Search This Blog

Wednesday, September 14, 2011

குழந்தை வரம் பெற உதவும் மகத்தான ஆலயங்களும் , வழிபாட்டு முறைகளும்..


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQY8czgxCzQSzsj4FXmxMAv0onXy5ctA9QlT96Q2GuC9GPAYl8f

வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரையுடன் - கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள மகத்தான , மேன்மை பொருந்திய ஆலயங்கள் பற்றிய கட்டுரை , இப்போதைக்கு நிறைவடைகிறது. பின்னொரு சமயத்தில் , வாய்ப்பு கிடைக்கும்போது - இன்னும் விரிவாக தொடர இறையருள் துணை புரியும் என்று நம்புகிறேன்.. 

இனி , நம் வருங்கால சமுதாயத் தூண்களான - குழந்தைகள், மேன்மை  பொருந்திய மேதைகளாக பிறக்க எந்த ஆலயத்திற்கு சென்று எப்படி வழிபடுவது என்பது பற்றி பார்ப்போம்.. 


சிவபுரம் என்றழைக்கப்படும் " திருச்சிவபுரம் "
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், " சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி " என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது

ஆதி கும்பேஸ்வரர் திருக் கோயில் " நவநீத கணபதி" 


காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் " வெண்ணெய் கணபதி " ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய " குர " தீர்த்தத்தில் நீராடி, இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் " மந்திர பீடேஸ்வரியாய் " அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும். கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் " நவ கன்னியர் வழிபாடு " 

நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள் , எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத  பெண்கள் பூப்பெய்துவர்.

பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து, பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பாணதுறையானது. தல நாயகன் " பாணபுரீஸ்வரரானார் ". இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனைவி  காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்ட்தால், தீராத தன் " குஷ்ட நோய் " நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான்.  இத் தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாமகக் குளக் கரையில் அமைந்துள்ளது 

ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள " குழந்தை கிருஷ்ணன் ". 
3 வது திவ்ய தேசமாக விளங்கும் சாரங்கபாணி  கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப் பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு. 

கரு வளர்க்கும் " கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி " 

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக் கோயில், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் மருதாநல்லூர் என்ற கிராமத்தை அடுத்து உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாக புற்று மண்ணிலிருந்து தோன்றியதால், சாம்பிராணித் தைலமும், புணுகும் மட்டுமே சார்த்தப்படுகிறது. பல வருடங்களாக குழந்தை இல்லாதோர், இங்கு வந்து, அம்மனின் முன் உள்ள வாசற்படியை நெய் கொண்டு மெழுகி வழிபடவேண்டும். பிரசாதமாக தரப்படும் மஞ்சளை, பெண்கள் தினந்தோறும் பூசி குளித்திட மகப் பேறு கிடைக்கும். கல்யாண வைபவங்கள் நடைபெறவும், இத் தல நாயகி அருளுகிறாள். 

நின்ற நிலையில் வீற்றிருக்கும் " திருமணஞ்சேரி ராகு பகவான் " 
கும்பகோணத்தை அடுத்துள்ள மாயவரத்தை அடுத்துள்ளது " மணவரம் அருளும் திருமணஞ்சேரி ". கல்யாணப் பேறு அளிப்பது " கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர் " என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் " ராகு பகவான் ". அமாவாசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், திரும்ப தரப்படும் தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாட்டை  மூன்று அல்லது ஐந்து அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.

மகப்பேறு தரும் " தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் " 

திருக்
டையூரிலிருந்து சும்மர் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சங்கு வடிவில் உள்ள " தலைச்சங்காடு ". சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. திருமாலுக்கு சங்கு கொடுத்ததால் இந்த ஈசன் " சங்கரான்யேஸ்வரர் " ஆனார் . அம்பிகை " சௌந்தரநாயகி அம்மன் ". பௌர்ணமி தோறும், இந்த அம்மனுக்கு, குழந்தை வரம் வேண்டி. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சார்த்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தான பிரசாதத்தை சிறிது உண்ண குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், வழிபாட்டின்போது, பௌர்ணமி விரதம் இருப்பது நல்ல பயன் அளிக்கும். 

கரு தந்து காத்திடும் " திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகை " 

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். 

