இலங்கையில் மனித நாகரிகத்தின் தொடக்க காலம் முதல் மனிதக் குடியிருப்புக்களின் தொடர்ச்சியும் நீட்சியும் அறியப் பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு லட்சத்தி இருபத்தியையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்."இந்து சமுத்திரத்தைக் கடந்து வந்து பிளைத்தோசியன் மனித ஊழிக் காலத்தில் ஹோமோசேப்பியன் எனும் நவீன மனிதன் நாட்டின் நாலா பாகங்களிலும் பரவி வாழ்ந்து வந்துள்ளான் .இலங்கையில் மானிட வாழ்க்கை வரலாறு ,தொழிநுட்பம் ,வாழ்க்கை முறை என்ற அடிப்படையில் மூன்று காலகட்டங்களாக வகுக்கப் படுகிறது.
1.வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
2.முன் வரலாற்றுக் காலம்
3.வரலாற்றுக் காலம்"
வரலாற்றுக்கு முந்திய காலம் என்றால் என்ன என்பதற்கு தொல்லியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
எழுத்து மூலாதாரங்கள் இல்லாமல் ஆவணப் படுத்தப் பட்ட மூலாதாரங்கள் அண்றி தொல்பொருட் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை அறிய முற்பட்ட காலம் என வரையறை செய்யப்படுகிறது.
இந்தக் கால வரையறை கிட்டத்தட்ட கி.மு.125000 முதல் கி.மு1800 என கணிப்பிடப் படுகிறது.
இந்த வரையறைகளையும் நம் மூதாதையர்கள் பற்றிய தேடல்களையும் கவனத்தில் கொள்கின்ற வேளையில் பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் இலங்கையில் தமிழ்ர் எனும் தொல்லியல் ஆய்வு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"இன்று நாம் இந்தியத் துணைக் கண்டம் எந்று வர்ணிக்கும் நிலப் பகுதியில் கடந்த 60,000 ஆண்டு காலமாக மனித நடமாட்டம் காணப்பட்டது எனலாம்.இம் மனிதர் இன்றய குடிகளின் முன்னோர்கள்.இக் காலப் பகுதிதின் பெரும் பாகத்தில்,அதாவது 85%க்கு கூடுதலான பாகத்தில் , இலங்கை என்று நாம் வர்ணிக்கும் தீவு மேற்கூறிய நிலப்பகுதியுடன் இணைந்து காண்ப்பட்டது.இக் காரணத்தினால் ,இக் காலத்துக் கண்ணோட்டத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மக்கள் வருகையை அணுகுதல் தவறாகும்.இன்று இலங்கை வேறு நாடு.இந்தியா வேறு நாடு.அதனால் ,இன்று நடைபெறும் மனிதர் புலப்பெயற்சியை எடுத்துக் கூறும்போது இந்தியாவிலிருந்து மக்கள் இலஙைக்கு சென்றனர் என்றோ இலங்கையிலிருந்து சென்றனர் என்றோ கூறுவது போல்,இலங்கை மற்றும் இந்தியா என வேறான நாடுகள் இல்லாத காலத்தைப் பொறுத்து இவ்வாறு கூற முடியாது.இலங்கைத் தீவு இந்திய நிலப் பகுதியிலிருந்து இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்புதான் இறுதியாகப் பிரிந்து வேறு நிலப் பகுதியாகியது."
இந்தப் பின்னணியில் சிலப்பதிகாரம் சொல்கின்ற இந்த வரிகள் முக்கியமாகின்றன
” பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென் திசையாண்ட தென்னவன் வாழி “
இலங்கையில் மிகப் பழமையான மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என வரலாற்றாய்வாளர்கள் அறுபத்தியெட்டு இடங்களை அடையாளம் கண்டுள்ளனர் அதில் திருகோணமலையும் இடம் பெற்றுள்ளமை இங்கு நாம் கவனத்தில் கொள்ளப் பட வேண்டிய விடயமாகும்.
ஆதி மனிதக் குடியிருப்புக்களின் முக்கிய தடயமாக அவர்களது அடக்க முறை கவனத்தில் கொள்ளப் படுகிறது.அந்த வகையில் திருகோணமலை நிலாவெளியில் கண்டெடுக்கப் பட்ட தாழி முக்கிய தொல் சான்றாக அமைவதை நாம் இங்கு கருத்திட முடியும்.
No comments:
Post a Comment