Search This Blog

Wednesday, March 13, 2024

பொருள் முதல்வாத மனநோயியல்


மனநோய் மருத்துவர் ஜி. டி க்ளரம்பவுல் முன் வைத்த பிரபலமான கருதுகோள் மிகவும் ஆழமானது: உலக நிலையாக, ஓர் அமைப்பாக இருக்கும் பிதற்றல் நிலை, ஓர் இரண்டாம் நிலை குணம்; பகுதியான, அந்தந்த வட்டாரம் சார்ந்த தானியங்கும் குணத்தின் விளைவு ஆகும். விரும்பும்-எந்திரங்களின் உற்பத்தியின் செயல்முறை கொண்ட பதிவின் குணம்தான் பிதற்ற நிலை என்பது உண்மை;
ஐயுறவு மன நோயிலும், மனச் சிதைவு நோயின் ஐயுறவு மனநோய் வடிவங்களிலும் இருப்பது போல், இந்தப் பதிவு செயல்முறையின் தனி அம்சங்களான, ஒருங்கிணைப்புகளும் ஒழுங்கின்மைகளும் (பாசங்கள்) இருந்தாலும், ஒரு தனிப்பட்ட வெளியை அது உருவாக்குவதில்லை. ஏனெனில் அது, விரும்பும்-எந்திரங்களின் இயக்கம் மற்றும் முடக்கத்தைச் சார்ந்திருக்கிறது.
எப்படியாயினும், பச்சிளங் குழந்தைகள் எழுப்பும் ஒலிகள், பல்வேறு விதமான சப்தங்களைச் செய்தல், அல்லது திடீரென்ற காரணமற்ற வெடிப்புகள் போன்ற பொருளற்ற குணங்களைக் குறிப்பிட க்ளரம்பவுல், '(மன ரீதியான) தானியங்கித்தன்மை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். கிருமித் தாக்குதல் அல்லது விஷத்தன்மை ஆகியவற்றின் எந்திரத்தனமான விளைவுகள் இவை என்று அவர் கூறுகிறார்.
மேலும், பிதற்றல் நிலையின் பெரும்பகுதி, தானியங்கித்தன்மையின் விளைவு என்று அவர் விளக்கினார்; அவருடைய பார்வையில், மிச்சப் பகுதியான, 'தனிப்பட்ட பகுதி' என்பது, எதிர்வினையின் ஓர் இயல்பு, 'குணத்தை' அடிப்படையாகக் கொண்டது. குணத்தின் வெளிப்பாடுகள் தானியங்கித்தன்மைக்கு (உதாரணமாக, ஐயுறவு மனநோய் மனிதனுள் இருப்பது போல்) முன் இருப்பவை ஆகும். எனவே, தானியங்கித்தன்மை என்பது விரும்பும்-எந்திரங்களைச் சார்ந்த பொருளாதார உற்பத்தியின் செயல்முறையாக அல்லாமல், நரம்பியல் இயக்கம் எனும் சொல்லின் சாதாரணமாகப் பொருள் கொடுக்கும் அம்சம் போல்தான் க்ளரம்பவுல் கருதுகிறார்.
வரலாற்றைப் பொறுத்தவரை, அதனுடைய உள்ளார்ந்த அல்லது பீடிக்கப்பட்ட இயல்பைக் குறிப்பிடுவதில் அவர் திருப்தி அடைந்துவிடுகிறார். க்ளரம்பவுல், உளவியலின் ஃபாயர்பாஹ் என்று சொல்லிவிடலாம். ஃபாயர்பாஹ்வை மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல் அதைச் சொல்ல வேண்டும். 'பொருள்களை ஒரு பொருள்முதல்வாதியாக ஃபாயார்பாஹ் நோக்கும்போது, அவருடைய படைப்புகளில் வரலாறு இல்லாமல் போய்விடுகிறது. அவர் வரலாற்றை கையில் எடுத்துக்கொள்ளும்போது அவர் ஒரு பொருள்முதல்வாதியாக இல்லாமல் போய்விடுகிறார்,' என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
மாறாக, ஓர் உண்மையான பொருள்முதல்வாத மனநோயியலை இரட்டை இலக்குகளை வைத்துக்கொண்டிருப்பதால் இப்படி வரையறுக்கலாம்: இயக்கத்தில் விருப்பத்தை அறிமுகம் செய்வது, விருப்பத்தில் உற்பத்தியை அறிமுகம் செய்வது.
இடிபஸுக்கு எதிராக-முதலாளித்துவமும் மனப்பிறழ்வும் -டெல்யூஜ் & கத்தாரி (மொழிபெயர்ப்பு: முபீன் சாதிகா & நிஜந்தன்)

No comments:

Post a Comment