கதிராமங்கலம் " வனதுர்க்கை " 

கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற சிற்றூரின் அருகில் உள்ளது, கம்பரும் அகத்தியரும் வழிபட்ட வனதுர்க்கை குடிகொண்டுள்ள " கதிராமங்கலம் ". ராகு கால வேளை என்பது, ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம், எனவே ராகு திசை வழிபாட்டிற்க்கான சிறந்த நேரம் ராகு காலமே. இந்த துர்க்கையை எலுமிச்சம்பழத் தோலில் நெய் விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலை சார்த்தி 9,11 அல்லது 21 வாரங்கள் வழிபட " புத்திர பாக்கியம் " கிட்டும் என்பது நிச்சயம். 

தஞ்சாவூர் மேல வீதி " சங்கர நாராயணன் " 

கரிகால் சோழனின் வழி வந்த, பீம சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவது. வலப்புறம் பார்வதியையும், இடப் பக்கம் லஷ்மியையும் கொண்டு 5 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இத் தல மூர்த்தியின் சிலை சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே கொண்டது. இத் தலம் " குழந்தைப் பேறு அருளும் " புண்ணிய ஷேத்திரமாக விளங்குகிறது. 

குழந்தை செல்வம் பெற " திருவெண்காடு"


நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத தம்பதியர் இத் தலத்தில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் குழந்தைச் செல்வம் பெறுவர். இத் திருத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அச்சுதகளப்பாளர் என்னும் சிவனடியாருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. 
ஒரு நாள் அவர், திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு பதிகத்தை படிக்க, அதில் கூறியுள்ளாவாறு திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள சூரிய, சோம மற்றும் அக்னி என்ற மூன்று குளங்களிலும் நீராடி பரம்பொருளை வழிபட, அவர் வேண்டுதளுக்கிணங்க பெருமானும் குழந்தைச் செல்வத்தை அளித்தார். அக் குழந்தைதான், "சிவஞானபோதம்" எனும் பன்னிரு சூத்திரத்தை தந்த "மெய்க்கண்டார்" என்ற சிவஞான சித்தர். குழந்தை செல்வம் பெற விரும்புபவர்கள், திருவெண்காடு சென்று அங்குள்ள முக் குளங்களிலும் நீராடி சிவ பெருமானை வழிபட வேண்டும். தினமும் காலை வேளைகளில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளிப்பது மேலும் சிறப்பு.





Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_7616.html#ixzz1XvDreAZZ

கர்ம வினைகளை அழித்து - ஆரோக்கியம், மன நிம்மதி , செல்வ வளம் பெற - மகாளய பட்ச வழிபாட்டு முறைகள்





http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSqaEVMk7Zvp8XO9CrXRGR4SXHOd1v7zOg9R1LcrEVcc6GemyPn9A


புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை வரும் 26-ந்தேதியாகும். அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை  நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை  வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.
`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது.  ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் .
நோயில் இருந்து விடுதலை:
 பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.
பிதுர் தேவதைகள்:
 நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.
1. நம் பித்ருக்கள் (மண்),
2. புரூரவர் (நீர்),
3. விசுவதேவர் (நெருப்பு),
4. அஸீருத்வர் (காற்று),
5. ஆதித்யர் (ஆகாயம்)
என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான்  என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன.  ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.
இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம்.  வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!
புனித நீர் ஸ்தலங்கள்:
காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண  லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
காருண்ய பித்ருக்கள்:
 சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பலன்கள்:
நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.
இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர்.  வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.
சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்!
இந்த பொன்னான வாய்ப்பை நம் வாசகர்கள் பயன் படுத்திக் கொள்வது ,  கிரகங்களின் மூலம் ஏற்படும் அத்துணை இடர்களிலிருந்தும் - உங்களை பாதுகாத்தது உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நன்மை பயக்கும்..!


நன்றி : மாலை மலர், ஆன்மீகம்.


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_4974.html#ixzz1XvDTTTYu

இறைவனின் அசரீரி ஒலித்த ஸ்ரீ மகாலிங்கம் ஆலயம்



இறைவனை முழு மனதுடன் நம்புபவர்களுக்கு - அவனது தரிசனம் நிச்சயம் கிடைக்கும் ! அவனது உதவி தொடர்ந்து , ஏதாவது ரூபத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து வாருங்கள்...! நம்புபவருக்கு நம் ஈசன் என்றும் துணை நிற்பான் !

