம். அனுபவம் நிறைவுற்ற பிறகே பின்னோக்கி நகர்ந்து அனுபவத்தின்போது அது செயல்பட்ட விதத்தை ஊகிக்கலாம். எது எப்படியோ அந்தச் சிந்தனையற்ற சூனியம் அவருள் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருபிரம்மாண்டமான சூன்யம். முழுக்கவும் ஒன்றுமில்லாத நிலை. அவரும் இல்லை. எதுவும் இல்லை. அவரது அனுபவம் முடிவுற்றது. அவர் இப்பொழுது ஆழ்ந்த அமைதியைப் பிரக்ஞை பூர்வமாக அனுபவித்தார். எண்ணங்களற்ற வெற்று நிலை; மனதின் அசைவுகளற்ற, சலனமற்ற உயரிய நிலை. முக்தி நிலை. அவருக்கு அது ஏற்பட்டிருந்தது, ஒரு பத்தே நிமிடங்களாக இருந்தாலும். புத்தரின் போதி விருட்சமும் ஆர்க்கிமிடாஸின் தண்ணீர்த் தொட்டியும் நினைவில் தைத்து விடுபெற்றன. தனக்கு ஒரு சாதாரணப்படுக்கை. பரவாயில்லை. எந்த நிலையில் உன்னத அனுபவங்கள் ஏற்பட்டாலும் வரவேற்கத் தக்கனவே. மீண்டும் அந்தச் செய்தி அவரைச் சந்தித்தது: 'அன்பு, எல்லாம் அன்பு மயம். '
அவர் இப்பொழுது அன்பே உருவானவராக விளங்கினார். கனிவு, பரிவு, நேசம் -- அதுதான் அவர். குரலில் தேன் வழிந்தது. அவருக்கு நிறைய நண்பர்கள் ஏற்பட்டார்கள். தோழிகளும். அவர் முதல் முறையாகக் கடவுள் பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தார். கடவுள் என்றால் அன்பு என்றார். பரந்துபட்ட நேசத்திலும் பிறரை மன்னிப்பதிலும்தான் கடவுள் இருக்கிறார் என்றார். கடவுள், மனிதன் உருவாக்கிய சம்பிரதாயக் கட்டிடங்களில் இல்லை என்றார். சில மதவாதிகள் அவரைக் கடுமையாகச் சாடினார்கள். அவர் மென்மையுடன் விமரிசனங்களை ஏற்றுக் கொண்டார். விமரிசனம் செய்பவர்களையும் தான் ஆழ்ந்து நேசிப்பதாக சொன்னார். ஒரு நாத்திகவாதியின் நேசம் தங்களுக்குத் தேவையில்லை என்றார்கள் அவர்கள். தன்னை அன்னியப்படுத்த வேண்டாம் என்று அவர் கெஞ்சினார். அதீத மானுடக் கற்பனைகளால் உருப்பெற்ற கடவுள்கள் மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டாம் என்றார். ஆனால் அவர்களுக்கு அன்பைவிட ஒரு சிலைக் கடவுள்தான் முக்கியமாகப்பட்டது. அவர் மனவருத்தம் கொள்ளவில்லை. அவரது அன்பு வடியாத ஒன்றாக இருந்தது. 'சாந்தி ' என்ற வார்த்தையை அவரது உதடுகள் அடிக்கடி உச்சரித்தன.
திடாரென ஒரு நாள் அவரது நினைவுகள் ஓராண்டு காலம் பின்னோக்கி நகர்ந்தன. தான் கஞ்சா அடித்ததையும் அப்பொழுது பிரக்ஞை விசாலமாகத் தோன்றியதையும் நினைவு கூர்ந்தார். ஓர் ஒன்பது மாத காலம் ஒரு நிலையில் தொடர்ந்து உட்காரவோ நிற்கவோ முடியாமல் நிலை கொள்ளாமையால் அவஸ்தைப்பட்டதும் அவரது நினைவுக்கு வந்தது. ஏழெட்டுமுறை போதைமாத்திரைகள் உட்கொண்டதையும் நினைவுபடுத்திக் கொண்டார். அப்பொழுதும் அவர் பிரபஞ்சத்தைப் பற்றியும் கடவுளைப்பற்றியும் யோசித்ததுண்டு. ஆனால் அவை மிகமிகக் குழப்பமான நாட்கள். பிறகு தன்மேல் வைக்கப்பட்ட நெருப்புத் துண்டுகள் அவர் நினைவை எரித்தன. கஞ்சாவும் போதை மாத்திரைகளும் அவருக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்துவிட்டன ' தான் திடமுடன் போராடாமல் விட்டிருந்தால், அந்த இரண்டு விழிப்புணர்வு அனுபவங்களும் ஏற்பட்டிருக்காவிட்டால் ? அவர் மேற்கொண்டு நினைக்க அஞ்சினார்.
மனம் லேசான தொந்தரவுக்குள்ளானதை அவர் உணர்ந்தார். எழுந்து குளியலறைக்குச் சென்றார். முகத்தைக் கழுவிக் கொண்டார். மீண்டும் அவர் தன் தற்பொழுதைய நிலைக்கு வந்துவிட்டிருந்தார். 'அன்பே சிவம் ' என்று உதடுகள் உச்சரிக்க அவர் அன்பில் மீண்டும் அடைக்கலம் புகுந்தார்.

A Japanese researcher has created the world's first 'car in a bag':




A Japanese engineer has developed a portable transporter small enough to be carried in a backpack that he says is the world's first 'car in a bag'.
Twenty-six-year-old Kuniako Saito and his team at Cocoa Motors recently unveiled the lithium battery-powered "WalkCar" transporter, which is the size of a laptop and resembles a skateboard more than a car.

The slender WalkCar is made from aluminum and weighs between two and three kilograms (4.4 to 6.6 pounds), depending on whether it is an indoor or outdoor version.
Saito expects to see many other uses for his transporter, as he says it has enough power to help people push wheelchairs with ease. The lightweight aluminum board is stronger than it looks, and can take loads of up to 120kg (265 pounds).
It reaches top speeds of 10 kilometers per hour (6.2 miles per hour), for distances of up to 12 kilometers (7.4 miles) after three hours of charging.
Its developer says it's also extremely simple to ride. Once the rider stands on it the WalkCar starts automatically, while simply stepping off stops the vehicle. To change direction, the user just shifts their weight.

Super dharsan Om.Varahi potri


Om shiri mahavarahi peedam at arcot next to kanchipuram just 40km. Vellore district. Arcot town.