திருவிடை மருதூர் ஆலயம் பற்றி நான் ஏற்கனவே இரண்டு , மூன்று கட்டுரைகளில் குறிப்பிட்டு இருந்தேன்.. இதுவும் ஒரு அதிசய நிகழ்வு.. நம் வாசகர்களுக்காக பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி..!

இமயம் முதல் குமரி வரையில் பரந்து விரிந்துள்ள இந்தப் பாரத தேசத்தில் கணக்கற்ற சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. இவை இன்றும் அருள்பெருகும் ஜீவநதிகளாக இருக்கின்றன.

1,008 சிவாலயங்களில் 274 ஆலயங்கள் பாடல்பெற்ற தலங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பும், அருள்வீச்சும், பழைமையும், இதிகாசத்துடன் கூடிய வரலாற்றுத் தொடர்பும் உடையவை.

சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு - இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி. தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி தரும் தலங்களுள் காசிக்குச் சமமாகக் கருதப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலம் - திருவிடைமருதூர்.

2,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புப் பெற்றது.

கோயிலின் வெளியே நான்கு மூலைகளிலும் நான்கு சிவாலயங்களைக் கொண்டிருப்பதால், இது பஞ்சலிங்க க்ஷேத்திரம் எனப்படுகிறது. வரகுண பாண்டியன் என்ற மன்னனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம். தன்னைத்தான் அர்ச்சித்துக்கொண்ட தலம் எனப் பல வகையிலும் பெருமை பெற்ற தலம் திருவிடைமருதூர்.

அகத்தியர் தொடங்கி பல ரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமையுடைய இத்தலத்துக்கு ஆதிசங்கரர் தனது திக் விஜயத்தின்போது வந்தார். அத்வைத சித்தாந்தத்தைப் பலர் ஏற்க மறுத்தனர். எல்லா பண்டிதர்களையும் மற்ற மதத்தினரையும் அழைத்துவந்து ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் முன் நிறுத்தி, ஈஸ்வரனையே எது ஸத்யம் என்று சொல்லும்படி வேண்டினார்.

அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க, மூலவர் ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி கைதூக்கி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று மூன்று முறை அசரீரியாகச் சொன்னார். அனைவரும் வியந்து பயந்து ஸ்ரீசங்கரருக்குச் சீடரானார்கள்.

 ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று கைதூக்கி மும்முறை கூறியதை நினைவுபடுத்தும் வகையில் ஸ்ரீமடத்தின் முகப்பு வாயிலின் முதல் தளத்தில் அழகான சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி தோஷம் - உள்ளவர்கள் . இங்கு வந்து தோஷ நிவாரணம் செய்ய வேண்டும். கொலைக்கு சமமான பாவங்கள் , பெண்ணை அனுபவித்து விட்டு - திருமணம் செய்யாமல் தவிக்கவைத்தல் - போன்ற கடும் பாவங்கள் செய்தவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும். 

நல்ல யோகம் இருந்தும், சில ஜாதகங்கள் செயல் படாமல் இருப்பதும் இது போன்ற தோஷங்களின் விளைவே. 

எவர் ஒருவர் சென்ற ஜென்மத்தில் இது போன்ற பாவங்களை செய்து இருப்பாரோ, அவர்களுக்கு ஜாதகத்தை பார்த்ததும் இந்த தோஷ அமைப்பை கூறிவிட முடியும். அவர்கள் இது போன்ற பாவ செயல்களை செய்ததால் - கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று இழந்த வாய்ப்புகள் ஏராளமாக இருக்கும். 

ஒருவர் ஜாதகத்தில் ( ராசி / அம்சம் ) - சனியும் குருவும் சேர்ந்து இருந்தாலோ , அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும்படி சம சப்தம ஸ்தானத்தில் இருந்தாலோ , அவர்கள் , இந்த ஆலயம் சென்று பரிகாரம் மேற்கொள்வது நல்லது...!

அதன்பிறகு உங்கள் வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்..!

வாழ்க வளமுடன் !


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_14.html#ixzz1XvD6DPJx